Tamil Star |
- உண்மையான அறிக்கையை கொடுத்து ஜனாதிபதியிடம் மீண்டும் அடிவாங்க முடியாது!
- சரத் பொன்சேகா அரசாங்கத்துடன் இணைவாரா!
- நான்கே மணி நேரத்தில் உலகை சுற்றலாம்: ஒலியை விட 5 மடங்கு வேகமாக செல்லும் விமானம் தயார்
- ஒரு சைக்கிளின் விலை 2½ லட்சம் பவுண்டு!
| உண்மையான அறிக்கையை கொடுத்து ஜனாதிபதியிடம் மீண்டும் அடிவாங்க முடியாது! Posted: 22 Dec 2014 01:57 AM PST
ஜனாதிபதித் தேர்தல் சம்பந்தமாக ஜனாதிபதியிடம் உண்மையான களநிலவர அறிக்கையை கொடுத்து மீ்ண்டும் அடிவாங்க தயாரில்லை என அரச புலனாய்வு சேவையின் பிரதான அதிகாரி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் பிரதிப் பொலிஸ்மா அதிபர் சந்திரா நிமல் வாகிஷ்ட புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரிகளிடம் அண்மையில் கூறியுள்ளார். குறைப்பாடு உள்ள இடங்களில் காணப்படும் தவறுகளை திருத்திக் கொள்ளவே ஜனாதிபதிக்கு நாங்கள் உண்மையான அறிக்கைகளை வழங்கிறோம். எனினும் நாங்கள் தவறான வேலை ஒன்றை செய்கிறோம் என ஜனாதிபதி நினைக்கின்றார். ஜனாதிபதியை சுற்றியுள்ளவர்களை போல் 65 சத வீத வாக்குகளை பெறுவார் என்று எங்களாலும் அறிக்கை வழங்க முடியும். இறுதியில் ஜனாதிபதிக்கே அது பிரச்சினையாக முடியும். நாங்கள் வழங்கும் அறிக்கைகளை ஜனாதிபதியை சுற்றியிருப்பவர்களே ஊடகங்களுக்கு கசிய விடுகின்றனர். சில நேரம் பொலிஸ்மா அதிபரும் அதனை கசிய விடலாம். நல்ல வேலை செய்தும் நாங்கள் அடிவாங்க வேண்டியுள்ளது எனவும் வாகிஷ்ட கூறியுள்ளார். நாட்டில் காணப்படும் நிலைமைகளை எப்படி ஜனாதிபதிக்கு அறிக்கையிடுவது என புலனாய்வு அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே வாகிஷ்ட இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார். நாட்டில் காணப்படும் நிலைமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு சாதகமாக இல்லை என புலனாய்வு அதிகாரிகள் இதன் போது வாகிஷ்டவிடம் சுட்டிக்காட்டியுள்ளனர். எனினும் காணப்படும் உண்மையான நிலைமை குறித்து ஜனாதிபதியிடம் அறிக்கை கொடுத்தால், அவர் மீண்டும் தம்மை தாக்கக் கூடும் என்ற அச்சம் புலனாய்வு அதிகாரிகளிடம் காணப்படுகிறது. நாட்டில் எப்படியான நிலைமை இருந்தாலும் உண்மையை கூறி அடிவாங்க முடியாது. இலக்கங்களை அங்குமிங்குமாக மாற்றி அறிக்கை ஒன்றை தயாரித்து ஜனாதிபதியிடம் கொடுப்போம். செய்வதற்கு எதுவுமில்லை. முடியும் வரை நாமும் தாலாட்டு பாடுவோம் எனக் கூறி வாகிஷ்ட கூட்டத்தை முடித்து கொண்டனர். இதனடிப்படையில் அரச புலனாய்வு சேவையினர் தயாரித்த அறிக்கை இன்று அல்லது நாளை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட உள்ளதாக பேசப்படுகிறது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| சரத் பொன்சேகா அரசாங்கத்துடன் இணைவாரா! Posted: 22 Dec 2014 01:54 AM PST
ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா , எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அரசாங்கத்துக்கு தனது ஆதரவினை தெரிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து கட்சித் தாவல்கள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன. அரசியல்வாதிகள் கட்சி தாவி வருவதை கடந்த சில நாட்களாக காணக்கூடியதாக உள்ளது. இந்நிலையில் ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா , எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அரசாங்கத்துக்கு தனது ஆதரவினை தெரிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் ஊடகங்கள் சிலவற்றில் வெளியாகியுள்ள செய்தி தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் கயான் விதானகே, எச்சந்தர்ப்பத்திலும் அரசுடன் இணையப் போவதில்லை எனவும் மேலும் எக்காலத்திலும் பணத்திற்கு விலைபோக மாட்டோம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| நான்கே மணி நேரத்தில் உலகை சுற்றலாம்: ஒலியை விட 5 மடங்கு வேகமாக செல்லும் விமானம் தயார் Posted: 22 Dec 2014 01:49 AM PST
ஒலியின் வேகத்தை விட ஐந்து மடங்கு அதிக வேகம் செல்லும் நவீன ரக விமானம் ஒன்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தின் மூலம் உலகின் ஒரு மூலையில் இருந்து மற்றொரு மூலைக்கு வெறும் நான்கு மணி நேரத்தில் சென்றடையலாம். இந்த விமான இன்னும் மூன்று ஆண்டுகளில் பயணிகளுக்கு அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. இங்கிலாந்தை சேர்ந்த ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் 'ஸ்கைலான்' என்ற புதிய விமான ஒன்றை தயாரித்துள்ளது. இந்த விமானம் ஒலியை விட 5 மடங்கு அதிகமான வேகத்தில் செல்லும். இந்த விமானம் கிளம்பும்போது விமானத்தின் வேகத்திலும், புவியீர்ப்பு சக்தியின் எல்லை தாண்டியதும் ராக்கெட் வேகத்திலும் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் ஆயிரம் டிகிரி செல்ஷியஸ் அளவிலான வெப்பத்தை, ஒரு வினாடியின் நூறில் ஒரு மடங்கு நேரத்திற்குள் 150 டிகிரி வெப்ப நிலையாக குளிர்விக்கக் கூடிய தொழில்நுட்பம் உள்ளது. இதன் உதவியுடன் ஒலியை விட ஐந்து மடங்கு வேகத்தில் பாயும் ஜெட் எஞ்சின்கள் தயாரிக்கப்பட்டு வந்தன. வர்த்தகரீதியாக இந்த விமானம் இன்னும் மூன்று ஆண்டுகளில் வெளிவரும் என்று கூறப்படுகிறது. முதலில் சிறிய வகை விமானமாகவும் பின்னர் பெரிய வகை விமானமாகவும் இது தயாரிக்கப்படவிருக்கின்றது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஒரு சைக்கிளின் விலை 2½ லட்சம் பவுண்டு! Posted: 22 Dec 2014 01:46 AM PST
ஒரு சைக்கிளின் விலை2½ லட்சம் பவுண்டு என்றால் யாருக்கும் வியப்பு ஏற்படத்தான் செய்யும். ஆனால் அது உண்மையும் கூட. ஆனால் இது சாதாரண சைக்கிள் அல்ல. மாறாக 24 காரட் சுத்த தங்கத்தால் செய்யப்பட்டது. ஆடம்பர பொருட்களை தயாரித்து விற்கும் கோல்டுஜெனி நிறுவனம் தான் இந்த சைக்கிளையும் உருவாக்கி உள்ளது. இது வெறும் மாதிரி சைக்கிள் அல்ல. மனிதர்கள் பயன்படுத்தும் முழு அளவு சைக்கிள்தான். இதில் கியருடன் பந்தய வாகனங்களில் பயன்படுத்தப்படும் டயர்களும் இணைக்கப்பட்டு உள்ளன. மேலும் இரவில் ஒளிரும் வகையில், சைக்கிளில் சில வைரங்களும் பொறிக்கப்பட்டு உள்ளன. இந்த சைக்கிளை ஓட்டுபவருக்கு களைப்பு ஏற்படாமல் இருக்க, தோலினால் செய்யப்பட்ட பெடல்கள் இணைக்கப்பட்டு உள்ளன. ஆனால் இதை வாங்குவது சாதாரண விஷயமல்ல. காரணம் இதன் விலை காரின் விலையைவிட அதிகம். அதாவது 2½ லட்சம் பவுண்டு ஆகும். தங்கத்துக்கு எப்போதும் மதிப்பு அதிகம்தானே..This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |



