Tamil News | Online Tamil News |
- வெளிநாட்டு வங்கிகளில் முதலீடு: அரசு அதிகாரிகளுக்கு புது கிடுக்கிப்பிடி
- அன்னிய முதலீடுக்கு எதிர்ப்புதொழிற்சங்கம் மிரட்டல்
- டில்லி விமான நிலையத்தில் நகையை மதிப்பிட கோர்ட் உத்தரவு
- விவசாயம் காட்சிப்பொருளாக மாறி விடாதா?சரமாரியாக கேள்வி எழுப்பிய சகாயம்
- மருத்துவ உபகரணங்கள் துறை அன்னிய முதலீட்டை ஈர்க்குமா?
- 400 சாமியார்களுக்கு கு.க., ஆபரேஷன்
- தொழிலாளர்களின் எதிர்காலத்தை கேள்விகுறியாக்கிய கிங்பிஷர்
- காஷ்மீரில் முடிவானது கூட்டணி: பி.டி.பி.,க்கு முதல்வர், பா.ஜ.,வுக்கு துணை முதல்வர் பதவி
- பேஸ்புக், ட்வீட்டர், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கலக்கும் தகவல் ஒலிபரப்புத்துறை
- முடங்கிய பஸ்கள்... பரிதவித்த மக்கள்
- 162 பேருடன் சென்ற விமானம் மாயம்: கடலில் விழுந்து நொறுங்கியதா
- போக்குவரத்து ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தத்தால் தமிழகம் ஸ்தம்பிப்பு
- பெங்களூரில் குண்டு வெடிப்பு: சென்னையை சேர்ந்த பெண் பலி
| வெளிநாட்டு வங்கிகளில் முதலீடு: அரசு அதிகாரிகளுக்கு புது கிடுக்கிப்பிடி Posted: புதுடில்லி: மத்திய அரசின், 26 லட்சம் அதிகாரிகள், தங்களின் வெளிநாட்டு வங்கிக் கணக்கு, வெளிநாட்டு வங்கிகளில் செய்துள்ள முதலீடு போன்ற தகவல்களை, அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'லோக்பால் சட்டப்படி, மத்திய அரசு அதிகாரிகள் மற்றும் அதிகாரிகளின் மனைவி, வாரிசுகளின் வெளிநாட்டு முதலீடு, வங்கிக் கணக்கு போன்ற விவரங்களை தெரிவிக்க வேண்டும். இதற்கான படிவங்கள், தனியாக வழங்கப்பட்டுள்ளன' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே, இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட, ... |
| அன்னிய முதலீடுக்கு எதிர்ப்புதொழிற்சங்கம் மிரட்டல் Posted: புதுடில்லி:காப்பீடு துறையில், 100 சதவீத அன்னிய முதலீடுக்கு வழி வகை செய்யும் வகையில், அவசர சட்டம் பிறப்பித்துள்ள மத்திய அரசை கண்டித்தும்; முடக்கப்பட்ட நிலக்கரி சுரங்கங்களை மீண்டும் ஏலமிட ஏதுவாக, அவசர சட்டம் பிறப்பித்த மத்திய அரசை கண்டித்தும், ஆர்.எஸ்.எஸ்., ஆதரவு தொழிற்சங்கமான, பி.எம்.எஸ்., வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக மிரட்டியுள்ளது.மத்திய அரசின் இந்த முடிவுக்கு, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் அவற்றின் சார்பு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து, வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக மிரட்டியுள்ள நிலையில், ... |
| டில்லி விமான நிலையத்தில் நகையை மதிப்பிட கோர்ட் உத்தரவு Posted: புதுடில்லி:நகைகளுடன் வெளிநாடு செல்லும் பயணிகளின் நீண்ட கால பிரச்னைக்கு தீர்வு காணும் விதமாக, டில்லி இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையத்தில், நகை மதிப்பீட்டு பிரிவை அமைக்க, டில்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.தற்போது, வெளிநாடு செல்வோர், டில்லி விமான நிலையத்தில் இருந்து, 30 கி.மீ., பயணித்து, ஜன்டேவாலன் நகரில் உள்ள சுங்க வரி அலுவலகத்தில், முன்னதாகவே நகைகளை மதிப்பிட வேண்டும்.பயணிகளுக்கு வீண் அலைச்சலை ஏற்படுத்தும் இந்த நடைமுறையை மாற்றி, விமான நிலையத்திலேயே, நகை மதிப்பீட்டு பிரிவை அமைக்க உத்தரவிட வேண்டும் என, டில்லி ஐகோர்ட்டில், பொதுநல மனு தாக்கல் ... |
| விவசாயம் காட்சிப்பொருளாக மாறி விடாதா?சரமாரியாக கேள்வி எழுப்பிய சகாயம் Posted: மதுரை:சென்னை ஐகோர்ட் உத்தரவின்படி, மதுரை கிரானைட் முறைகேடுகள் குறித்து திருவாதவூர், புதுதாமரைப்பட்டி குவாரிகளில், ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம், நேற்று நேரில் ஆய்வு செய்தார். குவாரி விதிமீறலால், விவசாயம் காட்சிப் பொருளாக மாறிவிடாதா என, அதிகாரிகளிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.மதுரை அருகே, புதுதாமரைப்பட்டி ஜாங்கிட் நகர் போலீஸ் குடியிருப்புக்கு சென்ற சகாயத்தை, ஓய்வு பெற்ற போலீஸ்காரர்கள் சூழ்ந்து, குவாரிகளால் வீடுகளில் விரிசல் ஏற்பட்டு, குடியிருக்க முடியாத நிலையிலிருப்பதை காட்டினர். கற்கள் எடுக்க வெடி வைப்பதால், வீடுகளில் குடியிருக்க முடியவில்லை ... |
| மருத்துவ உபகரணங்கள் துறை அன்னிய முதலீட்டை ஈர்க்குமா? Posted: புதுடில்லி: மருத்துவ உபகரணங்கள் துறையில், 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டிற்கான அனுமதி, பல பன்னாட்டு நிறுவனங்கள், இத்துறையில் கால் பதிக்க வாய்ப்பளித்து உள்ளது.இதுகுறித்து, பொறியியல் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கூட்டமைப்பு தலைவர் அனுபம் ஷா கூறியதாவது:மருத்துவ சாதனங்கள், உபகரணங்கள் துறையில், முதலீடுகளுக்கு பற்றாக்குறை உள்ளது. அரசு, 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டை அனுமதித்திருப்பதால், பல பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு தொழிற்சாலைகளை அமைக்கும்.மருத்துவ உபகரணங்கள் குறைந்த விலையில் கிடைக்கும் என்பதால், நோயாளிகள் பயன்பெறுவர். தற்போது, 70 சதவீத மருத்துவ ... |
| 400 சாமியார்களுக்கு கு.க., ஆபரேஷன் Posted: புதுடில்லி:பஞ்சாப் மற்றும் அரியானாவில் செயல்படும், 'தேரா சச்சா சவுதா' என்ற மத அமைப்பின் தலைவர் குர்மித் சிங், தன் ஆதரவாளர்களான சாமியார்கள், 400 பேருக்கு, ஆண்களுக்கான கட்டாய குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதுகுறித்து, சி.பி.ஐ., விசாரித்து வருகிறது; குர்மித் ராம் ரஹீம் சிங் மீது, இன்று வழக்கு பதிவு செய்ய உள்ளது.சீக்கிய மதத்தினர் அதிகம் வாழும், பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில், அந்த மதத்தின் ஒரு பிரிவு என, தேரா சச்சா சவுதா என்ற அமைப்பை ஏற்படுத்தி, அதன் தலைவராக தன்னைத் தானே அறிவித்து, 'நானே கடவுள்' என கூறி வருகிறார், ... |
| தொழிலாளர்களின் எதிர்காலத்தை கேள்விகுறியாக்கிய கிங்பிஷர் Posted: புதுடில்லி: கர்நாடகாவைச் சேர்ந்த, பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா தலைமையிலான, 'கிங்பிஷர்' விமான நிறுவனத்தின் முடக்கப்பட்ட உரிமத்தை புதுப்பிக்கும் கெடு, இம்மாதம் 31ம் தேதியுடன் முடிவடைகிறது. இதற்குள் உரிமத்தை புதுப்பிக்க, கிங்பிஷருக்கு வாய்ப்பு இல்லை என்பதால், அதன், 2,000 தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.பைலட்டுகள் மற்றும் ஊழியர்களுக்கு, பல மாதங்களாக சம்பளம் வழங்கப்படாததால், கடந்த 2012 அக்டோபரில், கிங்பிஷர் விமான நிறுவனத்தின் சேவைக்கு தடை விதிக்கப்பட்டது. விமானங்களை வணிக பயன்பாட்டிற்காக இயக்குவதற்கான உரிமம், 2012 டிசம்பரில் ... |
| காஷ்மீரில் முடிவானது கூட்டணி: பி.டி.பி.,க்கு முதல்வர், பா.ஜ.,வுக்கு துணை முதல்வர் பதவி Posted: ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், பி.டி.பி., கட்சியும், பா.ஜ.,வும் இணைந்து, கூட்டணி ஆட்சி அமைப்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளன. நேற்றைய நிலவரப்படி, பி.டி.பி.,யின் முப்தி முகமது சயீத் முதல்வராகவும், பா.ஜ.,வுக்கு துணை முதல்வர் பதவி வழங்குவது என்றும் முடிவாகியுள்ளது. ஆட்சி அமைப்பதற்கான பணிகள் இன்று முதல் சுறுசுறுப்படையும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஐந்து கட்டங்களாக நடைபெற்ற, ஜம்மு - காஷ்மீர் மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள், கடந்த 23ல் எண்ணப்பட்ட போது, ஆட்சி அமைக்க தேவையான, 44 இடங்கள் எந்த கட்சிக்கும் கிடைக்காததால், தொங்கு சட்டசபை தான் என்பது ... |
| பேஸ்புக், ட்வீட்டர், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கலக்கும் தகவல் ஒலிபரப்புத்துறை Posted: புதுடில்லி: தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் கீழ் செயல்படும் தூர்தர்ஷன் ஆல் இந்தியா ரேடியா, சமூக வலை தளங்களில் ஏராளமானோரின் ஆதரவை பெற்றுள்ளது.சில மாதங்களுக்கு முன் வரை, ஏனோதானோ என, உப்பு சப்பில்லாத நிகழ்ச்சிகளை ஒலிபரப்பி, ஒளிபரப்பி, ரசிகர்களையும், பார்வையாளர்களையும் இழந்து வந்த, தகவல் ஒலிபரப்பு துறையின் கீழ் செயல்படும், தூர்தர்ஷன், ஆல் இந்தியா ரேடியோ. இப்போது, மக்களுக்கு விருப்பமான நிகழ்ச்சிகளை ஒலி, ஒளிபரப்புவது மட்டுமின்றி, சமூக தொடர்பு இணையதளங்கள் மூலமும், ஏராளமானோரின் ஆதரவை பெற்று வருகிறது.*துறை அமைச்சர்: அருண் ஜெட்லி |
| முடங்கிய பஸ்கள்... பரிதவித்த மக்கள் Posted: தர்மபுரி-: தர்மபுரியில், 14 அரசு போக்குவரத்து டிப்போக்கள் மூலம், 926 பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. போராட்டத்தால் நேற்று, 200 பஸ்கள் இயக்கப்படவில்லை.வேலூர்: வேலூர் மாவட்டத்தில், 1,800 அரசு பஸ்களில், 1,000 பஸ்கள் வரை இயக்கப்படவில்லை.திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், 600 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. திடீர் வேலை நிறுத்தத்தால், 300 பஸ்கள் இயங்கவில்லை.தஞ்சாவூர்-: தஞ்சாவூரில் பஸ்கள் இயக்குவது, நேற்று காலை முதல் படிப்படியாக குறைக்கப்பட்டது. இதனால், திருச்சி, மதுரை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்லும் ... |
| 162 பேருடன் சென்ற விமானம் மாயம்: கடலில் விழுந்து நொறுங்கியதா Posted: சிங்கப்பூர்:இந்தோனேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு, நேற்று காலை, 162 பேருடன் சென்ற 'ஏர் ஏசியா' நிறுவன விமானம், நடு வானில் திடீரென மாயமானது. மோசமான வானிலை காரணமாக, விமானம் கடலில் விழுந்து நொறுங்கியதா அல்லது பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டதா என்பதில் மர்மம் நீடிக்கிறது. விமானத்தை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது.இந்தோனேசியாவின் சுராபயா விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு, நேற்று காலை இந்திய நேரப்படி, 7:00 மணிக்கு, 'ஏர் ஏசியா' விமானம் புறப்பட்டது. கிஙூ 8501 என்ற அந்த விமானத்தில், 155 பயணிகளும், இரண்டு பைலட்டுகள் உட்பட, விமான குழுவினர் ஏழு பேரும் ... |
| போக்குவரத்து ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தத்தால் தமிழகம் ஸ்தம்பிப்பு Posted: இன்று முதல் நடைபெறும் என, அறிவித்த வேலை நிறுத்தப் போராட்டத்தை, போக்குவரத்து ஊழியர்கள் நேற்றே துவக்கியதால், தமிழகம் முழுவதும் அரசு பஸ் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதனால், மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். ஊழியர்களின் போராட்டம் நீடிப்பதால், இன்றும் பஸ்கள் ஓடுவது சந்தேகமே.போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்தம், கடந்த ஆண்டு ஆகஸ்டில் முடிந்தது. ஓராண்டாகியும், 12வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை, அரசு துவக்கவில்லை.அதனால், இன்று முதல், காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என, அண்ணா தொழிற்சங்கம் தவிர்த்து, இதர, 11 தொழிற்சங்கங்கள் அறிவித்தன. ... |
| பெங்களூரில் குண்டு வெடிப்பு: சென்னையை சேர்ந்த பெண் பலி Posted: பெங்களூரு:பெங்களூரில், நேற்று இரவு, குண்டு வெடித்ததில், சென்னையை சேர்ந்த பெண் பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் இரண்டு பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.பெங்களூரு, பிரிகேட் ரோடு அருகிலுள்ள சர்ச் தெருவின் நடைபாதையில், நேற்றிரவு, 8:30 மணிக்கு, பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில், சென்னையை சேர்ந்த பவானி, 38 என்ற பெண், பலத்த காயமடைந்தார்; உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், அங்கு, சிகிச்சை பலனின்றி இறந்தார். பெங்களுருவை சேர்ந்த கார்த்திக் என்பவர், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |டிசம்பர் 29,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |