Tamil News | Online Tamil News |
- போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஸ்டிரைக் தீவிரம்: ஓடாத பஸ்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
- ஜன்தன் திட்டத்தில் 10.8 கோடி கணக்குகள் துவக்கி வங்கிகள் சாதனை
- உற்பத்தி துறையில் முன்னேற்றம் காண வரி விதிப்பில் மாற்றம் தேவை: ஜெட்லி
- குவிந்தது அன்னிய நேரடி முதலீடு: 7 மாதங்களில் ரூ.1 லட்சம் கோடி
- 'பயங்கரவாதிகளை சுட்டு தள்ளுங்கள்!'பலியான பெண்ணின் உறவினர்கள் கொந்தளிப்பு
- பெங்களூருவில் மேலும் சில இடங்களில் குண்டுவெடிக்கும்: ஐ.எஸ்.ஐ.எஸ்., மிரட்டல்
- கரும்பு விவசாயிகள் பற்றி கிஞ்சுற்றும் அரசு கவலைப்படவில்லை: கருணாநிதி
- கணினி இனி அவசியம்; கவனிக்குமா அரசு! தொழில்நுட்ப அறிவில் பின்தங்கும் மாணவர்கள்
- கடலுக்கு அடியில் 'ஏர் - ஏசியா' விமானம்? மிகப்பெரிய சதிக்குஒத்திகையா?
- கோவிலை காணோம்; சகாயத்திடம் புகார் அளித்த கிராமத்தினர்
- தொழிலாளர் பிரச்னையை தீர்க்க முடியாமல் திணறல்: அரசு மீது பொதுமக்கள் கடும் அதிருப்தி
| போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஸ்டிரைக் தீவிரம்: ஓடாத பஸ்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு Posted: அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலைநிறுத்தம் தீவிரமடைந்து உள்ளது. தமிழகம் முழுவதும், இரண்டாவது நாளாக, நேற்றும், குறைந்த எண்ணிக்கையிலான பஸ்களே இயக்கப்பட்டன. போராட்டத்தை தீவிரப்படுத்த, தொழிற்சங்கத்தினர் முடிவு செய்துள்ளதால், ஓடாத பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் சூழல் உருவாகி உள்ளது.ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை துவங்காததை கண்டித்து, ஆளுங்கட்சியைச் சேர்ந்த அண்ணா தொழிற்சங்கத்தை தவிர்த்து, 11 தொழிற்சங்கங்கள், டிச., 29ம் தேதி (நேற்று) முதல், வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்தன.ஆனால், நேற்று முன்தினம், திடீரென அவர்கள் போராட்டத்தில் ... |
| ஜன்தன் திட்டத்தில் 10.8 கோடி கணக்குகள் துவக்கி வங்கிகள் சாதனை Posted: புதுடில்லி : பிரதமர் நரேந்திர மோடியால் அறிமுகம் செய்யப்பட்ட, 'ஜன்தன் யோஜனா' என அழைக்கப்படும், வங்கிக் கணக்கு துவக்கும் திட்டத்தின் கீழ், நிர்ணயிக்கப்பட்ட இலக்கை, குறிப்பிட்ட நாட்களுக்கு முன்னரே, வங்கிகள் எட்டி உள்ளன. காலக்கெடு முடிவடைய, ஒரு மாதம் உள்ள நிலையில், தற்போதே, 10 கோடி வங்கிக் கணக்குகளை துவக்கி, சாதனை படைத்து உள்ளன.சுதந்திர தினத்தன்று, டில்லி செங்கோட்டையில் உரை நிகழ்த்திய, பிரதமர் நரேந்திர மோடி, அனைவருக்கும் வங்கிக் கணக்கு துவங்கும், 'ஜன்தன்' திட்டம், ஆக., 28ம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என, அறிவித்தார். |
| உற்பத்தி துறையில் முன்னேற்றம் காண வரி விதிப்பில் மாற்றம் தேவை: ஜெட்லி Posted: புதுடில்லி: ''உற்பத்தி துறையில் நிலவும் மந்தநிலைக்கு, உயரிய மூலதன செலவே காரணம். அதை தவிர்க்க வேண்டும் எனில், முதலீடுகள் வருவதில் உள்ள தடைகளை அகற்றுவதோடு, உலகளாவிய போட்டி சூழ்நிலைக்கு ஏற்ற வரி விதிப்பு முறையை அமல்படுத்த வேண்டியது அவசியம்,'' என, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.'மேக் இன் இந்தியா' குறித்த கருத்தரங்கு, டில்லியில் நேற்று நடைபெற்றது. இதில், பங்கேற்றுப் பேசிய ஜெட்லி கூறியதாவது: உற்பத்தி துறையானது, எதிர்பார்த்த அளவுக்கு வளர்ச்சி அடையவில்லை. இந்தத் துறையின் வளர்ச்சியை விரைவுபடுத்த வேண்டும் எனில், முதலீடுகள் அதிக அளவில் ... |
| குவிந்தது அன்னிய நேரடி முதலீடு: 7 மாதங்களில் ரூ.1 லட்சம் கோடி Posted: புதுடில்லி: நடப்பு 2014 - 15ம் நிதியாண்டில், ஏப்., - அக்., வரையிலான ஏழு மாதங்களில், 1 லட்சம் கோடி ரூபாய் அன்னிய நேரடி முதலீடு குவிந்துள்ளது என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர், நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.டில்லியில், 'இந்தியாவில் தயாரிப்போம்' என்ற பயிலரங்கை, அவர் துவக்கி வைத்து மேலும் பேசியதாவது: தயாரிப்புத் துறையில், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் தேவை. நாட்டில் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் நோக்கில், 'இந்தியாவில் தயாரிப்போம்' என்ற கொள்கை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அரசு அலுவலகங்களில், 'சிவப்பு நாடா' முறையை ஒழித்து, தற்போதைய ... |
| 'பயங்கரவாதிகளை சுட்டு தள்ளுங்கள்!'பலியான பெண்ணின் உறவினர்கள் கொந்தளிப்பு Posted: பெங்களூரூ குண்டு வெடிப்பில், சென்னை, ஜி.பி., சாலை, பார்டர் தோட்டம், பூபேகம் தெருவைச் சேர்ந்த பவானி தேவி, 37, பலத்த காயமடைந்து சிகிச்சைக்கு பின் இறந்தார். அவரதுஉறவினர் கார்த்திக், 22மற்றும் சம்பி, 33, ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.டயர் கடை:பவானி தேவியின் கணவர் பாலன், பார்டர் தோட்டத்தில் டயர் கடை நடத்துகிறார். மகன் பரத், 14, பத்தாம் வகுப்பு படிக்கிறான். மகள் லட்சுமிதேவி, 11, ஆறாம் வகுப்பு படிக்கிறாள். நடுத்தர குடும்பம். மூன்று மாடிகள் கொண்ட வீட்டின் முதல் தளத்தில், 3,000 ரூபாய் வாடகைக்கு குடியிருந்து வருகின்றனர்.பாலனின் சகோதரர் மகேந்திரனின் ... |
| பெங்களூருவில் மேலும் சில இடங்களில் குண்டுவெடிக்கும்: ஐ.எஸ்.ஐ.எஸ்., மிரட்டல் Posted: பெங்களூரு: பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பொறுப்பேற்றுக்கொள்வதாக அறிவித்துள்ள ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பு, மெஹ்தியை விடுதலை செய்யாவிட்டால், பெங்களூருவில் மேலும் சில இடங்களில் குண்டுவெடிக்கும் என கூறியுள்ளது.பிரதமர் மோடி, மத்திய சட்டத்துறை அமைச்சர் சதானந்த கவுடா ஆகியோருக்கு அனுப்பியுள்ள டுவிட்டர் செய்தியில், அப்துல் கான் என்பவர் கூறியுள்ளதாவது:நான், இந்தியாவில் தான் இருக்கிறேன். தைரியம் இருந்தால், என்னை பிடியுங்கள்.நான், 'சிமி' அமைப்பைச் சேர்ந்தவன் அல்ல; ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பைச் சேர்ந்தவன். என்னுடன், 600 இளைஞர்கள் கொண்ட படை உள்ளது. இளைஞர்கள், ... |
| கரும்பு விவசாயிகள் பற்றி கிஞ்சுற்றும் அரசு கவலைப்படவில்லை: கருணாநிதி Posted: சென்னை : 'கரும்பு விவசாயிகள், சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் பிரச்னையை தீர்க்க முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகள், கிஞ்சுற்றும் கவலைப்பட வில்லை' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.அவரது அறிக்கை:கரும்பு விவசாயத்தில், 3 லட்சம் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 201314ஆம் ஆண்டில் கரும்பு கொள்முதல் விலையாக டன்னுக்கு 2,650 ரூபாய் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவித்தன. இதில் போக்குவரத்து செலவினங்களுக்காக 100 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டது.இந்த ஆண்டு அரவை பருவம் தொடங்கி, மூன்று மாதங்கள் கடந்ததற்கு பிறகும், மாநில அரசின் பரிந்துரை ... |
| கணினி இனி அவசியம்; கவனிக்குமா அரசு! தொழில்நுட்ப அறிவில் பின்தங்கும் மாணவர்கள் Posted: கோவை: போட்டிகள் நிறைந்த இன்றைய தொழில்நுட்ப உலகில், கம்ப்யூட்டர் சார்ந்த பயிற்சிகள் முற்றிலும் அல்லாமல், அரசு பள்ளி மாணவர்கள் வேலைவாய்ப்பில் பின்தங்குவதாக சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.தமிழக அரசு, பள்ளி மாணவர்களின் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்த 'கனெக்டிவ்- கிளாஸ் ரூம்' திட்டம், மாணவர்களுக்கு இலவச லேப்-டாப் வினியோகம், பள்ளிகளுக்கு லேப்-டாப் மற்றும் கம்ப்யூட்டர் வினியோகம் என முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இதற்கு பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது.அடிப்படை தொழில்நுட்ப அறிவை புகுத்தாமல், மாணவர்கள் கைகளில் லேப்-டாப் ... |
| கடலுக்கு அடியில் 'ஏர் - ஏசியா' விமானம்? மிகப்பெரிய சதிக்குஒத்திகையா? Posted: சிங்கப்பூர் : நடுவானில் மாயமான, 'ஏர் - ஏசியா' விமானம், ஜாவா தீவு அருகே கடலின் அடியில் விழுந்து நொறுங்கியிருக்கலாம் என, இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.இந்தோனேசியாவில், சுரபயா விமான நிலையத்தில் இருந்து, நேற்று முன்தினம் சிங்கப்பூருக்கு சென்ற, 'ஏர் - ஏசியா' நிறுவனத்தின் விமானம், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே மாயமானது. இந்த விமானத்தில், 155 பயணிகளும், இரண்டு பைலட்டு கள், ஐந்து விமான சிப்பந்திகளும் இருந்தனர்.சந்தேகம்: மோசமான வானிலை காரணமாக, இந்த விமானம், இந்தோனேசியா கடற்பகுதியில் விழுந்து நொறுங்கியிருக்கலாம் என, கூறப்பட்டது. பயங்கரவாதிகளின் ... |
| கோவிலை காணோம்; சகாயத்திடம் புகார் அளித்த கிராமத்தினர் Posted: மேலூர்: மதுரை மாவட்டம், மேலூர், பெரியசேண்டலை குளத்தில் இருந்த கோவிலை அழித்து, குவாரி நடத்தியதாக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயத்திடம், கிராமத்தினர் புகார் தெரிவித்தனர்.கடத்தினர்: மதுரை மாவட்டத்தில், கிரானைட் முறைகேடு குறித்து விசாரித்து வரும் சகாயம், செம்மினிபட்டி ஊராட்சியில், ஒன்பது ஏக்கரில் உள்ள புறாக்கூட்டு மலையை ஆய்வு செய்தார்.அவரிடம் இந்திய கம்யூ., நிர்வாகி மெய்யர், ''பி.ஆர்.பி., நிறுவனத்தினர், தமிழ்நாடு கனிம நிறுவனம் (டாமின்) பெயரில், 92 அடி உயர மலையை வெட்டி கற்களை கடத்தினர்,'' என்றார்.-புறாக்கூட்டு மலையில், 'டாமின்' குறியீடு மற்றும் ... |
| தொழிலாளர் பிரச்னையை தீர்க்க முடியாமல் திணறல்: அரசு மீது பொதுமக்கள் கடும் அதிருப்தி Posted: தொழிலாளர் பிரச்னையை தீர்க்க முடியாமல், அரசு திணறுவது, பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.சொத்து குவிப்பு வழக்கில், சிறை தண்டனை விதிக்கப்பட்டதால், ஜெயலலிதா தன் முதல்வர் மற்றும் எம்.எல்.ஏ., பதவியை இழந்தார்.புதிய முதல்வராக, நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். ஆனால், தன்னிச்சையாக செயல்பட முடியாத நிலையில் உள்ளார். அமைச்சர்களும், அவரை மதிப்பதில்லை. இதனால் முக்கிய பிரச்னைகளில், முடிவு எடுக்க முடியாமல், முதல்வர் திணறி வருவதாக கூறப்படுகிறது.போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்தம், கடந்த ஆண்டு, ஆகஸ்ட் மாதம் முடிந்தது. ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |டிசம்பர் 30,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |