Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


நீதிபதி பற்றாக்குறை பட்டியல்: நாட்டில் கர்நாடகா முதலிடம்

Posted:

பெங்களூரு: உயர் நீதிமன்ற நீதிபதிகள் பற்றாக்குறையில், கர்நாடகா நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது.மத்திய சட்டத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள, உயர் நீதிமன்றங்களில் காலியாகவுள்ள பதவிகளின் புள்ளி விவர அறிக்கையில், இந்த விஷயம் பகிரங்கம் ஆகியுள்ளது. கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிரந்தர நீதிபதிகள் எண்ணிக்கை, 47. கூடுதல் நீதிபதிகள் எண்ணிக்கை, 15. மொத்தம், 62 நீதிபதி பதவிகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆனால், தற்போது, பணியாற்றி வரும் நீதிபதிகளின் எண்ணிக்கை, முறையே, 27 மற்றும் 5. அதிக காலி பணியிட பட்டியலில், கர்நாடகம், முதலிடத்தில் உள்ளது. ஆனால், ...

வெளிநாடுகளில் உண்டி குலுக்கும் கெஜ்ரிவால்

Posted:

புதுடில்லி: உள்நாட்டில் திரட்டிய ஒன்றரை கோடி போதாமல், வெளிநாடுகளிலும் நிதி திரட்ட உண்டியலும், கையுமாக கிளம்பி விட்டார், ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டில்லி முன்னாள் முதல்வருமான, அரவிந்த் கெஜ்ரிவால்.கடந்த தேர்தலில், ''எங்களிடம் பணம் இல்லை; ஆனால், மக்கள் ஆதரவு உள்ளது,'' எனக் கூறி, ஆட்சியிலும் அமர்ந்தார், கெஜ்ரிவால். ஆனால், பக்குவமற்ற பேச்சு, முதிர்ச்சியற்ற செயல், அனுபவமற்ற அரசியலால், அரசை நிர்வகிக்க திணறிய கெஜ்ரிவால், 'ஜன் லோக்பால்' மசோதாவை காரணம் காட்டி பதவி விலகினார். அடுத்து வந்த லோக்சபா தேர்தலில், டில்லியில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாத ஆம் ஆத்மி ...

ரமண் சிங் முதல்வர் பதவிக்கு நெருக்கடி

Posted:

புதுடில்லி: நக்சலைட்டுகளின் தாக்குதல் தொடருவதால், சத்தீஸ்கர் முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான ரமண் சிங்கிற்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.சத்தீஸ்கரில், முதல்வர் ரமண் சிங் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, நக்சலைட்டுகள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த, 2010ல், நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில், காங்., மூத்த தலைவர்கள், போலீசார் உட்பட, 76 பேர் கொல்லப்பட்டனர். அப்போதும், ரமண் சிங் தான் முதல்வராக இருந்தார். 'நக்சலைட்டுகளை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்காத ரமண் சிங், முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும்' என, காங்., ...

மின் வாரியத்தில் சவால்கள் ஏராளம்: சமாளிப்பாரா புதிய தலைவர் சாய்குமார்?

Posted:

மின் வாரிய தலைவராக பொறுப்பேற்ற சாய்குமாருக்கு, ஏராளமான சவால்கள் காத்திருக்கின்றன. தமிழகத்தில், கடந்த, 2008 முதல், மின் பற்றாக்குறை நிலவுவதால், மின் தடை செய்யப்படுகிறது. புதிய தலைவர் முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்ற போது, தமிழ்நாடு மின் வாரிய தலைவராக, சி.பி.சிங் இருந்தார். சில நாட்களில், இவர், மாற்றப்பட்டு, புதிய தலைவராக, ஸ்வரன் சிங் நியமிக்கப்பட்டார். ஐந்து நாட்கள் மட்டும் பதவியில் இருந்த, ஸ்வரன் சிங், திடீனெ மாற்றப்பட்டு, ஹன்ஸ்ராஜ் வர்மா நியமிக்கப்பட்டார். இவரும், சில மாதங்கள் மட்டும் பதவியில் இருந்தார். கடந்த, 2011 நவ., மாதம், ஹன்ஸ்ராஜ் வர்மா, மாற்றப்பட்டு, ...

முல்லைப்பெரியாறு அணை விவரகாரம்: கேரளா மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

Posted:

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தும் விவகாரத்தில் கடந்த மே 7ல் சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து கேரளா அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மேல் முறையீட்டு மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது. இதன்படி 142 அடி வரை தண்ணீரை தேக்க எவ்வித தடையும் இல்லை என்பது மீண்டும் உறுதியாகியுள்ளது.கேரளாவின் தேக்கடி மாவட்டத்தில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரை உயர்த்திக் கொள்ளலாம்; தேவைப்பட்டால் அணையின் பலத்தை அதிகரித்து 152 அடி வரை தண்ணீர தேக்கிக் கொள்ளலாம் என கடந்த மே 7ல் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கி ...

மது குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவரை ஏன் கைது செய்ய கூடாது? மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட் 15 கேள்விகள்

Posted:

சென்னை: மதுவினால் விளையும் தீமைகளில் இருந்து, பொதுமக்களை பாதுகாக்க, பூரண மதுவிலக்கு அமல்படுத்துவதை, மத்திய, மாநில அரசுகள் ஏன் பரிசீலிக்கவில்லை என்பது உட்பட, 15 கேள்விகளை என, சென்னை உயர் நீதிமன்றம் எழுப்பி உள்ளது.சென்னை அடையாறு எல்.பி.சாலை சந்திப்பில், மோட்டார் சைக்கிளில் சென்ற ராம்குமார், அருண்குமார் பஸ் மோதியதில் பலியாகினர். 2011ல், சம்பவம் நடந்தது.மதுபானம் குடித்து விட்டு, இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்ததால், கட்டுப்பாட்டை இழந்தனர் என, போக்குவரத்துக் கழகம் தரப்பில் வாதிடப்பட்டது. வாகனத்தை ஓட்டியவர், மதுபானம் குடித்திருந்தார் எனக்கூறிய தீர்ப்பாயம், ...

தி.மு.க.,வை மிரட்டிய நில அபகரிப்பு வழக்குகள் கதி என்ன? ஒன்றரை ஆண்டுக்கு பின் 8ம் தேதி இறுதி விசாரணை

Posted:

தமிழகத்தில், நில அபகரிப்பு புகார்களுக்காக, போலீஸ் துறையில் சிறப்பு பிரிவுகள், தனி நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்பட்டதை எதிர்த்து, தொடரப்பட்ட மனுக்கள், ஒன்றரை ஆண்டுக்குப் பின், சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றன.அ.தி.மு.க., ஆட்சி வந்ததும், கடந்த தி.மு.க., ஆட்சி காலத்தில் நடந்த, நில அபகரிப்பு சம்பவங்கள் குறித்து, ஏராளமான புகார்கள் வந்தன. 'இந்த நிலங்கள் எல்லாம் மீட்கப்பட்டு, அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும்' என, சட்டசபையில், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.அதையடுத்து, வேகவேகமாக நடவடிக்கைகள் துவங்கின.கட்சியின் முக்கிய புள்ளிகள் ...

இந்தியாவில் குறைந்தது ஊழல்!

Posted:

புதுடில்லி; 'டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் இந்தியா' என்ற அமைப்பு, உலக நாடுகளின் ஊழல் போக்கு குறித்த பட்டியலை வெளியிட்டு உள்ளது. 175 நாடுகள், இந்த பட்டியலில் உள்ளன. இதில், கடந்தாண்டில், 94வது இடத்திலிருந்த இந்தியா, சற்று முன்னேற்றம் கண்டு, தற்போது, 85வது இடத்தை பிடித்துள்ளது. பட்டியலில் முதலில் இருக்கும் நாடுகள், ஊழல் குறைந்த நாடுகள். பட்டியலின் பின்வரிசையில் இருக்கும் நாடுகள், ஊழல் அதிகமானவை.முன்னேற்றம் ஏன்? நிலக்கரி சுரங்கம், '2ஜி ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீடு போன்றவற்றில் நடந்த ஊழல்களில், அரசியல் பெரும்புள்ளிகள் மீது நடவடிக்கை ...

விழித்துக் கொண்டது இந்திய கடற்படை

Posted:

புதுடில்லி: இந்தியப் பெருங்கடலில், சீன நீர்மூழ்கி கப்பல்கள் போக்குவரத்து அதிகரித்ததை அடுத்து, கடற்படை பலத்தை அதிகரிக்க முடிவு செய்துள்ள மத்திய அரசு, அதற்காக பல முயற்சிகளில் அதிரடியாக இறங்கியுள்ளது. புதிய கப்பல்களை வாங்கவும், பயன்பாட்டில் இல்லாமல் முடங்கிக் கிடக்கும் கப்பல்களை புனரமைக்கவும் முடிவு செய்துள்ளது.வட பசிபிக் பெருங்கடல் பகுதியில், தெற்கு சீன கடல் மற்றும் கிழக்கு சீன கடல் பகுதிகளில், தன் கடற்படையின் பராக்கிரமத்தை காட்டி, அண்டை நாடுகளுடனான சுமுக உறவை குலைத்து கொண்ட சீனாவின் பார்வை, இப்போது இந்தியப் பெருங்கடல் பக்கம் ...

நோயாளிகளை ஏமாற்றும் டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் மெத்தனம்: 2 மாதங்களாக இழுத்தடிக்கிறது சுகாதார அமைச்சகம்

Posted:

புதுடில்லி: டாக்டர்களுக்கும், கொள்ளைப் பணம் வசூலிக்கும் ஸ்கேன் சென்டர்களுக்கும் இடையே மறைமுக உறவு இருப்பதாக சொல்லப்படுவது, டாக்டர்கள் மருந்து கம்பெனி களிடமிருந்து கமிஷன் வாங்குவது குறித்த குற்றச்சாட்டுகளை விசாரித்த ஒரு கமிட்டி சில பரிந்துரைகளை அளித்தது. அதன் மீது நடவடிக்கை எடுப்பதில் மத்திய சுகாதார அமைச்சகம் மெத்தனமாக செயல்படுவது, பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பரபரப்பு செய்திகள்: சில மாதங்களுக்கு முன், 'டிவி' சேனல்கள் நடத்திய, 'ஸ்டிங் ஆபரேஷனில்' டாக்டர்கள் சிலரின் முறைகேடான செயல்கள் அம்பலப்படுத்தப்பட்டு, ...

இன்று துவங்கும் சட்டசபை கூடும் நாட்கள் மூன்றே நாள் : தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அதிருப்தி

Posted:

தமிழக சட்டசபை கூட்டத்தொடர், இன்று துவங்கி, 8ம் தேதி நிறைவு பெற உள்ளது. மிகக் குறைந்த அளவில், மூன்று நாட்கள் மட்டும் சட்டசபை கூட்டத்தொடர் நடத்தப்படுவதால், எதிர்க்கட்சிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளன.தமிழக முதல்வராக, பன்னீர்செல்வம் பொறுப்பேற்ற பின், முதல் சட்டசபை கூட்டத்தொடர், இன்று துவங்குகிறது.கூட்டம் துவங்கியதும், மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.,க்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும்.அதன் பின், கேள்வி நேரத்திற்கு, ஒரு மணி நேரம் ஒதுக்கப்படும். தொடர்ந்து, 2014 - 15ம் ஆண்டின் கூடுதல் செலவிற்கான, இரண்டாவது துணை நிதிநிலை அறிக்கை, சபையில் தாக்கல் ...

ஜெ.,அபராதம் கட்டியது ஏன்? கருணாநிதி விளக்கம்

Posted:

சென்னை: 'நீதிமன்ற தண்டனையிலிருந்து தப்பிக்கவே, அ.தி.மு.க., பொது செயலர் ஜெயலலிதா தரப்பினர் அபராத தொகையை கட்டியிருக்கின்றனர் என்றால், தாங்கள் செய்த குற்றத்தை அவர்களே, ஒப்புக் கொண்டு விட்டனர் என்று தான் பொருள்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாத வழக்கில் ஜெயலலிதா தரப்பினர், இப்போது அபராத தொகையை கட்டியிருக்கின்றனர் என்றால், தாங்கள் செய்த குற்றத்தை அவர்களே ஒப்புக் கொண்டு விட்டனர் என்று தான் பொருள்.ஜெயலலிதாவை போல, வேறு யாராவது 17 ஆண்டு காலம் வழக்கை நடத்தி தீர்ப்பு வெளியிடப்படவுள்ள நேரத்தில், ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™