Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


காந்தியை ஏன் சுட்டுக் கொன்றேன்: கோட்சே எழுதிய புத்தகம் மறுபதிப்பாகிறது

Posted:

புதுடில்லி: மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் விநாயக் கோட்சேவின் சகோதரர் கோபால் கோட்சேயால் எழுதப்பட்ட, 'காந்தியை ஏன் சுட்டு கொன்றேன்?' என்ற புத்தகத்தை மறுபதிப்பு செய்ய உள்ளதாக, டில்லியைச் சேர்ந்த பார்சைட் பதிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இப்புத்தகம், நாதுராம் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் உருவானதாகும்.காந்தியை பற்றிய பல்வேறு புத்தகங்கள் வெளிவந்துள்ள போதிலும், அவற்றிற்கு எதிர்மறையான கருத்துக்களை இப்புத்தகம் கொண்டுள்ளதால், அதை மறுபதிப்பு செய்ய முடிவு செய்துள்ளதாக அந்த பதிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. கோபால் கோட்சே தொகுத்து ...

மிரட்டலுக்கு அஞ்சாத சோனி: 'இன்டர்வியூ' இன்று ரிலீஸ்

Posted:

வாஷிங்டன்: வடகொரியாவின் மிரட்டலுக்கு அஞ்சாத சோனி, கிறிஸ்துமஸ் தினமான இன்று, அமெரிக்க திரையரங்குகளில், சர்சைக்குரிய, 'இன்டர்வியூ' திரைப்படத்தை வெளியிடுவதாக அறிவித்துள்ளது.இதுகுறித்து, சோனி பிக்சர்ஸ் தலைமை செயல் அதிகாரி மைக்கேல் லின்டன் வெளியிட்டுள்ள அறிக்கை: பேச்சுரிமையை நசுக்க முயன்றோருக்கு எதிரான முதல் முயற்சியாக, இப்படத்தை வெளியிட உள்ளோம். பொதுமக்களுக்காக இப்படத்தை திரையிடுவதில் பெருமை கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.சோனியின் முடிவை அமெரிக்க அதிபர் ஒபாமா வரவேற்றுள்ளார். ''பேச்சுரிமைக்கும், படைப்பாளிகளின் கருத்து ...

கலெக்டர்கள் மாநாடு நடத்த முதல்வர் தயக்கம்: வளர்ச்சி பணிகள் முடங்கும் அபாயம்

Posted:

ஜெயலலிதா வழியில் செயல்படுவதாக கூறும், முதல்வர் பன்னீர்செல்வம், கலெக்டர்கள் மற்றும் போலீஸ் எஸ்.பி.,க்கள் மாநாட்டை நடத்தாமல் இருப்பது, அதிகாரிகளிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால், வளர்ச்சி பணிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.தமிழக முதல்வராக இருப்போர், ஆண்டுதோறும், டிசம்பரில், கலெக்டர்கள் மற்றும் போலீஸ் எஸ்.பி.,க்கள் மாநாட்டை நடத்துவது வழக்கம். இம்மாநாடு, மூன்று நாட்கள் நடைபெறும். முதல் நாள் கலெக்டர்களுடன், இரண்டாவது நாள் போலீஸ் எஸ்.பி.,க்களுடன், முதல்வர் கலந்துரையாடுவார். அப்போது, கலெக்டர் மற்றும் எஸ்.பி.,க்கள் தாங்கள் பணிபுரியும் ...

மூன்று மாதங்களாக ஜெ., முடக்கம்: அ.தி.மு.க., தொண்டர்கள் சோர்வு

Posted:

எம்.ஜி.ஆர்., நினைவு தின நிகழ்ச்சியில், ஜெயலலிதா பங்கேற்காதது, அ.தி.மு.க., தொண்டர்களிடம், ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.தமிழகத்தில், ஆளுங்கட்சியாக உள்ள, அ.தி.மு.க.,வின் பொதுச் செயலர் ஜெயலலிதாவிற்கு, கடந்த செப்., 27ம் தேதி, சொத்து குவிப்பு வழக்கில், கர்நாடக சிறப்பு நீதிமன்றம், நான்கு ஆண்டுகள், சிறை தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. அதைத் தொடர்ந்து, ஜெயலலிதா தன் முதல்வர் பதவி மற்றும் எம்.எல்.ஏ., பதவியை இழந்தார். இதையறிந்த அ.தி.மு.க.,வினர், செய்வதறியாது திகைத்தனர். அவர் வழக்கில் இருந்து, விடுதலையாக வேண்டும் என, கோவில்களில் சிறப்பு வழிபாடு ...

சுகாதார திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறைப்பு: ரூ.6,000 கோடி 'கட்:' 'எய்ட்ஸ்' திட்டத்திலும் கைவைப்பு

Posted:

புதுடில்லி: சுகாதாரம், நோய் தடுப்பு போன்றவற்றிற்காக, நடப்பு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டிருந்த தொகையில், 20 சதவீதத்தை முடக்கியுள்ள மத்திய அரசு, 6,000 கோடி ரூபாயை மிச்சப்படுத்த திட்டமிட்டு உள்ளது. எய்ட்ஸ் நோய் சிகிச்சை, ஆராய்ச்சிக்கான நிதியிலும், 1,300 கோடி ரூபாய் குறைக்கப்பட்டு உள்ளதால், நாட்டில் நோய் பரவுதல் அதிகரிக்கும்; ஏழை மக்களுக்கு மருத்துவ சேவைகள் கிடைப்பதில் பாதிப்பு ஏற்படும் என, அஞ்சப்படுகிறது.வளர்ந்த நாடுகளில், சுகாதாரத்திற்கு அரசு அதிக அளவில் செலவு செய்வதால் தான், அந்நாட்டு மக்களின் ஆரோக்கியம் பேணப்படுகிறது. இது மறைமுகமாக, நாட்டின் மொத்த ...

படுதோல்விக்கு காரணம் என்ன? அறிக்கை கேட்கிறார் ராகுல்

Posted:

புதுடில்லி: டில்லியில் நேற்று, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர்களை சந்தித்து, கட்சியை பலப்படுத்துவது எப்படி... என்பது குறித்து, கட்சியின் அனைத்து மட்டத்தினரையும் சந்தித்து, இரண்டு மாதங்களுக்குள் அறிக்கை அளிக்குமாறு, அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் கேட்டுக் கொண்டுள்ளார். லோக்சபா தேர்தலில் படுதோல்வி; அதையடுத்து நடைபெற்ற, அரியானா, மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தல்களில், ஆட்சியை இழந்தது; நேற்று முன்தினம் ஓட்டுகள் எண்ணப் பட்ட, ஜார்க்கண்ட் மாநிலத்தில் படுதோல்வி; ஜம்மு - காஷ்மீரில் மிகக் குறைந்த இடங்களில் வெற்றி என, காங்கிரஸ் தொடர்ந்து பலத்த அடி ...

வாஜ்பாய், மதன்மோகன் மாளவியா பாரத ரத்னா: அதிகாரபூர்வமாக அறிவித்தது மத்திய அரசு

Posted:

புதுடில்லி: நாட்டின் உயரிய விருதான, 'பாரத ரத்னா'வுக்கு, முன்னாள் பிரதமர் வாஜ்பாய், சுதந்திர போராட்ட வீரர் மதன்மோகன் மாளவியா ஆகிய இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விவரத்தை, மத்திய அரசு, நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது. வாஜ்பாய்க்கு இந்த விருது வழங்கப்படும் என, கடந்த சில மாதங்களாகவே நிலவிய யூகச் செய்திகள் நேற்று உறுதியாயின.இன்று, வாஜ்பாயின், 90வது பிறந்த நாள்; மதன்மோகன் மாளவியாவின், 153வது பிறந்த நாள். இந்த நாளில் அவர்களை கவுரவிக்கும் வகையில், விருதுக்கு அவர்கள் இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ...

'ஆசிட்' வீசினால் இனி தூக்கு: சட்ட திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முடிவு

Posted:

புதுடில்லி: 'ஆசிட்' வீச்சு போன்ற குற்றங்களை, கொடூரமான குற்றமாக கருதும் வகையில், சட்டத்தில் திருத்தம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, ஆசிட் வீசுவோருக்கு அதிகபட்சமாக தூக்கு தண்டனை வழங்கப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.சமீபகாலமாக ஆசிட் வீச்சு சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அதிலும், பெண்கள் மீது, ஆசிட் வீசும் சம்பவங்கள் அதிகம் நடக்கின்றன. சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி, குற்றவாளிகள் வழக்குகளில் இருந்து எளிதில் தப்பி விடுவதாக புகார் எழுந்து உள்ளது. இதையடுத்து, இந்த விவகாரத்தை மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான ராஜ்நாத் சிங் கையில் ...

கத்தார் நாட்டில் தொடர் கதையாகும் வெளிநாட்டு பணியாளர்களின் இறப்பு

Posted:

லண்டன்: வரும், 2022ம் ஆண்டில், உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தார் நாட்டில் நடைபெற உள்ளது. இதற்காக, பல நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பணியாளர்கள் கட்டுமான பணிகளில் ஈடுபட்டு உள்ளனர். இவர்களில் பலர், அவ்வப்போது உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மரணமடைவது தொடர் கதையாகி வருகிறது. குறிப்பாக, நேபாளத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தான் அதிகளவில் கட்டுமான பணிகளில் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளதாக, கார்டியன் நாளிதழ் சுட்டிகாட்டியுள்ளது.நேபாள தொழிலாளர்கள்: இதன்படி, நடப்பாண்டில், ஜனவரி - நவம்பர் வரையில் மட்டும், நேபாளத்தைச் சேர்ந்த, 157 கட்டுமான ...

இணைய வழி குற்றங்களை சமாளிக்க நிபுணர் குழு: உள்துறை அமைச்சகம் அதிரடி முடிவு

Posted:

கம்ப்யூட்டர் இணையதள உலகத்தில், சட்டவிரோதமான காரியங்களில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை, அதிகரித்துக் கொண்டே போவதாக, பல்வேறு தரப்பிலிருந்தும் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்த பிரச்னை குறித்து, தற்போது நிறைவடைந்த குளிர்கால கூட்டத்தொடரில், பல எம்.பி.,க்களும், பேசினர்.பெங்களூருவில் ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய இன்ஜினியரை, போலீசார் கைது செய்த விவகாரம் தொடர்பாக, லோக்சபாவில், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியபோது, "இணையதளம் உட்பட, சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி, இளைய சமுதாயத்தினரை குறிவைத்து, பயங்கரவாத நடவடிக்கைகளில், ஈடுபடச் செய்யும் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™