ஈகரை தமிழ் களஞ்சியம் |
- காந்தியை சுட்ட கோட்ஸேவுக்கு கோயில் கட்ட பூமி பூஜை
- இசையே…இசையின் ஒலியே…
- சுனாமி 10–ம் ஆண்டு நினைவு தினம் நாளை அனுஷ்டிக்கப்படுகிறது !
- 2015 புத்தாண்டு பலன்கள் !
- Powenraj அவர்களை வாழ்த்துவோம் .
- அன்பைச் சொல்ல யோசிக்கத் தேவையில்லை..!
- வாஜ்பாய்க்கு இன்று 90வது பிறந்த நாள் !
- பத்து ஆண்டுகளுக்கு முன் சுனாமியன்று காணாமல் போன மகன்-மகள்: மீண்டும் பெற்றோருடன் சேர்ந்தனர்:)
- யூ ட்யூப் புது வசதி: வீடியோக்களை டவுன்லோட் செய்யலாம்
- எந்த கட்சியிலும் சேராம மக்களுக்கு நல்லது செய்ய முடியும்..!! -
- தள்ளிப் போனது ஐ.. ஜனவரி 14-ம் தேதி வெளியாகிறது!
- துரத்தும் முதுமை... காப்போம் இளமை! முதுமையில் இளமை!
- புகைபடத்திற்கு கவிதை தாருங்கள்...!
- சுனாமி: கடலோர கிராமங்களில் சில நிமிஷங்களில் எச்சரிக்கை
- மனது மறக்கமுடியாத டிசம்பர் 26
- ஒரு நாள் முதல்வன் போல.....
- ஆரோக்கிய உடலுக்கு அடிப்படைச் சத்துகள்!
- தொடத் தொடத் தொல்காப்பியம்(332)
- விடுகதை
- இப்படியும் துவைக்கலாம் :)
- பழைய ரூபாய் நோட்டு மாற்றம் !
- பாரத ரத்னா விருது பெறும் வாஜ்பாய், மாளவியா வாழ்க்கை குறிப்பு
- இதயம் துடிக்கட்டும் பாதுகாப்பாக!
- வலை ஆட்டம்...
- விதி செய்த விதி!!
- தீவிரவாதிக்கு சிறப்பு மரியாதையா? - இந்தியாவின் எதிர்ப்பால் வருத்தம் தெரிவித்தது ஐ.நா.
- தங்க ரதப் பணிகளை பார்வையிட்ட ஜயேந்திரர்
- சோனியின் தி இண்டர்வியூ நாளை வெளியீடு
| காந்தியை சுட்ட கோட்ஸேவுக்கு கோயில் கட்ட பூமி பூஜை Posted: 25 Dec 2014 03:36 PM PST - உத்தரப் பிரதேச மாநிலம், மீரட்டில் கோட்ஸேவுக்கு கோயில் கட்டுவதற்காக பூமி பூஜை நடத்தப்பட்டதாக வெளியான தகவலை அடுத்து, விசாரணை நடத்துவதற்கு மாவட்ட ஆட்சியர் நவநீத சிங் சஹல் உத்தரவிட்டுள்ளார். மீரட் நகரில் சாரதா சாலையில் உள்ள ஒரு கோயிலில் இந்தப் பூமி பூஜை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. பூஜையில் கலந்துகொண்ட அகில பாரதிய ஹிந்து மகா சபையின் தேசிய பொதுச் செயலாளர் ஆச்சார்யா மதன், "கோட்ஸே, உண்மையான தேச பக்தர்' என்று புகழ்ந்து பேசியதாகக் கூறப்படுகிறது. மேலும், ராமர் கோயில் கட்டுவது, காஷ்மீருக்கு ... |
| Posted: 25 Dec 2014 03:15 PM PST - - நீங்க பாடினா கல்லும் கரையும்னு சொன்னாங்க.. அதான் வந்தேன்..! - சரிங்க…அதுக்காக உங்க சிறுநீரக கல்லை நான் பாடி கரைக்கணும்னு சொல்றது நியாயமா..? - >மு.சுலைஹா. - ———————————————————————————– - பாகவதரே! புன்னாகவராளி ராகத்துல நீங்க பாடின பாட்டைக் கேட்டு பாம்புகள் படையெடுத்து வந்துடுச்சாமே…? - மண்ணாங்கட்டி! எங்க ஊர்ல இருந்த அத்தனை பாம்புகளும் ஊரையே காலி பண்ணிட்டு ஓடிடுச்சு..! - >குட்டி பிரசன்னா - —————————————————————————————– – நீங்க சபாவில பாடுவதை விட டி.வி.யில் பாடலாமே..! - ஏன்..என் ... |
| சுனாமி 10–ம் ஆண்டு நினைவு தினம் நாளை அனுஷ்டிக்கப்படுகிறது ! Posted: 25 Dec 2014 09:48 AM PST குளச்சல், டிச. 25– சுனாமி ஆழிப்பேரலை கோர தாண்டவமாடி 9 வருடங்கள் ஆனாலும் சுனாமி நினைவலைகளின் சோகம் இன்னும் குறையவில்லை. இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட நில நடுக்கத்தின் காரணமாக 2004–ம் ஆண்டு டிசம்பர் 26–ம் தேதி காலை யாரும் எதிர்பாராத இதுவரை கண்டிராத வகையில் சுனாமி தாக்கியது. கிறிஸ்துமஸ் விழா கொண்டாடிய மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்த கடலோர மீனவ மக்களை துயரத்தின் எல்லைக்கு எடுத்து சென்றது சுனாமி ஆழிப்பேரலை. அந்த பேரழிவின் தாண்டவம் உலகையே புரட்டிப் போட்டது. இந்தோனேசியா நாட்டின் ... |
| Posted: 25 Dec 2014 09:14 AM PST மேஷம் ராசி பஞ்சாங்க ஜோதிடம் மேஷம் (அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய) வாக்கு சாதுர்யமும், வசீகர பேச்சுத்திறனும் கொண்ட மேஷ ராசி நேயர்களே! உங்களுக்கு இந்த 2015-ஆம் ஆண்டில் சனி அஷ்டம ஸ்தானமான 8-ல் சஞ்சரிப்பதால் அஷ்டமச் சனி நடைபெறுகிறது. ஆண்டின் தொடக்கத்தில் குரு பகவானும் சுக ஸ்தானமான 4-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்கிறார். இது அவ்வளவு சாதகமான அமைப்பு இல்லை என்றாலும் 6-ல் ராகு சஞ்சரிப்பதால் எதையும் சமாளிக்கக்கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டு ... |
| Powenraj அவர்களை வாழ்த்துவோம் . Posted: 25 Dec 2014 09:13 AM PST Powenraj அவர்களை வாழ்த்துவோம் . பயன் மிகு , அறிவு கூட்டும் 2000 பதிவுகள் கடக்கப் போகும் Powenraj அவர்களை வாழ்த்துவோம் . வாழ்த்துக்கள் Raj . ரமணியன் |
| அன்பைச் சொல்ல யோசிக்கத் தேவையில்லை..! Posted: 25 Dec 2014 08:55 AM PST ![]() |
| வாஜ்பாய்க்கு இன்று 90வது பிறந்த நாள் ! Posted: 25 Dec 2014 08:20 AM PST வாஜ்பாய்க்கு இன்று 90வது பிறந்த நாள்: நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் மோடி ! புதுடெல்லி, டிச. 25- முன்னாள் பாரதப் பிரதமர் வாஜ்பாயின் 90வது பிறந்து நாளை முன்னிட்டு, இன்று அவரது வீட்டுக்கு சென்ற பிரதமர் மோடி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். முன்னதாக அவரது பிறந்த நாளை 'நல்லாட்சி நாளாக' கொண்டாடுவது தான், நாம் அவருக்கு தரும் மிகப்பெரிய மரியாதையாகும் என்று மோடி தனது டுவிட்டரில் கூறியிருந்தார். இந்த நாளில் நல்லாட்சி தர நாம் அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்று அவர் ... |
| பத்து ஆண்டுகளுக்கு முன் சுனாமியன்று காணாமல் போன மகன்-மகள்: மீண்டும் பெற்றோருடன் சேர்ந்தனர்:) Posted: 25 Dec 2014 08:19 AM PST இந்தோனேசியா, டிச.25 2004 டிசம்பர் 26 ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி., வரவிருக்கும் பேராபத்து பற்றி எதுவும் அறியாத ஜமாலியா சுமத்ரா தீவில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே துணிகளைக் காய வைத்துக் கொண்டிருந்தார். உள்ளே அவரது மூன்று குழந்தைகளும் டி.வி பார்த்துக் கொண்டிருந்தனர். ஒரே ஒரு நொடியில் அவர்களின் வாழ்க்கையே மாறிவிட்டது, பயங்கரமான பூகம்பத்தால் நிலைகுலைந்து இருக்கும் போது, 'அலை வருது...அலை வருது...' என்று மக்களின் அலறல் கேட்டது. பதறிப் போன ஜமாலியாவின் குடும்பம் ஒரு வண்டியில் அவசரமாக கிளம்பியது. ... |
| யூ ட்யூப் புது வசதி: வீடியோக்களை டவுன்லோட் செய்யலாம் Posted: 25 Dec 2014 08:00 AM PST - பிரபல வீடியோ பகிர்வு வலைத் தளமான யூ ட்யூப், வீடியோக்களை டவுன்லோட் செய்து பார்க்கும் வசதியை அறிவித்துள்ளது. மிக மெதுவான இணைய இணைப்பு மற்றும் அதிக கட்டணம் ஆகிய பிரச்னைகளில் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படாமல் இருக்க இந்த வசதியை அளிப்பதாக அமெரிக்கவைச் சேர்ந்த இணைய விளம்பர நிறுவனமான யூ ட்யூப் தெரிவித்துள்ளது. இதன்படி, இணைய இணைப்பில் இருக்கும்போது யூ ட்யூப் வலைத் தளத்தில் உள்ள இதற்கான சிறப்பு பகுதியை க்ளிக் செய்து விரும்பிய வீடியோக்களை பதிவிறக்கம் செய்த பிறகு, அடுத்த ... |
| எந்த கட்சியிலும் சேராம மக்களுக்கு நல்லது செய்ய முடியும்..!! - Posted: 25 Dec 2014 07:50 AM PST |
| தள்ளிப் போனது ஐ.. ஜனவரி 14-ம் தேதி வெளியாகிறது! Posted: 25 Dec 2014 07:45 AM PST - முன்பு அறிவிக்கப்பட்ட ஜனவரி 9-ம் தேதிக்கு பதில், பொங்கல் தினமான 14-ம் தேதி வெளியாகிறது ஷங்கரின் - இதே தேதியில் அஜீத்தின் என்னை அறிந்தால், விஷாலின் ஆம்பள, சிவகார்த்திகேயனின் காக்கிச் சட்டை படங்களும் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது. - |
| துரத்தும் முதுமை... காப்போம் இளமை! முதுமையில் இளமை! Posted: 25 Dec 2014 07:43 AM PST அழகு நிலையங்களிலும் அழகைப் பராமரிக்கும் பொருட்கள் சார்ந்த விளம்பரங்களிலும் சர்வசாதாரணமாக பயன்படுத்தும் வார்த்தை 'anti aging'. சருமத்தைப் பராமரிக்கவும் சுருக்கங்களை நீக்கவும் பலவகை கிரீம்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. முதுமையைத் தள்ளிப்போட, இவை மட்டுமே போதுமா? தோலின் சுருக்கம் மட்டுமே முதுமைக்கான அறிகுறியா? முதுமையைத் தள்ளிப்போட்டு இளமையைத் தக்கவைப்பது சாத்தியமா? அதற்கான வழிமுறைகள் என்னென்ன? சென்னை அப்பல்லோவின் சரும நோய் நிபுணர் டாக்டர் கே.பிரியாவைச் சந்தித்தோம். சிலருக்கு இளம் வயதிலேயே ... |
| புகைபடத்திற்கு கவிதை தாருங்கள்...! Posted: 25 Dec 2014 07:16 AM PST ]b]ஈகரையின் கவிஞர்களே... - கீழ்காணும் புகைப்படத்திற்கு கவிதை தாருங்கள்: - [/b] - ![]() |
| சுனாமி: கடலோர கிராமங்களில் சில நிமிஷங்களில் எச்சரிக்கை Posted: 25 Dec 2014 06:48 AM PST - சுனாமி தாக்கிய 10 ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழகக் கடலோரப் பகுதிகளை நேரடியாக எச்சரிக்கும் வகையில் 439 சுனாமி எச்சரிக்கை மையங்கள் அடுத்த சில மாதங்களில் செயல்பாட்டுக்கு வர உள்ளன. இதற்கான முதற்கட்ட சோதனை சென்னையையடுத்த சோழிங்க நல்லூரில் நடைபெற்றுள்ளது. இந்த மையங்கள் செயல்பாட்டுக்கு வந்தால், சுனாமி, புயல் உள்ளிட்ட பேரிடர்கள் குறித்து தமிழகத்தில் கடலோரப் பகுதி மக்கள் அனைவரையும் ஒரு சில நிமிஷங்களில் எச்சரிக்கை செய்து பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவிடலாம். மொத்தம் 1,076 கிலோமீட்டர் நீள கடற்கரையைக் ... |
| Posted: 25 Dec 2014 06:46 AM PST 10 வருடங்களுக்கு முன்பு நினைக்க முடியாத அளவு உயிர்களை காவிகொண்ட சுனாமி பேரலையின் சில நினைவுகள் எங்களால் மறக்க முடியாத ஒரு தினம் 2004.12.26 பத்து ஆண்டுகள் முடிந்தாலும் இந்த நாள் எங்கள் மனதில் இருந்து மறக்க முடியாத ஒரு தினம் இந்த தினத்தில் பல்ல |
| Posted: 25 Dec 2014 06:38 AM PST ஒருநாள் முதல்வர் போல ஒருநாள் முஸ்லிமாக வாழ்ந்தால் மட்டுமே அவர்களின் வலியை உணர முடியும்.! - ஒரு மாற்று மத அன்பரின் அருமையான பதிவு! கடந்த ஞாயிறன்று சென்னையிலிருந்து சேலம் நோக்கி காரில் என் குடும்பத்துடன் சென்றுகொண்டிருக்கும்போது உளுந்தூர்பேட்டை அருகே உள்ள டோல்கேட்டில் காத்திருந்தோம்..அப்போது ஒரு அரசு பஸ்ஸிலிருந்து ஒரு இளைஞர் கைப்பையுடன் கீழிறிங்கினார்..உடனே எங்கள் காரை ஒட்டிகொண்டிருந்த டிரைவர் என்னைப் பார்த்து, "சார் அங்க பாருங்க, தீவிரவாதி மாதிரி இருக்கான், இங்க எதற்கு இறங்குகிறான்..எதாவது ... |
| ஆரோக்கிய உடலுக்கு அடிப்படைச் சத்துகள்! Posted: 25 Dec 2014 03:12 AM PST உடலின் வளர்ச்சியிலும், வளர்சிதை மாற்றங்களிலும் முக்கியப் பங்கு வகிக்கும் புரதம், கொழுப்பு, வைட்டமின் போன்ற ஊட்டச் சத்துக்களை, நாம் உண்ணும் உணவின் மூலமே பெற முடியும். ஆனால், சரியான உணவுப்பழக்கமின்மைதான் பிரச்னை. இந்த ஊட்டச் சத்துக் குறைபாட்டைப் போக்க, வைட்டமின், தாது உப்பு, சத்து மாத்திரைகள், புரோட்டீன் பவுடர் எடுத்துக்கொள்கிறோம். ஆனால், உண்மையில் நமக்கு எந்தச் சத்து குறைவாக இருக்கிறது, அதற்கு என்ன தேவை என்பது பற்றிய விழிப்பு உணர்வு இல்லை. உடல் உழைப்பு, ஆரோக்கியத்துக்கு ஏற்ப எதைத் தேர்ந்தெடுப்பது, ... |
| தொடத் தொடத் தொல்காப்பியம்(332) Posted: 25 Dec 2014 02:55 AM PST தொடத் தொடத் தொல்காப்பியம் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி சென்னை-33 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில், " எழுத்தெனப் படுப அகரமுதல் னகர இறுவாய் முப்பஃது என்ப " எனக் காண்கிறோம். இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன. 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ... |
| Posted: 24 Dec 2014 10:47 PM PST அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி, பாதிநாள் குறைவாள், பாதிநாள் வளர்வாள் அது என்ன? |
| Posted: 24 Dec 2014 10:40 PM PST ஆக்கபூர்வமான , அருமையான, அபூர்வமான செய்தி என்பதால் தனி திரியாக போட்டேன் |
| Posted: 24 Dec 2014 10:36 PM PST பழைய ரூபாய் நோட்டு மாற்றம்: அடுத்த ஆண்டு ஜூன் வரை காலக்கெடு நீட்டிப்பு! 2005ஆம் ஆண்டுக்கு முன் அச்சடிக்கப்பட்ட 100, 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ள அடுத்த ஆண்டு ஜூன் வரை காலக்கெடு நீட்டித்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 2005ஆம் ஆண்டிற்கு முந்தைய 100, 500, 1000 ரூபாய் நோட்டுக்களை வரும் ஜனவரி 1ஆம் தேதிக்குள் வங்கிகளில் கொடுத்து மாற்றி கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. அதன் பிறகு அந்த நோட்டுக்கள் செல்லாது என்றும் அறிவித்திருந்தது. தற்போது அதற்கான காலக்கெடுவை ... |
| பாரத ரத்னா விருது பெறும் வாஜ்பாய், மாளவியா வாழ்க்கை குறிப்பு Posted: 24 Dec 2014 10:28 PM PST வாஜ்பாய் மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் நகரில் 1926-ம் ஆண்டு டிசம்பர் 25-ந்தேதி (கிறிஸ்துமஸ் நாளில்) பிறந்தார். அவருடைய தந்தையின் பெயர் பண்டிட் கிருஷ்ணபிகாரி வாஜ்பாய். அவர் பள்ளி ஆசிரியர். குவாலியரில் தொடக்கக்கல்வி பயின்ற வாஜ்பாய் பின்னர், விக்டோரியா கல்லூரியில் சேர்ந்து பி.ஏ. பட்டம் பெற்றார். பின்னர், முதுகலைப்படிப்பிற்காக கான்பூரில் உள்ள பல்கலைக்கழகத்தில் சேர்ந்து அரசியல் விஞ்ஞானத்தில் முதுகலைப்பட்டம் பெற்றார். பின்னர், சட்டக்கல்லூரியில் சேர்ந்தார். பதவியில் இருந்து ஓய்வு பெற்ற அவருடைய ... |
| இதயம் துடிக்கட்டும் பாதுகாப்பாக! Posted: 24 Dec 2014 10:06 PM PST இதயத்தை அதிர்வுகளில் இருந்து காப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை பெரிகார்டியம் என்ற சவ்வு செய்கிறது. அறுவை சிகிச்சையின்போது இதைக் கடந்துதான் இதயத் தசையை அடைய வேண்டியுள்ளது. எனவே, அறுவைசிகிச்சைக்குப் பிறகு செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட பெரிகார்டியம் பட்டை வைக்கப்படும். ஆனால், இயற்கையான சவ்வுபோல இதன் செயல்பாடு இருக்காது. இதற்கு மாற்றாக விலங்குகளிடமிருந்து பெறப்படும் உயிர்செயற்கை பெரிகார்டியத்தைப் (Tissue Engineered Bovine pericardium) பொருத்துகிறார்கள். இவை, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதிசெய்யப்படுகின்றன. ... |
| Posted: 24 Dec 2014 09:41 PM PST கேம்ஸ் இல்லாத செல்போன், ஸ்வீட் இல்லாத விருந்து மாதிரி' எனப் புதுமொழி சொல்லும் அளவுக்கு, எல்லோரின் போனிலும் அதிரடி விளையாட்டுகள் இடம்பிடிச்சிருக்கு. பரவலாகத் தெரிந்த ஆங்ரிபேர்டு, டெம்பிள் ரன், கேண்ட்டி கிரஷ் தவிர, சுவாரஸ்யமான விளையாட்டுகள் ஸ்மார்ட் போன்களில் வலம்வருகின்றன. பலர் சேர்ந்து விளையாடும் மல்ட்டி பிளேயர் கேம்ஸ் முதல் தனி நபர் கேம்ஸ் வரை உங்களுக்காக... ரெயில் ரஷ் (Rail Rush) : வேக விரும்பிகளுக்கான சவால் விளையாட்டு. நமக்கான பெட்டியில் ஏறிக்கொண்டு, தடைகளைத் தாண்டி தண்டவாளத்தில் ... |
| Posted: 24 Dec 2014 07:34 PM PST கூடை நிறைய கூலம் சுமந்து கூந்தல் முடியா அழுக்காடை அணிந்து வீதி வேலை செய்யும் பெண்ணின் விழிகள் இரண்டும் கனவுடனே கனத்த உள்ளம் தணிந்திடுமா கனவுகள்தான் பலித்திடுமா? அழுக்காடையாக இருந்தாலும் அழகு மங்கிப் போனாலும் அவள் வாழ்வுக்காக வீதிக்கு வருவதுதான் விதியாமோ வருவோர் போவோர் அவள் நிலைக்காய் வருந்த யாரும் இலையாமே! பெற்று வந்த வரம் இதுவோ பெற்றவர்கள் சதி இதுவோ தன் வயதுப் பெண்கள் நாணி வீதியிலே செல்லல் காண தன் நிலைக்காய் யார் நாணப் பொகிறார் விதியை மாற்றப் போகிறார் விடியும் ஒர் ... |
| தீவிரவாதிக்கு சிறப்பு மரியாதையா? - இந்தியாவின் எதிர்ப்பால் வருத்தம் தெரிவித்தது ஐ.நா. Posted: 24 Dec 2014 04:11 PM PST - ஹபீஸ் சயீத் மும்பை தாக்குதல் வழக்கில் முக்கிய குற்றவாளியான லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தின் தலைவர் ஹபீஸ் சயீத்தை 'சாஹிப்' என மரியாதையுடன் ஐ.நா. சபை குறிப்பிட்டதற்கு இந்தியா எதிர்ப்புத் தெரிவித்தது. இதையடுத்து அதற்காக வருத்தம் தெரிவித்த ஐ.நா., 'சாஹிப்' என தீவிரவாதியை அழைத்ததை திரும்பப் பெற்றுள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் கேரி கிலான் கடந்த 17-ம் தேதி வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றில், தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கமான லஷ்கர்-இ-தொய்பா குறித்தும், அதன் தலைவரான ஹபீஸ் சயீத் ... |
| தங்க ரதப் பணிகளை பார்வையிட்ட ஜயேந்திரர் Posted: 24 Dec 2014 04:03 PM PST - காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வர் கோயில் தங்க ரதப் பணிகளை காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டார். காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வர் கோயிலுக்கு ஏகாம்பரநாதர் இறைப் பணி அறக்கட்டளை சார்பில், தங்க ரதம் செய்யும் பணி தொடங்கியுள்ளது. இந்த அறக்கட்டளையின் போஷகர்களாக காஞ்சி சங்கர மட பீடாதிபதிகள் ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளும், சங்கர ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளும் உள்ளனர். அறக்கட்டளைத் தலைவரான ஆர்.எஸ்.எம். கிருஷ்ணன் பணியை செய்து வருகிறார். 21 அடி உயரம், ... |
| சோனியின் தி இண்டர்வியூ நாளை வெளியீடு Posted: 24 Dec 2014 03:57 PM PST - சோனி நிறுவனம் தயாரித்த தி இன்டர்வியூ திரைப்படம் நாளை வெளியிடப்படும் என்று அந்நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த சோனி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தபடம் வட கொரியாவின் தற்போதைய அதிபரைப் படுகொலை செய்ய முயற்சி நடைபெறுவதாக சித்திரிக்கப்பட்டுள்ளது. அதன் திரைக் கதையில், வட கொரியாவின் தற்போதைய அதிபரைப் படுகொலை செய்ய முயற்சி நடைபெறுவதாக சித்திரிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், சோனி பிக்சர்ஸ் நிறுவன வலைதளத்தில் மர்ம நபர்கள் சிலர் ஊடுருவி, நிறுவனத்தின் புதிய திரைக் கதைகள், ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

