Tamil Star |
- அமைச்சர்கள் எதிர்க்கட்சியில் இணைந்து கொண்டவுடன் நல்லவர்களாக மாறிவிடுகின்றனர்: ஜனாதிபதி
- ராஜபக்ஸ அரசை தோற்கடிப்பதே புலம்பெயர் சமூகத்தின் ஒரே இலக்கு: கோத்தபாய
- 12-வயது பெண் பொலிசாரால் துரத்தப்பட்டு கம்பத்துடன் மோதி விபத்திற்குள்ளாகிய பரபரப்பான சம்பவம்!!
- கனடா- ரொறொன்ரோவில் சளிக்காய்ச்சல் எச்சரிக்கை!
| அமைச்சர்கள் எதிர்க்கட்சியில் இணைந்து கொண்டவுடன் நல்லவர்களாக மாறிவிடுகின்றனர்: ஜனாதிபதி Posted: 16 Dec 2014 01:51 AM PST
ஆளும் கட்சியின் அமைச்சர்கள் எதிர்க்கட்சியில் இணைந்து கொண்டவுடன் அவர்கள் நல்லவர்களாக மாறிவிடுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பு ஜயவர்தனபுர கேந்திர நிலையத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தை பிரதிநிதித்துவம் செய்த அமைச்சர்கள் எதிர்க்கட்சியில் இணைந்துகொண்ட உடன் அவர்கள் தூய்மையான பண்பாளர்களான உருவாகின்ற நிலைமை தற்போது காணக்கிடைக்கின்றது. அமைச்சர்களாக கடமையாற்றிய காலப்பகுதியில் ஜே.வி.பி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சுமத்திய குற்றச்சாட்டுக்கள் கட்சித் தாவியதன் பின்னர் மறக்கப்பட்டு விட்டன. மைத்திரிபால சிறிசேனவை நான் விமர்சனம் செய்யவில்லை. எனினும் எதிர்க்கட்சிகள் மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக அரிசி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஜே.வி.பி.யின் மாற்றுக் கொள்கையாளர்கள் நடத்திய கூட்டத்தில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ராஜபக்ஸ அரசை தோற்கடிப்பதே புலம்பெயர் சமூகத்தின் ஒரே இலக்கு: கோத்தபாய Posted: 16 Dec 2014 01:48 AM PST
ராஜபக்ஸ அரசை வீழ்த்துவதே புலம்பெயர் சமூகத்தின் ஒரே இலக்காக காணப்படுவதாக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு நேற்றிரவு வழங்கிய செவ்வியின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் அந்த மனநிலையில் இருந்து 100 சதவீதம் மாற்றப்பட்டுள்ளார்கள் என உறுதியளிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை பிடித்தது மாபெரும் வெற்றி என்பது போலவே கே.பியை பிடித்ததும் பெரிய வெற்றியென என அவர் குறிப்பிட்டார். தீவிரவாத நடவடிக்கை இல்லாத போதிலும், சர்வதேச ரீதியில் இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகள் இடம்பெற்றே வருவதாகவும் ராஜபக்ஸ குடும்பத்தை தகர்ப்பதே புலம்பெயர் சமூகத்தின் ஒரே இலக்காக காணப்படுவதாகவும் பாதுகாப்பு செயலாளர் மேலும் சுட்டிக்காட்டினார். ராஜபக்ஸ அரசாங்கம் மட்டுமல்ல, இலங்கையில் ஆட்சி மாற்றமடைந்தாலும் சர்வதேச சமூகத்தின் அழுத்தங்கள் தொடர்ந்த வண்ணமே காணப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். விசேடமாக விடுதலைப் புலி ஆதரவாளர்கள், ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழு ஊடான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரகசியமான செயற்பாடுகள் தற்போதும் காணப்படுகின்றன குறிப்பிட்ட தரப்பினரை போர்க் குற்ற நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்லும் நோக்கம் இன்னும் கைவிடப்படவில்லை என்பது இதன் மூலம் தெளிவாவதாக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மேலும் தெரிவித்தார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| 12-வயது பெண் பொலிசாரால் துரத்தப்பட்டு கம்பத்துடன் மோதி விபத்திற்குள்ளாகிய பரபரப்பான சம்பவம்!! Posted: 16 Dec 2014 01:13 AM PST
கனடா- கிச்சினர் பகுதியில் 12-வயது பெண் ஒருவர் தனது 14-வயது சினேகிதியுடன் குடும்ப அங்கத்தவர் ஒருவரின் காரை திருடி ஒட்டிச்சென்றுள்ளாள். இதனால் பொலிசாரால் மிகவும் வேகமாகவும் மூர்க்கத்தனமாகவும் கிச்சினரின் தெற்கு எல்லைவரை துரத்திச் செல்லப்பட்டாள். இச்சம்பவம் திங்கள்கிழமை அதிகாலை இடம்பெற்றது. அதிகாலை 3-மணியளவில் பொலிசார் முன்விளக்குகள் இன்றி ஒழுங்கற்ற முறையில் வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்ததை கண்டுள்ளனர். பொலிஸ் அதிகாரி வாகனத்தை நிறுத்த முயன்றபோது சாரதி நிறுத்த மறுத்ததாக பொலிசாரின் கூற்றுப்படி தெரியவந்துள்ளது. அதிகாரி தனது காரின் விளக்குகளை எரிய விட்ட வண்ணம் சைரன் ஒலியை எழுப்பியபடி காரை தொடர்ந்து சென்றுள்ளார். சைரன் சத்தம் காரணமாக பல பொலிஸ் வாகனங்கள் பின்னால் துரத்த தொடங்கின. துரத்தும் போது பல தடவைகள் காரை நிறுத்தத்திற்கு கொண்டுவர முயன்றும் அவர்களால் முடியாது போய் விட்டது. ஒவ்வொரு தடவையும் சாரதி பொலிசாருடன் ஒத்துழைக்க மறுத்து இறுதியில் ஒரு கம்பத்தில் மோதி வீதியை விட்டு விலகியது. வாகன சாரதி ஒரு 12-வயதுடைய பெண் என கண்டிறிந்ததும் பொலிசார் வாகனத்தை சுற்றி திரண்டனர். அதிகாரிகள் அனைவரும் ஆச்சரியமடைந்ததாக கூறப்பட்டுள்ளது. பெண்ணை கைது செய்த பொலிசார் பின்னர் பெற்றோரின் பாதுகாப்பில் அவளை விடுவித்தனர். இவள் மீது ஆபத்தான முறையில் வாகனம், செலுத்தியது ஒப்புதல் இன்றியும் லைசென்ஸ் இன்றியும் வாகனம் எடுத்தது போன்ற குற்றங்கள் சுமத்தப்பட்டது. இவளுடன் பயணியாக இருந்த 14-வயது பெண் மீது எதுவித குற்றச்சாட்டுக்களும் பதிவாகவில்லை. இளைஞர் குற்றவியல் நீதிச்சட்ட பிரகாரம் இப்பெண்களின் அடையாளங்கள் பாதுகாக்கப் பட்டுள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| கனடா- ரொறொன்ரோவில் சளிக்காய்ச்சல் எச்சரிக்கை! Posted: 16 Dec 2014 01:10 AM PST
ரொறொன்ரோவில் சளிக்காய்ச்சல் அலைஅலையாக பரவி வருகின்றதென ரொறொன்ரோ சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டிசம்பர் மாதம் 6-ந்திகதி வரையில் 113 பேர்கள் வரை பாதிக்கப் பட்டுள்ளதாகவும் இத்தொகை கடந்த 10-வருட பருவகாலத்தின் சராசரி அளவை விட 3-தரங்கள் அதிகமானதென சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர். ஒன்ராறியோவில் மொத்தமாக 342-பேர்கள் வரை பாதிக்கப் பட்டுள்ளனரெனவும் இது கடந்தவருடம் 182-ஆக காணப்பட்டதன் இரட்டிப்பு எனவும் கூறப்பட்டுள்ளது. 120-பேர்கள் வரையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதோடு மூவர் சளிக்காய்ச்சல் காரணமாக இறந்தும் உள்ளனர். இவற்றில் பெரும்பாலானவர்கள் 65-வயதிற்கும் மேற்பட்டவர்கள். இந்த மாத இறுதியில் இந்த எண்ணிக்கை உச்சகட்டத்தை எட்டும் என எதிர்பார்க்கப் படுவதாக ரொறொன்ரோ பொது சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |



கனடா- கிச்சினர் பகுதியில் 12-வயது பெண் ஒருவர் தனது 14-வயது சினேகிதியுடன் குடும்ப அங்கத்தவர் ஒருவரின் காரை திருடி ஒட்டிச்சென்றுள்ளாள். இதனால் பொலிசாரால் மிகவும் வேகமாகவும் மூர்க்கத்தனமாகவும் கிச்சினரின் தெற்கு எல்லைவரை துரத்திச் செல்லப்பட்டாள். இச்சம்பவம் திங்கள்கிழமை அதிகாலை இடம்பெற்றது. அதிகாலை 3-மணியளவில் பொலிசார் முன்விளக்குகள் இன்றி ஒழுங்கற்ற முறையில் வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்ததை கண்டுள்ளனர். பொலிஸ் அதிகாரி வாகனத்தை நிறுத்த முயன்றபோது சாரதி நிறுத்த மறுத்ததாக பொலிசாரின் கூற்றுப்படி தெரியவந்துள்ளது. அதிகாரி தனது காரின் விளக்குகளை எரிய விட்ட வண்ணம் சைரன் ஒலியை எழுப்பியபடி காரை தொடர்ந்து சென்றுள்ளார். சைரன் சத்தம் காரணமாக பல பொலிஸ் வாகனங்கள் பின்னால் துரத்த தொடங்கின. துரத்தும் போது பல தடவைகள் காரை நிறுத்தத்திற்கு கொண்டுவர முயன்றும் அவர்களால் முடியாது போய் விட்டது. ஒவ்வொரு தடவையும் சாரதி பொலிசாருடன் ஒத்துழைக்க மறுத்து இறுதியில் ஒரு கம்பத்தில் மோதி வீதியை விட்டு விலகியது. வாகன சாரதி ஒரு 12-வயதுடைய பெண் என கண்டிறிந்ததும் பொலிசார் வாகனத்தை சுற்றி திரண்டனர். அதிகாரிகள் அனைவரும் ஆச்சரியமடைந்ததாக கூறப்பட்டுள்ளது. பெண்ணை கைது செய்த பொலிசார் பின்னர் பெற்றோரின் பாதுகாப்பில் அவளை விடுவித்தனர். இவள் மீது ஆபத்தான முறையில் வாகனம், செலுத்தியது ஒப்புதல் இன்றியும் லைசென்ஸ் இன்றியும் வாகனம் எடுத்தது போன்ற குற்றங்கள் சுமத்தப்பட்டது. இவளுடன் பயணியாக இருந்த 14-வயது பெண் மீது எதுவித குற்றச்சாட்டுக்களும் பதிவாகவில்லை. இளைஞர் குற்றவியல் நீதிச்சட்ட பிரகாரம் இப்பெண்களின் அடையாளங்கள் பாதுகாக்கப் பட்டுள்ளது.
ரொறொன்ரோவில் சளிக்காய்ச்சல் அலைஅலையாக பரவி வருகின்றதென ரொறொன்ரோ சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டிசம்பர் மாதம் 6-ந்திகதி வரையில் 113 பேர்கள் வரை பாதிக்கப் பட்டுள்ளதாகவும் இத்தொகை கடந்த 10-வருட பருவகாலத்தின் சராசரி அளவை விட 3-தரங்கள் அதிகமானதென சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர். ஒன்ராறியோவில் மொத்தமாக 342-பேர்கள் வரை பாதிக்கப் பட்டுள்ளனரெனவும் இது கடந்தவருடம் 182-ஆக காணப்பட்டதன் இரட்டிப்பு எனவும் கூறப்பட்டுள்ளது. 120-பேர்கள் வரையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதோடு மூவர் சளிக்காய்ச்சல் காரணமாக இறந்தும் உள்ளனர். இவற்றில் பெரும்பாலானவர்கள் 65-வயதிற்கும் மேற்பட்டவர்கள். இந்த மாத இறுதியில் இந்த எண்ணிக்கை உச்சகட்டத்தை எட்டும் என எதிர்பார்க்கப் படுவதாக ரொறொன்ரோ பொது சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.