Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


டெல்லியில் பிறந்த நாளன்று பர்த்டே பார்ட்டிக்கு அழைத்து பெண் பாலியல் பலாத்காரம்: இருவர் கைது

Posted: 20 Dec 2014 11:08 PM PST

பெற்றோர் இல்லாத 18 வயதான மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பெண், உறவினர்கள் உதவியுடன் டெல்லியின் கிழக்குப் பகுதியில் வசித்து வருகிறார். டெல்லியின் மோடி பா பகுதியில் உள்ள இரண்டு நண்பர்கள் இவருக்கு வேலை வாங்கித் தருகிறேன் என்று சொன்னதால் அடிக்கடி

ஆந்திராவில் நக்சலைட்டுகளுக்கு துப்பாக்கி தயாரித்த வாலிபர் கைது

Posted: 20 Dec 2014 09:47 PM PST

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் சூலூர் பேட்டையைச் சேர்ந்தவர் சரத்குமார் என்கிற சரத்ரெட்டி. இவர் சென்னையில் எம்.பி.ஏ. படித்தார். 2 ஆண்டுகளுக்கு முன்பு சரத்ரெட்டி விஜயவாடா ஆட்டோ நகரில் ஒரு வீட்டில் தங்கியிருந்து நக்லைட்டுகளுக்கு துப்பாக்கி தயாரித்து கொடுத்து வந்தார். கடந்த 16–ந்தேதி முட்டாய் கூடம் பகுதியில் போலீசாரின் அதிரடி

கோவில் அர்ச்சகர்கள், ஊழியர்களுக்கு மாதம் ரூ. 5 ஆயிரம் சம்பளம்: ஆந்திர மந்திரி தகவல்

Posted: 20 Dec 2014 09:26 PM PST

ஆந்திர மாநில அறநிலையத்துறை மந்திரி மாணிக்கால ராவ் நிருபர்களிடம் கூறியதாவது:– ஆந்திராவில் அனைத்து கோவில் அர்ச்சகர்கள், ஊழியர்களுக்கு மாதம் தோறும் குறைந்த பட்சம் ரூ. 5 ஆயிரம் சம்பளம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக சிறப்பு நிதி ஏற்பாடு செய்துள்ளோம். இந்த சிறப்பு நிதிக்காக ரூ. 250 கோடி ஒதுக்கியுள்ளோம்.

கர்நாடகத்தில் 7 வயது சிறுமி கற்பழிப்பு: 4 சிறுவர்கள் கைது

Posted: 20 Dec 2014 09:19 PM PST

கர்நாடக மாநிலம் குல் பர்க்கா மாவட்டம் சித்தாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி. வீட்டில் தனியாக இருந்த சிறுமியை அதே ஊரைச் சேர்ந்த 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் 4 பேர் கற்பழித்தனர். பின்னர் தப்பி ஓடி விட்டனர். பெற்றோர் வந்ததும் தனக்கு ஏற்பட்ட கொடுமை குறித்து சிறுமி கூறினாள். அதன் பிறகு போலீசில் பெற்றோர் புகார் செய்தனர். இதையடுத்து போலீசார் 4 பேரை கைது செய்தனர். அனைவரும் 18

சபரிமலை அய்யப்பன் கோவிலில் 27–ந்தேதி மண்டல பூஜை

Posted: 20 Dec 2014 09:18 PM PST

பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் கடந்த மாதம் 16–ந்தேதி நடை திறக்கப்பட்டது. மறுநாள் முதல் மண்டல கால பூஜைகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. கோவில் நடை திறந்தது முதல் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு சபரிமலையில் இருமுடி கட்டிய அய்யப்ப பக்தர்கள் சரண கோஷம் முழங்க குவிவதால் சுவாமி அய்யப்பனை தரிசனம் செய்ய நீண்ட வரிசை காணப்படுகிறது.

ஓசூரில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.30 கோடி மோசடி? எல்.ஐ.சி.அதிகாரி தலைமறைவு

Posted: 20 Dec 2014 09:17 PM PST

கர்நாடகா மாநில எல்லையான அத்திப்பள்ளி பகுதியை சேர்ந்த ஒருவர் ஓசூரில் எல்.ஐ.சி.யில் வளர்ச்சி அதிகாரியாக வேலை செய்து வருகிறார். இவரிடம் பொதுமக்கள் பலர் எல்.ஐ.சி. திட்டத்தில் பணம் கட்டி வருகின்றனர். மேலும் இவர் தனியாக மாத சீட்டும் நடத்தி வருகிறார். ரூ.5 லட்சம், ரூ.10

ஒரிசாவில் டீசல் விலை குறைந்ததால் பஸ் கட்டணம் குறைப்பு

Posted: 20 Dec 2014 08:14 PM PST

டீசல் கட்டணம் கடந்த 2 மாதமாக குறைந்து வருகிறது. இதையடுத்து பஸ் கட்டணத்தை குறைக்க ஒடிசா அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அம்மாநில போக்குவரத்துதுறை ஆணையர் தலைமையில் புவனேஸ்வரில் கடந்த 19–ந் தேதி போக்குவரத்து துறையின் தொழில் நுட்ப

மணிப்பூரில் குண்டுவெடிப்பு: மூவர் பலி-நால்வர் படுகாயம்

Posted: 20 Dec 2014 08:11 PM PST

மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இன்று காலை நடந்த குண்டுவெடிப்பில் மூவர் பலியானார்கள். மேலும் நான்கு பேர் படுகாயமடைந்தனர். இம்பால் அருகே உள்ள குயாதாங் பகுதியில் உள்ள பேருந்து நிலையம் அருகே காலை 5.50 மணியளவில் ரிமோட் மூலம் இயக்கப்பட்டு இந்த சக்தி

பத்ராவதியில் போலியோ சொட்டு மருந்து முகாம் ஜனவரி 1-ந்தேதி நடக்கிறது

Posted: 20 Dec 2014 03:42 PM PST

மத்திய அரசு மற்றும் மாநில அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் போலியோ இல்லாத சமுதாயத்தை உருவாக்கும் வகையில் ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் 2 கட்டமாக குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது.

அரசு அதிகாரிகள் வீடுகளில் கர்நாடக லோக் ஆயுக்தா அதிரடி ரெய்டு: ரூ. 4.7 கோடி சொத்துக்கள் பிடிபட்டது

Posted: 20 Dec 2014 08:26 AM PST

கர்நாடக மாநிலத்துக்கு உட்பட்ட பெங்களூர் புறநகர், பிடார், ஹசன், மண்டியா, ஷிவமோகா மற்றும் மங்களூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 6 அரசு அதிகாரிகளுக்கு சொந்தமான 21 வீடுகளில் அம்மாநில லோக் ஆயுக்தா அதிகாரிகள் இன்று ஒரே நேரத்தில்

மாத்தி யோசிச்ச ஆந்திர மாணவி: திருமணம் செய்ய மறுத்த விரிவுரையாளரின் முகத்தில் ஆசிட்டை ஊற்றினார்

Posted: 20 Dec 2014 07:22 AM PST

ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த சவுஜன்யா என்ற பெண் இங்குள்ள நரசராவ்பேட்டை பகுதியில் இருக்கும் ஒரு கல்லூரியில் இளங்கலை பயின்று வந்தார். அப்போது, அவருக்கும் அதே கல்லூரியில் விரிவுரையாளராக பனியாற்றிய வெங்கடரமணா

ஜம்மு- காஷ்மீரில் தொங்கு சட்டசபை: ஜார்க்கண்டில் பா.ஜனதா மெஜாரிட்டி- தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தகவல்

Posted: 20 Dec 2014 07:20 AM PST

ஜம்மு- காஷ்மீரில் எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்காதும் என்றும் அங்கு தொங்கு சட்டசபைதான் அமையும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது. 87 தொகுதிகள் கொண்ட காஷ்மீரில் பா.ஜனதாவுக்கு 27 முதல் 33 தொகுதிகள் வரை கிடைக்கும் என்றும், பி.டி.பி. கட்சிக்கு 32 முதல் 38 தொகுதிகள் வரை கிடைக்கும் என்று இந்தியா டி.வி.-சி வோட்டர் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஐந்தாம் கட்ட தேர்தல்: காஷ்மீரில் 76 சதவீதம்-ஜார்க்கண்டில் 71 சதவீதம் வாக்குகள் பதிவு

Posted: 20 Dec 2014 06:31 AM PST

ஜம்மு-காஷ்மீர் மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தலில் 5 கட்ட வாக்குப்பதிவுக்கு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. இதில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இன்று நடைபெற்ற வாக்குப்பதிவில்

காஞ்சி, மதுரா, வேளாங்கண்ணி, அஜ்மீர் உள்ளிட்ட புராதான நகரங்களை மேம்படுத்த ரூ.500 கோடியில் திட்டம்

Posted: 20 Dec 2014 06:01 AM PST

ஆன்மிக பின்புலத்துடன் நாட்டில் உள்ள வரலாற்று சிறப்பும் புகழும் மிக்க காஞ்சி, மதுரா, வேளாங்கண்ணி, அஜ்மீர் உள்ளிட்ட 12 புராதான நகரங்களை மேம்படுத்த மத்திய அரசு 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் தீட்டியுள்ளது.

