Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


மீண்டும் சூடு பிடிக்கிறது ராஜிவ் கொலை வழக்கு: 'கேபி'யிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ., தீவிரம்

Posted:

புதுடில்லி : முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கு தொடர்பாக, விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான, 'கேபி' என்ற குமரன் பத்ம நாதனிடம் விசாரிக்க, சர்வதேச போலீசான, 'இன்டர்போல்' உதவியை, சி.பி.ஐ., நாடியுள்ளது.முன்னாள் பிரதமர் ராஜிவ், 1991ல், ஸ்ரீபெரும்புதூரில், விடுதலைப் புலிகளின் மனித வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தார். கொலை வழக்கில் விசாரணை முடிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது. ஆனாலும், கொலைச் சதிக்கான பின்னணி குறித்து ஆய்வு செய்வதற்காக, பல்நோக்கு கண்காணிப்பு குழுவான, எம்.டி.எம்.ஏ., என்ற அமைப்பு, ஜெயின் கமிஷன் பரிந்துரைப்படி அமைக்கப்பட்டது. இந்த ...

தேசியவாத காங்கிரசுக்கு ரூ.51 கோடி: இந்த ஆண்டின் தேர்தல் செலவு

Posted:

புதுடில்லி: இந்த ஆண்டில் நடைபெற்ற, லோக்சபா தேர்தல், ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் மாநிலங்களில் நடைபெற்ற, சட்டசபைத் தேர்தல் தொடர்பான செலவு விவரங்களை, ஆறு தேசிய கட்சிகளில், காங்கிரஸ், பா.ஜ., தவிர, மற்ற கட்சிகள் சமர்ப்பித்து உள்ளன. இதில், தேசியவாத காங்., 51.34 கோடி ரூபாயும், பகுஜன் சமாஜ் 30.05 கோடி ரூபாயும், மா.கம்யூ., 18.69 கோடி ரூபாயும் செலவிட்டு உள்ளன. இ.கம்யூ., இந்த ஆண்டின் தேர்தல் செலவு விவரங்களை, கடந்த செப்., 15ம் தேதி தாக்கல் செய்தும், அந்த விவரத்தை தேர்தல் கமிஷன் வெளியிடவில்லை. தேர்தல் செலவு விவரங்களை தாக்கல் செய்யாத, 20 அரசியல் கட்சிகளுக்கு, ...

தி.மு.க., - அ.தி.மு.க.,வா... திருவிழா கூட்டணியா? வைகோ போக்கு புரியாமல் ம.தி.மு.க.,வினர் குழப்பம்

Posted:

தமிழகத்தில், பா.ஜ., கூட்டணியில், முதலாவதாக வந்து இடம் பிடித்த வைகோ, அந்த கூட்டணியில் இருந்து, முதல் ஆளாக வெளியேறி இருக்கிறார். வெளியேறும் முடி வோடு, கடந்த சில மாதங்களாக, மத்திய பா.ஜ., அரசையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்து வந்த அவர், நேற்று, கூட்டணி முறிந்ததாக அறிவித்து உள்ளார்.பெரும் குழப்பம்: தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு, இன்னும் ஓராண்டு தான் மிச்சம் இருக்கிறது. இந்த சூழலில், வைகோ தலைமையிலான ம.தி.மு.க., எந்த அணியில் சேரப் போகிறது என்பதில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக, அந்த கட்சியினர் கூறுகின்றனர்.அதற்கான காரணங்கள் பற்றி, ...

2வது பிரிவில் மார்ச்சில் சோதனை

Posted:

புதுடில்லி: ''எங்கள் நாட்டுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, இந்தியாவில், 20 முதல், 24 அணுமின் உற்பத்தி பிரிவுகள் அமைக்கப்படும்,'' என, ரஷ்யாவுக்கான இந்திய தூதர் அலெக்சாண்டர் கடாகின் தெரிவித்துள்ளார்.டில்லியில் நேற்று அவர் கூறியதாவது: அணுமின் உற்பத்தி யில் இந்தியாவும், ரஷ்யா வும் பெரிய அளவில் இணைந்து செயல்பட தீர்மானித்துள்ளன. இரு நாடுகள் இடையேயான ஒப்பந்தப்படி, முதலில், இந்தியாவில், 14 முதல், 16 அணுமின் உற்பத்தி பிரிவுகள் அமைக்க தீர்மானிக்கப்பட்டது. தற்போது, அது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில், 20 முதல், 24 அணுமின் உற்பத்தி பிரிவுகள் அமைக்கப்படும். இது ...

இளைஞர்கள் தனியாக ஈராக் செல்ல விசா வழங்குவதற்கு அதிரடி தடை

Posted:

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள், ஈராக் சென்று, ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பில் சேர்ந்ததாக, சமீபத்தில் வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஈராக் செல்வதற்கு விசா வழங்கும் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டுள்ள, அல்சகாயா நசீர் டிராவல்ஸ் என்ற ஏஜன்சி, தன் கட்டுப்பாட்டில் உள்ள ஏஜன்சிகளுக்கு அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில், 'வழிபாட்டு தலங்களுக்கு செல்வதாக கூறி, ஈராக் சென்று, அங்குள்ள பயங்கரவாத அமைப்புகளில் இளைஞர்கள் சேருவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, 30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள், தனியாக, ...

பாக்.,கிற்குள் புகுந்து பயங்கரவாதிகளை முற்றிலும் அழித்து ஒழிக்க வேண்டும்

Posted:

ஜம்மு: ''ஜம்மு - காஷ்மீரில், அப்பாவி மக்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் மீது, தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் பயங்கரவாதிகளை, பாகிஸ்தானுக்குள் புகுந்து, முற்றிலும் அழிக்க வேண்டும்,'' என, 'அன்சுமன் மின்காஜ் ரசூல்' என்ற அமைப்பின் தலைவர், மவுலானா அதார் ஹுசைன் தெலவி கூறியுள்ளார். பாகிஸ்தான் எல்லையிலிருந்து ஊடுருவும் பயங்கரவாதிகள், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் அடிக்கடி தாக்குதல் நடத்தி, அமைதிக்கும், மத நல்லிணக்கத்திற்கும் இடையூறு விளைவிக்கின்றனர். இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டுமானால், இந்திய படையினர், பாகிஸ்தானுக்குள் ஊடுருவி, அங்குள்ள பயங்கரவாத ...

'ரா' தந்திரத்தால் மும்பை திரும்பிய ஆரிப்: உதவி செய்வது போல வலையில் சிக்க வைத்த 'டெக்னிக்'

Posted:

மும்பை:மும்பை கல்யாண் பகுதியைச் சேர்ந்த ஆரிப் மஜித் என்ற வாலிபன் உட்பட, நான்கு பேர், மே மாதம் காணாமல் போயினர். பின், இவர்கள், ஈராக்கில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில் சேர்ந்திருப்பது தெரியவந்தது. நான்கு பேரில் ஆரிப் மஜித், சமீபத்தில் மும்பை திரும்பினான். ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகளின் செயல்கள் பிடிக்காமல், திரும்பி விட்டதாக அவன் தெரிவித்ததாக, போலீஸ் வட்டாரங்கள் கூறின.சொந்த முடிவு அல்ல: ஆனால், ஆரிப் மஜித் மும்பை திரும்பியது தொடர்பாக, உளவு நிறுவன வட்டாரங்கள் புதிய தகவலை தெரிவித்துள்ளன. அந்த விவரம் ...

தமிழக மீனவ நண்பன் மோடி! 31 ஆண்டு கால பிரச்னைக்கு நிரந்த தீர்வு காண்பார்: ஆலோசனையில் பங்கேற்ற பிரதிநிதிகள் நம்பிக்கை

Posted:

தேடிப் போய் மனு கொடுத்தாலும், முந்தைய மத்திய அரசு, மீனவர் பிரச்னையை கண்டுகொள்ளவில்லை. அதே நேரத்தில், 'நிரந்த தீர்வு காண்போம்; ஆலோசனை கொடுங்கள்' என, பா.ஜ., அரசு, மீனவ பிரதிநிதிகளை தேடி அழைத்து, கருத்து கேட்கிறது. மோடியின் ராஜதந்திர நடவடிக்கை, மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தும்; அது நீலப் புரட்சியாக இருக்கும். தமிழகத்தின் மீனவ நண்பன் மோடி தான்' என, ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற மீனவ பிரதிநிதிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, மோடி பிரதமரான பின், தமிழக மீனவர் பிரச்னையில், சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு ...

பகவத்கீதை தேசிய நூல்: சுஷ்மா:மம்தா, காங்கிரஸ் கடும் எதிர்ப்பு

Posted:

புதுடில்லி : 'பகவத்கீதையை தேசிய புத்தகமாக அறிவிக்க வேண்டும்' என்ற, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜின் கருத்துக்கு, திரிணமுல் காங்கிரஸ் உட்பட, சில கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. அரசியல் சட்டமே, 'ஜனநாயகத்தின் புனிதப் புத்தகம்' என்றும் கூறியுள்ளன.இந்துக்களின் புனித நூலான, 'பகவத்கீதை' உரு வாகி, 5,151 ஆண்டுகள் ஆனதை ஒட்டி, டில்லி செங்கோட்டை மைதானத்தில், நேற்று முன்தினம், விழா ஒன்று நடைபெற்றது.இந்த விழாவில் பங்கேற்ற, விஸ்வ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால், 'இந்துக்களின் புனித நூலான பகவத்கீதையை, தேசிய புத்தகமாக, பிரதமர் நரேந்திர மோடி அறிவிக்க ...

போற்றப்படும் பாரதியார் - திருவள்ளுவர்: பா.ஜ., அரசுக்கு உள்நோக்கம் இருக்கிறதா?

Posted:

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் அறிவிப்பு தான், இதற்கு காரணம். இந்த அறிவிப்பிற்கும், திருவள்ளுவர், பாரதியாரை, உத்தரகண்ட் மாநிலத்தில் இருந்து பா.ஜ,. சார்பில், ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்ட, தருண் விஜய் உயர்த்தி பேசியது தான் பின்னணி.'திருவள்ளுவர் தினம் அடுத்தாண்டு முதல், நாடு முழுவதும் கொண்டாடப்படும்' என்று அறிவித்த, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், ஸ்மிருதி இரானி, தேசிய கவிதை போட்டி ஒன்றை, வரும் 11ம் தேதி, பாரதியார் பிறந்த தினத்தை ஒட்டி நடத்த அறிவுறுத்தினார். இதை, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் - சி.பி.எஸ்.இ., பள்ளிகள் மட்டுமின்றி, ...

ரயில்வேயில் மகளிர் பாதுகாப்பு படை: பெண்களுக்கு தொல்லை இனி இல்லை

Posted:

புதுடில்லி: ''ரயில்வே பாதுகாப்பு படையில், மகளிர் சிறப்பு படைப் பிரிவு ஏற்படுத்தப்படும்; இப்பிரிவினர் ரயிலில் பெண் பயணிகளின் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுவர்,'' என, ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.அவர் லோக்சபாவில் மேலும் கூறியதாவது:ரயில்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். அத்துமீறல் பேர்வழிகள் குறித்து பெண்கள், உடனடியாக புகார் தெரிவிக்க வசதியாக, தனி மொபைல் அப்ளிகேஷன் அறிமுகப்படுத்தப்படும்.ரயில்வே பட்ஜெட்டில் தெரிவித்த அம்மன் மற்றும் சிவ தலங்கள், ஜெயின், கிறிஸ்துவர், சுபி, இஸ்லாமியர், சீக்கியர் ...

இந்தியாவில் உள்ள கணக்கில் வராத கறுப்பு பணம் ரூ.1.19 லட்சம் கோடி:சட்டத்தின் இரும்பு கரங்கள் மூலம் பறிமுதல் செய்யப்படுமா?

Posted:

புதுடில்லி: அன்னிய நாடுகளில், இந்தியர்கள் பதுக்கி உள்ள கறுப்பு பணத்தை மீட்டுக் கொண்டு வர, மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. தேநேரத்தில், இந்தியாவுக்கு உள்ளேயே, 1.19 லட்சம் கோடி ரூபாய் கணக்கில் வராத கறுப்புப் பணம் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்தப் பணத்தை மீட்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.கறுப்பு பணத்திற்கு எதிராக, பெரிய அளவில் அரசியல் ரீதியான பிரசாரம் நடைபெற்று வருகிறது. அத்துடன், லஞ்ச ஊழலை ஒழிக்க, லோக்பால் அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும், நாடு முழுவதும் வலுப் பெற்று வருகிறது.இந்நிலையில், 14,169 ...

அப்பீல் மனு மீதான விசாரணைக்கு ஜெயலலிதா தயார்: சுப்ரீம் கோர்ட் கெடுவுக்கு முன் ஆவணங்கள் தாக்கல்

Posted:

பெங்களூரு: உச்ச நீதிமன்றம் விதித்துள்ள கெடு முடிய, இன்னும் 10 நாட்கள் இருக்கும் நிலையில், சொத்து குவிப்பு வழக்கு தொடர்பான ஆவணங்களை, தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் நேற்று, பெங்களூரில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில், ஜெயலலிதா உட்பட, நான்கு பேர் மீதான, சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டது. ஜாமின் கேட்டு, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடியானதால், உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்து, ஜாமின் பெற்றனர்.அப்பீல் மனு மீதான ...

காஷ்மீர்,ஜார்கண்ட்டில் 3-வது கட்ட தேர்தல்:பலத்த பாதுகாப்பு

Posted:

ஸ்ரீநகர்:காஷ்மீரில் இன்று 3-வது கட்டமாக முதல்வர் உமர் அப்துல்லா போட்டியிடும் பீர்வா தொகுதி உள்பட 16 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது.காஷ்மீர் மாநில சட்டசபைக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. 2 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துவிட்டன. இரண்டு கட்ட தேர்தலிலும் இதற்குமுன் இல்லாத அளவுக்கு 71 சதவீத வாக்குகள் பதிவாயின. 3வது கட்டமாக பத்காம், புல்வாமா, பாரமுல்லா மாவட்டங்களில் உள்ள 16 தொகுதிகளுக்கு இன்று ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது.இந்த தொகுதிகளில் 6 லட்சத்து 51 ஆயிரம் பெண்கள் உள்பட 13 லட்சத்து 59 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்கு அளிப்பதற்காக 1,781 ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™