மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- மதமாற்ற பிரச்சினை: டெல்லி மேல்சபையில் அமளி – ஒத்திவைப்பு
- திருப்பதி கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவன் கைது
- கள்ளக்காதலியை கொன்று செப்டிக் டேங்கில் வீசிய ஒர்க்ஷாப் தொழிலாளி
- ஆயுர்வேத ஆஸ்பத்திரி நடத்திய போலி கேரள டாக்டர் கைது
- திருப்பதி கோவிலில் ஒரே நாளில் ரூ.3.17 கோடி உண்டியல் வசூல்
- பாகிஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்ட பள்ளி குழந்தைகள்: நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் மவுன அஞ்சலி
- நடப்பு கல்வி ஆண்டில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சமஸ்கிருத பாடத்தேர்வு எழுத தேவை இல்லை: சுப்ரீம் கோர்ட்டு
- மதம் மாற்ற விவகாரம்: ஆக்ராவில் முக்கிய குற்றவாளி கைது
- ஜெயலலிதா பரிசுப் பொருட்கள் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சி.நாகப்பன் விலகல்
- ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு இந்தியாவில் தடை: பாராளுமன்றத்தில் மத்திய அரசு அறிவிப்பு
- மேகாலயா மாநிலத்தில் முதல்-மந்திரி முன்னிலையில் 748 போராளிகள் சரண்
- முத்த போராட்டம் ஒழுக்கக்கேடான செயல்: கேரள ஐகோர்ட்டு கருத்து
- பாகிஸ்தானில் தீவிரவாதிகள் தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
- டெல்லியில் மாணவி கற்பழித்து கொலை: 2-ம் ஆண்டு நினைவு தினத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
- வங்காள விரிகுடாவில் படகு விபத்து: 4 மீனவர்கள் பலி
- ஏர்செல்-மேக்சிஸ் விவகாரம்: ப.சிதம்பரத்திடம் சி.பி.ஐ. விசாரணை
- போலீசாருக்கு மயக்க மருந்து தந்து ஏ.கே.47 துப்பாக்கிகளுடன் கைதி எஸ்கேப்: தகவல் அளித்தால் ரூ.5 லட்சம்
- ராம்தேவுக்கு எதிரான வழக்கு டெல்லியில் இருந்து லக்னோவுக்கு மாற்றம்
- ராணுவ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி சந்திப்பு
- சாரதா மோசடியில் தொடர்பு: மேற்கு வங்காள மந்திரி மதன் மித்ராவுக்கு காவல் நீட்டிப்பு
| மதமாற்ற பிரச்சினை: டெல்லி மேல்சபையில் அமளி – ஒத்திவைப்பு Posted: 16 Dec 2014 11:19 PM PST பாராளுமன்றம் இன்று காலை 11 மணிக்கு கூடியதும் பெஷாவர் தாக்குதலில் பலியான மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மேல் – சபையில் அஞ்சலி முடிந்ததும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மதமாற்ற பிரச்சினையை கிளப்பினார்கள். சபைக்கு பிரதமர் வந்து பதில் அளிக்க வேண்டும். அவர் சபைக்கு வராதது ஏன் என்று கேட்டு சபை தலைவர் இருக்கையை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினார்கள். |
| திருப்பதி கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவன் கைது Posted: 16 Dec 2014 09:59 PM PST கடந்த 11–ந்தேதி கர்நாடக மாநில போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு மர்ம போன் வந்தது. அதில் பேசியவன் ''திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வெடிகுண்டு வைக்க உத்தம்குமார் என்பவன் தயார் நிலையில் உள்ளான். பக்தர்கள் அதிகமாக நடமாடும் பகுதியில் குண்டு வைக்க திட்டமிட்டுள்ளான். எனவே எந்த நேரத்திலும் குண்டு வெடிக்கலாம். அவனை முடிந்தால் தடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறி உத்தம்குமாரின் செல்போன் நம்பரையும் |
| கள்ளக்காதலியை கொன்று செப்டிக் டேங்கில் வீசிய ஒர்க்ஷாப் தொழிலாளி Posted: 16 Dec 2014 08:58 PM PST கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் குண்டரா பகுதியை சேர்ந்த ஒர்க்ஷாப் தொழிலாளி விஜயராஜன் (வயது 50). இவரது மனைவி கீதா (44). கருத்து வேறுபாட்டால் கடந்த 8 வருடங்களாக பிரிந்தனர். இவர்களது விவாகரத்து வழக்கு குண்டரா நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. விஜயராஜன் தனியே வசித்து வருகிறார். |
| ஆயுர்வேத ஆஸ்பத்திரி நடத்திய போலி கேரள டாக்டர் கைது Posted: 16 Dec 2014 08:54 PM PST கேரள மாநிலம் பத்தனம்திட்டை அருகே உள்ள அடூர் பள்ளிக்கல் பகுதியை சேர்ந்தவர் பிரசன்னகுமார் (வயது 47). இவர் அந்த பகுதியில் ஆயுர்வேத ஆஸ்பத்திரி நடத்தி வந்தார். இவர் மீது வெள்ளறடை செம்பூர் பகுதியை சேர்ந்த ஸ்ரீகுமார் என்பவர் வெள்ளறடை போலீசில் ஒரு புகார் செய்தார். |
| திருப்பதி கோவிலில் ஒரே நாளில் ரூ.3.17 கோடி உண்டியல் வசூல் Posted: 16 Dec 2014 08:52 PM PST திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். தற்போது சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களும் அய்யப்பனை தரிசனம் செய்து விட்டு அங்கிருந்து திருமலைக்கு வந்து ஏழுமலையானை தரிசனம் செய்கிறார்கள். இதனால் விடுமுறை நாட்களில் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. |
| பாகிஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்ட பள்ளி குழந்தைகள்: நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் மவுன அஞ்சலி Posted: 16 Dec 2014 08:31 PM PST பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள ராணுவ பொது பள்ளி மற்றும் கல்லூரிக்குள் புகுந்த தெரிக்-இ-தலிபான் இயக்க தீவிரவாதிகள் பள்ளியில் இருந்த குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர். |
| Posted: 16 Dec 2014 07:29 PM PST கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 6, 7 மற்றும் 8-ம் வகுப்புகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் நடப்பு கல்வி ஆண்டில் சமஸ்கிருத பாடத்தில் தேர்வு எழுதத் தேவையில்லை என்றும் ஜெர்மன் மொழியை விருப்பப் பாடமாக தொடரலாம் என்றும் மத்திய அரசு முன்வைத்த திட்டத்தை சுப்ரீம் கோர்ட்டு ஏற்று வழக்கை முடித்து வைத்தது. |
| மதம் மாற்ற விவகாரம்: ஆக்ராவில் முக்கிய குற்றவாளி கைது Posted: 16 Dec 2014 06:58 PM PST உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா அருகே கடந்த 7-ந் தேதி, 57 முஸ்லிம்கள் மதமாற்றம் செய்யப்பட்ட விவகாரம் பாராளுமன்றத்தில் எதிரொலித்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதற்கிடையில் புகாரின்பேரில் ஆக்ரா போலீசார், இந்த வழக்கில் முக்கிய |
| ஜெயலலிதா பரிசுப் பொருட்கள் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சி.நாகப்பன் விலகல் Posted: 16 Dec 2014 06:47 PM PST ஜெயலலிதா 1991-ம் ஆண்டு தமிழக முதல்-அமைச்சர் பதவி வகித்தபோது, அவர் தனது பிறந்த நாளில் ரூ.2 கோடி மதிப்புள்ள காசோலைகள் உள்ளிட்ட பரிசுப் பொருட்களை பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்தது. |
| ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு இந்தியாவில் தடை: பாராளுமன்றத்தில் மத்திய அரசு அறிவிப்பு Posted: 16 Dec 2014 06:32 PM PST ஈராக்கிலும், சிரியாவிலும் ஐ.எஸ். என்ற தீவிரவாத இயக்கம் செயல்பட்டு வருகிறது. சமீபகாலமாக, அதன் நடவடிக்கைகள் உலகின் பகுதிகளிலும் பரவி வருகின்றன. அந்த இயக்கத்துக்கு ஆதரவாக, டுவிட்டரில் பிரசாரம் செய்து வந்த பெங்களூரைச் சேர்ந்த மெஹதி மசூர் பிஸ்வாஸ் என்ற 24 வயது பட்டதாரி வாலிபர், கடந்த சனிக்கிழமை போலீஸ் பிடியில் சிக்கினார். |
| மேகாலயா மாநிலத்தில் முதல்-மந்திரி முன்னிலையில் 748 போராளிகள் சரண் Posted: 16 Dec 2014 03:32 PM PST மேகாலயா மாநிலம் காரோ மலைப்பகுதியில், அரசுக்கு எதிராக 2 போராளிகள் குழுக்கள், பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தன. அந்த 2 குழுவை சேர்ந்த மொத்தம் 748 போராளிகள் முதல்-மந்திரி முகுல் சங்மா முன்னிலையில் நேற்று 'சரண்' அடைந்தனர். |
| முத்த போராட்டம் ஒழுக்கக்கேடான செயல்: கேரள ஐகோர்ட்டு கருத்து Posted: 16 Dec 2014 01:59 PM PST கேரள மாநிலத்தில் சமீபத்தில் 'கிஸ் ஆப் லவ்' என்ற பெயரில் சில அமைப்புகள் முத்த போராட்டம் நடத்தின. இந்நிலையில், முத்த போராட்டம், ஒழுக்கக்கேடான செயல் என்று கேரள ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது. |
| பாகிஸ்தானில் தீவிரவாதிகள் தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம் Posted: 16 Dec 2014 12:53 PM PST பாகிஸ்தானில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் 'டுவிட்டர்' சமூக வலைத்தளத்தில் செய்தி விடுத்துள்ளார். |
| டெல்லியில் மாணவி கற்பழித்து கொலை: 2-ம் ஆண்டு நினைவு தினத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி Posted: 16 Dec 2014 12:14 PM PST டெல்லியில் ஓடும் பஸ்சில் 23 வயது மருத்துவ துணை மாணவி கும்பலால் கற்பழித்து கொலை செய்யப்பட்ட 2-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று டெல்லியில் கடைப்பிடிக்கப்பட்டது. மாணவியின் பெற்றோரால் நடத்தப்படும் நிர்பயா அறக்கட்டளை சார்பில் டெல்லியில் நேற்று நடந்த பிரார்த்தனை நிகழ்ச்சியில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். |
| வங்காள விரிகுடாவில் படகு விபத்து: 4 மீனவர்கள் பலி Posted: 16 Dec 2014 10:33 AM PST வங்காள விரிகுடாவில் படகு கவிழ்ந்த விபத்தில் பலியான 4 மீனவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன என்று போலீஸ் அதிகாரி இன்று தெரிவித்துள்ளார். கடந்த டிசம்பர் 12ந்தேதி வங்காள விரிகுடா கடற்பகுதியில் கெடோ தீவுக்கு அருகே படகு ஒன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. |
| ஏர்செல்-மேக்சிஸ் விவகாரம்: ப.சிதம்பரத்திடம் சி.பி.ஐ. விசாரணை Posted: 16 Dec 2014 09:55 AM PST கடந்த 2006-ம் ஆண்டு சென்னையை சேர்ந்த தொழில் அதிபர் சிவசங்கரனுக்கு சொந்தமான ஏர்செல் நிறுவன பங்குகள், மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்துக்கு விற்கப்பட்டன. ரூ.3,500 கோடி மதிப்புள்ள ஏர்செல் பங்குகள் கைமாறியதற்கு அப்போதைய மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் ஒப்புதல் அளித்தார். |
| போலீசாருக்கு மயக்க மருந்து தந்து ஏ.கே.47 துப்பாக்கிகளுடன் கைதி எஸ்கேப்: தகவல் அளித்தால் ரூ.5 லட்சம் Posted: 16 Dec 2014 07:56 AM PST உத்தரப்பிரதேசத்தில் நடந்த ஒரு குற்றச் சம்பவம் தொடர்பாக உத்தரகாண்ட் தலைநகர் டேராடூனைச் சேர்ந்த அனிட் என்பவனை கைது செய்து அழைத்துவந்த உ.பி. போலீசார் அவனை பக்பட் மாவட்ட கோர்ட்டில் ஆஜர்படுத்த நேற்று அழைத்துச் சென்றனர். தனக்கு பாதுகாப்பாக வந்த போலீசாருக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்த அனிட், தனது நண்பர்கள் கொண்டு வந்த |
| ராம்தேவுக்கு எதிரான வழக்கு டெல்லியில் இருந்து லக்னோவுக்கு மாற்றம் Posted: 16 Dec 2014 07:40 AM PST யோகா குரு பாபா ராம்தேவுக்கு எதிராக டெல்லியில் பதிவு செய்யப்பட்ட வழக்கினை உத்தர பிரதேச மாநிலம் லக்னோவிற்கு மாற்றியிருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் பேசிய யோகா குரு ராம்தேவ், சுற்றுலா மற்றும் ஹனிமூன் செல்வதுபோல் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தலித்துகள் வசிக்கும் பகுதிகளில் சுற்றுப்பயணம் |
| ராணுவ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி சந்திப்பு Posted: 16 Dec 2014 06:37 AM PST ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி டெல்லியில் உள்ள ராணுவ ஆஸ்பத்திரியில் கடந்த 13-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். ரத்தக்குழாய் ஒன்றில் ஏற்பட்ட அடைப்புக்காக அவருக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த அடைப்பை நீக்க ரத்தக் குழாயில் 'ஸ்டென்ட்' என்ற சிறிய டியூப் பொருத்தப்பட்டது. |
| சாரதா மோசடியில் தொடர்பு: மேற்கு வங்காள மந்திரி மதன் மித்ராவுக்கு காவல் நீட்டிப்பு Posted: 16 Dec 2014 06:12 AM PST மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவை தலைமை இடமாக கொண்டு செயல்பட்ட சாரதா நிதி நிறுவனம் ரூ.2,500 கோடி அளவுக்கு மோசடி செய்த சம்பவம் நாட்டை உலுக்கியது. இந்த மோசடியில் எம்.பி.க்கள், வக்கீல்கள் மற்றும் பல அரசியல் பிரமுகர்கள் வரிசையாக சிக்கி வருகின்றனர். இந்த மோசடி தொடர்பாக பல்வேறு கோணங்களில் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. மாநிலத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மந்திரிசபையில் போக்குவரத்து துறை மந்திரியாக உள்ள மதன் மித்ராவிடம் |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |