மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்
- திருவனந்தபுரம்: சர்வதேச திரைப்பட விழாவில் முத்தப் போராட்டம் நடத்தியவர்கள் மீது பாட்டில் வீச்சு
- காஷ்மீர்–ஜார்க்கண்ட்டில் 4–வது கட்ட தேர்தல்: 33 தொகுதிகளில் இன்று விறுவிறுப்பான வாக்குப்பதிவு
- திருப்பதி கோவிலில் பூ, லட்டு மூலப்பொருள் வாங்க டெண்டர் முறை ரத்தாகிறது?: ஆந்திர அரசு திட்டம்
- ஆதார் அட்டை இருந்தால்தான் வாகனங்களுக்கு பெட்ரோல்: ஆந்திர அரசு உத்தரவு
- ஹவுராவிலிருந்து டெல்லி சென்ற பூர்வா எக்ஸ்பிரஸ் இன்று காலை தடம் புரண்டது: பயணிகளுக்கு பாதிப்பில்லை
- மக்களுக்கு இலவசங்கள் வழங்க கூடாது: வெங்கய்யா நாயுடு பேச்சு
- சிம்லாவில் இரண்டாவது நாளாக பனிப்பொழிவு: வாகன போக்குவரத்து பாதிப்பு
- மெஹதி கைதுக்கு உதவிய டி சர்ட்
- டெல்லியில் கட்டிடம் இடிந்து 2 பேர் சாவு
- ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் 18-ந்தேதி விண்ணில் ஏவ திட்டம்
- விரைவில் இந்திய போர் விமானங்களில் பெண் பைலட்டுகள்
- கேரளாவில் ரப்பர் விலை வீழ்ச்சி: ரூ.1000 கோடி நிதியுதவி கேட்டு கோரிக்கை
- நக்சலைட்டுகள் உருவாகுவதற்கு வறுமையே காரணம்: நிர்மலா சீதாராமன் பேச்சு
- தற்கொலைக்கு முயற்சிப்பவர்களுக்கு கவுன்சிலிங் அளிக்க வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு
- புதிய தலைநகருக்காக நிலம் தரும் விவசாயிகளுக்கு அரசு உதவி செய்யும்: சந்திரபாபு நாயுடு
- போட்டோ மட்டுமே ஆதாரம் என்றால் பிரதமரை கைது செய்யாதது ஏன்?: சி.பி.ஐ. மீது மம்தா பாய்ச்சல்
- தாயார், தம்பி, மைத்துனியை வெட்டிக் கொன்ற மனநோயாளி
- கார் விபத்தில் கணவரை பறிகொடுத்த விதவைக்கு ரூ.65 லட்சம் இழப்பீடு: லோக் அதாலத் உத்தரவு
- உயரழுத்த மின்சார கம்பி அறுந்து விழுந்ததால் கிராம குளத்தில் குளிக்கச் சென்ற 3 வாலிபர்கள் பலி
| சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல் Posted: 13 Dec 2014 10:57 PM PST சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா வருகிற 27–ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி அய்யப்பனுக்கு நெய் அபிஷேகம் உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெற்று வருகிறது. சுவாமி அய்யப்பனை தரிசனம் செய்ய தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து |
| திருவனந்தபுரம்: சர்வதேச திரைப்பட விழாவில் முத்தப் போராட்டம் நடத்தியவர்கள் மீது பாட்டில் வீச்சு Posted: 13 Dec 2014 10:48 PM PST கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் காப்பி ஷாப்பில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சில இளஞ்ஜோடிகள் ஒருவரை ஒருவரை கட்டிப்பிடித்து முத்தமிட்டு கொண்டனர். இந்த காட்சிகள் தொலைக்காட்சிகள் மூலம் வெளியானதை தொடர்ந்து சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த ஓட்டலை சூறையாடினார்கள். இது நமது கலாச்சாரத்திற்கு எதிரான செயல் என்றும் அவர்கள் கண்டனம் |
| காஷ்மீர்–ஜார்க்கண்ட்டில் 4–வது கட்ட தேர்தல்: 33 தொகுதிகளில் இன்று விறுவிறுப்பான வாக்குப்பதிவு Posted: 13 Dec 2014 09:52 PM PST காஷ்மீர் மற்றும் ஜார்க் கண்ட் மாநில சட்டசபை தேர்தல் பாதுகாப்பு காரணங்களுக்காக 5 கட்டமாக ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதில் 3 கட்ட தேர்தல் முடிந்து விட்ட நிலையில் 4–வது கட்ட தேர்தல் இன்று பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது. காஷ்மீர் மாநிலத்தில் ஸ்ரீநகர், அனந்தநாக், சோபியான், சம்பா ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள 18 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு தொடங்கியது. கடும் |
| திருப்பதி கோவிலில் பூ, லட்டு மூலப்பொருள் வாங்க டெண்டர் முறை ரத்தாகிறது?: ஆந்திர அரசு திட்டம் Posted: 13 Dec 2014 09:44 PM PST திருப்பதி கோவிலில் தினமும் பூஜைக்கு பயன்படுத்தும் பூக்கள் மற்றும் லட்டு பிரசாதத்துக்கு தேவையான மூலப்பொருட்கள் அனைத்தும் டெண்டர் மூலம் பெறப்படுகிறது. இதற்காக மட்டும் ஆண்டுக்கு ரூ.250 கோடி தேவஸ்தானம் செலவிடுகிறது. |
| ஆதார் அட்டை இருந்தால்தான் வாகனங்களுக்கு பெட்ரோல்: ஆந்திர அரசு உத்தரவு Posted: 13 Dec 2014 09:37 PM PST ஆந்திராவில் உள்ள 13 மாவட்டத்தில் 72 லட்சம் வாகனங்கள் உள்ளது. 42 லட்சம் பேர் டிரைவிங் லைசென்ஸ் வைத்து உள்ளனர். வாகன லைசென்ஸ் மற்றும் பதிவு புத்தக எண்ணை ஆதார் எண்ணுடன் சேர்க்க ஆந்திர அரசு முடிவு செய்தது. இது தொடர்பாக வீடு வீடாக கணக்கெடுக்கும் பணியை தொடங்கியது. ஆனால் இந்த முயற்சியில் வெற்றி கிடைக்கவில்லை. |
| ஹவுராவிலிருந்து டெல்லி சென்ற பூர்வா எக்ஸ்பிரஸ் இன்று காலை தடம் புரண்டது: பயணிகளுக்கு பாதிப்பில்லை Posted: 13 Dec 2014 09:35 PM PST மேற்கு வங்க மாநிலத்திலிருந்து டெல்லி செல்லும் பூர்வா எக்ஸ்பிரஸ் இன்று காலை ஹவுராவிலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் லிலுவாஹ் ரெயில் நிலையம் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. |
| மக்களுக்கு இலவசங்கள் வழங்க கூடாது: வெங்கய்யா நாயுடு பேச்சு Posted: 13 Dec 2014 09:34 PM PST மத்திய நகர்புற மேம்பாட்டு மந்திரி வெங்கய்யா நாயுடு திருப்பதியில் நடந்த விழாவில் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:– அரசு மற்றும் தனியார் நிறுவன ஒத்துழைப்புடன் நாட்டில் ரூ.45 லட்சம் கோடி மதிப்பில் 100 ஸ்பார்ட் சிப்டி (நவீன மாதிரி நகரம்) உருவாக்கப்படும். மேலும் 500 பெருநகரம் அமைக்கப்படும். சரித்திர புகழ் பெற்ற நகரங்கள் மேம்படுத்தப்படும். |
| சிம்லாவில் இரண்டாவது நாளாக பனிப்பொழிவு: வாகன போக்குவரத்து பாதிப்பு Posted: 13 Dec 2014 07:54 PM PST இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் புகழ்பெற்ற சுற்றுலா தளமாக விளங்கும் சிம்லாவில் இந்த ஆண்டு பனிப்பொழிவு சீசன் நேற்று துவங்கியது. நேற்று நிகழ்ந்த பனிப்பொழிவை சுற்றுலா வாசிகள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். தங்கும் விடுதி நடத்துபவர்களும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் பனிப்பொழிவு தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. |
| Posted: 13 Dec 2014 07:42 PM PST ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு ஆதரவான 'டுவிட்டர்' சமூக வலைத்தள கணக்கை கையாண்டு வருவது பெங்களூர் பன்னாட்டு நிறுவனத்தின் அதிகாரி மெஹதி என்ற தகவல் வெளியான சில மணி நேரத்திற்குள் அவர் கைது செய்யப்பட்டது எப்படி என்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. |
| டெல்லியில் கட்டிடம் இடிந்து 2 பேர் சாவு Posted: 13 Dec 2014 07:28 PM PST வடக்கு டெல்லி சோனியாவிகார் பகுதியில் ஒரு பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு, அந்த இடத்தில் புதிய கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வந்தது. அந்த கட்டிடம் நேற்று மாலை திடீரென இடிந்து விழுந்தது. தகவல் கிடைத்ததும் 4 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டன. |
| ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் 18-ந்தேதி விண்ணில் ஏவ திட்டம் Posted: 13 Dec 2014 04:23 PM PST இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் பி.எஸ்.எல்.வி, மற்றும் ஜி.எஸ்.எல்.வி. என்ற 2 வகை ராக்கெட்டுகளை இந்திய தொழில்நுட்பத்தில் வடிவமைத்து அதன்மூலம் செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. இதன்மூலம் விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் வல்லரசு நாடுகளுக்கு இணையாக இந்தியாவும் சாதனைகளை படைத்து வருகிறது. |
| விரைவில் இந்திய போர் விமானங்களில் பெண் பைலட்டுகள் Posted: 13 Dec 2014 04:01 PM PST எதிர்காலத்தில் இந்திய போர் விமானங்களில் பெண் பைலட்டுகள் நியமிக்கப்படுவார்கள் என விமானப்படை தளபதி அரூப் ராகா தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், 'பெண்கள் விமானப்படையின் அனைத்து துறைகளிலும் பணியாற்றி வருகிறார்கள். எதிர்காலத்தில் போர் |
| கேரளாவில் ரப்பர் விலை வீழ்ச்சி: ரூ.1000 கோடி நிதியுதவி கேட்டு கோரிக்கை Posted: 13 Dec 2014 03:48 PM PST கேரளாவில் இயற்கை ரப்பரின் விலை வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால், ரப்பர் உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2011 ஆம் ஆண்டு ஒரு கிலோ ரப்பரின் விலை ரூ.240 ஆக இருந்தது. ஆனால், இப்போது ரூ.90 முதல் ரூ.115-ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. |
| நக்சலைட்டுகள் உருவாகுவதற்கு வறுமையே காரணம்: நிர்மலா சீதாராமன் பேச்சு Posted: 13 Dec 2014 03:12 PM PST வானவில் பண்பாட்டு மையம் சார்பில் 21-வது பாரதி திருவிழா கடந்த 11-ந்தேதி முதல் நடந்து வருகிறது. இதன் 3-வது நாளான நேற்று 'பாரதி விருது' வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டார். விழாவில் தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை |
| தற்கொலைக்கு முயற்சிப்பவர்களுக்கு கவுன்சிலிங் அளிக்க வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு Posted: 13 Dec 2014 02:48 PM PST தற்கொலை முயற்சிக்கு தண்டனை விதிக்கும் சட்டப்பிரிவை இ.பி.கோ.வில் இருந்து நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில், காஷ்மீர் சட்டசபை தேர்தலையொட்டி, அங்குள்ள கதுவா என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- |
| புதிய தலைநகருக்காக நிலம் தரும் விவசாயிகளுக்கு அரசு உதவி செய்யும்: சந்திரபாபு நாயுடு Posted: 13 Dec 2014 09:36 AM PST ஆந்திராவின் புதிய தலைநகரம் விஜயவாடாவில் அமைய உள்ளது. இதற்கான வடிவமைப்பை சிங்கப்பூர் செய்து தர உள்ளது. இந்நிலையில், பிரம்மாண்ட புதிய தலைநகரம் உருவாக தங்களது நிலத்தை தரும் விவசாயிகளுக்கு ஆந்திர அரசு தகுந்த உதவிகளை செய்யும் என முதல்வர் சந்திரபாபு நாயுடு உறுதியளித்துள்ளார். |
| போட்டோ மட்டுமே ஆதாரம் என்றால் பிரதமரை கைது செய்யாதது ஏன்?: சி.பி.ஐ. மீது மம்தா பாய்ச்சல் Posted: 13 Dec 2014 08:26 AM PST சாரதா மோசடி வழக்கில் ஒருவரை கைது செய்ய போட்டோ மட்டுமே போதுமான ஆதாரம் என்றால் பிரதமரை கைது செய்யாதது ஏன்? என சி.பி.ஐ.க்கு மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார். |
| தாயார், தம்பி, மைத்துனியை வெட்டிக் கொன்ற மனநோயாளி Posted: 13 Dec 2014 08:09 AM PST உத்தராகாண்ட் மாநிலம், டெஹ்ரி மாவட்டத்தில் உள்ள கஜா பகுதியைச் சேர்ந்த 31 வயது மனநோயாளி இன்று தனது தாயார் மீனா(58) தேவியை வாளால் வெட்டிக் கொன்றான். |
| கார் விபத்தில் கணவரை பறிகொடுத்த விதவைக்கு ரூ.65 லட்சம் இழப்பீடு: லோக் அதாலத் உத்தரவு Posted: 13 Dec 2014 07:30 AM PST மராட்டிய மாநிலம், நவி மும்பை பகுதியை சேர்ந்த பாண்டுரங் ஷிண்டே என்பவர் இங்குள்ள மஹாநகர் கியாஸ் நிறுவனத்தில் மேனேஜராக வேலை செய்து வந்தார். கடந்த 4-9-2012 அன்று தனது சகப்பணியாளரான ஷர்மா என்பவருடன் அவரது காரில் பாண்டுரங் ஷிண்டே தனது வீட்டுக்கு |
| உயரழுத்த மின்சார கம்பி அறுந்து விழுந்ததால் கிராம குளத்தில் குளிக்கச் சென்ற 3 வாலிபர்கள் பலி Posted: 13 Dec 2014 07:29 AM PST ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள எஸ்.ஆர்.ஆர்.புரம் கிராமத்தைச் சேர்ந்த சாய்(31) என்பவர் நேற்று மாலை குளிப்பதற்காக அங்குள்ள ஒரு குளத்தில் இறங்கினார். அவர் குளித்துக் கொண்டிருந்தபோது, குளத்தின் மேல்பகுதி வழியாக செல்லும் உயரழுத்த மின்சார கம்பி அறுந்து விழுந்ததில் நீருக்குள் |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |