Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


விரிவான சனிபெயர்ச்சி பலன்கள் அனைத்து ராசியினருக்கும்

Posted: 07 Dec 2014 01:28 PM PST

இந்த சனிபெயர்ச்சி குறிப்புகள் அனைத்தும் தினத்தந்தியில் இருந்து எடுத்து பகிரப்பட்டது. நன்றி - தினத்தந்தி அசுவதி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம் வரை - (45/100) (பெயரின் முதல் எழுத்துக்கள்: சு, சே, சோ, ல, லி, லு, லே, லோ, அ உள்ளவர்களுக்கும்) கவனத்துடன் செயல்பட்டால் காரியங்களில் வெற்றி கிடைக்கும்! தளராத மனதோடு பணியாற்றி வரலாறு படைக்கும் மேஷ ராசி நேயர்களே! திட்டம் போட்டு செயலாற்றுவதில் கெட்டிக்காரர்களாக விளங்கும் உங்களுக்கு அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் வந்துவிட்டது. இதுவரை ...

உங்கள் வருகை நிகழ்ச்சிக்கு சிறப்பு

Posted: 07 Dec 2014 07:58 AM PST

அன்பு உறவுகளே! நாளை (08.12.14) மாலை அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பில் சந்திரசேகர் திருமண மண்டபத்தில் என் "பட்டாம்பூச்சிகளின் இரவு" நூல் விமர்சனம் நடைபெற இருக்கிறது. நூலை விமர்சிப்பவர் திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர், நடிகர் சிநேகன் அவர்கள். உங்கள் வருகை நிகழ்ச்சிக்கு சிறப்பு. வாய்ப்பு உள்ளவர்கள் கலந்து சிறப்பிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றேன்

சி ரி... சி ரி...

Posted: 07 Dec 2014 12:09 AM PST

- "உங்க கணவருக்கு எங்காவது ஓடிப் போகணும்னு போல தோணிக்கிட்டே இருந்தால் கவலைப்படாதீங்க... குணப்படுத்திடலாம்'' ""சரி பண்ண முடியாமான்னு பாருங்க டாக்டர். இல்லேன்னா என்னையும் இழுத்துட்டு ஓடற மாதிரி மருந்து குடுங்க'' ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை. - ----------------------------------------- - ""வேலைக்காரிக்கும் உங்களுக்கும் உள்ள தொடர்புக்கு உங்க மனைவிதான் காரணமா?'' ""என்னால் முடியலை... வேலைக்காரியை வெச்சுக்குவோம்னு அவதான் சொன்னா'' எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி. - -------------------------------------- - "அந்தப் ...

மரம் – நிழல் தரும் நிஜக்குடை..!

Posted: 06 Dec 2014 11:54 PM PST

- —- மழை பொழியும்போது ஒழுகும் ஓட்டைக் குடை! வெயில் அடிக்கும்போது நிழல் தரும் நிஜக்குடை! - மழை விட்ட பின்பும் தூறல் போடும் குட்டி வானம் சாரல் வீசும் சின்ன உதகை! - அட, என்ன அதிசயம் உங்களுக்குக் கூட வியர்க்குமா? கோடை காலங்களில் இலைகளை கழற்றி விடுகிறீர்களே..! - நீ அன்னைக்கு அன்னையா உனது ஒவ்வொரு கிளைகளிலும் ஒவ்வொரு தாலாட்டுப் பாட்டு ஒலித்துக் கொண்டே இருக்கிறதே…! - ———————— >மு.அபி நன்றி: பாக்யா

ஒரு இறைச்சிக் கடையில் பெயர் 'வெட்ட வா'...!

Posted: 06 Dec 2014 11:49 PM PST

கண்டது (மதுரை கீழவெளிவீதியில் ஓர் ஆட்டோவில்) மூளையால் செய்ய முடியாததை முயற்சி செய்து விடும். - கனக விஜயன், மதுரை. - -------------------------------------- - (வேலூர் மாவட்டத்தில் ஒடுகத்தூர் என்ற ஊரில் ஓர் இறைச்சிக் கடையின் பெயர்) வெட்ட வா கு.கோப்பெருந்தேவி, சென்னை-125. - ----------------------------------------- - (தஞ்சை மாவட்டம் இடையாத்தூர் பக்கம் உள்ள ஓர் ஊர்) கொக்குமுட்டை தி.ரங்கசாமி, திருச்சி. - --------------------------------------- - (மயிலாடுதுறையில் ...

மௌனமா அழறாரே...ஏன்? -

Posted: 06 Dec 2014 11:46 PM PST

- "இன்னைக்குக் காவிரியில தலை முழுகினால் பல ஜென்ம பாவம் போகுமாம்'' - "அப்ப நீ வருஷம் முழுக்க இங்க முழுகிட்டே இருக்க வேண்டியதுதான்... மவனே கொஞ்ச நஞ்சமா பாவம் செஞ்சிருக்க?'' - >சங்கீதசரவணன், - ----------------------------------- - "இந்த ஊரில் தங்க வீடு கிடைக்குமா?'' ""கிடைக்காது சார்.... மாடிவீடு, ஓட்டுவீடு, கூரை வீடுதான் கிடைக்கும் '' - >சி.ரகுபதி, - ----------------------------------- "எங்க வீட்டில் என் மனைவியும், மருமகளும் நான் பாத்திரம் கழுவுகிறேன், நான் ...

உங்கள் பயணத்தின் ஒரே துணை

Posted: 06 Dec 2014 11:29 PM PST



--

-
நன்றி; நமது நம்பிக்கை - ஜூலை 2014
படம்: இணையம்

சிறுபிள்ளையின் சிரிப்பு…!

Posted: 06 Dec 2014 11:26 PM PST


-

கோபித்துக் கொள்ளும் நேரத்தில்
என்னை போலவே
பேசி காட்டுவாய்
உடனே சிரிப்பு வந்து விடும்
அவ்வளவு
சிறுபிள்ளை போலவா
பேசுகிறேன் என்று…!

-
——————-
>ஸ்டெல்லா தமிழரசி
நன்றி: பாக்யா

உங்க பொண்ணு வீடு போற வரைக்கும் பின்னால் நடப்பேன்…!

Posted: 06 Dec 2014 11:21 PM PST

- - அந்த டாக்டர் போலினு எப்படி சொல்றே? - பல்ஸ் பார்க்கணும், வாயைத் திற'ன்னு சொல்றாரே..! - >நஜூமுதீன் - ------------------------------------ - உன் தனித்தகுதி என்ன? - பின்னால் நடப்பேன் சார்...! - எவ்வளவு தூரம் நடப்பாய்..? - உங்க பொண்ணு வீடு போற வரைக்கும்...! - >கவிசு - ------------------------------------ - புலவரே...மன்னர் தந்த பரிசை வாங்கி வரச் சொன்னார்..! - ஏன்? - போன வாரமும் இதே பாடலைப் பாடித்தான் பரிசில் பெற்றுள்ளீராம்..! - >பேரலை கொண்டான் - -------------------------------------- - ஆசிரமம் ...

பாடம் நடத்தும் குழந்தை..!

Posted: 06 Dec 2014 11:04 PM PST

- - - பள்ளி சென்று வந்த குழந்தை பாடம் நடத்துகிறது தன்னோட பொம்மைகளுக்கு…! - —————– >வலங்கைமான் நூர்தீன் நன்றி: பாக்யா

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல...-

Posted: 06 Dec 2014 10:45 PM PST


-
நன்றி: நமது நம்பிக்கை -ஜூலை 2014

மனச்சிறை...

Posted: 06 Dec 2014 10:00 PM PST

சிந்தனை
சிறைபிடிக்கப்பட்டு
மனக்கூட்டுக்குள்...
மகிழ்ச்சி  விருந்தளிக்கப்படுகிறது..
உனை
சந்தித்த வேளையை
சிந்திக்கையில்.... புன்னகை
--

கன்னியாகுமரியில் திருப்பதி கோயில்: கட்டுமானப் பணி இன்று தொடக்கம்

Posted: 06 Dec 2014 09:58 PM PST

கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர வளாகத்தில் ரூ.22.50 கோடி செலவில் திருப்பதி வெங்கடாசலபதி கோயில் கட்டுமானப் பணி ஞாயிற்றுக்கிழமை (டிச.7) தொடங்குகிறது. கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர வளாகத்தில் 2010-ஆம் ஆண்டு பிப்பவரி 28-ஆம் தேதி ஸ்ரீநிவாச கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில், 5 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் திரண்டனர். இதைத் தொடர்ந்து, திருக்கல்யாணம் நடைபெற்ற பகுதியில் திருப்பதியில் இருப்பதைப் போன்று கோயில் அமைக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்தது. கோயில் கட்டுவதற்காக 5 ஏக்கர் ...

"நெகிழ வைத்த நிஜம்"

Posted: 06 Dec 2014 09:44 PM PST

"நெகிழ வைத்த நிஜம்" ( வேலை வேலை --பணம் பணம் என்று ஒன்றன் பின் ஒன்றாக, போகாமல் --அன்பு ,பாசம் இவற்றிற்கு முக்கியத்துவம் கொடுங்கள் . காலத்தே பரிமாறப்படா அன்பும் பாசமும் ,எப்போதும் சம்பாதிக்க முடியாது . பணம் எப்போது வேண்டுமானாலும் சம்பாதிக்க முடியும் ---ரமணியன் )   இதோ நெகிழ வைத்த நிஜம் என் மகன் எப்பொழுதும் துறுதுறுவென்று இருப்பான். எப்பேர்பட்டவர் என்றாலும் ஒரு நொடியில் தன் வசம் இழுத்துவிடுவான் 'குழந்தைத்தனமான பேச்சில்'. என் மகனுக்கு அனைத்தையும் கொடுக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக நானும் ...

உடற் பயிற்சிக்கு உதவும் வாட்சுகள்

Posted: 06 Dec 2014 08:42 PM PST

- நேரம் பார்ப்பதற்கு செல்போன்கள் வந்துவிட்டதால், வாட்சுகளுக்கு மவுசு குறைந்துவிட்டது என்றுதான் நினைத்திருந்தோம். ஆனால் GARMIN என்ற நிறுவனம் FORERUNNER 220 & 620 என்ற இரண்டுவிதமான வாட்சுகளை வெளிக் கொண்டு வந்திருக்கிறது. உடற்பயிற்சி செய்பவர்கள், குறிப்பாக தினம்தோறும் ஓடும் பயிற்சி செய்பவர்கள் இந்த வாட்ச்சை அணிந்து கொண்டால் ஒரு டாக்டர் கூடவே இருப்பதைப் போல உணர்வார்களாம். உடலுக்குப் பயிற்சி தரும்போது ஏற்படும் இதயத் துடிப்பு, உடலின் வெப்பம் ஆகியவற்றைக் கணக்கெடுத்து, தேவையான அறிவுறுத்தல்களை இந்த ...

மைக்ரோ கதை

Posted: 06 Dec 2014 08:18 PM PST

- இளம் தம்பதிகள் தங்களுக்குள் போட்டி வைத்துக் கொண்டனர். யார் வந்து வீட்டுக் கதவைத் தட்டினாலும் திறக்கக் கூடாது. திறந்தவர் தோல்வியடைந்தவர். கணவனின் தாய் - தந்தை வந்து கதவைத் தட்டினர். கணவன் திறக்கவில்லை. மனைவியும் திறக்கவில்லை. நீண்ட நேரம் தட்டிவிட்டுத் திரும்பிச் சென்றனர். மனைவியின் தாய்- தந்தை அதற்குப் பின்பு வந்து கதவைத் தட்டினர். சிறிதுநேரம் இருவரும் திறக்கவில்லை. ஆனால் மனைவியின் மனம் மாறி... போட்டியில் தோற்றாலும் பரவாயில்லை என்று கதவைத் திறந்து விட்டாள். பத்தாண்டுகள் ...

இரட்டை அர்த்தங்கள்..!!

Posted: 06 Dec 2014 07:18 PM PST

இப்போது மட்டுமல்ல எப்போதும் இரட்டை அர்த்தங்களில் முதல் அர்த்தத்தை முந்திக் கொண்டு, இரண்டாவது அர்த்தம் தான் முதலில் யூகிக்கப் படுகிறது..!! இரவு பெய்த மழை மழை பெய்த இரவு, நனைத்து விட்டுப் போனது நனைந்த இடம் மட்டுமல்ல நனையாத இடமும் தான் ..!! வாசல் வரை வரும் நிலா, நள்ளிரவில் வீட்டிற்குள் அழைப்பதை விட விடாப்பிடியாய் இழுப்பதையே விரும்புகிறது..!! ஆசை இன்னும் வேகவில்லை, கடைசியில் மிஞ்சிய வெப்ப அளவு கூட குளிர்ந்து விட்டது, வெந்து விட்டதா என அறியாமலே ஆசையும் தீர்ந்து ...

எதற்கும் வளைஞ்சு கொடுத்து போற பொண்ணா வேணும்..!

Posted: 06 Dec 2014 07:09 PM PST

உயிர்த்தெழுவேன்!

Posted: 06 Dec 2014 06:56 PM PST

எனக்கும் அவைகளுக்குமான உறவைச் சொல்லி எங்கிருந்தெல்லாம் வந்தன என் மரத்து கனியைக் கொய்ய! உண்டன, உறங்கின கூடின கும்மாளமிட்டன ஆட்டம் பாட்டம் ஆர்ப்பரித்தன! நானும் சந்தோஷித்து அத்தனை கிளைகளாலும் அரவணைத்துக் கொண்டேன்! உறவுகளின் உற்சாகம் எனக்குள் தொற்றிக் கொள்ள ஆனந்த மயக்கத்தில் என் இலைகளும் பால் சொரிந்தன! விதி சிரித்தது… இடியொன்று என் மேனியை சிதைக்க சிறகு முளைத்தவை மட்டுமல்ல ஊர்ந்து செல்பவை கூட என்னை விட்டு ஓடி விட்டன! தனிமையும், விரக்தியும் என் விழுதுகளை மட்டுமல்ல என் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™