தேவயானி கோப்ரகடே மீது மத்திய அரசு அதிரடி நடவடிக்கை: காத்திருப்போர் பட்டியலுக்கு அனுப்பப்பட்டார்

Posted: 20 Dec 2014 05:22 AM PST

அமெரிக்காவில் இந்திய துணை தூதராக இருந்த தேவயானி கோப்ரகடே தனது வேலைக்காரிக்கு உரிய சம்பளம் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டின்கீழ் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கைவிலங்கிடப்பட்டு கைது செய்யப்பட்டார்.

நான் கரண்ட் கொடுத்தேன்-மோடி ஓட்டுக்களை எல்லாம் கறந்து விட்டார்: நிதிஷ் குமார் காமடி

Posted: 20 Dec 2014 04:52 AM PST

பீகார் முன்னாள் முதல் மந்திரி நிதிஷ் குமார் மாதேபுரா மாவட்டத்தில் இன்று 'சம்பரக் யாத்ரா' நிகழ்ச்சியில் காமெடி சரவெடிகளை அள்ளி விட்டார். இந்த நிகழ்ச்சியின் போது நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

உலகில் நடக்கும் எல்லா அட்டூழியங்களையும் கண்காணிக்கும் சக்தி எங்களுக்கு இல்லை: கோவாவில் அமெரிக்க எம்.பி.பேட்டி

Posted: 20 Dec 2014 03:03 AM PST

ஹவாய் இரண்டாவது மாவட்டத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு அமெரிக்க பாராளுமன்ற எம்.பி.யாக பதவி வகிப்பவர், துல்சி கபார்ட்(33). இந்தியாவின் கடற்கரை நகரமான கோவாவுக்கும் அமெரிக்காவின் பொழுதுப்போக்கு நகரங்களுள் ஒன்றான ஹவாய் இடையே பல்வேறு தொடர்புகளை ஏற்படுத்துவது தொடர்பாக அம்மாநில கவர்னர் மற்றும் முதல்-மந்திரி ஆகியோரை சந்தித்து ஆலோசிப்பதற்காக அரசு

அரசியல் காரணங்களுக்காக காப்பீட்டு மசோதாவை தடுப்பதை அரசு அனுமதிக்காது: அருண் ஜெட்லி

Posted: 20 Dec 2014 02:01 AM PST

அரசியல் காரணங்களுக்காக காப்பீட்டு மசோதாவை தடுப்பதை அரசு அனுமதிக்காது என்று மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தெரிவித்தார். மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தனது முதல் பட்ஜெட்டை வருகிற பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்று தொழில்துறை சம்மேளனங்களின் கூட்டமைப்பான பிக்கி நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது

எமனாக மாறிய கைபேசி: சார்ஜ் ஏற்றும் போது செல்போன் வெடித்து வாலிபர் பலி

Posted: 20 Dec 2014 01:42 AM PST

மின்னணு தொழில்நுட்பத்தின் அபார வளர்ச்சியானது, புரிந்து பயன்படுத்திக்கொள்பவர்களுக்கு ஆதாயமாகவும், அஜாக்கிரத்தையாக நடந்து கொள்கின்றவர்களுக்கு விபரீதமாகவும் அமைந்து விடுகின்றது என்ற அர்த்தமுள்ள பொன்மொழி தற்போது மீண்டும் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் புண்டி மாவட்டத்தில் உள்ள கோர்மா கிராமத்தை சேர்ந்த ராஜுலால் குஜார்(24), நேற்று தனது செல்போனில் பேட்டரி

இலவச கண் சிகிச்சை முகாமில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட 10 பேருக்கு பார்வை பறிபோனது

Posted: 20 Dec 2014 01:07 AM PST

இமாச்சல பிரதேசத்தில் நடந்த இலவச கண் சிகிச்சை முகாமில் கலந்துகொண்டு ஆபரேசன் செய்த 10 பேருக்கு பார்வை பறிபோனது. பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள காகோ மகால் கிராமத்தில் தனியார் தொண்டு நிறுவனத்தினர் இலவச கண் புரை சிகிச்சை முகாம் ஒன்றை நடத்தினர். இதில் சிகிச்சை பெற்ற 60 பேரில் 14 பேர் அடுத்த நாளே தங்கள் கண் பார்வையை முற்றிலுமாக


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™