Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


90 லட்சம் பேருக்கு இலவச மிக்சி, கிரைண்டர்கள் கிடைக்குமா? டெண்டரை இறுதி செய்யாமல் அரசு இழுத்தடிப்பு

Posted:

இலவச பொருட்கள் கொள்முதல் செய்வதற்காக நடத்தப்பட்ட டெண்டரில், தேர்வு செய்யப்பட்ட நிறுவனங்களுக்கு, கொள்முதல் ஆணை வழங்கப்படவில்லை. இதனால், 90 லட்சம் பேருக்கு, இலவச மிக்சி, கிரைண்டர் வினியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.தமிழக அரசு, ரேஷன் கடைகளில் அரிசி பெற தகுதி உடைய, 1.85 கோடி குடும்பங்களுக்கு மிக்சி, கிரைண்டர், மின் விசிறி / மின் அடுப்பு ஆகியவற்றை இலவசமாக வழங்கும் திட்டத்தை, 2011ம் ஆண்டு செப்., மாதம் துவக்கியது. இலவச பொருட்கள்: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் இலவச பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டு, வருவாய் துறை ...

நம்மிடம் அதிகம் எதிர்பார்க்கும் சர்வதேச நாடுகள்: வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

Posted:

வாரணாசி: ''ஆசிரியர் தொழிலை பொறுத்தவரை, சர்வதேச நாடுகள், நம்மிடம் அதிகம் எதிர்பார்க்கின்றன. ஆனால், அதற்கு நாம் இன்னும் தயாராகவில்லை,'' என, பிரதமர் மோடி பேசினார்.முன்னாள் பிரதமரும், பா.ஜ., மூத்த தலைவருமான, வாஜ்பாயின் பிறந்த தினமான, டிச., 25ம் தேதியை, 'நல்லாட்சி தினம்' என, மத்திய அரசு அறிவித்து உள்ளது. இதையொட்டி, உ.பி., மாநிலம் வாரணாசியில் உள்ள, பனாரஸ் இந்து பல்கலையில், சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.கலாசாரம்: இதில், பிரதமர் மோடி பேசியதாவது: ஆசிரியர் தொழில், மிகவும் புனிதமானது. ஆசிரியர்கள், நம் கலாசாரத்துடன் ...

பா.ஜ.,வை எதிர்த்த காஷ்மீர் கட்சிகள் இப்போது குட்டிக்கரணம்: கூட்டு சேர்ந்து ஆட்சி அமைக்க ரகசிய பேச்சு

Posted:

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில், மெகபூபா முப்தி தலைமையிலான, மக்கள் ஜனநாயக கட்சி (பி.டி.பி.,), ஒமர் அப்துல்லா தலைமையிலான, தேசிய மாநாட்டு கட்சி (என்.சி.,), காங்., கட்சிகளால் தனித்தோ, இணைந்தோ ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லை என்பது, உறுதியாகி உள்ளது. இதனால், இதுவரை, பா.ஜ.,வை சாடி வந்த, பா.ஜ.,வுடன் மோதல் போக்கை கடைபிடித்து வந்த, அந்த இரு மாநில கட்சிகளும், தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு, பா.ஜ.,வுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைக்க முன்வந்து உள்ளன; எனினும், சில முட்டுக்கட்டைகள் நீடிப்பதால், ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடிக்கிறது.பா.ஜ., இரு முக்கிய நிபந்தனைகளை விதிப்பதால், அந்த இரு ...

கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்லாத முதல்வர் பன்னீர்செல்வம்

Posted:

சென்னை: தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்து கூறாத, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கும், வாழ்த்து தெரிவிக்கவில்லை.முதல்வர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பண்டிகையின் போது, பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவிப்பர். சொத்து குவிப்பு வழக்கில், சிறை தண்டனை பெற்றதால், ஜெயலலிதா முதல்வர் பதவியை இழந்தார். புதிய முதல்வராக பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். அப்போது ஜெயலலிதா, சிறையில் இருந்தார். எனவே, முதல்வர் பன்னீர்செல்வம், ஆயுதபூஜை மற்றும் விஜயதசமிக்கு வாழ்த்து தெரிவித்தார். ஜெயலலிதா ஜாமினில் வந்த பிறகு, முக்கிய பண்டிகைகளுக்கு, முதல்வர், ...

தி.மு.க., கூட்டணி பேச்சுக்கு திடீர் தடை: நிர்வாகிகளுக்கு விஜயகாந்த் ரகசிய உத்தரவு

Posted:

'தி.மு.க., கூட்டணியை வலியுறுத்தி, கட்சி நிர்வாகிகள் யாரும் பொதுக்குழுவில் பேசக் கூடாது' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், ரகசிய கட்டுப்பாடு விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கடந்த 2005ல் துவக்கப்பட்ட, தே.மு.தி.க., தொடர்ந்து தேர்தல்களை தனித்து சந்தித்து வந்தது.கூட்டணி அமைத்து...: முதல்முறையாக, 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அதன் பின், கடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு, அனைத்து இடங்களிலும் தோல்வியை தழுவியது. இருப்பினும், பா.ஜ., கூட்டணியில் அக்கட்சி தொடர்ந்து ...

வாரிசுகள், 'மாஜி'க்களுக்கே மறுபடியும் வாய்ப்பு: தி.மு.க., மா.செ., பட்டியல் வெளியீடு

Posted:

தி.மு.க.,வில் நடந்த கட்சி தேர்தல் முடிவுக்கு பின், 40 மாவட்டங்களுக்கான நிர்வாகிகள் நேற்று அறிவிக்கப்பட்டனர். ஏற்கனவே மாவட்ட செயலர்களாக இருந்த மாஜிக்களுக்கும், அவர்களது வாரிசுகளுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள, 25 மாவட்ட செயலர்களுக்கான இரண்டாவது பட்டியல் இன்று வெளியிடப்படும் என தெரிகிறது.தி.மு.க.,வில் மாவட்டங்கள் மறுசீரமைப்புக்கு பின், மாவட்ட செயலர்களின் எண்ணிக்கை, 65 ஆக உயர்த்தப்பட்டது. அதன் அடிப்படையில், நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடத்தப்பட்டது. இதில், முன்னாள் அமைச்சர்கள், 17 பேர் உட்பட, ஏற்கனவே மாவட்ட செயலர்களாக இருந்த, 35 ...

பலசரக்கு கடைகளிலும் இனி 'காஸ்' சிலிண்டர்!

Posted:

புதுடில்லி: ''பெட்ரோல் பங்க் தவிர பலசரக்கு கடைகளிலும் இனி 5 கிலோ, 'மினி' சமையல், 'காஸ்' சிலிண்டர் கிடைக்கும்,'' என மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.அவர் கூறியதாவது: வாடிக்கையாளர்கள் வசதிக்காக 5 கிலோ எடையுடைய 'மினி' சமையல் காஸ் சிலிண்டர்கள் அங்கீகரிக்கப்பட்ட ஏஜன்சிகளிலும், குறிப்பிட்ட பெட்ரோல் பங்க்களிலும் விற்பனை செய்யப்படுகின்றன. மானியமில்லாமல் ஒரு சிலிண்டர் 351 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த மினி சிலிண்டர் களை மானிய விலையிலும் இனி காஸ் ஏஜன்சிகளிடம் வாங்கலாம். ஒரு சிலிண்டர் 155 ரூபாய்க்கும் விற்பனை ...

ஈராக் 'டிவி'யில் 'ரியாலிட்டிஷோ': மனம் திறக்கும் பயங்கரவாதிகள்

Posted:

பாக்தாத்: ஈராக்கில், தண்டனைக்கு உள்ளான ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள், தங்களால் பாதிக்கப்பட்டோரை நேரில் சந்தித்து பேசும் தொலைகாட்சி நிகழ்ச்சி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.பயங்கரவாதத்தால் அப்பாவி மக்களுக்கு ஏற்படும் பல்வேறு பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வை இளைஞர்களிடையே பரப்ப, ஈராக் அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. அதன் அடிப்படையில், ஈராக் அரசின் 'அல் ஈராக்கி' தொலைகாட்சியில், 'சட்டத்தின் பிடியில்' என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதில், தண்டனைக்கு உள்ளான ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள், கைதிகளுக்கான மஞ்சள் உடையுடன், அவர்கள் குற்றம் புரிந்த இடத்திற்கு ...

ராஜபக் ஷே இரட்டை வேடம்: கருணாநிதி சாடல்

Posted:

சென்னை: 'அதிபர் தேர்தலில், தமிழர்களின் ஓட்டுகளைப் பெற, ராஜபக் ஷே, இரட்டை வேடம் போடுகிறார்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி சாடியுள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கை அதிபராக ஒருவர், இரு முறை தான் இருக்க வேண்டும் என்பதை மாற்ற, சட்ட திருத்தம் செய்து, ராஜபக் ஷே, மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். இவர் வெற்றி பெற, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவிக்கிறார். தமிழர்களின் ஓட்டுகளைப் பெற, போரின் போது, ராணுவத்தால் தமிழர்கள் கொல்லப்பட்டது குறித்து, நீதி விசாரணை நடத்தப்படும். குற்றங்கள் நடந்திருந்தால், நீதி நிலை நாட்டப்படும் என, தேர்தல் ...

2014-ம் ஆண்டிற்கான சிறந்த விஞ்ஞானி : ராதாகிருஷ்ணன் முதலிடம்

Posted:

லண்டன்: 2014-ம் ஆண்டிற்கான உலகி்ன் சிறந்த 10 விஞ்ஞானிகள் பட்டியலில் இந்திய விஞ்ஞானி ராதாகிருஷ்ணனுக்கு முதலிடம் கிடைத்துள்ளது.லண்டனில் இருந்து வெளிவரும் நேச்சர் எனப்படும் அறிவியல் இதழ் ஒவ்வொரு ஆண்டும் உலகின் முதல் 10 இடங்களை பெறும் விஞ்ஞானிகளை பட்டியலிட்டு வருகிறது. இந்த வரிசையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தை(இஸ்ரோ) சேர்ந்த விஞ்ஞானி ராதாகிருஷ்ணனுக்கு முதலிட்டத்தை அளித்துள்ளது. மேலும் இந்தியாவை சேர்ந்த ஒருவரை தேர்வு செய்திருப்பது இதுவே முதல் முறையாகும். கேரள மாநிலத்தில் பிறந்த இவர் எலக்ட்ரிக்கல் அண்ட் எல்க்ட்ரானி்க்ஸ் பிரிவில் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™