Tamil News | Online Tamil News |
- 50 வயதுக்கு மேல் அரசியலுக்கு வந்தால் போதும் தந்தை போட்ட தடையால் தவிக்கும் நடிகர் விஜய்
- கண்டுக்காத போலீசாரை 'களை' எடுக்க முடிவு ஜாதி சார்பு அதிகாரிகளை வேறு மாவட்டங்களுக்கு மாற்ற திட்டம்
- தமிழக அரசு அழைப்பை ஏற்க தயங்கும் தொழில் முனைவோர் நடைமுறை சிக்கல் காரணமா?
- மோடியின் வெளிநாட்டு பயணத்தால் அன்னிய முதலீடு அதிகரிக்க வாய்ப்பு
- பழநி கோவிலுக்கு பக்தர் வழங்கிய ரூ.1,000 கோடி சொத்து எங்கே?
- ரூ.80 கோடி நன்கொடை அள்ளிய தி.மு.க.,: தேர்தல் கமிஷனில் அறிக்கை
- கறுப்பு பணத்திற்கு ஆதாரம் எங்கே? இந்தியாவிடம் சுவிஸ் கண்டிப்பு
- அமலில் உள்ள திட்டக்கமிஷனுக்கு மாற்றாக அமைக்கப்படுகிறது புதிய அமைப்பு: மாநிலங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும் என்கிறார் பிரதமர் மோடி
- தமிழக மீனவர்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு: பா.ஜ., முயற்சியால் சென்னையில் இலங்கை அதிகாரிகள்
- தமிழகத்தில் குறையும் எச்.ஐ.வி., நோயாளிகள்
- சர்ச்சை ஆசிரமங்களை மூடுங்கள்: பா.ஜ., வலியுறுத்தல்
- 4 லட்சம் பேரிடம் ரூ.1,000 கோடி சுருட்டிய 26 நிறுவனங்கள் மீது 'செபி' நடவடிக்கை
- நிரஞ்சன் ஜோதியை கிராம பெண்களுடன் ஒப்பிடுவதா?பிரதமர் நரேந்திர மோடி பேச்சுக்கு எழுந்தது எதிர்ப்பு
- போலீசார் நக்சலைட்டுகளிடையே துப்பாக்கிச் சூடு: கேரள வனப்பகுதியில் திடீர் பரபரப்பு
| 50 வயதுக்கு மேல் அரசியலுக்கு வந்தால் போதும் தந்தை போட்ட தடையால் தவிக்கும் நடிகர் விஜய் Posted: ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவு இருப்பதால், அவர்களின் விருப்பப்படி, புத்தாண்டில் புதுக்கட்சி துவக்கி, தீவிர அரசியலில் இறங்க திட்டமிட்ட, நடிகர் விஜய், '50 வயதில் அரசியலுக்கு வந்தால் போதும்' என்ற, தன் தந்தையான, இயக்குனர் சந்திரசேகரின் தடையால், தவிப்பில் இருப்பதாக கூறப்படுகிறது.10 லட்சம் பேர்: நடிகர் விஜய்க்கு, தமிழகம் முழுவதும், 3,500 ரசிகர் மன்றங்கள் உள்ளன; அதில், 10 லட்சம் பேர் உறுப்பினர்களாக இருக்கின்றனர். 'தீவிர அரசியலில் ஈடுபட வேண்டும்' என்பது, நடிகர் விஜயின் நீண்ட நாள் ஆசை.அதனால் தான், சில ஆண்டுகளுக்கு முன், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலை ... |
| கண்டுக்காத போலீசாரை 'களை' எடுக்க முடிவு ஜாதி சார்பு அதிகாரிகளை வேறு மாவட்டங்களுக்கு மாற்ற திட்டம் Posted: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில், ஜாதி சார்புடைய, போலீஸ் அதிகாரிகளின் மெத்தனமான செயல்பாடுகளால், தொடர் கொலைகள் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து, நேரடியாக கள ஆய்வு செய்த, டி.ஜி.பி., அலுவலகம், பல போலீஸ் அதிகாரிகளை, வேறு மாவட்டங்களுக்கு மாற்ற முடிவு செய்துள்ளது.புகார்கள்:நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில், ஜாதி மோதல்கள் மீண்டும் வெடிக்கத் துவங்கி உள்ளதாகவும், மாணவர்கள் மத்தியிலும், இந்த மோதல் தலை விரித்தாடுவதாகவும், ஜாதிய ரீதியான கொலைகளை, ஜாதி சார்புடைய போலீஸ் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும், டி.ஜி.பி., ... |
| தமிழக அரசு அழைப்பை ஏற்க தயங்கும் தொழில் முனைவோர் நடைமுறை சிக்கல் காரணமா? Posted: வேலைக்கு எளிதாக ஆட்கள் கிடைப்பர் என்பதால், தென் மாவட்டங் களில் தொழில் துவங்க வாருங்கள்; சலுகைகள் தருகிறோம்' என்ற, தமிழக அரசின் அழைப்பை, தொழில் முனைவோர் வரவேற்றுள்ளனர். அதே நேரத்தில், மின் தட்டுப்பாடு மற்றும் நடைமுறை சிக்கல்கள், அவர்களை தயக்கம் அடைய வைத்து உள்ளது.சலுகை தருகிறோம் :'தொழில் துவங்க வெளிநாடு, வெளிமாநிலங்களுக்குச் செல்ல வேண்டாம்; தென் மாவட்டங்களுக்கு வாருங்கள்; தேவையான சலுகைகளை செய்து தருகிறோம்' என, கோவையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், தொழில் துறை அமைச்சர் தங்கமணி, தொழில் முனைவோருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.மேலும், 'தொழில் ... |
| மோடியின் வெளிநாட்டு பயணத்தால் அன்னிய முதலீடு அதிகரிக்க வாய்ப்பு Posted: புதுடில்லி ; 'அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில், பிரதமர் நரேந்திர மோடி அளித்த வாக்குறுதிகள், அங்குள்ள தொழில் அதிபர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இதனால், இந்தியாவில், வெளிநாட்டு முதலீடு குவிய வாய்ப்புள்ளது' என, ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.பிரதமர் நரேந்திர மோடி, சமீபத்தில், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் சுற்றுப் பயணம் செய்தார். அப்போது, அங்குள்ள தொழில் அதிபர்களிடையே பேசிய அவர், 'இந்தியாவில் முதலீடு செய்தால், அதற்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்' என, உறுதி அளித்தார்.இந்நிலையில், இந்திய வர்த்தக ... |
| பழநி கோவிலுக்கு பக்தர் வழங்கிய ரூ.1,000 கோடி சொத்து எங்கே? Posted: பழநி தண்டாயுதபாணி கோவிலுக்கு, 11 ஆண்டுகளுக்கு முன், பக்தர் ஒருவர் தானமாக வழங்கிய 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள், இன்னும் கோவில் கணக்கில் சேர்க்கப்படாமல் உள்ளன. இது குறித்து, அறநிலைய துறை ஆணையர் உத்தரவிட்டும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அலட்சியமாக இருப்பது ஏன் என, தணிக்கை துறை கேள்வி எழுப்பி உள்ளது. மேலும், அறநிலைய துறையின் அலட்சியத்தால் இந்த சொத்துகள் தற்போது ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கலாம் என்ற ஐயமும் ஏற்பட்டுள்ளது.கடிதம்: பழநி கோவிலுக்கான மண்டல தணிக்கை அலுவலர், அறநிலைய துறை ஆணையருக்கு, சமீபத்தில் கடிதம் எழுதினார். அதில் ... |
| ரூ.80 கோடி நன்கொடை அள்ளிய தி.மு.க.,: தேர்தல் கமிஷனில் அறிக்கை Posted: புதுடில்லி : நன்கொடை பெற்ற விவரம் தொடர்பாக, தேர்தல் கமிஷனுக்கு, கட்சிகள் அளித்துள்ள தகவலின் படி, கடந்த நிதியாண்டில் காங்கிரஸ், 66 கோடி ரூபாய் நன்கொடை பெற்றுள்ளது. தி.மு.க., 79.85 கோடி நன்கொடை பெற்ற போதிலும், 1.05 கோடி ரூபாய்க்கு தான் கணக்கு காண்பித்துள்ளது.தெரிவிக்கவில்லை:நன்கொடை விவரங்களை, பா.ஜ., தெரிவிக்காததால், அந்த கட்சி பெற்ற நன்கொடை விவரங்கள் தெரியவில்லை.இந்த வரிசையில், உ.பி., முன்னாள் முதல்வர் மாயாவதியின், பகுஜன் சமாஜ் கட்சி, ஒரு ரூபாய் கூட வெளியில் இருந்து நன்கொடை பெறவில்லை.அளிக்காத கட்சிகள்:கடந்த நவம்பர் 30க்குள் நன்கொடை ... |
| கறுப்பு பணத்திற்கு ஆதாரம் எங்கே? இந்தியாவிடம் சுவிஸ் கண்டிப்பு Posted: மும்பை : ''கறுப்பு பணம் குறித்த ஆதாரத்தோடு வந்தால் மட்டுமே சுவிஸ் அரசு ஒத்துழைப்பு கொடுக்கும்; எந்த விவரமும் இல்லாமல், பொத்தாம் பொதுவாக அனைத்து இந்தியர்களின் வங்கிக் கணக்குகளை கேட்பது சரியல்ல,'' என, இந்தியாவிற்கான சுவிஸ் தூதர் லினஸ் வான் காஸ்டல்மல், காட்ட மாக தெரிவித்துள்ளார்.பகிர்ந்து கொள்ளும்:அவர் செய்தியாளர்களி டம் மேலும் பேசியதாவது:சுவிஸ் வங்கிகளில், கடந்த பல ஆண்டுகளாக, பல வழிகளில் பணம் போடப்பட்டு வந்தது. அவை அனைத்தும், வரி செலுத்தப்பட்ட அதிகாரப்பூர்வ பணம் தான் என்று கூற முடியாது.இப்போது நிலைமை வேறு. கடந்த காலத்தை மறந்து ... |
| Posted: புதுடில்லி:''திட்டக்கமிஷனுக்கு மாற்றாக அமைக்கப்பட உள்ள புதிய அமைப்பில், மாநிலங்களுக்கு அதிக பங்கு இருக்கும். தங்களின் ஆதங்கங்கள், கருத்துகளை தெரிவிக்க ஒரு அமைப்பு இல்லையே என யோசித்த மாநிலங்களுக்காக இந்த அமைப்பு உருவாக்கப்படுகிறது,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.திட்டக்கமிஷனுக்கு மாற்றாக புதிய அமைப்பு ஏற்படுத்துவது குறித்து, மாநில முதல்வர்களுடன் கலந்தாலோசிக்க, டில்லி யில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:இப்போதுள்ள திட்டக்கமிஷனுக்குப் பதிலாக புதிதாக அமைக்கப்பட உள்ள அமைப்பில், மாநிலங்களுக்கு அதிக பங்கு ... |
| Posted: இலங்கை கடல் எல்லையில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களின் பிரச்னைகளை தீர்ப்பதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது என்பதற்கு அடையாளமாக, நேற்று, சென்னையில், இலங்கை அதிகாரிகளுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில், பிடிபட்ட படகுகளை திருப்பித்தர இலங்கை தரப்பு ஒப்புக்கொண்டுள்ளதோடு, பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.தமிழக மீனவர் பிரச்னைக்கும், இலங்கை தமிழர் பிரச்னைக்கும் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, இலங்கை அரசுடன் பேசி, பல்வேறு முயற்சிகளை எடுத்து ... |
| தமிழகத்தில் குறையும் எச்.ஐ.வி., நோயாளிகள் Posted: புதுடில்லி:தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மணிப்பூர், நாகாலாந்து ஆகிய ஆறு மாநிலங்களில், அதிகமாக இருந்த எச்.ஐ.வி., நோயாளிகளின் எண்ணிக்கை, 2011ம் ஆண்டு நிலவரப்படி குறைந்துள்ளது.அவ்வாண்டில், 1.16 லட்சம் புதிய எச்.ஐ.வி., நோயாளிகளில், இந்த ஆறு மாநிலங்களின் பங்கு, 31 சதவீதம் என்ற அளவிற்கே உள்ளது.அதேசமயம், எச்.ஐ.வி., பாதிப்பு குறைவாக உள்ளதாக மதிப்பிடப்பட்ட, ஒடிசா, ஜார்க்கண்ட், பீகார், உத்தரபிரதேசம், மேற்குவங்கம், குஜராத், சத்தீஸ்கர், ராஜஸ்தான், பஞ்சாப், உத்தரகண்ட் ஆகிய 10 மாநிலங்களில், 2012ம் ஆண்டு நிலவரப்படி, எச்.ஐ.வி., புதிய நோயாளிகளின் எண்ணிக்கை, 57 சதவீதமாக ... |
| சர்ச்சை ஆசிரமங்களை மூடுங்கள்: பா.ஜ., வலியுறுத்தல் Posted: புதுடில்லி:'அரியானாவில், சாமியார் ராம்பால் நடத்தி வந்தது போன்ற, சர்ச்சைக்குரிய ஆசிரமங்களை தடை செய்ய வேண்டும்' என, பா.ஜ., தெரிவித்து உள்ளது. பா.ஜ.,வின் அதிகாரபூர்வ கட்சி பத்திரிகை, 'கமல் சந்தேஷ்.' இதன் ஆசிரியராக இருப்பவர், ராஜ்யசபா எம்.பி., பிரபாத் ஜா. இவர், பா.ஜ.,வின் துணைத் தலைவர்களில் ஒருவராகவும் உள்ளார்.இந்த இதழில் எழுதியுள்ளதாவது:சட்ட விரோதமாக செயல்படும், மூட நம்பிக்கைகளை பரப்பும் ஆசிரமங்களை தடை செய்ய வேண்டும். அரியானாவில், 15 நாட்களாக, சட்டத்திற்கு கட்டுப்படாமல் செயல்பட்ட, சாமியார் ராம்பாலின் ஆசிரமம் மீது, அம்மாநில பா.ஜ., அரசு மேற்கொண்ட நடவடிக்கை ... |
| 4 லட்சம் பேரிடம் ரூ.1,000 கோடி சுருட்டிய 26 நிறுவனங்கள் மீது 'செபி' நடவடிக்கை Posted: புதுடில்லி:விதிகளை மீறி, 4 லட்சத்திற்கும் மேலான முதலீட்டாளர்களிடம் இருந்து, 1,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக நிதி திரட்டிய, 26 நிறுவனங்கள் மீது, 'செபி' நடவடிக்கை எடுத்துள்ளது.கடந்த ஒரு மாதத்தில், இத்தகைய நடவடிக்கையை, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, 'செபி' எடுத்துள்ளது. இந்நிறுவனங்கள், விதிகளை மீறி, திரும்ப பெறத்தக்க முன்னுரிமை பங்குகள், பங்குகளாக மாறாத கடன் பத்திரங்கள், அதிகாரபூர்வமற்ற சேமிப்பு திட்டங்கள் மூலம், நிதி திரட்டியுள்ளன.இந்நிறுவனங்கள் நிதி திரட்டவும், அவற்றின் இயக்குனர்கள், பங்கு வர்த்தகம் மேற்கொள்ளவும் தடை ... |
| நிரஞ்சன் ஜோதியை கிராம பெண்களுடன் ஒப்பிடுவதா?பிரதமர் நரேந்திர மோடி பேச்சுக்கு எழுந்தது எதிர்ப்பு Posted: புதுடில்லி:சர்ச்சைக்குரிய வகையில் பேசிய, அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதியை, எதிர்க்கட்சியினரின் விமர்சனத்தில் இருந்து காப்பாற்றுவதற்காக, அவரை கிராமப்புற பெண்களுடன் ஒப்பிட்டு, பிரதமர் மோடி பேசியதற்கு, கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.கிராமத்து பெண்மத்திய உணவு பதப்படுத்துதல் துறை இணையமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, சாத்வி நிரஞ்சன் ஜோதி, சமீபத்தில் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசியது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரை, அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வலியுறுத்தி, எதிர்க்கட்சிகள், பார்லிமென்ட்டில் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.இதற்கு பதிலளித்த ... |
| போலீசார் நக்சலைட்டுகளிடையே துப்பாக்கிச் சூடு: கேரள வனப்பகுதியில் திடீர் பரபரப்பு Posted: திருவனந்தபுரம்: கேரள வனப்பகுதியில், நக்சலைட்டுகளுக்கும், போலீசாருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில், நேற்று அம்மாநில போலீசார், வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த, நக்சலைட்டுகள் போலீசாரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதை சற்றும் எதிர்பாராத போலீசார், பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும், ஏராளமான போலீசார், வனப்பகுதியில் குவிக்கப்பட்டனர். இரு தரப்பினரிடையே, தொடர்ந்து துப்பாக்கிச் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |டிசம்பர் 08,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |