Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

இளைய சமுதாயமே போதைப் பழக்கத்திலிருந்து மீண்டு வா: மோடி அழைப்பு!

Posted:

போதைப் பழக்கத்திற்கு ஆளாகி அடிமையாக இருக்கும் இளைய சமுதாயமே அதிலிருந்து மீண்டு வா என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். 


Read more ...

நிறைவேற்று அதிகாரத்தின் பாதகங்கள் குறித்து அரசிலிருந்து விலகிய பின்னரே பேசுகின்றனர்: மஹிந்த ராஜபக்ஷ

Posted:

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாபதிபதி முறையிலுள்ள பாதகமான அம்சங்கள் தொடர்பில் அரசாங்கத்திலிருந்து விலகிய பின்னரே சில தரப்பினருக்கு புலம்படத் தொடங்கியுள்ளது. இப்போதுதான் அது தொடர்பில் பேசுகின்றனர் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 


Read more ...

டெல்லி டேக்ஸி ஓட்டுனர்களைப் பரிசோதித்து பாலின ஒழுக்கச் சான்றிதழ் வழங்க அரசு முடிவு

Posted:

சமீபத்தில் நாட்டைக் குழுக்கிய டெல்லியின் உபெர் பகுதியில் நடந்த டேக்ஸி ஓட்டுனர் ஒருவரின் பாலியல் துஷ்பிரயோக முயற்சியை அடுத்து இந்தியத் தலைநகரான டெல்லியில் அனைத்து டேக்ஸி ஓட்டுனர்களையும் பாலின நடத்தை தொர்பான பரிசோதனைக்கு உட்படுத்தி அவர்களது வாகனங்களில் பயணிக்கும் பயணிகள் விரும்பினால் காட்டும் படியிலான ஒழுக்கச் சான்றிதழை அளிக்கும் முடிவை டெல்லி மாநில அரசு எடுத்துள்ளது.


Read more ...

ரஷ்யா மீது புதிய தடைகளை விதிக்கவும் உக்ரைனுக்கு ஆயுதம் வழங்கவும் அமெரிக்க காங்கிரஸில் ஒப்புதல்

Posted:

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பினால் அதன் மீது மேலும் புதிய தடைகளை விதிப்பதற்கும் உக்ரைனுக்கு உயிர்கொல்லி ஆயுதங்களை அளிப்பதற்குமான தீர்மானம் நேற்று சனிக்கிழமை அமெரிக்க காங்கிரஸில் ஏகமனதாக ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது.


Read more ...

2014 இன் சிறந்த தொழில்நுட்ப பதிவுகள் 1 - மோட்டோ இ , நயகரா நீர்வீழ்ச்சி , மலிவான ஸ்மார்ட் போன் , மலேசிய விமானம்

Posted:

4தமிழ்மீடியாவில் தொடர்ந்து பயனுறு இணைப்புக்கள் பகுதியில் தொழில்நுட்ப பதிவுகள் மற்றும் இணையத்தளங்கள் பற்றிய தொகுப்புக்கள் வெளிவருவது நீங்கள் அறிந்ததே,


Read more ...

விஜய் ஆன்ட்டனியின் இசை தந்திரம்

Posted:

இசையா, நடிப்பா? இந்த சுய கேள்வியை தனக்குள் கேட்டு,


Read more ...

திராவிடக் கட்சிகளின் தாய் வீடு காங்கிரஸ்தான்: குஷ்பு

Posted:

தமிழகத்திலுள்ள திராவிடக் கட்சிகள் உள்பட இந்தியாவிலுள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் தாய் வீடு காங்கிரஸ் கட்சிதான் என்று குஷ்பு தெரிவித்துள்ளார். 


Read more ...

ஜனநாயகத்தை அழித்து, ஊழலில் திளைக்கும் மஹிந்த அரசை தோற்கடிப்போம்: அநுரகுமார திஸ்ஸநாயக்க

Posted:


ஜனநாயகத்தை அழித்து ஊழலில் திளைக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை தோற்கடிக்க வேண்டும். அதுவே, இப்போதுள்ள பிரதான இலக்கு என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவர் அநுரகுமார திஸ்ஸநாயக்க தெரிவித்துள்ளார். 


Read more ...

மஹிந்த- மைத்திரி நேரடி விவாதம்(?)

Posted:

ஜனாதிபதித் தேர்தலின் பிரதான வேட்பாளர்களான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான பகிரங்க நேரடி விவாதமொன்றை ஏற்பாடு செய்வதற்கான முயற்சிகளில் சில தொழில்சார் அமைப்புக்களும், புத்திஜீவிகளும் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 


Read more ...

ஜனாதிபதித் தேர்தல்; தமிழ் மக்கள் பார்வையாளர்களா? (நிலாந்தன்)

Posted:

ஜனாதிபதித் தேர்தலை நோக்கி சிறீலங்கா சுதந்திரக் கட்சி மேலும் உடைவது என்பது மஹிந்த ராஜபக்ஷவுக்கு மட்டும் அச்சுறுத்தலானது அல்ல. அதை அதன் தர்க்கபூர்வ விளைவுகளை கருதிக் கூறின் ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஒரு விதத்தில் ஆபத்தானது தான். ரணிலைப் பொறுத்த வரை அவருக்கு வெற்றி வேண்டும். அதற்காக அவர் ஒப்பீட்டளவில் நீண்ட காலம் காத்திருந்து விட்டார். கிடைக்கப்போகும் வெற்றியைப் பொறுத்தே அவர் கட்சிக்குள் தன்னுடைய தலைமை ஸ்தானத்தையும் பாதுகாக்க வேண்டியிருக்கும். தனது தலைமைக்கு சவாலாக கட்சிக்குள் எழுச்சி பெற்று வரும் இரண்டாம் நிலை தலைவர்களை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு அவருக்கு வெற்றி அவசியம். ஆனால் அந்த வெற்றியானது திருமதி. சந்திரிக்காவை அளவுக்கு மிஞ்சி பலப்படுத்தும் ஒன்றாக அமைவதை ரணில் விரும்பமாட்டார். 


Read more ...

ஹாக்கி சாம்பியன் தொடர் : அரைறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்திய பாகிஸ்தான் வீரர்கள், ரசிகர்களை அவமதிப்பு?

Posted:

இந்திய - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஹாக்கி ஆடவர் சாம்பியன் கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது. எனினும் இப்போட்டியில் பாகிஸ்தான் அணியினர் தமது வெற்றியைக் கொண்டாடிய விதம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


Read more ...

டுவிட்டரில் ISIS ற்கு ஆதரவு : பெங்களூரில் மேதி பிஸ்வாஸ் எனும் இளைஞர் கைது

Posted:

ISIS க்கு ஆதரவாக கருத்துக்களை வெளியிட்டு வந்த குற்றச்சாட்டில் பெங்களூரில் மேதி பிஸ்வாஸ் எனும் இந்திய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.


Read more ...

நாம் அருந்தும் கோப்பி பானத்தின் சுவை கோப்பையின் நிறத்துக்கேற்ப மாறுமாம்!:புதிய ஆய்வில் தகவல்

Posted:

நாம் விரும்பி வாங்கும் கோப்பையின் நிறம் மற்றும் வடிவம் என்பவை வேறுபடுவதற்கு விஞ்ஞான ரீதியான காரணம் இருக்கிறதா என்பது தெரியவில்லை.


Read more ...

தலாய்லாமாவுடன் சந்திப்பு நிகழ்த்த மறுத்தார் போப் ஃபிரான்சிஸ்!

Posted:

சீனாவிலுள்ள கத்தோலிக்கத் தேவாலயங்களுடனான உறவினைப் பாதிக்கும் என்ற அச்சத்தினால் பாப்பரசர் ஃபிரான்சிஸ் தீபேத் பௌத்த ஆன்மிகத் தலைவரான தலாய் லாமா ஐச் சந்திக்கும் ஏற்பாட்டினை மறுத்து விட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.


Read more ...

இங்கிலாந்துடனான ஒரு நாள் தொடரை கைப்பற்றியது இலங்கை : சங்ககார தொடர்ந்து அதிரடி

Posted:

இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 6வது ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி இலகுவாக வெற்றி பெற்றது. இதன் மூலம் 7 போட்டிகள் கொண்ட தொடரில் 4-2 என இலங்கை அணி முன்னிலை வகிப்பதுடன் தொடரையும் கைப்பற்றியுள்ளது.


Read more ...

தாய்லாந்து இளவரசி அரச ஆணையினால் பட்டத்தைத் துறந்தார்!:இளவரசருடன் மணமுறிவு

Posted:

தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தின் பட்டத்துக்குரிய இளவரசியான ஶ்ரீராஸ்ம் ஒரு சில அரசியல் காரணங்களால் அரச குடும்பத்தின் வேண்டுதலுக்கு ஏற்பத் தனது பட்டத்தைத் துறந்திருப்பதாகவும் இதன் மூலம் பட்டத்துக்குரிய இளவரசர் மஹா வஜிராலொன்கோர்ன் உடனான இவரது 13 வருட திருமண வாழ்க்கையும் முடிவுக்கு வந்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.


Read more ...

இந்தோனேசியாவில் நிலச்சரிவில் சிக்கி 18 பேர் பலி!:91 பேர் மாயம்

Posted:

இன்று சனிக்கிழமை இந்தோனேசியாவின் மத்திய ஜாவாத் தீவிலுள்ள கரங்கோபர் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட மோசமான நிலச்சரிவில் சிக்கி 18 பேர் பலியாகி இருப்பதாகவும் இன்னமும் 91 பேரைக் காணவில்லை என்றும் அந்நாட்டின் அனர்த்த முகாமை அமைப்பு தெரிவித்துள்ளது.


Read more ...

தென் சீனக் கடலில் கடற்பரப்பு ஆக்கிரமிப்பு பற்றிய அமெரிக்க அறிக்கையை நிராகரித்தது சீனா

Posted:

தென் சீனக் கடலில் சர்ச்சைக்குரிய கடற்பரப்புக்களை ஆக்கிரமித்தது குறித்து சமீபத்தில் அமெரிக்க அரசு வெளியிட்ட அறிக்கையை சீனா நிராகரித்துள்ளது.


Read more ...

புதிய அரசியல் கட்சியைத் தொடக்கிய ரஜினி ரசிகர்கள்!

Posted:

திருப்பூரில் ரஜினிகாந்த் ரசிகர்கள் இணைந்து சூப்பர் ஸ்டார் மக்கள் கழகம் எனும் புதிய கட்சியை தொடங்கியுள்ளனர். இதற்கான கொடி, சின்னம் என்பவற்றையும் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.


Read more ...

முதல் டெஸ்ட் : ஆஸ்திரேலியாவுடன் போராடித் தோற்றது இந்தியா!

Posted:

இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மயிரிழையில் தோல்வியைத் தழுவியது. எனினும் ஆஸ்திரேலிய அணிக்கு கடும் போராட்டத்தைக் கொடுத்து இறுதிவரை போராடியதால் இந்திய அணிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.


Read more ...

உள்நாட்டில் கோயில்களைத் தகர்த்துவிட்டு திருப்பதியானிடம் அருளைக் கோருவது என்ன நியாயம்?: மனோ கணேசன்

Posted:

நம் நாட்டில் இந்து, இஸ்லாமிய, கத்தோலிக்க மதங்களை பின்பற்றும் மக்களுக்கு எதிராக தீவிரவாதத்தை வளர்த்து விட்டு, பெளத்த சகோதரர்களுடன் நமக்கு இருக்கின்ற நல்லுறவை கெடுக்கும் தீவிரவாதிகளுக்கு ஆசீர்வாதம் வழங்கி விட்டு, இப்போது திருப்பதி வெங்கடாசலபதியின் அருளை கோருவது நியாயமாகுமா? என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் கேள்வியெழுப்பியுள்ளார். 


Read more ...

லிங்கா : திரை விமர்சனம்

Posted:

தலைக்கேற்ற கிரீடம் அமைந்துவிட்டால், தஞ்சை பெரிய கோவிலையே குனிந்து பார்க்க வைக்கிற அளவுக்கு மிரட்டுவார் ரஜினி.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™