Tamil News | Online Tamil News |
- மாலத்தீவுக்கு இந்தியா தண்ணீர் தானம்!
- ராணுவம் எடுத்த நகைகளை திரும்ப கொடுத்தார் ராஜபக் ஷே
- ரேஷன் கடைகளில் இனி மண்ணெண்ணெய் கிடைக்காது: மானியத்தை நிறுத்த மத்திய அரசு முடிவு
- சட்டசபைக்கு ரகசியமாக வந்த எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த்
- ஜம்மு - காஷ்மீரில் ஒரே நேரத்தில் 4 இடங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல்: சட்டசபை தேர்தலை சீர்குலைக்க நடந்த சதியில் பல வீரர்கள் பலி
- திட்ட கமிஷனுக்கு பதிலாக புதிய அமைப்பு ஏன்: மோடி
- வேலியே பயிரை மேய்ந்தது:பொது துறை நிறுவனங்கள் விதிமீறல்
- சமஸ்கிருதம் படிப்பதில் என்ன தவறு? சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி கேள்வி
- ஒபாமா வருகைக்கு முன் டில்லியில் பயங்கரவாதிகள் தாக்குதல்?
- பிடிவாதத்தை தளர்த்தும் எதிர்க்கட்சிகள்
- சகாயம் தங்கியிருந்த அறையில் ஒட்டுகேட்பு கருவி: காலி செய்யும்படி கூறியதாகவும் குற்றச்சாட்டு
- டிஜிட்டல் மயமாகும் ரத்த வங்கிகள்: லோக்சபாவில் மத்திய அரசு தகவல்
- தேஜஸ் இலகுரக போர் விமானங்கள்: விரைவில் பயன்பாட்டுக்கு வரும்: பாரிக்கர்
| மாலத்தீவுக்கு இந்தியா தண்ணீர் தானம்! Posted: மாலே: இந்தியப் பெருங்கடல் நாடுகளில் ஒன்றான, 'சார்க்' அமைப்பில் இணைந்துள்ள, மாலத்தீவு நாட்டில் கடும் குடிநீர் பிரச்னை ஏற்பட்டதால், விமானம் மூலம் இந்திய அரசு, மாலத்தீவுக்கு குடிநீர் சப்ளை செய்தது.நான்கு புறமும் தண்ணீரால் சூழப்பட்ட, ஏராளமான குட்டித் தீவுகளை கொண்ட மாலத்தீவில், ஆறுகள் கிடையாது என்பதால், அங்கு குடிநீர் ஆதாரங்கள் இல்லை. கடல் நீரையே, சுத்திகரித்து குடிநீராக பயன்படுத்துகின்றனர். கடல் நீரை குடிநீராக்கும் தொழிற்சாலை யில் நேற்று முன்தினம் தீ விபத்து ஏற்பட்டு கடும் சேதம் அடைந்ததால், குடிக்க தண்ணீர் இன்றி, தலைநகர் மாலேயில் உள்ள, ஒரு லட்சம் ... |
| ராணுவம் எடுத்த நகைகளை திரும்ப கொடுத்தார் ராஜபக் ஷே Posted: கொழும்பு: விடுதலை புலிகளுடன் நடைபெற்ற போரில், ராணுவம் எடுத்துச் சென்ற தங்கம் மற்றும் தங்க நகைகளை, அதிபர் ராஜபக் ஷே வடபகுதி மக்களுக்கே திரும்ப அளித்துள்ளார்.சுதந்திரம் உறுதி: இதெல்லாமே, விடுதலைப் புலிகள் ஆட்சி நடத்திய போது, அவர்கள் நடத்திய வங்கியில் டிபாசிட் செய்யப்பட்ட அல்லது திருடப்பட்ட நகைகள் என்று கூறப்படுகிறது. அடுத்த மாதம் 8ம் தேதி நடைபெறும், இலங்கை அதிபர் தேர்தலில், தமிழர்களின் ஆதரவை பெறும் நோக்கில், ராஜபக் ஷே, நகைக்கு உரிய தமிழர்களை தம் இல்லத்திற்கே வரவழைத்து, பொருட்களை ஒப்படைத்து உள்ளார். அவற்றை, மன்னார், வவுனியா, முல்லைத் ... |
| ரேஷன் கடைகளில் இனி மண்ணெண்ணெய் கிடைக்காது: மானியத்தை நிறுத்த மத்திய அரசு முடிவு Posted: ரேஷன் கடைகளில் விற்கப்படும் மண்ணெண்ணெய்க்கு, அளிக்கப்பட்டு வரும் மானியத்தை நிறுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால், அடுத்த ஆண்டு முதல், ரேஷன் கடைகளில், மண்ணெண்ணெய் வினியோகம் நிறுத்தப்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.தமிழகத்தில், பொது வினியோக திட்டத்தின் கீழ், ரேஷன் கடைகளில், ஒரு லிட்டர் மண்ணெண்ணெய், 13.70 ரூபாய் - 14.20 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மத்திய அரசு, தமிழகத்திற்கு தேவையான மண்ணெண்ணெய் ஒதுக்கீடு அளவை, நான்கு மாதங்களுக்கு ஒருமுறை நிர்ணயம் செய்கிறது. ஒதுக்கீட்டு ஆணை, தமிழக அரசுக்கு அனுப்பப்பட்ட பின், அதன் நகல், பொதுத் துறை ... |
| சட்டசபைக்கு ரகசியமாக வந்த எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த் Posted: சென்னை: எதிர்க்கட்சித் தலைவரான, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், நேற்று ரகசியமாக, சட்டசபைக்கு வந்து சென்றார். சட்டசபை கூட்டத்தொடர், நேற்று முன்தினம் துவங்கியது. அன்றைய தினம் தி.மு.க., தலைவர் கருணாநிதி, சட்டசபை வளாகத்துக்குள் வந்தார். ஆனால், உள்ளே வரவில்லை. வெளியே வைக்கப்பட்டிருந்த, வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டு விட்டு சென்றார். அதேபோல், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் வருவார் என, எதிர்பார்க்கப்பட்டது. நேற்று, அவர் யாருக்கும் தெரியாமல், காலை, 11:00 மணிக்கு ரகசியமாக வந்து, வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டு விட்டு, புறப்பட்டு சென்றார். அவர் வரும்போது, ... |
| Posted: ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தின், மோக்ரா என்ற இடத்தில் உள்ள ராணுவ முகாம் மீது நேற்று அதிகாலை, 3:00 மணியளவில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மூன்று பேர் நடத்திய திடீர் தாக்குதலில், லெப்டினன்ட் கர்னல் அந்தஸ்தில் உள்ள ராணுவ உயரதிகாரி உட்பட, 11 வீரர்கள் கொல்லப்பட்டனர்; நம் வீரர்கள் நடத்திய பதிலடி தாக்குதலில், ஆறு பயங்கரவாதிகள் இறந்தனர்.தேசிய மாநாட்டு கட்சியைச் சேர்ந்த முதல்வர், ஒமர் அப்துல்லா தலைமையிலான ஜம்மு - காஷ்மீரில், ஐந்து கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இரண்டுகட்ட தேர்தல், எவவித வன்முறையும் இன்றி அமைதியான முறையில் நடந்து ... |
| திட்ட கமிஷனுக்கு பதிலாக புதிய அமைப்பு ஏன்: மோடி Posted: புதுடில்லி: ''திட்ட கமிஷனுக்கு பதிலாக அமையவுள்ள புதிய அமைப்பு, தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்றபடி அமைக்கப்படும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார். பிரதமர் நரேந்திர மோடி, லோக்சபாவில் நேற்று பேசியதாவது: திட்ட கமிஷனுக்கு பதிலாக புதிய அமைப்பை ஏற்படுத்துவது தொடர்பாக, அனைத்து மாநில முதல்வர்களுடன், நாளை ஆலோசனை நடத்த உள்ளேன். இது தொடர்பாக, மாநில முதல்வர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டு, அதன்பின் முடிவு எடுக்கப்படும். ஏற்கனவே உள்ள திட்ட கமிஷன், 50 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. தற்போதைய பொருளாதார சூழ்நிலைக்கும், காலச் சூழ்நிலைக்கும் ஏற்றாற்போல் இதை ... |
| வேலியே பயிரை மேய்ந்தது:பொது துறை நிறுவனங்கள் விதிமீறல் Posted: புதுடில்லி: பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பின் (செபி) விதிகளை மீறி, 22 பொதுத் துறை நிறுவனங்கள் செயல்பட்டுள்ளதாக, மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி லோக்சபாவில் தெரிவித்தார்.அவர் மேலும் கூறியதாவது:ஓ.என்.ஜி.சி., கோல் இந்தியா, ஐ.ஓ.சி., உள்ளிட்ட 22 பொதுத் துறை நிறுவனங்கள், பங்குச் சந்தை விதிகளை மீறி செயல்பட்டுள்ளதை, 'செபி' கண்டுபிடித்து உள்ளது. இதில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, சமரச செயல்திட்ட தீர்வை ஏற்பதாக தெரிவித்துள்ளது. விதிமுறைப்படி, 17 நிறுவனங்கள், தனி இயக்குனர்களை நியமிக்கவில்லை. எச்.எம்.டி., மற்றும் தேசிய சுற்றுலா வளர்ச்சி கழகம் குறிப்பிட்ட ... |
| சமஸ்கிருதம் படிப்பதில் என்ன தவறு? சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி கேள்வி Posted: புதுடில்லி: 'நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும், மத்திய அரசு பள்ளிகளிலும், மூன் றாவது மொழிப் பாடமாக ஜெர்மானிய மொழிக்கு பதில், சமஸ்கிருதம் அறிமுகப்படுத்தப்படும்' என, பிரதமர் மோடி தலைமையிலான தே.ஜ., கூட்டணி அரசு, சமீபத்தில் தெரிவித்தது.இதை எதிர்த்து, மாணவர்களின் பெற்றோர் சிலர், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் முந்தைய விசாரணையின் போது,நடப்பு கல்வியாண்டில் ஜெர்மானிய மொழியை மூன்றா வது பாடமாக தொடருவது குறித்து, பரிசீலிக்க வேண்டும். சமஸ்கிருதத்தை மூன்றாவது மொழிப் பாடமாக்காமல், கூடுதல் பாடமாக வைத்திருக்கலாம்' என, ... |
| ஒபாமா வருகைக்கு முன் டில்லியில் பயங்கரவாதிகள் தாக்குதல்? Posted: புதுடில்லி: இந்திய குடியரசு தின விழாவில், அமெரிக்க அதிபர் ஒபாமா கலந்து கொள்ள உள்ள நிலையில், அதற்கு முன்னதாக, பாகிஸ்தான் ஆதரவு, லஷ்கர் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என, உளவுத்துறை தகவல்கள் கிடைத்துள்ளதால், டில்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுவரை எந்தவொரு அமெரிக்க அதிபரும், இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்காத நிலையில், பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்றுள்ள அதிபர் ஒபாமா, அடுத்த மாதம் இந்தியா வருகிறார். இது அவரின் இரண்டாவது வருகை. இதை சீர்குலைக்கும் வகையில், லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதிகள், டில்லியில் மிகப் பெரிய ... |
| பிடிவாதத்தை தளர்த்தும் எதிர்க்கட்சிகள் Posted: அமைச்சரின் அவதூறு பேச்சு விவகாரம் காரணமாக, ராஜ்யசபாவில் அமளி ஏற்பட்டதால், நான்காவது நாளாக, எந்தவொரு அலுவலும் நடைபெறாமல், சபை அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டது. இருப்பினும், அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென்ற தங்களது பிடிவாதத்தை, எதிர்க்கட்சிகள் சற்றே தளர்த்தியுள்ளதால், விரைவில், முட்டுக்கட்டை நீங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.கண்டனம்:மத்திய இணைஅமைச்சர் நிரஞ்சன் ஜோதி பேசிய, அவதூறு பேச்சுக்கு, எதிர்ப்பு தெரிவித்து, பார்லிமென்ட்டில், கடந்த மூன்று நாட்களாக, எதிர்க்கட்சிகள் ரகளை யில் ஈடுபட்டு வந்த நிலையில், நான்காவது நாளாக, ... |
| சகாயம் தங்கியிருந்த அறையில் ஒட்டுகேட்பு கருவி: காலி செய்யும்படி கூறியதாகவும் குற்றச்சாட்டு Posted: மதுரை : கிரானைட் முறைகேடு குறித்து விசாரிக்க, மதுரையில் தங்கியிருந்த சர்க்யூட் ஹவுஸ் அறையில், ஓட்டுகேட்பு கருவி பொருத்தப்பட்டதாக வந்த தகவலையடுத்து ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் வேறு அறைக்கு மாறினார். மாறிய அறை அமைச்சருக்கு(செல்லூர் ராஜூ) ஒதுக்கப்பட்டுள்ளதால், அதை காலி செய்யும்படி சகாயத்தின் உதவியாளரிடம் பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர். ஆனால் அறையை காலி செய்ய சகாயம் மறுத்து விட்டார்.சென்னை ஐகோர்ட் உத்தரவின்படி கிரானைட் முறைகேடு குறித்து விசாரிக்க சகாயம் மதுரையில் முகாமிட்டுள்ளார். அவர் தங்க அழகர்கோவில் ரோடு சர்க்யூட் ஹவுஸ் முதல் மாடியில் அறை ... |
| டிஜிட்டல் மயமாகும் ரத்த வங்கிகள்: லோக்சபாவில் மத்திய அரசு தகவல் Posted: புதுடில்லி: ''நாடு முழுவதும் உள்ள ரத்த வங்கிகளை, டிஜிட்டல் மயமாக்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது,'' மத்திய சுகாதாரத் துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான ஜே.பி.நட்டா கூறினார்.நட்டா, லோக்சபாவில் நேற்று கூறியதாவது: நாடு முழுவதும் உள்ள ரத்த வங்கிகளை, டிஜிட்டல் மயமாக்குவது குறித்து, இங்கு கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது. இது, நல்ல யோசனை. இதை செயல்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும். நாடு முழுவதும் உள்ள மக்கள், தங்களின் உடல் நலன் கருதி, அவசர தேவைக்காக ரத்த வங்கிகளை நாடுகின்றனர். ஆனால், எந்த ரத்த வங்கியில், எந்த வகையான ரத்தம் இருப்பு எவ்வளவு உள்ளது ... |
| தேஜஸ் இலகுரக போர் விமானங்கள்: விரைவில் பயன்பாட்டுக்கு வரும்: பாரிக்கர் Posted: புதுடில்லி: இந்தியாவின் சொந்த தொழில்நுட்பத்தில் தயாரான, தேஜஸ் இலகுரக போர் விமானங்கள் விரைவில் பயன்பாட்டு வர உள்ளதாக, மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் லோக்சபாவில் தெரிவித்தார்.கேள்வி நேரத்தின்போது, இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: பழைய மிக் ரக போர் விமானங்களை ஓரங்கட்டும் வகையில், முதற்கட்டமாக, 20 - 30 தேஜஸ் இலகுரக போர் விமானங்கள் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இதற்கான செயல்திட்ட அட்டவணையை, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கூட்டமைப்பான, டி.ஆர்.டி.ஓ., உருவாக்கி வருகிறது. கடந்த 2012ம் ஆண்டு, 90 ஆயிரம் கோடி ரூபாய் (1,500 கோடி டாலர்) ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |டிசம்பர் 06,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |