Tamil News | Online Tamil News |
- மம்தா மீது கை வைத்தால் மாநிலமே எரியும்: திரிணமுல் எம்.பி., மிரட்டல்
- முந்தைய காங்., அமைச்சர்களுக்கு வருகிறது சிக்கல்: ஊழல் புகார்களை விசாரிக்க முதல்வர் பட்நாவீஸ் உத்தரவு
- பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளை நேரடியாக ஒளிபரப்ப 'டிவி'களுக்கு தடை
- பொதுமக்களின் கடும் அதிருப்தியால் தமிழக அரசு பணிந்தது: தொழிற்சங்கங்களுடன் சமரசத்தால் பஸ் ஸ்டிரைக் முடிவு
- ராணுவ தளவாடங்கள் கொள்முதலில் மீண்டும் இடைத்தரகர்களை அணுக முடிவு
- அரசியல்வாதிகளிடமிருந்து 197 போலீசாருக்கு கிடைத்தது சுதந்திரம்
- தொடர் தொல்வியால் ராகுலுக்கு எதிராக மேலிட தலைவர்கள் போர்க்கொடி
- பாகிஸ்தானுடன் பேச்சை துவக்கியவர் வாஜ்பாய்: வளர்ச்சி தான் முக்கியம் என்றவர் மோடி: மெகபூபா முப்தி
- முதல்வர் வாழ்த்து இல்லாத புத்தாண்டு
- தாய்மார்கள் உயிரிழப்பு தமிழகத்தில் குறைவாம்! 5 பேர் சாவுக்குப்பின் சொல்கிறார் அமைச்சர்
- இரண்டு முதல் மூன்று மணி நேரம் அறிவிக்கப்படாத மின்தடை: மின் உற்பத்தியை அதிகரிக்க முடிவு
| மம்தா மீது கை வைத்தால் மாநிலமே எரியும்: திரிணமுல் எம்.பி., மிரட்டல் Posted: கோல்கட்டா: 'முதல்வர் மம்தா பானர்ஜி மீது கை வைத்தால், மேற்கு வங்கமே எரியும்' என, பொதுக்கூட்டம் ஒன்றில், மேற்கு வங்கத்தின், ஆளும் திரிணமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, எம்.பி., இத்ரிஸ் அலி மிரட்டல் விடுத்துள்ளார்.திரிணமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, முதல்வர், மம்தா பானர்ஜி தலைமையிலான, மேற்கு வங்க மாநிலத்தில், 'சாரதா சிட்பண்ட்' என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. அதன் முதலீட்டாளர்கள், பல லட்சம் பேரின் பல ஆயிரம் கோடி ரூபாயை, அந்த நிறுவனத்தின் நிர்வாகிகள், சில அரசியல்வாதிகளுடன் கூட்டு சேர்ந்து முறைகேடு செய்தனர். இது தொடர்பாக, அந்த கட்சியின், மூன்று ... |
| முந்தைய காங்., அமைச்சர்களுக்கு வருகிறது சிக்கல்: ஊழல் புகார்களை விசாரிக்க முதல்வர் பட்நாவீஸ் உத்தரவு Posted: மும்பை: மகாராஷ்டிராவில், முந்தைய காங்., - தேசியவாத காங்., கூட்டணி ஆட்சியில் இடம்பெற்றிருந்த, தேசியவாத காங்., அமைச்சர்கள் மீதான ஊழல் புகாரை, விசாரிக்க உத்தரவிட்ட அம்மாநில அரசு, இப்போது, காங்., தலைவர்களின் முறைகேடுகளை விசாரணை நடத்த உத்தரவிட்டு உள்ளது.பா.ஜ.,வை சேர்ந்த, முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தலைமையிலான மகாராஷ்டிர அரசு, முந்தைய அரசின் முறைகேடுகளை அம்பலப்படுத்தி வருகிறது. அந்த வகையில், இரு வாரங்களுக்கு முன், தேசியவாத காங்., கட்சியை சேர்ந்த, முன்னாள் துணை முதல்வர் அஜித் பவார், சுனில் தாட்கரே, சாகன் பூஜ்பால் ஆகியோர் மீது கூறப்பட்ட ஊழல் முறைகேடுகளை ... |
| பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளை நேரடியாக ஒளிபரப்ப 'டிவி'களுக்கு தடை Posted: புதுடில்லி: 'பயங்கரவாதிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் மற்றும் தீவிரவாதிகளுக்கு எதிரான பாதுகாப்பு படையினரின் செயல்பாடுகளை, 'டிவி'கள் நேரடியாக ஒளிபரப்பக் கூடாது' என, தகவல், ஒலிபரப்பு துறையிடம், மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.தகவல், ஒளிபரப்பு துறைக்கு, மத்திய அரசு அனுப்பியுள்ள கடிதத்தில், 'தேவையான சட்ட திருத்தங்களை மேற்கொண்டு, அதற்கான, கண்டிப்பான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்' என, தெரிவித்துள்ளது. ஏற்கனவே, இது போன்ற அறிவுரைகளை, 2009, 2011 மற்றும் 2013ம் ஆண்டுகளில், உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது. அதற்கு பிறகும், 'டிவி'களின் செயல்பாட்டில் ... |
| Posted: சென்னை: தமிழகம் முழுவதும் பஸ்கள் ஓடாதது, பொதுமக்களிடம் கடும் அதிருப்தி ஏற்படுத்தியதை தொடர்ந்து, போக்குவரத்துக் கழக ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த, அரசு தரப்பில் கமிட்டி அமைக்க, அமைச்சர் ஒப்புக்கொண்டார். போராட்டத்தை தொழிற்சங்கங்கள் வாபஸ் பெற்றதால், 'பஸ் ஸ்டிரைக்' முடிவுக்கு வந்தது.போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்தம், கடந்த ஆண்டு, ஆகஸ்டுடன் முடிந்தது. ஓராண்டுக்கு மேல் ஆகியும், 12வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை அரசு துவக்கவில்லை. இது, ஊழியர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்த, முத்தரப்பு ... |
| ராணுவ தளவாடங்கள் கொள்முதலில் மீண்டும் இடைத்தரகர்களை அணுக முடிவு Posted: புதுடில்லி: ராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்வதற்கு உதவ, சில நிபந்தனைகளின் அடிப்படையில், இடைத்தரகர்களை அனுமதிக்க, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.ராணுவ அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, மனோகர் பாரிக்கர் கூறியதாவது: சர்வதேச நிறுவனங்களிடம் இருந்து, ராணுவ தளவாடங்களை வாங்க, இடைத்தரகர்கள் உதவுகின்றனர். நம் நாட்டிலும், இதுபோன்ற நடைமுறையை பின்பற்ற முடிவு செய்துஉள்ளது.சாத்தியமில்லை:ஆனால், இடைத்தரகர்களின் விவரங்களை, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அத்துடன், ஆயுத விற்பனை விலை யில், ... |
| அரசியல்வாதிகளிடமிருந்து 197 போலீசாருக்கு கிடைத்தது சுதந்திரம் Posted: மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில், குறிப்பிட்ட சில அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு அளிக்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு, வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர்களுக்கு பாதுகாப்பு அளித்து வந்த, 197 போலீ சார், தங்களின் வழக்கமான பணிக்கு திரும்புகின்றனர்.மகாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு நிலை குறித்து, அம்மாநில உள்துறை இணை அமைச்சர் ராம் ஷிண்டே, உயர் போலீஸ் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசித்தார்.பின், செய்தியாளர் களிடம் அவர் ... |
| தொடர் தொல்வியால் ராகுலுக்கு எதிராக மேலிட தலைவர்கள் போர்க்கொடி Posted: புதுடில்லி: 'மத்தியிலும், மாநிலங்களிலும், காங்கிரஸ் படுதோல்வி அடைய, அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் தான் காரணம்' என, காங்கிரசின் மேலிட தலைவர்கள் பலர் வெளிப்படையாக வசைபாடத் துவங்கியுள்ளனர்.காங்கிரஸ் தலைவராக, சோனியா உள்ளார். அக்கட்சியின் துணைத் தலைவராக, அவர் மகன் ராகுல், 44, உள்ளார். கடந்த மே மாதம் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், வேட்பாளர் தேர்வு, தேர்தல் பிரசாரம் என, அனைத்தையும் தானே மேற்கொண்டார்; பிற, முன்னணி தலைவர்களை புறக்கணித்தார். இதனால், லோக்சபா தேர்தலில், 400க்கும் மேற்பட்ட இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ், 44 இடங்களில் மட்டுமே வெற்றி ... |
| பாகிஸ்தானுடன் பேச்சை துவக்கியவர் வாஜ்பாய்: வளர்ச்சி தான் முக்கியம் என்றவர் மோடி: மெகபூபா முப்தி Posted: புதுடில்லி: பா.ஜ.,வைப் பற்றியும், அந்த கட்சியை சேர்ந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பற்றியும், பி.டி.பி., தலைவர் மெகபூபா முப்தி பெருமையாக நேற்று பேசியதை அடுத்து, ஜம்மு - காஷ்மீரில் ஆட்சி அமைப்பது தொடர்பாக, பி.டி.பி., - பா.ஜ., கட்சிகள் இடையே விரைவில் இறுதிக்கட்ட பேச்சு துவங்க உள்ளது. |
| முதல்வர் வாழ்த்து இல்லாத புத்தாண்டு Posted: சென்னை: முதல்வர் வாழ்த்து இல்லாத புத்தாண்டாக, 2015 அமைந்துள்ளது. ஆங்கிலப் புத்தாண்டுக்கு, முதல்வர் பதவியில் இருப்பவர், பொதுமக்களுக்கு வாழ்த்து சொல்வது வழக்கம். ஆனால், ஜெயலலிதா முதல்வர் பதவி வகிக்கும் தகுதியை இழந்ததால், அவருக்கு பதிலாக முதல்வராக பொறுப்பேற்ற பன்னீர்செல்வம், பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவிக்க, தயங்கி வருகிறார். ஜெயலலிதா சிறையில் இருந்தபோது, ஆயுத பூஜை மற்றும் விஜய தசமிக்கு, முதல்வர் பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்தார். ஜெயலலிதா ஜாமினில் வெளிவந்த பிறகு, பண்டிகைகளுக்கு, முதல்வர் வாழ்த்து தெரிவிப்பதில்லை. தீபாவளி, கிறிஸ்துமஸ் ... |
| தாய்மார்கள் உயிரிழப்பு தமிழகத்தில் குறைவாம்! 5 பேர் சாவுக்குப்பின் சொல்கிறார் அமைச்சர் Posted: ஊட்டி : ஊட்டி அரசு சேட் மருத்துவமனையில், பிரசவத்துக்குப்பின் உயிரிழந்த தாய்மார்களின் எண்ணிக்கை, நேற்று ஐந்தாக உயர்ந்தது.நீலகிரி மாவட்டம், ஊட்டி அரசு சேட் மருத்துவமனையில் ஜெயந்தி, அமுதா ஆகியோர் பிரசவத்துக்குப்பின் உயிரிழந்தனர். சரஸ்வதி, ராதிகா ஆகியோர் கோவை மருத்துமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அடுத்தடுத்து இறந்தனர். இந்நிலையில், ஊட்டி அரசு சேட் மகப்பேறு மருத்துவமனையில் பிரசவித்துக்குப்பின் ரேவதி என்பவர், உடல்நலம் பாதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக நேற்று காலை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு மதியம் இறந்தார். |
| இரண்டு முதல் மூன்று மணி நேரம் அறிவிக்கப்படாத மின்தடை: மின் உற்பத்தியை அதிகரிக்க முடிவு Posted: மின்தடையை சமாளிக்க, அனல்மின் நிலையங்களில், உற்பத்தியை அதிகரிக்க, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.தமிழக மின் வாரியத்திற்கு, எண்ணூர், தூத்துக்குடி, மேட்டூர், வடசென்னை ஆகிய இடங்களில், 4,770 மெகாவாட் மின் உற்பத்தித்திறன் கொண்ட, அனல்மின் நிலையங்கள் உள்ளன. தமிழகத்தின் மின் தேவை, நாள்தோறும், 12 ஆயிரம் - 13 ஆயிரம் மெகாவாட் என்றளவில் உள்ளது. இதை பூர்த்தி செய்யும் அளவிற்கு, மின் உற்பத்தி ஆகாததால், மின்தடை செய்யப்படுகிறது. வடகிழக்கு பருவமழை காரணமாக, கடந்த இரு மாதங்களாக, மின் தேவை, 11 ஆயிரம் மெகாவாட்டிற்கு கீழ் சென்றது. ஜனவரி மாதம் வரை, மின் தேவை, இதே அளவில் இருக்கும் என ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜனவரி 01,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |