Tamil Star |
- கிராமங்களில் மகிந்த ராஜபக்சவின் ஆதரவு குறையும் நிலை!
- மைத்திரிக்கு 45 விசேட அதிரடிப்படை வீரர்களின் பாதுகாப்பு!- தேர்தல்கள் ஆணையாளர் உத்தரவு
- இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் கள நிலவரம் தொடர்பில் ஆராய்கிறது அமெரிக்கா!
- கனடாவின் உயர் மட்ட குற்றவியல் வழக்கறிஞர் எடவேர்ட் கிரீன்ஸ்பான் காலமானார்!
| கிராமங்களில் மகிந்த ராஜபக்சவின் ஆதரவு குறையும் நிலை! Posted: 25 Dec 2014 12:38 AM PST
எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு தற்போது கிராமிய மட்டத்தில் ஆதரவு அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆளும்கட்சியின் உள்ளூராட்சி மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் அதிகளவில் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்கத் தொடங்கியுள்ளனர். நேற்று அனுராதபுரத்தில், மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள் 16 பேர் மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து கொண்டுள்ளனர். சீதாவாக்கை பிரதேசசபையின் ஐந்து உறுப்பினர்களும், மற்றும் அனுராதபுர மாவட்டத்திலுள்ள பிரதேசசபைகளின் 8 உறுப்பினர்களும், வடமத்திய மாகாணசபை உறுப்பினர் பி.பி.திசநாயக்கவும், மைத்திரிபால சிறிசேனவின் பக்கம் இணைந்துள்ளனர். அதேவேளை, கண்டியில், சிறிலங்கா பிரதமர் எ.எம். ஜெயரட்ணவின் இணைப்புச்செயலாளரும், ஐதேகவில் இணைந்து கொண்டுள்ளார். எதிரணிக்கு ஆதரவு தெரிவிக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் ஆளும்கட்சியின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கம் தீவிர கண்காணிப்பில் வைத்திருக்கும் நிலையில், ஆளும்கட்சியின் மாகாணசபை, உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள் மெல்ல மெல்ல மைத்திரிபால சிறிசேனவின் பக்கம் திரும்பத் தொடங்கியுள்ளனர். இதனால் கிராமங்களில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆதரவு குறையும் நிலை உருவாகியுள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| மைத்திரிக்கு 45 விசேட அதிரடிப்படை வீரர்களின் பாதுகாப்பு!- தேர்தல்கள் ஆணையாளர் உத்தரவு Posted: 25 Dec 2014 12:32 AM PST
எதிரணி ஜனாதிபதி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு 45 விசேட அதிரடிப்படை வீரர்களின் பாதுகாப்பை வழங்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய உத்தரவிட்டுள்ளார். உதவி பொலிஸ் அதிகாரி காமினி நவரட்ணவுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த உத்தரவு எழுத்துமூலம் இன்னும் கிடைக்கவில்லை என்று பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். ஏற்கனவே பொதுவேட்பாளரின் பாதுகாப்பை அதிகரிக்குமாறு ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ச தேர்தல்கள் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்திருந்தார். தேர்தல் சட்டப்படி வேட்பாளர்களுக்கு ஒரேவிதமான பாதுகாப்பு வழங்கப்படவேண்டும். எனினும் மைத்திரிபாலவுக்கு தற்போது 5 விசேட அதிரடிப்படைவீரர்களே பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் கள நிலவரம் தொடர்பில் ஆராய்கிறது அமெரிக்கா! Posted: 24 Dec 2014 11:44 PM PST
இலங்கையில் எதிர்வரும் 8ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வன்னி மாவட்டத்தின் கள நிலவரங்களை அமெரிக்கா ஆராய்ந்துள்ளதாக உள்நாட்டு ஆங்கில செய்தித்தாள் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் அமெரிக்க தூதரகத்தின் அரசியல் அதிகாரி சந்தீப் குரோஸ் கடந்த 23ம் திகதியன்று புதுக்குடியிருப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் ரவிகரன் உட்பட்ட உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அமைப்பாளர் கனகரட்னம் ஆகியோரை சந்தித்து உரையாடியுள்ளார். இதனை தவிர குரொஸ் டிசம்பர் 22ம் திகதியன்று திருகோணமலையில் மாகாணசபை எதிர்க்கட்சி தலைவர் தண்டாயுதபாணியையும் சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பின் போது அமெரிக்க தூதரக முதல் செயலாளர் மைக்கல் எர்வின்ஹான்டும் உடனிருந்துள்ளார். இதன்போது ஆளும் மற்றும் எதிரணி ஜனாதிபதி வேட்பாளர் மற்றும் சீன உறவுகள் குறித்து கருத்துக்கள் பரிமாறப்பட்டுள்ளன.This posting includes an audio/video/photo media file: Download Now |
| கனடாவின் உயர் மட்ட குற்றவியல் வழக்கறிஞர் எடவேர்ட் கிரீன்ஸ்பான் காலமானார்! Posted: 24 Dec 2014 11:40 PM PST
கனடாவின் மிகப் பிரபல்யமான குற்றவியல் பாதுகாப்பு வழக்கறிஞர்களில் ஒருவரான எட்வேட் கிரீன்ஸ்பான் தனது 70-வயதில் காலமானார். கிரீன்ஸ்பான் இருதய செயலிழப்பு காரணமாக நித்திரையில் இருந்த போது மரணமடைந்துள்ளார். விடுமுறைக்காக அரிசோனாவில் இருந்த சமயம் இச்சம்பவம் நடந்துள்ளதாக அவரது குடும்ப நண்பரின் தகவல் மூலம் தெரியவந்துள்ளது. இவருடன் பணிபுரிந்த குற்றவியல் வழக்கறிஞர்களில் ஒருவரான எட்வேட் புறுட்ச்சி இவர் ஆளுமை மிக்கவரென தெரிவித்துள்ளார். நூற்றுக்கணக்கான சட்ட மாணவர்கள் இவர் போல் வளரவேண்டும் என்று விரும்பினர். இவர் குறுக்கு விசாரனை செய்வதை கவனிக்க சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் தங்கள் வகுப்புக்களை தவிர்த்துள்ளனர் எனவும் கூறப்பட்டுள்ளது. எப்போதாவது இளைப்பாற திட்டமிட்டாரா என புறுட்ச்சி ஒரு தடவை கேட்ட போது விசாரனையின் பின்னர் நடுவர் குழு 'குற்றவாளி இல்லை' என்று சொல்லும் வார்த்தைகளை கேட்ட பின்னர் நீதிமன்றத்தில் உடனடியாக மரணமடைய வேண்டும் என்பது தனது எதிர்பார்ப்பு என கூறினார் என தெரிவித்துள்ளார். உயர்நிலை வழக்குகளை எடுத்துக் கொண்டதால் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொண்டவர். இவர் கனடிய சிவில் உரிமைகள் சங்கத்தில் உதவி தலைவராக பணிபுரிந்தவர். ரொறொன்ரோ மேயர் ஜோன் ரொறி தனது சார்பிலும் ரொறொன்ரோ மக்கள் சார்பிலும் அனுதாபத்தை தெரிவித்துள்ளார். மனித உரிமைகளிற்கு ஒரு இடைவிடாத சம்பியன் எடவேட் கிரீன்ஸ்பான் எனவும் வர்ணித்துள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |



இலங்கையில் எதிர்வரும் 8ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வன்னி மாவட்டத்தின் கள நிலவரங்களை அமெரிக்கா ஆராய்ந்துள்ளதாக உள்நாட்டு ஆங்கில செய்தித்தாள் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் அமெரிக்க தூதரகத்தின் அரசியல் அதிகாரி சந்தீப் குரோஸ் கடந்த 23ம் திகதியன்று புதுக்குடியிருப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் ரவிகரன் உட்பட்ட உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அமைப்பாளர் கனகரட்னம் ஆகியோரை சந்தித்து உரையாடியுள்ளார். இதனை தவிர குரொஸ் டிசம்பர் 22ம் திகதியன்று திருகோணமலையில் மாகாணசபை எதிர்க்கட்சி தலைவர் தண்டாயுதபாணியையும் சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பின் போது அமெரிக்க தூதரக முதல் செயலாளர் மைக்கல் எர்வின்ஹான்டும் உடனிருந்துள்ளார். இதன்போது ஆளும் மற்றும் எதிரணி ஜனாதிபதி வேட்பாளர் மற்றும் சீன உறவுகள் குறித்து கருத்துக்கள் பரிமாறப்பட்டுள்ளன.
கனடாவின் மிகப் பிரபல்யமான குற்றவியல் பாதுகாப்பு வழக்கறிஞர்களில் ஒருவரான எட்வேட் கிரீன்ஸ்பான் தனது 70-வயதில் காலமானார். கிரீன்ஸ்பான் இருதய செயலிழப்பு காரணமாக நித்திரையில் இருந்த போது மரணமடைந்துள்ளார். விடுமுறைக்காக அரிசோனாவில் இருந்த சமயம் இச்சம்பவம் நடந்துள்ளதாக அவரது குடும்ப நண்பரின் தகவல் மூலம் தெரியவந்துள்ளது. இவருடன் பணிபுரிந்த குற்றவியல் வழக்கறிஞர்களில் ஒருவரான எட்வேட் புறுட்ச்சி இவர் ஆளுமை மிக்கவரென தெரிவித்துள்ளார். நூற்றுக்கணக்கான சட்ட மாணவர்கள் இவர் போல் வளரவேண்டும் என்று விரும்பினர். இவர் குறுக்கு விசாரனை செய்வதை கவனிக்க சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் தங்கள் வகுப்புக்களை தவிர்த்துள்ளனர் எனவும் கூறப்பட்டுள்ளது. எப்போதாவது இளைப்பாற திட்டமிட்டாரா என புறுட்ச்சி ஒரு தடவை கேட்ட போது விசாரனையின் பின்னர் நடுவர் குழு 'குற்றவாளி இல்லை' என்று சொல்லும் வார்த்தைகளை கேட்ட பின்னர் நீதிமன்றத்தில் உடனடியாக மரணமடைய வேண்டும் என்பது தனது எதிர்பார்ப்பு என கூறினார் என தெரிவித்துள்ளார். உயர்நிலை வழக்குகளை எடுத்துக் கொண்டதால் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொண்டவர். இவர் கனடிய சிவில் உரிமைகள் சங்கத்தில் உதவி தலைவராக பணிபுரிந்தவர். ரொறொன்ரோ மேயர் ஜோன் ரொறி தனது சார்பிலும் ரொறொன்ரோ மக்கள் சார்பிலும் அனுதாபத்தை தெரிவித்துள்ளார். மனித உரிமைகளிற்கு ஒரு இடைவிடாத சம்பியன் எடவேட் கிரீன்ஸ்பான் எனவும் வர்ணித்துள்ளார்.