Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


இலங்கையை சிங்கப்பூராக மாற்ற மைத்திரி முயற்சி! மஹிந்த குற்றச்சாட்டு

Posted: 20 Dec 2014 06:19 AM PST

Mahinda-Rajabakshe

Mahinda-Rajabaksheசிங்கப்பூர் முறைமையினைத் தவிர்த்து, இலங்கைக்கு உரித்தான முகாமைத்துவமே நாட்டுக்கு அவசியம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார். திருகோணமலை சேருநுவர பிரதேசத்தில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார். தற்போதைய அரசாங்கத்தினால் கட்டியெழுப்பபட்ட அரச வளங்களை தனியாருக்கு விற்பனை செய்வதற்கு எதிர்கட்சி திட்டமிட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தற்சமயம் பொய் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. கடந்த அரசாங்கம் அரச சேவையாளர்களை 3 லட்சமாக மட்டுப்படுத்தவிருந்தது. எனினும், இதனை நாங்கள் 15 லட்சமாக அதிகரித்து அரச சேவையை வலுப்பெற செய்துள்ளோம். நாங்கள் அரச சேவை மீது நம்பிக்கை வைத்துள்ளோம். இன்று இலங்கையை சிங்கப்பூர் முறைமைக்கு மாற்றப் போவதாக தெரிவித்து வருகின்றனர். இதன் மூலம் அரச வளங்கள் தனியார் மயப்படுத்தப்படவுள்ளமை நன்றாக விளங்குவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

மைத்திரியின் பிரச்சார மேடை மீது தாக்குதல்! 4 பேர் காயம்

Posted: 20 Dec 2014 06:15 AM PST

Maithripala_Si

Maithripala_Siபதுளை மாவட்டம் ஹப்புத்தளையில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்ளவிருந்த தேர்தல் பிரச்சாரத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரசிங்க அந்த இடத்திற்கு செல்வதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னர் இந்த தாக்குதல் நடந்துள்ளது. கூட்டத்தை ஊவா மாகாண எதிர்க்கட்சித் தலைவர் ஹரின் பெர்ணான்டோ ஒழுங்கு செய்திருந்தார். ஹப்புத்தளை நகர சபையின் தலைவரது சகோதரர்களும் அவரது ஆதரவாளர்களும் இந்த தாக்குதலை நடத்தியதாக ஹரின் பெர்ணான்டோ கூறியுள்ளார். கூட்டத்திற்காக வைக்கப்பட்டிருந்த கொடிகள் அகற்றப்பட்டு மேடை சேதமாக்கப்பட்டது. தாக்குதலை நடத்திய உள்ளூர் அரசியல்வாதிகளின் அழுத்தம் காரணமாக பொலிஸார் தாக்குதலை வேடிக்கை பார்த்தனர். இந்த தாக்குதலில் ஐக்கிய தேசியக் கட்சியின் மாகாண சபை உறுப்பினர் செனரத் ஜயசூரிய உட்பட 4 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் ஹரின் பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

கனடா ரொரன்டோ ராப்டர்ஸ் அணி தமது இலட்சினையை மாற்றியுள்ளது!

Posted: 20 Dec 2014 06:07 AM PST

nets-vs-raptors_event-thumb_noBranding

nets-vs-raptors_event-thumb_noBrandingரொரன்டோ ராப்டர்ஸ் அணி தமது இலட்சினையை மாற்றியுள்ளது. அடுத்த வருடத்திலிருந்து இந்த இலட்சினை உபயோகத்திற்க்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் புதிய இலட்சினையும் புறோக்கலின் நெட்ஸ் இலட்சினையும் ஒரளவு ஒரே மாதிரியுள்ளதாக மக்கள் தெரிவித்த கருத்துக்கு தாங்கள் "copycat" பண்ணவில்லை என ரொரன்டோ ராப்டர்ஸ் தமது டுவிட்டர் கணக்கில் அறிவித்திருந்தனர். இவர்களின் புதிய சீருடை 2015 கோடைகாலத்தில் வெளியிடப்படும் என கூறப்படுகின்றது.

This posting includes an audio/video/photo media file: Download Now

பிரதமர் ஸ்டீபன் ஹாப்பர் மீது கோபமடையும் ஒன்டாரியோ முதல்வர் – கத்லின் வின்

Posted: 20 Dec 2014 06:02 AM PST

stephen-harper-canada

stephen-harper-canadaகனடியப் பிரதமர் ஸ்டீபன் ஹாப்பர் ஒன்டாரியோவுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாகத் தான் எண்ணவில்லை என ஒன்டாரியோ முதல்வர் கத்லின் வின் தெரிவித்திருக்கிறார். பிரதமர் சந்திக்கத் தொடர்ந்து மறுத்து வரும் நிலையில் கத்லின் வின்னின் இந்த கருத்து வெளியாகியுள்ளது. ஒன்டாரியோ மாகாண மக்களுக்கு எதிரான பகை உணர்வை பிரதமர் கொண்டிருப்பார் என்று தான் கருதவில்லை எனவும் முதல்வர் குறிப்பிட்;டார். கதலின் வின் பிரதமரைச் சந்தித்து ஒரு வருடத்துக்கும் மேலாகிறது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் 5ம் திகதியின் பின்னர் இருவரும் சந்திக்கவில்லை. பிரதமர் கடந்த வாரம் ரொறன்றோ வந்த சமயம் மாநகர முதல்வர் ஜோன் ரோறியை சந்தித்திருந்தார். எனினும் கத்லின் வின்னைச் சந்திப்பதில் அவர் அக்கறை காண்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™