Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


சென்னை புறவழிச்சாலையில் வசூல் கொள்ளை: சுங்கச்சாவடியின் அடாவடியால் பொதுமக்கள் பாதிப்பு

Posted:

'உள்ளூர் வாகனங்களுக்கு மாதாந்திர நுழைவு சீட்டு வழங்க வேண்டும்' என, தேசிய நெடுஞ்சாலைத்துறை உத்தரவிட்டுள்ளது. ஆனால், இரண்டு மாதங்களாக அந்த உத்தரவை செயல்படுத்தாமல், சுங்கச்சாவடி நிர்வாகம் அலட்சியம் காட்டி வருகிறது.நுழைவுச்சீட்டு: சென்னை புறவழிச்சாலையில், வானகரம் மற்றும் சூரப்பட்டில், சுங்கச்சாவடிகள் உள்ளன. இங்கு, வாகன நுழைவு கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இந்த சுங்க சாவடிகளை, தனியார் நிறுவனம் நிர்வகித்து வருகிறது.* சுங்கச்சாவடியை சுற்றி, 20 கி.மீ., தூரம் வரையுள்ள உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணத்தில் சலுகை அளிக்க வேண்டும்.* ...

கைமாறுகிறது பெரியாறு அணை பாதுகாப்பு?

Posted:

முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு, கேரள போலீசாரிடம் இருந்து மத்திய பாதுகாப்பு படையினரிடம் செல்வது உறுதியாகியுள்ளது.பெரியாறு அணையின், இயக்கம் மற்றும் பராமரிப்பு பணிகளை, தமிழக பொதுப்பணித்துறை மேற்கொண்டு வருகிறது. அணை பாதுகாப்பு பணிகளை, 1961க்கு முன் வரை, தமிழக போலீசார் கவனித்து வந்தனர்.மறுப்பு: அணையை ஒட்டிய பகுதிகளில், வனவிலங்குகள் அச்சுறுத்தல், அடிப்படை வசதிகள் இல்லாததை காரணம் காட்டி, தமிழக போலீசார் அங்கு பணி செய்ய மறுத்தனர். இதையடுத்து, அணையின் பாதுகாப்பு, தற்காலிகமாக, கேரள போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இன்று வரை, அவர்கள் ...

நாடு முழுவதும் திருக்குறள், திருவள்ளுவர் படம்: தமிழக அரசுக்கு தருண் விஜய் வேண்டுகோள்

Posted:

டில்லியில், மத்திய உள்துறை அமைச்சரான ராஜ்நாத் சிங்கை, உத்தரகண்ட் மாநில பா.ஜ., - எம்.பி., தருண் விஜய் சந்தித்துப் பேசினார். அப்போது, ராஜ்நாத்திற்கு, திருவள்ளுவர் சிலையை பரிசாக கொடுத்து, அவரின் பெருமைகள் பற்றிய குறிப்பையும் அளித்தார். அத்துடன், தான் வழங்கிய திருவள்ளுவர் சிலையை, உள்துறை அமைச்சகத்தில் வைக்க வேண்டும் என்றும் தருண் விஜய் கேட்டுக் கொண்டார். அதற்கு, 'அமைச்சகத்தில் முக்கிய இடத்தில், திருவள்ளுவர் சிலை வைக்கப்படும்' என, ராஜ்நாத் பதில் அளித்தார்.இதுபற்றி தருண் விஜய் கூறியதாவது: திருக்குறளின் போதனைகளை, துணை ராணுவப் படையினர் அறிய ஏற்பாடு செய்ய ...

மின்சாரம் திருடுவோரை செருப்பால் அடிக்க வேண்டும்: உ.பி., கவர்னர் பரபரப்பு பேச்சு

Posted:

லக்னோ: ''மின்சாரம் திருடுவோரை பொது இடத்தில் செருப்பால் அடிக்க வேண்டும்,'' என, உத்தர பிரதேச மாநில கவர்னர் ராம் நாயக் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.உ.பி., மாநிலம் லக்னோவில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் கூறியதாவது: 'மின்சாரம் திருடுவோர் மோசமான நபர்கள்; அவர்களை தெருக்களில் தூக்கிலிட வேண்டும்' என, முன்னர் நான் தெரிவித்தேன். ஆனால், 'எந்த ஒரு விஷயத்திற்கும், தூக்கிலிடுவது என்பது சரியானதல்ல' என, சிலர் கூறுகின்றனர். அதனால், மின்சாரம் திருடுவோரை தூக்கிலிட வேண்டும் என்ற, என் முந்தைய அறிக்கையை மாற்றிக் கொள்கிறேன். தூக்கிலிடுவதற்குப் பதிலாக, அந்த நபர்களை, பொது ...

ஒரே நாளில் லட்சக்கணக்கான வழக்குகளுக்கு தீர்வு

Posted:

சென்னை: நாடு முழுவதும் நேற்று தேசிய, 'லோக் அதாலத்' நடந்தது. தமிழகத்தில், சாதனை நிகழ்வாக, 14.93 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, பயனாளிகளுக்கு தீர்வுத் தொகையாக, 1,390 கோடி ரூபாய், 'பைசல்' செய்யப்பட்டது.தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில், நாடு முழுவதும், தமிழகத்தில், தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவுடன் இணைந்து ஆண்டுதோறும், தேசிய, 'லோக் அதாலத்' நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.14 லட்சம் வழக்கு:கடந்த, 2013ல், 13.77 லட்சம் வழக்குகளுக்கு, சமரச தீர்வு காணப்பட்டது; பயனாளிகளுக்கு தீர்வுத் தொகையாக, 1,140 கோடி ரூபாய் பெற்றுத் தரப்பட்டது.நடப்பு ஆண்டில், ...

இந்திய ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்: பயங்கரவாதிகளுக்கு மோடி கண்டனம்

Posted:

ஹஜாரிபாக் (ஜார்க்கண்ட்): ''ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், இந்திய ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்,'' என, பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடும், பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து, பிரதமர் நரேந்திர மோடி, ஹஜாரிபாக்கில் நேற்று நடந்த பிரசார கூட்டத்தில் பேசியதாவது: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், பாதுகாப்பு படையினர், 11 பேர் உயிரிழந்துள்ளனர். பயங்கரவாதிகளின் இந்த தாக்குதல் கோழைத்தனமானது. ஜம்மு காஷ்மீரில் நடக்கும் சட்டசபை தேர்தலை ...

எப்.சி.ஐ.,யின் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்புள்ள அரிசி மாயம்? அரவை மில்லுக்கு கொடுக்கப்பட்டதாக சப்பை கட்டு

Posted:

புதுடில்லி: இந்திய உணவு கழகமான எப்.சி.ஐ.,க்கு சொந்தமான, 10,000 கோடி ரூபாய் மதிப்புள்ள அரிசி மாயமாகியுள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.கொள்முதல்: நாட்டு மக்களின் உணவு பாதுகாப்பை உறுதி செய்வது, விவசாயிகளிடமிருந்து, நெல், கோதுமை போன்றவற்றை நியாயமான விலையில் கொள்முதல் செய்வது போன்ற பணிகளை, இந்திய உணவு கழகம் செய்து வருகிறது. இந்திய உணவு கழகத்தால், கொள்முதல் செய்யப்படும் நெல், கோதுமை போன்றவற்றை சேமித்து வைக்க, போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லை என்றும், இதனால், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள உணவு தானியங்கள் அழுகி வீணாகிப் போவதாகவும் ...

சத்தீஸ்கர் தாக்குதலில் வீரர்களை காப்பாற்ற தவறிய விமான படை

Posted:

புதுடில்லி: சத்தீஸ்கரில், துணை ராணுவ படையினர் மீதான தாக்குதலின் போது, ராணுவ ஹெலிகாப்டர்களை அனுப்பி காப்பாற்ற, இந்திய விமானப் படை தவறி விட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. 14 பேர் பலி: சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தில் உள்ள, சிந்தாகுபா வனப் பகுதியில், கடந்த, 1ம் தேதி, மாவோயிஸ்ட்டுகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த சண்டையில், துணை ராணுவ படையினர், 14 பேர் குண்டு பாய்ந்து உயிரிழந்தனர்; 12 பேர் படுகாயமடைந்தனர்.இதுபற்றிய தகவல் கிடைத்தும், சத்தீஸ்கரில் உள்ள, நான்கு ராணுவ ஹெலிகாப்டர்களில் ஒன்றை கூட, சம்பவ இடத்திற்கு ...

என்னை கிண்டலடிப்பர்; அமைதியாக இருங்கள்: எம்.எல்.ஏ.,க்களுக்கு விஜயகாந்த் அறிவுரை

Posted:

'கடைசி நாள் சட்டசபை கூட்டத் தொடரில் காரசார விவாதம் நடக்கும்போது, ஆளும்கட்சி எம்.எல்.ஏ.,க்கள், என்னை கிண்டலடித்து பேசினால், கண்டுக்கொள்ள வேண்டாம்' என, தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்களுக்கு, விஜயகாந்த் அறிவுரை வழங்கியுள்ளார்.தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், கடந்த ஒரு மாதமாக, மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் முகாமிட்டிருந்தார். கடந்த 3ம் தேதி அவர், சென்னை திரும்பினார். இதனால், சட்டசபை மழைக்கால கூட்டத் தொடரின் முதல் நாள் நிகழ்வில், அவர் பங்கேற்பார் என, அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால், சட்டசபைக்கு செல்வதை விஜயகாந்த் தவிர்த்து விட்டார். ...

மின் கட்டணத்தை உயர்த்த முடிவு: சட்டசபை கூட்டத்தொடருக்கு பின் அறிவிப்பு?

Posted:

சட்டசபை கூட்டத் தொடர் இன்று முடிந்த பின், மின் கட்டணத்தை உயர்த்த, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் முடிவு செய்துள்ளது.தமிழ்நாடு மின் வாரியம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்; தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் ஆகிய நிறுவனங்களாக செயல்படுகிறது.மேற்கண்ட நிறுவனங்கள், நிர்வாக சீர்கேடுகளால், தொடர் நஷ்டத்தில் இயங்கி வருவதால், கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளன.பட்டியல் வெளியீடு:இதை சீர்செய்ய, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், தானாகவே முன்வந்து, மின் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்து, செப்., 23ம் தேதி, உத்தேச மின் கட்டண ...

நேரடி காஸ் மானிய விவகாரத்தில் சிக்கல்: மக்களை குழப்பும் எண்ணெய் நிறுவனங்கள்

Posted:

சமையல் காஸ் சிலிண்டருக்கு, நேரடியாக மானியம் பெறும் திட்டத்தில், இணைவதற்கான விண்ணப்பம் வழங்குவதில், பல்வேறு குளறுபடிகள் காணப்படுகின்றன. எண்ணெய் நிறுவனங்கள், மக்களை குழப்புவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.மத்திய அரசு, ஜன., முதல் சமையல் காஸ் சிலிண்டருக்கு, வாடிக்கையாளர், வங்கி கணக்கில், நேரடியாக மானியம் வழங்க முடிவு செய்துள்ளது.நாடு முழுவதும்: இத்திட்டத்தை, பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் மூலம் செயல்படுத்த, அரசு, தீவிரம் காட்டி வருகிறது.அதன்படி, எண்ணெய் ...

மானிய சுமை மேலும் குறைக்கப்படும்: நிதியமைச்சர் அருண் ஜெட்லி தகவல்

Posted:

புதுடில்லி: ''மானியச் சுமையை குறைக்க, மேலும் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க உள்ளது,'' என, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறினார்.நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது: மானிய சீர்திருத்தம் குறித்த பல்வேறு அம்சங்களை, செலவு மேலாண்மை ஆணையம் ஆராய்ந்து வருகிறது. ஆணையத்தின் இடைக்கால பரிந்துரை விரைவில் கிடைக்கும். அதன் அடிப்படையில், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு, அரசு செயல்படும். டீசல் விலை மீதான கட்டுப்பாட்டை நீக்கியதால், அரசுக்கு குறிப்பிடத்தக்க மானியச் செலவு மிச்சமாகியுள்ளது. பார்லி., குளிர்கால கூட்டத் ...

விண்ணில் சீறிப் பாய்ந்தது ஜிசாட் 16 செயற்கை கோள்

Posted:

பெங்களூரு: பிரெஞ்ச் கயானாவிலிருந்து ஏவப்பட்ட ஜிசாட் 16 செயற்கைகோள் விண்ணில் வெற்றிகரமாக சீறிப் பாய்ந்தது.தென் அமெரிக்காவின் பிரெஞ்ச் கயானாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்துஏரியன்-5 ராக்கெட் மூலம் ஜிசாட்-16 செயற்கைகோள் ஏவ திட்டமிடப்பட்டது. மோசமான வானிலை காரணமாக இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று அதிகாலை விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டு நிலை நிறுத்தப்பட்டது. 3,181 கிலோ எடையுள்ள இந்த செயற்கை கோளில் 48 சாதனங்கள் உள்ளன. இஸ்ரோ உருவாக்கிய செயற்கைகோளில் மிகப்பெரிய செயற்கைகோள் இதுவாகும். ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™