Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


ஆந்திராவில் கூரியர் பார்சல் மூலம் செம்மரக்கட்டை கடத்தல்: தடுக்க முடியாமல் போலீசார் திணறல்

Posted: 25 Dec 2014 10:27 PM PST

சிகப்பு சந்தனம் என்று அழைக்கப்படும் செம்மரக்கட்டை கடத்தல் ஆந்திராவில் பரவலாக நடந்து வந்தது. இந்த கடத்தலுக்கான அனைத்து வழிகளையும் போலீசார் அடைத்து விட்டனர். இந்த நிலையில் கடத்தல்காரர்கள் செம்மரக்கட்டை கடத்தலுக்கு புதிய

கேரளாவில் நடைபெறும் மத மாற்ற சம்பவங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கண்டனம்

Posted: 25 Dec 2014 10:14 PM PST

கேரள மாநிலத்தில் விசுவ இந்து பரிஷத் அமைப்பினர் பிற மதங்களில் உள்ளவர்களை இந்து மதத்திற்கு மாற்றும் சம்பவங்கள் நடந்து வருகிறது. கடந்த வாரம் ஆலப்புழை மாவட்டத்தில் 30 பேரும், இரண்டு நாட்களுக்கு முன்பு வைக்கம் பகுதியை சேர்ந்த 11 பேரும் இந்து மதத்திற்கு மாறும் நிகழ்ச்சி நடந்தது.

ஜார்க்கண்ட்டில் பா.ஜனதா ஆட்சி: ரகுபர்தாஸ் முதல் – மந்திரி ஆகிறார்

Posted: 25 Dec 2014 10:01 PM PST

ஜார்கண்டில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க.வும், அதன் கூட்டணி கட்சியான அனைத்து ஜார்கண்ட் மாணவர் அமைப்பும் இணைந்து 42 இடங்களை பிடித்து ஆட்சியை கைப்பற்றியது. பா.ஜ.க. சார்பில் யார் முதல்வராக கூடும் என்று பெருத்த எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் ரகுபர் தாஸ் முதல்வராக தேர்வு செய்யப்படுவார் என தெரியவந்துள்ளது. 59 வயதாகும் தாஸ், முன்னாள் துணை முதல்வராவார்.

புற்று நோய் பாதித்த 10 வயது சிறுவனின் கடைசி ஆசையை நிறைவேற்றிய நடிகர் சிரஞ்சீவி

Posted: 25 Dec 2014 09:41 PM PST

தெலுங்கானா மாநிலம் ஆதிலாபாத் மாவட்டம் ஆபேகாம் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீதர். பத்மா தம்பதி மகன் பாலு (10). புற்று நோயால் பாதிக்கப்பட்ட இவன் ஐதராபாத்தில் உள்ள தனியார் புற்று நோய் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறான். மரணத்தின் விளிம்பில் இருக்கும் அவன் தனது அபிமான நடிகர் சிரஞ்சீவியை பார்க்க வேண்டும் என்ற தனது கடைசி ஆசையை தொண்டு

சந்திரபாபு நாயுடு சொந்த வீட்டை காலி செய்து வாடகை வீட்டில் குடியேறுகிறார்

Posted: 25 Dec 2014 09:33 PM PST

ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு வாஸ்து மீது அதிக நம்பிக்கை கொண்டு உள்ளார். முன்பெல்லாம் முற்போக்குவாதியாக இருந்த சந்திரபாபு நாயுடு ஆட்சியை இழந்த 10 ஆண்டு காலத்தில் ஏற்பட்ட அனுபவம் அவரை வாஸ்து மீது அதீத நம்பிக்கையை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. தற்போது எந்த செயலை தொடங்கினாலும் வாஸ்து மற்றும் ஜோதிட நிபுணர்களின்

அய்யப்பனுக்கு நாளை மண்டல பூஜை: இருமுடி கட்டுடன் சபரிமலையில் குவிந்த பக்தர்கள் கூட்டம்

Posted: 25 Dec 2014 09:22 PM PST

கேரளாவில் உள்ள பிரசித்திப் பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா கடந்த மாதம் 17–ந்தேதி முதல் நடந்து வருகிறது. முக்கிய நிகழ்ச்சியான அய்யப்பனுக்கு மண்டல பூஜை வழிபாடு நாளை நடைபெற உள்ளது. அப்போது அய்யப்பனுக்கு பாரம்பரிய தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை மற்றும் விசேஷ வழிபாடுகள் நடக்கும். இதனை காணவும், மண்டல பூஜை நாளில் அய்யப்பனை தரிசிக்கவும் நாடு முழுவதிலும் இ

திருப்பதியில் தண்ணீர் பற்றாக்குறை: தெலுங்கு கங்கை கால்வாயில் இருந்து தண்ணீர் கொண்டு வர ஏற்பாடு

Posted: 25 Dec 2014 09:06 PM PST

திருமலையில் தண்ணீர் பற்றாக்குறையை தீர்ப்பது பற்றிய ஆலோசனை கூட்டம் தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் டாக்டர் டி.சாம்பசிவராவ் தலைமையில் நடந்தது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வருகின்றனர். திருமலையில் பக்தர்களின் பயன்பாட்டுக்காக தேவஸ்தானம் சார்பில் தண்ணீர் விநியோகம்

இளைஞர் காங்கிரஸ் தலைவராக அம்ரிந்தர் பிரார் நியமனம்

Posted: 25 Dec 2014 07:03 PM PST

அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவராக மராட்டிய மாநில எம்.பி. ராஜீவ் சதாவ் இருந்து வந்தார். திடீரென அவரை நீக்கி விட்டு, பஞ்சாப் மாநில எம்.எல்.ஏ. அம்ரிந்தர் சிங் ராஜா பிரார் (வயது 37) என்பவர் புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இவரை கட்சியின் தலைவர்

போடோ தீவிரவாதிகளை ஒடுக்க கடும் நடவடிக்கை: ராஜ்நாத் சிங் தகவல்

Posted: 25 Dec 2014 06:55 PM PST

அசாம் மாநிலத்தின் சோனித்பூர், கோக்ராஜார், சிராக் ஆகிய மாவட்டங்களில் உள்ள 5 ஆதிவாசிகள் கிராமங்கள் மீது 2 நாட்களுக்கு முன்பு போடோ தீவிரவாதிகள் நவீன ரக துப்பாக்கிகளுடன் புகுந்து தாக்குதல் நடத்தியதில் 71 பேர் பலியானார்கள். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

மத்திய அரசு ஊழியர்கள் சொத்து கணக்கை தாக்கல் செய்ய மேலும் 4 மாதம் காலக்கெடு நீடிப்பு

Posted: 25 Dec 2014 06:45 PM PST

லோக்பால் சட்டத்தின் படி மத்திய அரசு ஊழியர்கள் தங்களது பெயரில் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகள், மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் உள்ள சொத்துக்கணக்கு மற்றும் வாகன விவரங்களை மத்திய அரசின் ஊழியர்களின் தனிப்பட்ட பயிற்சி துறையிடம் தாக்கல்

திருப்பதி கோவிலில் பக்தர்களின் காணிக்கை தலைமுடி ரூ.48 கோடியே 85 லட்சத்துக்கு ஏலம்

Posted: 25 Dec 2014 06:12 PM PST

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களில் சிலர், முதலில் தங்களின் தலைமுடியை காணிக்கையாக செலுத்தி விட்டு, பின்னர் சாமி தரிசனம் செய்கிறார்கள்.

மதமாற்ற தடைச்சட்ட விவகாரத்தில் காங்கிரஸ் இரட்டை வேடம் போடுகிறது: வெங்கையாநாயுடு குற்றச்சாட்டு

Posted: 25 Dec 2014 06:05 PM PST

பெங்களூருவில் நேற்று நடந்த வாஜ்பாய் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி வெங்கையா நாயுடு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மதமாற்ற தடை சட்டம் குறித்து காங்கிரஸ் இரட்டை வேடம் போடுகிறது.

ஒளிவு மறைவற்ற நிர்வாகத்தை வழங்குவதில் மத்திய அரசு உறுதி: மோடி அறிவிப்பு

Posted: 25 Dec 2014 03:53 PM PST

ஒளிவு மறைவற்ற நிர்வாகத்தை வழங்குவதில் மத்திய அரசு உறுதியாக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார். முன்னாள் பிரதமரும், பாரதீய ஜனதா மூத்த தலைவருமான வாஜ்பாயின் 90-வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. வாஜ்பாயின் பிறந்த நாளான டிசம்பர் 25-ந் தேதி நல்லாட்சி தினமாக கொண்டாடப்படும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது. அதன்படி, வாஜ்பாயின் பிறந்த நாளை மத்திய அரசு நேற்று நல்லாட்சி

காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேவுக்கு கோவில் கட்டும் விவகாரம் குறித்து விசாரணை

Posted: 25 Dec 2014 03:18 PM PST

மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேவுக்கு கோவில் கட்டப்படும் என்று அகில பாரதிய இந்து மகாசபை அறிவித்தது. அதன்படி உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் சாரதா ரோட்டில் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜையும் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்து மகாசபையின் தேசிய பொதுச் செயலாளர் ஆச்சார்யா மதன், கோட்சே உண்மையான தேசபக்தன் என்றும் கூறினார்.

பெண் டாக்டர் மீது திராவகம் வீசிய வழக்கில் டாக்டர் உள்பட 4 பேர் கைது

Posted: 25 Dec 2014 02:28 PM PST

டெல்லி மாவாபுரி பகுதியைச் சேர்ந்தவர் டாக்டர் அசோக் யாதவ். இவர் ரஷியாவில் படித்து எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்றவர். ரஷியாவில் அசோக் யாதவ் படித்த போது அவரும், அவருடன் எம்.பி.பி.எஸ். படித்த ஒரு பெண்ணும் நல்ல நண்பர்களாக பழகினார்கள். படிப்பு முடிந்ததும் இருவரும் டெல்லி திரும்பினார்கள். 30 வயதான அந்த பெண் டாக்டர் டெல்லியில் உள்ள இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் பணியாற்றி வருகிறார். இருவரும் 10 ஆண்டு கால நண்பர்கள் ஆவார்கள். இந்த நிலையில், அசோக் யாதவ் அந்த பெண் டாக்டரை, சில முறை

வாஜ்பாய் பிறந்த தினத்தில் சேவை: அமித்ஷா குப்பைகளை அகற்றினார்

Posted: 25 Dec 2014 01:50 PM PST

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்ததினமான நேற்று, மத்திய அரசு சார்பில் சிறந்த நல்லாட்சி தினமாக கொண்டாடப்பட்டது. மேலும் பாரதீய ஜனதா கட்சி சார்பில் நாடு முழுவதும் சேவைப்பணிகள் நடத்தப்பட்டது. கட்சித் தலைவர் அமித்ஷா, டெல்லி அல்பர்ட் சதுக்கத்தில் உள்ள அரசு குடியிருப்பில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டார். வேப்பமரக்கன்றையும் அவர் நட்டார்.

கெஜ்ரிவாலுடன் டீ குடிக்க ரூ.20 ஆயிரம் நன்கொடை

Posted: 25 Dec 2014 10:19 AM PST

ஆம் ஆத்மி கட்சி நிதி திரட்டுவதற்காக அண்மையில் கெஜ்ரிவாலுடன் இணைந்து மதிய உணவு மற்றும் இரவு விருந்தில் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியை மும்பை, பெங்களூரு, டெல்லி நகரங்களில் அரங்கேற்றியது. இந்நிலையில், சட்டசபை தேர்தலை சந்திக்க போதுமான நிதி ஆதாரங்களை நன்கொடை மூலமாக திரட்டுவதற்காக 'டீ வித் கெஜ்ரிவால்' என்ற நிகழ்ச்சியை நடத்த உள்ளதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. இதற்கான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

தூய்மை இந்தியா திட்டத்தில் இணைகிறார் கங்குலி

Posted: 25 Dec 2014 07:45 AM PST

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி. இவர் பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று, தூய்மை இந்தியா திட்டத்தில் இணைய இருக்கிறார். ஆனால், அரசியல் ஈடுபட உள்ளதாக வெளியான செய்தியை மறுத்துள்ளார். ஆஸ்திரேலியாவில் இருக்கும் கங்குலி ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு தொலைபேசி மூலம் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறும்போது, ''தூய்மை இந்தியா திட்டம் ஒரு உன்னதமானது.

வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தேர்தல் வெற்றியை கொண்டாடிய காங்கிரஸ் தொண்டர்கள்

Posted: 25 Dec 2014 07:44 AM PST

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளரின் ஆதரவாளர்கள் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு வெற்றியை கொண்டாடியதாக தகவல் வெளியாகி உள்ளது. பாங்கி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் பிதேஷ் சிங்

அசாம் படுகொலையைக் கண்டித்து மேற்கு வங்காளத்தில் பழங்குடியின அமைப்பினர் சாலை மறியல்

Posted: 25 Dec 2014 07:36 AM PST

அசாம் மாநிலத்தின் கோக்ரஜார், சோனிட்பூர் மற்றும் சிரங் மாவட்டங்களில் போடோ தீவிரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் பழங்குடியின மக்கள் 70க்கும் மேற்பட்டோ இறந்துள்ளனர். இதன் காரணமாக அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. இந்த தாக்குதலைக் கண்டித்து பழங்குடியின அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™