Tamil Star |
- பிள்ளைகளிடம் நாட்டை ஒப்படைப்பேன்: உண்மையை கூறும் ஜனாதிபதி
- முஸ்லிம் காங்கிரஸின் பெரும்பாலான உறுப்பினர்கள் மைத்திரிக்கு ஆதரவு
- அமெரிக்காவில் புதிய முயற்சி ஐபோன் மூலம் டிரைவிங் லைசென்ஸ்
- நேற்று முன்தினம் பொழிந்த பனியை அகற்றுவதற்கு 4மில்லியன் டொலர்!
| பிள்ளைகளிடம் நாட்டை ஒப்படைப்பேன்: உண்மையை கூறும் ஜனாதிபதி Posted: 13 Dec 2014 04:06 AM PST
நாட்டில் நடைபெற்ற போரை நான்கு வருடங்களில் முடிவுக்கு கொண்டு வந்ததாகவும் அதன் பின்னர் நாட்டை அபிவிருத்தி செய்யும் பணிகளை ஆரம்பித்ததாகவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மாத்தறை தெளிஜ்ஜவில வாராந்த சந்தையை திறந்து வைத்த பின்னர் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டை அடுத்த தலைமுறைக்கு தயார்ப்படுத்துவதே எனது அடுத்த குறிக்கோள். அதற்கான வேலைத்திட்டங்கள் உள்ளன. நாடு அன்று காணப்பட்டதை போன்று தற்போது இல்லை. நாடு தற்போது முன்னேற்றமடைந்துள்ளது. நாட்டின் பிள்ளைகள் உலகத்துடன் இணைந்து செல்ல வேண்டும். பிள்ளைகள் உலகத்தை வெல்ல வேண்டும். மக்கள் அரசாங்கத்தின் மீது இரு முறை நம்பிக்கை வைத்தனர். அந்த நம்பிக்கையை நாங்கள் சிதைக்கவில்லை. எதிர்காலத்திலும் மக்களின் நம்பிக்கையை சிதைக்க போவதில்லை எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார். எது எப்படி இருந்த போதிலும் ஜனாதிபதி தமது பிள்ளைகளிடம் நாட்டை ஒப்படைக்க தயாராகி வருவது தெளிவாகியுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று கூறியுள்ளது. நாட்டின் பிள்ளைகளிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டுமாயின் அதிகார பேராசையை கைவிட்டு மகிந்த ராஜபக்ஷ கௌரவத்துடன் அரசியல் மேடையில் இருந்து இறங்கி செல்ல வேண்டும் எனவும் அந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது. அதனை விடுத்து ஆட்சியில் நீடித்து இருக்க நினைப்பதானது ஆட்சி அதிகாரத்தை தமது பரம்பரையிடம் ஒப்படைக்கவே அன்றி வேறு காரணங்கள் இல்லை. தமது பிள்ளைகளை எண்ணியே அதிகாரத்தை கைவிட முடியாத நோயினால் மகிந்த ராஜபக்ஷ பாதிக்கப்பட்டிருப்பதாகவும் த இண்டிபெண்டன் இணையத்தளம் மேலும் தெரிவித்துள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| முஸ்லிம் காங்கிரஸின் பெரும்பாலான உறுப்பினர்கள் மைத்திரிக்கு ஆதரவு Posted: 13 Dec 2014 04:04 AM PST
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க வேண்டும் என தீர்மானித்துள்ளனர். இது சம்பந்தமான இறுதி தீர்மானத்தை எடுக்கும் அதிகாரம் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் அவர் நாளை அல்லது நாளை மறுதினம் தனது இறுதி முடிவை அறிவிக்க உள்ளதாக அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து பல நாட்களாக கூடி கலந்துரையாடியதாக பெரும்பாலான உறுப்பினர்கள் மகிந்த ராஜபக்ஷவுக்கு பதிலாக மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க வேண்டும் என நிலைப்பாட்டில் இருப்பதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லி்ம் காங்கிரஸின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். முஸ்லிம் அமைச்சருக்கு ஒருவருக்கு 100 ஏக்கர் காணி அரசாங்கத்தில் முக்கிய அமைச்சு பதவியை வகித்து வரும் முஸ்லிம் அமைச்சர் ஒருவருக்கு புத்தளம், வண்ணாத்துவில்லு பிரதேசத்தில் 100 ஏ்ககர் காணியை வழங்குமாறு அரசாங்கத்தின் உயர் அதிகாரி ஒருவர் கடிதம் மூலம் காணி அமைச்சுக்கு உத்தரவிட்டுள்ளார். மேற்படி 100 ஏக்கர் காணியை சம்பந்தப்பட்ட அமைச்சர் தனது உறவினர்களுக்கு ஏற்கனவே பகிர்ந்தளித்திருந்ததுடன் பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக அதனை அரசாங்கம் மீண்டும் கையகப்படுத்தியது. இந்த நிலையில், அந்த காணியை மீண்டும் அமைச்சருக்கே வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த அமைச்சர் இந்த காணியை பலவந்தமாக தனது உறவினர்களுக்கு பகிர்ந்தளித்த நிலையில், அரசாங்கம் அதனை கையகப்படுத்தியமை உட்பட சில காரணங்களுக்காக எதிர்ப்பை தெரிவித்து அரசாங்கத்தில் இருந்து விலக தயாராகியதாக கூறப்படுகிறது. 10 கோடி ரூபாவுக்கும் மேல் பெறுமதியான இந்த காணி சம்பந்தப்பட்ட அதிகாரியின் உத்தரவின் பேரில் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் அமைச்சருக்கு வழங்க காணி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அமைச்சர் றிசார்ட் பதியூதீனுக்கே இந்த காணி வழங்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.This posting includes an audio/video/photo media file: Download Now |
| அமெரிக்காவில் புதிய முயற்சி ஐபோன் மூலம் டிரைவிங் லைசென்ஸ் Posted: 13 Dec 2014 03:57 AM PST
மத்திய கிழக்கு அமெரிக்காவில் உள்ள Iowa என்ற மாகாணத்தில் விரைவில் இடிரைவிங் லைசென்ஸ் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. பொதுமக்களுக்கு டிரைவிங் லைசென்ஸ் வழங்க Iowa புதிய ஆப்ஸ் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இனிமேல் டிரைவிங் லைசென்ஸை பேப்பர் வடிவில் வாங்காமல் ஆப்ஸ் மூலமாக ஐபோனில் பெற்றுக்கொள்ளலாம். இந்த புத்ய முறை வரும் 2015ஆம் ஆண்டு தொடங்கப்படும் என்றும், இதற்கென தனியாக புதிய கட்டணங்கள் எதுவும் இல்லை என்றும் Iowa மாகாண போக்குவரத்து துறை அதிகாரி Paul Trombino அவர்கள் தெரிவித்துள்ளார். Iowa மக்கள் இதுவரை பிளாஸ்டிக் வடிவிலான டிரைவிங் லைசென்ஸை பெற்றுவந்தனர். அந்த லைசென்ஸை பாதுகாப்பாக பர்ஸ் அல்லது வேறு ஏதாவது கவர் போட்டு வைக்க வேண்டிய அவசியம் இனி இருக்காது. போக்குவரத்து போலீஸார் டிரைவிங் லைசென்ஸ் கேட்டு சோதனை செய்யும்போது ஐபோனில் பதிவு செய்யப்பட்டுள்ள டிரைவிங் லைசென்ஸை காட்டிக்கொள்ளலாம். இந்த புதிய ஏற்பாட்டினை பொதுமக்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| நேற்று முன்தினம் பொழிந்த பனியை அகற்றுவதற்கு 4மில்லியன் டொலர்! Posted: 13 Dec 2014 03:55 AM PST
ரொறன்றோவில் நேற்று முன்தினம் பொழிந்த பனியை அகற்றுவதற்கு 4 மில்லியன் டொலர் செலவு ஏற்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, தென் ஒன்டாரியோவின் பல்வேறு பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான வாகன விபத்துகள் இடம்பெற்றதை அடுத்து மாறிவரும் பனிக்கால நிலமைகளுக்கு ஏற்ப சாரதிகள் வாகனங்களை செலுத்திச் செல்ல வேண்டுமென ஆலோசனை கூறப்பட்டுள்ளது. பனிப்பொழிவு ஆரம்பித்த நேற்று முன்தினம் காலை ஒருசில மணி நேரத்துக்குள் ரொறன்ரோவில் மட்டும் 200 க்கும் மேற்பட்ட விபத்துக்கள் குறித்து அறிவிக்கப்பட்டன. சாரதிகள் பாதுகாப்பான முறையில் குளிர்கால போக்குவரத்தில் ஈடுபட வேண்டுமென நேற்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் ஒன்ரறியோ போக்குவரத்து அமைச்சர் ஸ்டீவன் டெல் டூகா (Steven Del Duca) கேட்டுக்கொண்டார். எச்சரிக்கையுடன் இருப்பதும், மெதுவாகச் செல்வதும் வாகனத்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதும் ஒரு சாரதியின் பொறுப்பென மாகாண போக்குவரத்து அதிகாரிகள் கூறியுள்ளனர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

நாட்டில் நடைபெற்ற போரை நான்கு வருடங்களில் முடிவுக்கு கொண்டு வந்ததாகவும் அதன் பின்னர் நாட்டை அபிவிருத்தி செய்யும் பணிகளை ஆரம்பித்ததாகவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மாத்தறை தெளிஜ்ஜவில வாராந்த சந்தையை திறந்து வைத்த பின்னர் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டை அடுத்த தலைமுறைக்கு தயார்ப்படுத்துவதே எனது அடுத்த குறிக்கோள். அதற்கான வேலைத்திட்டங்கள் உள்ளன. நாடு அன்று காணப்பட்டதை போன்று தற்போது இல்லை. நாடு தற்போது முன்னேற்றமடைந்துள்ளது. நாட்டின் பிள்ளைகள் உலகத்துடன் இணைந்து செல்ல வேண்டும். பிள்ளைகள் உலகத்தை வெல்ல வேண்டும். மக்கள் அரசாங்கத்தின் மீது இரு முறை நம்பிக்கை வைத்தனர். அந்த நம்பிக்கையை நாங்கள் சிதைக்கவில்லை. எதிர்காலத்திலும் மக்களின் நம்பிக்கையை சிதைக்க போவதில்லை எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார். எது எப்படி இருந்த போதிலும் ஜனாதிபதி தமது பிள்ளைகளிடம் நாட்டை ஒப்படைக்க தயாராகி வருவது தெளிவாகியுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று கூறியுள்ளது. நாட்டின் பிள்ளைகளிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டுமாயின் அதிகார பேராசையை கைவிட்டு மகிந்த ராஜபக்ஷ கௌரவத்துடன் அரசியல் மேடையில் இருந்து இறங்கி செல்ல வேண்டும் எனவும் அந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது. அதனை விடுத்து ஆட்சியில் நீடித்து இருக்க நினைப்பதானது ஆட்சி அதிகாரத்தை தமது பரம்பரையிடம் ஒப்படைக்கவே அன்றி வேறு காரணங்கள் இல்லை. தமது பிள்ளைகளை எண்ணியே அதிகாரத்தை கைவிட முடியாத நோயினால் மகிந்த ராஜபக்ஷ பாதிக்கப்பட்டிருப்பதாகவும் த இண்டிபெண்டன் இணையத்தளம் மேலும் தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க வேண்டும் என தீர்மானித்துள்ளனர். இது சம்பந்தமான இறுதி தீர்மானத்தை எடுக்கும் அதிகாரம் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் அவர் நாளை அல்லது நாளை மறுதினம் தனது இறுதி முடிவை அறிவிக்க உள்ளதாக அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து பல நாட்களாக கூடி கலந்துரையாடியதாக பெரும்பாலான உறுப்பினர்கள் மகிந்த ராஜபக்ஷவுக்கு பதிலாக மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க வேண்டும் என நிலைப்பாட்டில் இருப்பதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லி்ம் காங்கிரஸின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். முஸ்லிம் அமைச்சருக்கு ஒருவருக்கு 100 ஏக்கர் காணி அரசாங்கத்தில் முக்கிய அமைச்சு பதவியை வகித்து வரும் முஸ்லிம் அமைச்சர் ஒருவருக்கு புத்தளம், வண்ணாத்துவில்லு பிரதேசத்தில் 100 ஏ்ககர் காணியை வழங்குமாறு அரசாங்கத்தின் உயர் அதிகாரி ஒருவர் கடிதம் மூலம் காணி அமைச்சுக்கு உத்தரவிட்டுள்ளார். மேற்படி 100 ஏக்கர் காணியை சம்பந்தப்பட்ட அமைச்சர் தனது உறவினர்களுக்கு ஏற்கனவே பகிர்ந்தளித்திருந்ததுடன் பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக அதனை அரசாங்கம் மீண்டும் கையகப்படுத்தியது. இந்த நிலையில், அந்த காணியை மீண்டும் அமைச்சருக்கே வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த அமைச்சர் இந்த காணியை பலவந்தமாக தனது உறவினர்களுக்கு பகிர்ந்தளித்த நிலையில், அரசாங்கம் அதனை கையகப்படுத்தியமை உட்பட சில காரணங்களுக்காக எதிர்ப்பை தெரிவித்து அரசாங்கத்தில் இருந்து விலக தயாராகியதாக கூறப்படுகிறது. 10 கோடி ரூபாவுக்கும் மேல் பெறுமதியான இந்த காணி சம்பந்தப்பட்ட அதிகாரியின் உத்தரவின் பேரில் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் அமைச்சருக்கு வழங்க காணி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அமைச்சர் றிசார்ட் பதியூதீனுக்கே இந்த காணி வழங்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரொறன்றோவில் நேற்று முன்தினம் பொழிந்த பனியை அகற்றுவதற்கு 4 மில்லியன் டொலர் செலவு ஏற்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, தென் ஒன்டாரியோவின் பல்வேறு பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான வாகன விபத்துகள் இடம்பெற்றதை அடுத்து மாறிவரும் பனிக்கால நிலமைகளுக்கு ஏற்ப சாரதிகள் வாகனங்களை செலுத்திச் செல்ல வேண்டுமென ஆலோசனை கூறப்பட்டுள்ளது. பனிப்பொழிவு ஆரம்பித்த நேற்று முன்தினம் காலை ஒருசில மணி நேரத்துக்குள் ரொறன்ரோவில் மட்டும் 200 க்கும் மேற்பட்ட விபத்துக்கள் குறித்து அறிவிக்கப்பட்டன. சாரதிகள் பாதுகாப்பான முறையில் குளிர்கால போக்குவரத்தில் ஈடுபட வேண்டுமென நேற்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் ஒன்ரறியோ போக்குவரத்து அமைச்சர் ஸ்டீவன் டெல் டூகா (Steven Del Duca) கேட்டுக்கொண்டார். எச்சரிக்கையுடன் இருப்பதும், மெதுவாகச் செல்வதும் வாகனத்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதும் ஒரு சாரதியின் பொறுப்பென மாகாண போக்குவரத்து அதிகாரிகள் கூறியுள்ளனர்.