Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


வாகன ஆக்கிரமிப்பால் குறுகி வரும் புஸ்சி வீதி!

Posted: 29 Dec 2014 01:18 PM PST

விதிகளை மீறி இரு புறமும் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுவதால், புதுவை புஸ்சி வீதி குறுகி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

தொடரும் கடல் சீற்றம், படகுகள் முடங்கின

Posted: 29 Dec 2014 01:18 PM PST

புதுவையில் தொடர்ந்து 2ஆவது நாளாக திங்கள்கிழமையும் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. காலை முதல் பிற்பகல் வரை தொடர் மழை பெய்தது.

நடவடிக்கை எடுக்க இந்து மக்கள் கட்சி கோரிக்கை

Posted: 29 Dec 2014 01:18 PM PST

அரவிந்தர் ஆசிரமம் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி கோரியுள்ளது.

ஜனவரி 3-ல்மதுக்கடைகள் மூடல்

Posted: 29 Dec 2014 01:18 PM PST

மிலாது நபியை முன்னிட்டு புதுச்சேரி பகுதியில் உள்ள அனைத்து கள், சாராயம், பார் மற்றும் அனைத்து வகை மதுக்கடைகளும், மது அருந்த அனுமதிக்கப்பட்ட உணவகங்களும் வரும் ஜனவரி 3-ம் தேதி மிலாது நபியை முன்னிட்டு மது விற்பனை தடைச் செய்யப்பட்டுள்ளது.

கேரள சுற்றுலாத் தலங்கள்: புதுவை அமைச்சர் பார்வை

Posted: 29 Dec 2014 01:17 PM PST

கேரள மாநிலத்தில் உள்ள பல்வேறு சுற்றுலாத் தலங்களை புதுச்சேரி மாநில சுற்றுலா அமைச்சர் பெ.ராஜவேலு ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை ஆகிய 2 நாள்கள் பார்வையிட்டார்.

பெங்களூரு

Posted: 29 Dec 2014 01:17 PM PST

மதுரை

Posted: 29 Dec 2014 01:16 PM PST

திருநெல்வேலி

Posted: 29 Dec 2014 01:16 PM PST

காங்கிரஸ் கட்சியின் 130-வது ஆண்டு தொடக்க விழா

Posted: 29 Dec 2014 01:16 PM PST

திருவண்ணாமலை மாவட்ட காங்கிரஸ் சார்பில், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 130-வது ஆண்டு தொடக்க விழா திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இலங்​கையை வீழ்த்​தி​யது நியூ​ஸி​லாந்து​

Posted: 29 Dec 2014 01:14 PM PST

இலங்​கைக்கு எதி​ரான முதல் கிரிக்​கெட் டெஸ்​டில் நியூ​ஸி​லாந்து 8 விக்​கெட் வித்​தி​யா​சத்​தில் வென்​றது.​

ஹாட்​ரிக் சதம் விளா​சிய யுவ​ராஜ் சிங்

Posted: 29 Dec 2014 01:10 PM PST

செளராஷ்​டி​ரத்​துக்கு எதி​ரான ரஞ்சி டிராபி லீக் ஆட்​டத்​தில்,​​ பஞ்​சாப் முதல் இன்​னிங்​ஸில் 7

பிராத்​வெ​யிட்,​​ சாமு​வேல்ஸ் சதம்​

Posted: 29 Dec 2014 01:08 PM PST

தென் ஆப்​பி​ரிக்​கா​வுக்கு எதி​ரான 2ஆவது கிரிக்​கெட் டெஸ்​டின் 4ஆம் நாள் தேநீர் இடை​வே​ளைக்​குப்

மின் இணைப்பு பெயர் மாற்றம்: இன்று சிறப்பு முகாம்கள்

Posted: 29 Dec 2014 01:06 PM PST

திருவண்ணாமலை மாவட்டத்தின் 8 இடங்களில் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 30) நடைபெறும் மின் இணைப்புப் பெயர் மாற்ற சிறப்பு முகாம்களில் மின் நுகர்வோர் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் மு.நூர்முகமது தெரிவித்துள்ளார்.

தனி நல வாரியம் அமைக்கமின் பணியாளர்கள் கோரிக்கை

Posted: 29 Dec 2014 01:06 PM PST

கட்டுமான மின் பணியாளர்களுக்கு தனியாக நல வாரியம் அமைக்க வேண்டும் என்று திருவண்ணாமலை மாவட்ட கட்டுமான மின் பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சினிமாவை ரசனையாக ஏற்றுக் கொள்ளுங்கள்: பா.விஜய்

Posted: 29 Dec 2014 01:06 PM PST

சினிமாவை ரசனையாக ஏற்றுக் கொள்ளுங்கள். சினிமாவை வணங்காதீர்கள் என்று கல்லூரி மாணவ-மாணவியருக்கு திரைப்பட பாடலாசிரியர் பா.விஜய் அறிவுரை வழங்கினார்.

பந்தை வசப்​ப​டுத்தும் முயற்சியில்...

Posted: 29 Dec 2014 01:06 PM PST

கோவா​வில் திங்​கள்​கி​ழமை நடை​பெற்ற பெட​ரே​ஷன் கோப்பை கால்​பந்து ஆட்​டத்​தில் பந்தை வசப்​ப​டுத்த முயற்​சிக்​கும்

மாவட்ட தமிழ்ச் சங்கத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா

Posted: 29 Dec 2014 01:06 PM PST

திருவண்ணாமலை மாவட்ட தமிழ்ச் சங்கத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. விழாவுக்கு, சங்கத்தின் நிறுவனத் தலைவர் பா.இந்திரராஜன் தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர்

செங்கத்தில் ரூ.31 லட்சம் மதிப்பிலான கட்டடங்கள், உயர்கோபுர மின்விளக்கு

Posted: 29 Dec 2014 12:59 PM PST

செங்கத்தை அடுத்த புதுப்பாளையம் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதியில் ரூ.31 லட்சம் மதிப்பிலான புதிய கட்டடங்களை வேளாண்மைத் துறை அமைச்சர் அக்ரி. எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஞாயிற்றுக்கிழமை

"ஓய்வூதிய நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும்

Posted: 29 Dec 2014 12:31 PM PST

ஓய்வூதிய நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

மேல்கரிப்பூரில் என்என்எஸ் முகாம்

Posted: 29 Dec 2014 12:31 PM PST

சாத்தனூரை அடுத்த மேல்கரிப்பூரிலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சாத்தனூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான நாட்டு நலப்பணித்திட்ட முகாம் தொடங்கியது.

இலவச பொது மருத்துவ முகாம்

Posted: 29 Dec 2014 12:31 PM PST

தெள்ளாறை அடுத்த டி.மாம்பட்டு கிராமத்தில் இலவச பொது மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஜி.கே.வாசன் பிறந்த நாள்:500 பேருக்கு அன்னதானம்

Posted: 29 Dec 2014 12:31 PM PST

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனின் 50-வது பிறந்த நாளையொட்டி, திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை 500-க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

அரசுப் பேருந்துகள் இயங்காததால் மக்கள் அவதி; 200க்கும் மேற்பட்டோர் கைது

Posted: 29 Dec 2014 12:30 PM PST

திருவண்ணாமலை மாவட்டத்தில் போதிய அளவு அரசுப் பேருந்துகள் இயக்கப்படாததால், பயணிகள் அவதிக்குள்ளாயினர். 200 க்கும் போக்குவரத்து தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். 8 பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.

குறைதீர் முகாமில் மனுக்கள் குறைந்தன

Posted: 29 Dec 2014 12:30 PM PST

திருவண்ணாமலை மாவட்டத்தில் திங்கள்கிழமை போதிய அளவு பேருந்துகள் இயக்கப்படாததால், ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் மக்கள் அதிக அளவில் பங்கேற்கவில்லை. இத

மழையில் நனைந்த 2 ஆயிரம் நெல் மூட்டைகள்

Posted: 29 Dec 2014 12:30 PM PST

வந்தவாசி ஒழுங்குமுறை விற்பனைக் கூட திறந்தவெளிக் களத்தில் வைக்கப்பட்டிருந்த சுமார் 2 ஆயிரம் நெல் மூட்டைகள் திங்கள்கிழமை அதிகாலை பெய்த மழையில் நனைந்ததில் சேதமடைந்தன. இதைக் கண்டித்து விவசாயிகள் சாலை மறியல் செய்தனர்.

பள்ளி ஆண்டு விழா

Posted: 29 Dec 2014 12:29 PM PST

திருவண்ணாமலை, விக்னேஷ் இன்டர்நேஷனல் பள்ளியின் 5-ஆவது ஆண்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

கால்நடை மருத்துவ முகாம்

Posted: 29 Dec 2014 12:29 PM PST

கலசப்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் தென்பள்ளிப்பட்டு கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஜயங்கொண்டம் அருகே அரசுப் பேருந்து மீதுகல்வீச்சு

Posted: 29 Dec 2014 12:29 PM PST

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே அரசுப் பேருந்து மீது கல் வீசப்பட்டதில் அதன் கண்ணாடி உடைந்தது.

தா. பழூர் ஒன்றிய திமுக செயற்குழுக் கூட்டம்

Posted: 29 Dec 2014 12:28 PM PST

அரியலூர் மாவட்டம் தா. பழூர் ஒன்றிய திமுக செயற்குழுக் கூட்டம் காரைகுறிச்சியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

தா. பழூரில் அதிமுகவினர் துண்டுப் பிரசுரம் விநியோகம்

Posted: 29 Dec 2014 12:27 PM PST

அரியலூர் மாவட்டம், தா. பழூர் ஒன்றிய ஜெ.பேரவை சார்பில் ஜெயலலிதாவின் சாதனைகள் குறித்த துண்டுப் பிரசுரங்களை திங்கள்கிழமை விநியோகித்தனர்.

பெரம்பலூரில் போக்குவரத்து பாதிப்பு இல்லை

Posted: 29 Dec 2014 12:27 PM PST

பெரம்பலூர் மாவட்டத்தில் எதிர்க்கட்சி போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டதால் 42 பேருந்துகள் இயங்கவில்லை. இருப்பினும், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படவில்லை.

குறைதீர் கூட்டத்தில் நலத் திட்ட உதவி

Posted: 29 Dec 2014 12:27 PM PST

பெரம்பலூரில் பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.தலைமை வகித்த மாவட்ட ஆட்சியர் தரேஷ் அஹமது, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்

ரிலையன்ஸ் குழும வங்கியில் ஜப்பானிய வங்கி 10% பெற வாய்ப்பு

Posted: 29 Dec 2014 12:26 PM PST

அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குழுமம் தொடங்கத் திட்டமிட்டுள்ள வங்கியில்

ஆலமரம் விழுந்து வீடுகள் சேதம்: எம்எல்ஏ ஆய்வு

Posted: 29 Dec 2014 12:26 PM PST

கிருஷ்ணராயபுரம் அருகே ஆலமரம் விழுந்து வீடுகள் சேதமடைந்ததை எம்எல்ஏ செ. காமராஜ் திங்கள்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தோகைமலை அரிசி கடையில் பணம் திருட்டு

Posted: 29 Dec 2014 12:26 PM PST

தோகைமலை அரிசிக் கடையின் மேற்கூரையை பிரித்து கடையிலிருந்த ரூ. 21,500-ஐ திருடிச் சென்றோரை தோகைமலை போலீஸார் தேடிவருகின்றனர்.

குறைகேட்புக் கூட்டம்:பசுமை வீடு கோரி 111 பேர் மனு

Posted: 29 Dec 2014 12:26 PM PST

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியர் சு. கணேஷ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு முகாமில் பசுமை வீடுகள் கோரி 111 பேர் மனு அளித்தனர்.

சிலம்பம், கிராமிய நடனப் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்

Posted: 29 Dec 2014 12:25 PM PST

புதுக்கோட்டையில் இலவசமாக நடத்தப்பட்ட சிலம்பம், கிராமிய நடனம் உள்ளிட்ட கலைப் பயிற்சிகளில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை சான்றிதழ் வழங்கப்பட்டது.

கம்பன் கழகப் போட்டிகளில் வென்றோருக்கு பரிசு

Posted: 29 Dec 2014 12:25 PM PST

புதுக்கோட்டையில் கம்பன் கழகம் சார்பில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வென்ற பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆயுள் காப்பீட்டுக் கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 29 Dec 2014 12:25 PM PST

அவசர சட்டத்தின் மூலம் காப்பீட்டுத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டை அதிகரிக்கும் மத்திய அரசின் முடிவைக் கண்டித்து புதுக்கோட்டையில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அரசு தொழிற்பயிற்சிநிலைய அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Posted: 29 Dec 2014 12:25 PM PST

காலிப் பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு தொழில் பயிற்சி நிலைய அலுவலர் சங்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பயிற்சியாளர்களுக்கு மதிய உணவு வழங்க வேண்டும். தொழில்பயிற்சி நிலையத்தில் பண

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்: இளைஞர் சாவு

Posted: 29 Dec 2014 12:24 PM PST

தஞ்சாவூர் அருகேயுள்ள ராவுசாப்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் மகாலிங்கம் மகன் முருகன் (25). இவரது சகோதரி கற்பகம் (29). இருவரும் திங்கள்கிழமை மதியம் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள தனது உறவினரைப் பார்ப்பதற்காக இருசக்கர வாகனத்தில் வந்து

"கல்லூரிகளில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்துவது அவசியம்'

Posted: 29 Dec 2014 12:24 PM PST

கல்லூரிகளில் கண்காணிப்புக் கேமராக்கள் அவசியம் பொருத்த வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன்.

பசுபதிகோவிலில் ஜிகே வாசன் பிறந்தநாள் விழா

Posted: 29 Dec 2014 12:24 PM PST

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம் பசுபதிகோவிலில் முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழ் மாநில காங்கிரஸ் நிறுவனருமான ஜி.கே. வாசன் பிறந்தநாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

மீத்தேன் திட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்: காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம் ஆதரவு

Posted: 29 Dec 2014 12:23 PM PST

 மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தை கைவிடக்கோரி வரும் 31 ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்துக்கு அகில இந்திய காப்பீட்டு கழக ஊழியர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அச்சங்கம் சார்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அடிப்படை வசதி ஏற்படுத்தி தர வலியுறுத்தல்

Posted: 29 Dec 2014 12:23 PM PST

தஞ்சாவூர் பிரதாபசிம்மபுரத்தில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரகத்தில் மனித நேய மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் மனு அளித்தனர்.

விதிமீறல்: தனியார் உர நிலையத்தில் விற்பனைக்கு தடை விதிப்பு

Posted: 29 Dec 2014 12:23 PM PST

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு பகுதியில் ரசீது இன்றி உரம் விற்றதாகத் தனியார் உர விற்பனை நிலையத்தில் ஒரு வார காலத்துக்கு உரம் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது.

கோயில்களில் அன்னதானத் திட்டம் ஆய்வு

Posted: 29 Dec 2014 12:23 PM PST

இந்து சமய அறநிலையத் துறையின் தஞ்சாவூர் மண்டலத்துக்கு உள்பட்ட கோயில்களில் அன்னதானத் திட்டம் குறித்து இணை ஆணையர் உள்ளிட்டோர் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

பங்குச் சந்தையில் 154 புள்ளிகள் உயர்வு

Posted: 29 Dec 2014 12:22 PM PST

மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் 154 புள்ளிகள் உயர்வு ஏற்பட்டது.

ஜெகன்நாதப் பெருமாள் கோயிலில் சுக்லபட்ச மகா அஷ்டமி ஹோமம்

Posted: 29 Dec 2014 12:22 PM PST

கும்பகோணம் அருகேயுள்ள நாதன்கோயில் ஜெகன்நாதப் பெருமாள் கோயிலில் சுக்லபட்ச மகாஅஷ்டமி ஹோமம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கோட்டூர் அருகேதீக்காயமடைந்த பெண் சாவு

Posted: 29 Dec 2014 12:22 PM PST

திருவாரூர் மாவட்டம், கோட்டூர் அருகே தீக்குளித்து காயமடைந்த பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

பரவாக்கோட்டையில் வாசன் பிறந்த நாள்

Posted: 29 Dec 2014 12:21 PM PST

மன்னார்குடியை அடுத்துள்ள பரவாக்கோட்டை ஊராட்சியில் தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்) தலைவர் ஜி.கே. வாசன் பிறந்த நாளை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

மன்னார்குடிவர்த்தக சங்க புதிய நிர்வாகிகள்

Posted: 29 Dec 2014 12:21 PM PST

மன்னார்குடி வர்த்தக சங்க பொதுக்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் நிகழாண்டிற்கான புதிய நிர்வாகிகளாக தலைவர் கே.ஜெ.ஆர். பாரதிஜீவா, பொதுச் செயலராக ஆர்.வி. ஆனந்த், பொருளாளராக சங்கரசுப்பு ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

வேதாரண்யத்தில் பாமக நிர்வாகி நீக்கம்

Posted: 29 Dec 2014 12:21 PM PST

நாகை மாவட்டம், வேதாரண்யம் கிழக்கு ஒன்றிய பாமக முன்னாள் செயலாளரும், நிர்வாகியாக செயல்பட்டு வந்தவருமான ந. சதாசிவம், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும்

எல்ஐசி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 29 Dec 2014 12:20 PM PST

காப்பீட்டுத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டு உச்சவரம்பை உயர்த்துவது தொடர்பாக அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திருவாரூர், காரைக்காலில் திங்கள்கிழமை எல்ஐசி

இணையவழி போர்

Posted: 29 Dec 2014 12:20 PM PST

அமெரிக்காவின் சோனி பிக்சர்ஸ் மீதான இணையதளத் தாக்குதலுக்குப் பின்னர், இணையவழி

சாலையை சீரமைக்கக் கோரி கிடாரம்கொண்டானில் மக்கள் மறியல்

Posted: 29 Dec 2014 12:20 PM PST

திருவாரூர் அருகேயுள்ள கிடாரம்கொண்டானில் மிக மோசமான நிலையில் உள்ள திருவாரூர்-நாகை சாலையை விரைந்து சீரமைக்க வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.

திருவாரூர் மாவட்டத்தில் ஜனவரி 3-ல் ஆர்ப்பாட்டம்

Posted: 29 Dec 2014 12:19 PM PST

மீத்தேன் திட்டத்தை கைவிடக்கோரி, திருவாரூர் மாவட்டத்தில் ஜனவரி 3-ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

கரூரில் பேருந்து போக்குவரத்துக்கு பாதிப்பில்லை

Posted: 29 Dec 2014 12:19 PM PST

கரூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் 44 பேரை போலீஸார் கைது செய்தனர்.

சடையம்பாளையம் மாரியம்மன் கோயில் திருவிழா

Posted: 29 Dec 2014 12:18 PM PST

கரூர் அருகே உள்ள சடையம்பாளையம் மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் திங்கள்கிழமை காவிரியாற்றில் இருந்து புனித நீரை ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர்.

எல்ஐசி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 29 Dec 2014 12:18 PM PST

கரூர் மாவட்டம், குளித்தலையில் எல்ஐசி ஊழியர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறைதீர் முகாமில் 6 பேருக்கு உதவி

Posted: 29 Dec 2014 12:18 PM PST

கரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் 6 பேருக்கு ரூ.1.10 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

ஜெயலலிதா முதல்வராக வேண்டி கற்பக விநாயகர் கோயிலில் வழிபாடு

Posted: 29 Dec 2014 12:18 PM PST

அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக வேண்டி கரூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள விநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கரூர் தொகுதிச் செயலர் எஸ். திருவிகா, மாவட்ட துணைச் செயலர் ஏ.ஆர். காளியப்பன், பொருளாளர் முரளி, கரூர் தொகுதி இணைச் செயலர்

மாலத்தீவு பள்ளியுடன் கரூர் பள்ளி புரிந்துணர்வு ஒப்பந்தம்

Posted: 29 Dec 2014 12:17 PM PST

கரூர் பரணி வித்யாலயா பள்ளி மாலத்தீவு பள்ளியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

அரியலூரில் குறைந்த பேருந்துகளே இயக்கம்

Posted: 29 Dec 2014 12:17 PM PST

போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால் அரியலூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை குறைந்தளவு பேருந்துகளே இயக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

ஆர்ப்பாட்டம்: போக்குவரத்து தொழிலாளர்கள் கைது

Posted: 29 Dec 2014 12:17 PM PST

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டத்தில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் 35 பேர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.

அரியலூர் கோயில்களில் தமாகா சிறப்பு வழிபாடு

Posted: 29 Dec 2014 12:17 PM PST

தமாகா தலைவர் ஜி.கே. வாசன் பிறந்த நாளை முன்னிட்டு அரியலூர் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

எல்ஐசி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 29 Dec 2014 12:16 PM PST

காப்பீட்டுத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டைக் கண்டித்து அரியலூரில் எல்ஐசி ஊழியர்கள், முகவர்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குடும்ப அட்டைகளை வேறு கடைக்கு மாற்ற முயல்வதாகப் புகார்

Posted: 29 Dec 2014 12:16 PM PST

குடும்ப அட்டைகளை வேறு கடைக்கு மாற்ற முயல்வதாக தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கத் தலைவர் மீது, துணிஞ்சப்பாடி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமதுவிடம் திங்கள்கிழமை புகார் மனு அளித்தனர்.

"ஜன் தன்': 10 கோடி வங்கிக் கணக்குகள் தொடக்கம்

Posted: 29 Dec 2014 12:05 PM PST

பிரதமரின் "ஜன் தன்' திட்டத்தின் கீழ், வங்கிகளில் 10 கோடி சேமிப்புக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக

ம.பி.யில் கலவரம்: ஊரடங்கு உத்தரவு

Posted: 29 Dec 2014 12:05 PM PST

மத்தியப் பிரதேசத்தில் இரு சமூகத்தினரிடையே திங்கள்கிழமை கலவரம் ஏற்பட்டது.

ஜம்மு-காஷ்மீர்: என்.சி., காங்கிரஸூடன் சேர்ந்து ஆட்சியமைக்க வாய்ப்பு: பிடிபி

Posted: 29 Dec 2014 12:05 PM PST

ஜம்மு-காஷ்மீரில்  தேசிய மாநாட்டுக் கட்சி (என்.சி.), காங்கிரஸூடன் சேர்ந்து ஆட்சியமைக்கும் திட்டமும்

அஸ்ஸாம் - அருணாசல் எல்லையில் மக்கள் நடமாட்டத்துக்கு கட்டுப்பாடு

Posted: 29 Dec 2014 12:05 PM PST

அஸ்ஸாம் - அருணாசலப் பிரதேச எல்லைப் பகுதியில் போடோலாந்து தீவிரவாதிகளை ஒடுக்கும்

கர்நாடகம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை: சித்தராமையா

Posted: 29 Dec 2014 12:05 PM PST

கர்நாடகம் முழுவதும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை

அமீர்கானின் திரைப்படத்துக்கு எதிர்ப்பு: உ.பி., குஜராத்தில் திரையரங்குகள் மீது தாக்குதல்; ம.பி.யில் ஆர்ப்பாட்டம்

Posted: 29 Dec 2014 12:05 PM PST

அமீர்கான் நடிப்பில் வெளியாகியுள்ள "பி.கே.' ஹிந்தி திரைப்படத்தில் ஹிந்து மதக் கடவுளர்களை

மாறி வரும் உணவுப் பழக்கம்: அழிவின் விளிம்பில் சோலை மந்திகள்

Posted: 29 Dec 2014 12:05 PM PST

அழிந்து வரும் உயிரினமாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள சோலை மந்திகள், மாறிவரும்

மேட்டூரிலிருந்து இன்று முதல் மீண்டும் தண்ணீர் திறப்பு

Posted: 29 Dec 2014 12:04 PM PST

மேட்டூர் அணையிலிருந்து செவ்வாய்க்கிழமை (டிச.30) முதல் மீண்டும் தண்ணீர் திறந்து விட முதல்வர்

வட கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு

Posted: 29 Dec 2014 12:04 PM PST

தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் ஆங்காங்கே இடியுடன் கூடிய

வடாரண்யேஸ்வரர் கோயிலில் ஜனவரி 5-இல் ஆருத்ரா தரிசனம்

Posted: 29 Dec 2014 12:04 PM PST

திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயிலில் ஜனவரி 4ஆம் தேதி இரவு ஆருத்ரா

ஏழுமலையான் உண்டியல் வருமானம் ரூ.2.55 கோடி

Posted: 29 Dec 2014 12:04 PM PST

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் வருமானம் ரூ.2.55 கோடி வசூலானது.

கோதண்டராமருக்கு தங்க சடாரி நன்கொடை

Posted: 29 Dec 2014 12:04 PM PST

திருப்பதி தேவஸ்தானத்துக்குச் சொந்தமான கோதண்டராம ஸ்வாமி கோயிலுக்கு,

தமிழக ஆளுநர் ரோசய்யா வழிபாடு

Posted: 29 Dec 2014 12:04 PM PST

திருமலை ஏழுமலையானை தரிசிக்க, தமிழக ஆளுநர் ரோசய்யா ஞாயிற்றுக்கிழமை இரவு திருமலைக்கு வந்தார்.

கடலூர், தூத்துக்குடியில் கடல் சீற்றம்: மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை

Posted: 29 Dec 2014 12:04 PM PST

தொடர் மழை, கடல் சீற்றம் காரணமாக கடலூர் மாவட்டத்தில் 2-ஆவது நாளாக திங்கள்கிழமையும்

ராமேசுவரம் மீனவர்கள் 8 பேர் விசாரணைக்குப் பிறகு விடுவிப்பு

Posted: 29 Dec 2014 12:04 PM PST

எல்லை தாண்டி மீன்பிடிக்க வந்ததாக இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடித்துச்

மக்களின் எதிர்பார்ப்புகளை பாஜக அரசு நிறைவேற்றவில்லை: தா.பாண்டியன் குற்றச்சாட்டு

Posted: 29 Dec 2014 12:04 PM PST

பாஜக அரசு மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர்

சாயல்குடி அருகே கடலில் மூழ்கி ஒரே குடும்பத்தின் 5 பெண்கள் சாவு

Posted: 29 Dec 2014 12:04 PM PST

சாயல்குடி அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பெண்கள் கடலில் மூழ்கி திங்கள்கிழமை உயிரிழந்தனர்.

பெங்களூரு குண்டு வெடிப்பு: ஜி.கே.வாசன் கண்டனம்

Posted: 29 Dec 2014 12:04 PM PST

பெங்களூரில் நிகழ்ந்த குண்டுவெடிப்புக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் கண்டனம் தெரிவித்தார்.

போராட்டம் தீவிரப்படுத்தப்படும்: போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

Posted: 29 Dec 2014 12:04 PM PST

அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம்

பேருந்து இயக்கம் படிப்படியாக சீராகும்: அதிகாரிகள் தகவல்

Posted: 29 Dec 2014 12:04 PM PST

தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்துகளின் இயக்கம் படிப்படியாக சீராகும் என அரசுப் போக்குவரத்துக்

ஆலை நுழைவுப் போராட்டத்தில் ஈடுபட்ட பாக்ஸ்கான் தொழிலாளர்கள் கைது

Posted: 29 Dec 2014 12:04 PM PST

ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வந்த பாக்ஸ்கான் தொழிற்சாலை, நிர்வாக காரணங்களுக்காக

குண்டு வெடிப்புச் சம்பவம்: பெங்களூரு விரைந்தது தமிழக சிறப்பு புலனாய்வுப் பிரிவு

Posted: 29 Dec 2014 12:04 PM PST

பெங்களூரு குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பாக விசாரணை செய்ய தமிழகக் காவல் துறையின்

ஆப்கனில் போரிட்ட வீரர்களுக்கு ஒபாமா நன்றி

Posted: 29 Dec 2014 12:03 PM PST

ஆப்கானிஸ்தானில் 13 ஆண்டுகளாக போர்ப் பணியில் ஈடுபட்டிருந்த வீரர்களுக்கு

ஆப்கனில் போரிட்ட வீரர்களுக்கு ஒபாமா நன்றி

Posted: 29 Dec 2014 12:01 PM PST

ஆப்கானிஸ்தானில் 13 ஆண்டுகளாக போர்ப் பணியில் ஈடுபட்டிருந்த வீரர்களுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா நன்றி தெரிவித்தார்.

தோல்வியுற்று திரும்புகிறது அமெரிக்கா: ஆப்கன் தலிபான்கள்

Posted: 29 Dec 2014 12:00 PM PST

ஆப்கானிஸ்தானில் 13 ஆண்டுகளாக நிலைகொண்டிருந்த நேட்டோ படையினரின்

அமெரிக்கா நீதிபதியாகப் பதவியேற்கும் பார்வையற்றவர்!

Posted: 29 Dec 2014 12:00 PM PST

அமெரிக்காவின் மிஷிகன் மாகாண உச்ச நீதிமன்ற நீதிபதியாக பார்வையற்ற ஒருவர் பதவியேற்கவுள்ளார்.

கார் வெடிகுண்டுத் தாக்குதல்: சிரியாவில் 6 பேர் சாவு

Posted: 29 Dec 2014 11:58 AM PST

சிரியாவில் நிகழ்த்தப்பட்ட கார் வெடிகுண்டுத் தாக்குதலில் இரு குழந்தைகள் உள்பட 6 பேர் கொல்லப்பட்டனர்.

பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து முன்னாள் எம்.பி. நீக்கம்

Posted: 29 Dec 2014 11:53 AM PST

உத்தரப் பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை முன்னாள்

தீவிரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு சிறப்பு நிவாரணம்: அஸ்ஸாம் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

Posted: 29 Dec 2014 11:53 AM PST

அஸ்ஸாமில் என்டிஎஃப்பி தீவிரவாதிகளின் தொடர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு

சாரதா நிதி மோசடி: திரிணமூல் மூத்த தலைவரிடம் விசாரணை

Posted: 29 Dec 2014 11:50 AM PST

சாரதா நிதி நிறுவன மோசடி விவகாரம் தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும்,

போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டத்துக்கு அரசுதான் காரணம்: ஜி.ராமகிருஷ்ணன்

Posted: 29 Dec 2014 11:49 AM PST

அரசுப் போக்குவரத்து கழகத் தொழிலாளர்களின் போராட்டத்துக்கு அரசுதான் காரணம்;

பெங்களூரு குண்டு வெடிப்புச் சம்பவம்: குற்றவாளிகள் குறித்து தகவல் அளித்தால் ரூ. 10 லட்சம்

Posted: 29 Dec 2014 11:49 AM PST

பெங்களூரு குண்டு வெடிப்புச் சம்பவத்திற்கு காரணமானவர்கள் குறித்து தகவல் அளித்தால்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™