Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


ஆண்டாளும் அழகர்கோயிலும்!

Posted: 24 Dec 2014 03:31 PM PST

மதுரையில் இருந்து சுமார் 21 கி.மீ. தொலைவில் உள்ளது அழகர்மலை. இங்கே, மலையடிவாரத்தில் அழகுறக் கோயில் கொண்டிருக்கிறார் கள்ளழகர் பெருமாள். இது, 93வது திவ்விய தேசம். திருமாலிருஞ்சோலை என்று போற்றப்படும் இந்தத் தலத்துக்கும் ஸ்ரீ ஆண்டாளுக்கும் தொடர்பு உண்டு. இங்கே அருளும் உத்ஸவர்,ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள். இவருக்குஸ்ரீ சுந்தரபாஹூ என்றும் திருப்பெயர் உண்டு. பெயருக்கேற்ப கொள்ளைஅழகு இவர். மார்பில் கருந்துளசியும், ஒரு காதில் குழல் அணியும், கருடக் கொடியும், கலப்பையும், சிலம்பாறு போன்று வளைந்து திகழும் ...

சபரிமலையில் சிறப்பு அபிஷேகம்! ஐயன் ஐயப்பனும் மாளிகைபுரத்தாளும்!

Posted: 24 Dec 2014 03:29 PM PST

வாழ்க்கையில் ஒரு நல்லது நடந்தால் போதும். அதையடுத்து பல நல்லவைகள் வரிசைகட்டி வந்து, நம்மை வாழ்வாங்கு வாழச் செய்யும். இது சக்திவிகடன் நடத்துகிற ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் நிரூபணமாகிக்கொண்டே வருகிறது. வாசகர்களின் நலனுக்காகவும் உலக நன்மைக்காகவும் சக்திவிகடன் ஒவ்வொரு தருணத்திலும் ஒவ்வொரு விதமான பூஜை வழிபாட்டு வைபவங்களை நடத்தி வருவதை வாசகர்களாகிய நீங்கள் அறிவீர்கள். அந்த வரிசையில், கடவுளின் தேசம் என்று சொல்லப்படும் கேரளத்தில், சபரி மலை ஸ்ரீஐயப்ப ஸ்வாமிக்கு, கடந்த சித்திரைப் பிறப்பையொட்டி, சிறப்பு விபூதி ...

தலைவர் அவர்தான்.. கட்சி எங்களோடது!

Posted: 24 Dec 2014 03:26 PM PST

''ரஜினி அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா என்ற கேள்வியை எத்தனை நாளைக்குக் கேட்டுக்கிட்டு இருக்கிறது. அவருடைய முடிவு எதுவா இருந்தாலும் அது நல்லாதாவே இருக்கும். ஆனா, ரசிகர்களான நாங்க மக்களுக்கு நல்லது பண்ணணும்னு முடிவெடுத்தாச்சு. ரஜினியின் படத்தையோ, பெயரையோ பயன்படுத்தக் கூடாதுனு தலைவர் கோர்ட்டுல கேஸ் போட்டிருக்கிறதால, நாங்க அவருடைய பெயரையும் படத்தையும் பயன்படுத்தாம கட்சியைத் துவக்கியிருக்கோம். இது எங்கள் தலைவர் ரஜினிகாந்த் மீதுள்ள பாசத்தினால் அவருடைய ரசிகர்களுக்கு ஏதாவது செய்யணும்னு ஆரம்பிக்கப்பட்டுள்ள ...

இதுதாங்க போலீஸ்!

Posted: 24 Dec 2014 11:03 AM PST

நகரங்களில் உள்ள போலீஸ் ஸ்டேஷனின் 'மாமூல் வாழ்க்கை' ஜெகஜோதியாக இருக்கும். ஆனால் கிராமத்து போலீஸ் ஸ்டேஷன்களின் வரவுசெலவுக் கணக்குகள் பற்றிய ஸ்கேனிங்தான் இது. ஜமுக்காளம், ஆலமரம், சொம்பு இவை எதுவும் இல்லாத பஞ்சாயத்துக்கூடம் மாதிரிதான் கிராமத்து போலீஸ் ஸ்டேஷன்கள். மூணு வருடங்களுக்கு மேல் ஒரு காவலர் அதே ஸ்டேஷனில் இருக்கக் கூடாதுங்கிறது விதி. ஆனா ஃபெவிக்கால் போட்டு ஒட்டியது மாதிரி ஓர் ஏட்டய்யா அங்கேயே இருப்பார். மாற்றலாகி வரும் அதிகாரிகளுக்கு அவர்தான் ஏரியா மக்களின் ப்ரொஃபைலை விலாவாரியாக விளக்குவார். ...

ரஜினியை விமர்சித்தால் தடையா?”

Posted: 24 Dec 2014 10:50 AM PST

ஃபேஸ்புக்கில் சினிமா, அரசியல், சமூகம் குறித்த விவாதங்களைக் கவனித்து வருபவர்களுக்குப் பரிச்சயமான பெயர் தமிழ் ஸ்டுடியோ அருண். சென்னையில் மாற்று சினிமாவுக்காக தீவிரமாக இயங்கிக்கொண்டிருக்கும் அமைப்பு 'தமிழ் ஸ்டுடியோ'. லண்டனின் திரைப்பட இயக்கம் குறித்த படிப்பில் தங்கம் வென்றவர், இதன் ஒருங்கிணைப்பாளர் அருண். இயற்கை விவசாயத்திலும் அக்கறைகொண்ட இவர் 'விதை இயற்கை அங்காடி'யையும் நடத்திவருகிறார். 'மாற்று சினிமாதான் தமிழர்களுக்கு வேண்டும்' என்று நினைக்கும் அருண், சிவாஜி தொடங்கி இளையராஜா வரை விமர்சிக்காத ஆளுமைகளே ...

யூடியூப் மூலம்..படம் பார்த்து படம் காட்டு!

Posted: 24 Dec 2014 10:41 AM PST

உலகமே இப்போ யூடியூப் பார்க்க ஆரம்பித்து விட்டது. 'ரொம்ப பேசுனா யூடியூப்ல போட்டுடுவேன்' என 'போலீஸைக் கூப்பிடுவேன்' ரேஞ்சுக்கு மிரட்ட ஆரம்பித்துவிட்டார்கள், மொபைலில் வீடியோ ஆப்ஷனும் நெட் கனெக்‌ஷனும் வைத்துள்ள இளசுகள். யூடியூபை வைத்து பணம் சம்பாதிக்கவும் தங்களுக்கென அடையாளத்தையும் உருவாக்கிக்கொள்ள முடியும் என நிரூபித்து வருகிறார்கள் பலர். கடந்த 2011லிருந்து தமிழ்நாட்டிலும் யூடியூப் பார்ப்பவர்கள் மற்றும் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது என்பதனால்தான். இதன் மூலம் நீங்கள் வருமானம் ...

பெண்களே...அழகு உங்கள் கையில்....!

Posted: 24 Dec 2014 10:18 AM PST

சருமம், முடியின் அடர்த்தி, வயது இவற்றையே அழகின் அளவுகோல்களாகப் பலரும் நினைக்கின்றனர். ஏதேதோ க்ரீம்களைப் பூசுவதாலோ என்னென்னவோ ஷாம்பூகளைப் பயன்படுத்துவதாலோ... இளமையைக் கொண்டுவந்துவிட முடியாது. இவை வெளிப்புறத் தோற்றத்தை அழகாக்கிக்கொள்வதற்கான ஒரு தற்காலிகத் தீர்வுதான். ''நம் உடலில் அழகைக் குறைக்கும் காரணிகள் நிறையவே இருக்கின்றன' என்கிறார் சென்னையைச் சேர்ந்த தோல் நோய் சிகிச்சை நிபுணர் பிரியா. பரம்பரைத்தன்மை சருமத்தின் அழகை நிர்ணயிக்கும் முதல் காரணி, பரம்பரைவாகு. சிலருக்கு வயதானாலும், தோலில் ...

புற்றுநோய் முதல் தொற்றுநோய் வரை... வரும்முன் காக்கலாம் வராமலே தவிர்க்கலாம்...

Posted: 24 Dec 2014 09:58 AM PST

'கடவுளே... இந்த வயசுல எனக்கு மார்பகப் புற்றுநோய் வரணுமா?'' என்று அடையாறைச் சேர்ந்த 86 வயது சாரதாப் பாட்டியின் வேதனை, மனதைப் பிசைகிறது. 14 வயதுகூட நிரம்பாத ஷாலினிக்கு, லேசாகக் காய்ச்சல். ஒரு வாரம் விட்டுவிட்டு வர, எல்லாப் பரிசோதனைகளும் எடுத்துப் பார்க்கப்பட்டன. கடைசியில், குழந்தைக்கு, 'ரத்தப் புற்றுநோய்' என்று பரிசோதனைகள் உறுதிப்படுத்த... உற்சாகமாகத் துள்ளித்திரிந்த சிறுமி, இன்று மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருக்கிறார். விஞ்ஞானம் வளர்ந்துகொண்டே இருந்தாலும் புற்றுநோய் ஏன் வருகிறது? ...

ஈராக்: பயங்கரவாதிகளுக்கு பயந்து யாஸிடி பெண்கள் கூட்டாக தற்கொலை

Posted: 24 Dec 2014 09:07 AM PST

பெய்ரூட்: ஈராக்கில், ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள் வசம் சிக்கிய, யாஸிடி சிறுபான்மையின பெண்களை, அந்த பயங்கரவாதிகள், செக்ஸ் அடிமைகளாக பயன்படுத்திய கொடுமையும், அதற்கு அஞ்சி, ஏராளமான சிறுமியரும், பெண்களும் தற்கொலை செய்து கொண்ட தகவலும் தெரிய வந்துள்ளது. மேற்காசிய நாடுகளான சிரியா மற்றும் ஈராக்கின் பல பகுதிகளை கைப்பற்றியுள்ள, ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள், கிறிஸ்தவர்கள், ஷியா பிரிவு முஸ்லிம்கள், யாஸிடி இனத்தவர் போன்ற சிறுபான்மையினத்தவருக்கு சொல்லொணா துயரங்களை கொடுத்து வருகின்றனர். குறிப்பாக, ...

மங்கை கொண்டான், மாதவி கொண்டான்..?

Posted: 24 Dec 2014 08:45 AM PST

-- - கங்கை கொண்டான், கடாரங்கொண்டான் படிச்சிருக்கோம், அது என்ன மங்கை கொண்டான், மாதவி கொண்டான்..? - உஷ்…அது தலைவரோட சின்ன வீட்டோட பேருங்க..! - >அ.ஜெயராஜ் - ————————————————- - மன்னர் மாறு வேடத்தில் இரவில் நகர்வலம் வரும்போது நமது அமைச்சர் மன்னர் வேடத்தில் அவசரமாய் எங்கு செல்கிறார்..? - வேறெங்கே…அந்தப்புரத்திற்குத்தான்..! - >ராஜேஷ் - —————————————– - தண்ணியில் இருந்து ஏன் மின்சாரம் எடுக்கறாங்க? - அப்படி எடுக்கலேன்னா குளிக்கும் போது ஷாக் அடிச்சுடும் அதனால்தான்..! - >வி.பவானி - ——————————————— - வக்கீல்: ...

வாத்தியாரை விட கோழிதான் GREAT ,,,

Posted: 24 Dec 2014 08:43 AM PST

சனிப்பெயர்ச்சி சாதகமாக இல்லை என ஜோதிடர் கூறியதால் பெண் தீக்குளித்து தற்கொலை

Posted: 24 Dec 2014 08:42 AM PST

புதுவை சண்முகாபுரம் வடக்கு பாரதி நகரை சேர்ந்த தங்கராஜ் என்பவரது மகள் சங்கீதா(23). 4 ஆண்டுகளுக்கு முன்பே திருமணம் செய்த இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உண்டு. சங்கீதாவுக்கும், அவரது கணவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டுவந்ததாம். இந்த நிலையில் சனிப்பெயர்ச்சி குறித்து ஜோதிடர் ஒருவரிடம் பலன் கேட்டாராம். அப்போது ஜோதிடர் இந்த சனிப்பெயர்ச்சி உனக்கு சாதகமாக இல்லை. எனவே கணவன்– மனைவிக்கிடையே தகராறு ஏற்படும் என்று கூறியதாக தெரிகிறது. இதனால் மன வருத்தம் அடைந்த ...

பொரணிப் பேச்சு - கவிதை

Posted: 24 Dec 2014 08:35 AM PST


--

-
நன்றி: ஆனந்த விகடன்

தெருவைத் தொலைத்த தெரு..! - கவிதை

Posted: 24 Dec 2014 08:34 AM PST


--


-
--அசோக் பழனியப்பன்
நன்றி: ஆனந்த விகடன்

குறை தீர்த்தாயோ கணேசா..! - கவிதை

Posted: 24 Dec 2014 08:28 AM PST


-

-
நன்றி: ஆனந்த விகடன்

முதல் இடம் நோக்கி முன்னேறுவது பெருமைதான். ஆனால், எதில்?

Posted: 24 Dec 2014 08:27 AM PST

முதல் இடம் நோக்கி முன்னேறுவது பெருமைதான். ஆனால், எதில்? விதிமுறைகளைப் பின்பற்றாத பொறியியல் கல்லூரிகள், நாட்டிலேயே அதிகம் இருப்பது தமிழ்நாட்டில்தான். மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, 2013-14ம் கல்வி ஆண்டில் இந்திய அளவில் விதிமுறைகளைப் பின்பற்றாத பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 233. இதில் 45 கல்லூரிகள், தமிழ்நாட்டைச் சேர்ந்தவை. ஒவ்வோர் ஆண்டும் விதிகளை மீறுவதில் தமிழகக் கல்லூரிகளுக்கே முதல் இடம். உரிய கட்டட வசதி இல்லாதது, அதிகக் கட்டணம் வசூலிப்பது, லட்சக்கணக்கில் ...

நகம் வெட்ட கூலிப்படை வெச்சிருக்காரே..!

Posted: 24 Dec 2014 08:14 AM PST

படம் பாருங்கள்..... ரசியுங்கள் ... சிரியுங்கள்..... இது what 's up கலக்கல்:)

Posted: 24 Dec 2014 07:41 AM PST



படம்பார்த்து சிரியுங்கள் புன்னகை

பட்டாம்பூச்சி

Posted: 24 Dec 2014 06:56 AM PST

எல்லாருக்கும் பிடிக்கும் நம் காதல் - வா பட்டாம் பூச்சியின் சிறகாவோம் மனம் சோர்ந்தால் பார் பூக்கள் மட்டுமா முள்ளிலும் சிறகசைக்கும் பட்டாம்பூச்சி ஏதேதோ எழுதினேன் பொருந்தி வந்ததென்னவோ பட்டாம்பூச்சி காதலுக்கு பட்டாம்பூச்சியே சொல் சிறகசைப்பில் உதிரும் வண்ணங்களா பூக்கள் ஒவ்வொரு தோல்வியிலும் சிறகசைத்து பறக்கும் என் கனவு பட்டாம்பூச்சி வரைந்திட முடியவில்லை எத்தனை வண்ணங்கள் குழைத்தும் மனம் கவர் பட்டாம்பூச்சி நல்லா படிக்கிறவங்க டீச்சர் வீட்டுக்கு வரலாம் இருந்தும் பட்டாம்பூச்சியின் ...

தமிழ்நாட்டில் தாவரங்கள் (84)

Posted: 24 Dec 2014 06:47 AM PST

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் -  சென்னை -113

என்னவள்!

Posted: 24 Dec 2014 06:46 AM PST

மயிலே குயிலே என் அரியணைக் கிளியே உன் வதனம் வாடியே இருப்பதேனோ சொல்லடி என் மனதுக்கினியவளே கண்ணே மணியே என்றழைக்கையிலே கனிவாய் உனைப் பார்க்கையிலே குறையேதும் கண்டாயடி என் மாமன் மகளே காஞ்சி புறச் சேலையாலே கனகாம்பரப் பூவாலே உனை அலங்கரித்துப் பார்க்கையிலே என்ன குறை கண்டாயடி உன் முகம்வாடிப் போவதற்கு உன் வாட்டமுகம் பிடிக்கலையே கடுஞ் சொல்லும் தாங்கலையே மதி கொஞ்சும் முகத்தினிலே கனவில் ஏதும் சொன்னேனடி என்னகத்தைக் கவர்ந்தவளே பிரிந்திருக்க முடியலையே பேசாமல் தாங்கலையே உன் அழகுச் ...

நகைச்சுவை

Posted: 24 Dec 2014 06:32 AM PST

நகைச்சுவை..... ஒரு ஊரில் கணவர்கள் விற்கப்படும் கடை திறக்கப்பட்டது... அந்த கடை வாசலில் கடையோட விதிமுறை போர்டு வச்சுருந்தாங்க... அது என்னன்னா...! 1. கடைக்கு ஒரு தடவை தான் வரலாம். 2. கடையில் மொத்தம் 6 தளங்கள் இருக்குது... ஒவ்வொரு தளத்திலயும் இருக்கின்ற ஆண்களோட தகுதிகள் எழுத பட்டு இருக்கும்... ஒரு தளத்துல இருந்து மேல போயிட்டா மறுபடி கீழ வர முடியாது... அப்படியே வெளியே தான் போக முடியும். இதெல்லாம் படிச்சுட்டு ஒரு பெண்மணி கணவர் வாங்க கடைக்கு போறா.... "ப‌ச்... கணவர் வாங்குறது ...

மருந்துகள் தராத ஊட்டம் சில புலால் விருந்து தரும். காடை இறைச்சி எனும் QUAIL FLESH ....

Posted: 24 Dec 2014 06:27 AM PST

மாமன் வாரான்னு கோழியடிச்சு குழம்புவைக்கப்போறீங்களாக்கும்' - இந்த விசாரிப்பு, சொல்லாமல் சொல்லும் செய்திகள் ஏராளம். இன்றைக்கும் நாட்டுக்கோழிக் குழம்பும், வெள்ளாட்டு நெஞ்செலும்பு சூப்பும் சமைத்து விருந்து அளிப்பதுதான், விருந்தோம்பலின் உச்சம். ஆனால், சமீப நாட்களாக 'ஓவர் கொலஸ்ட்ரால்,' 'பக்கத்து மாநிலத்துல பறவைக் காய்ச்சல்' என்றெல்லாம் காரணங்கள் சொல்லி, 'சிக்கன் வேண்டாம், பொடி தோசை போதும்' என ஊருக்குள் பல புத்தபிக்குகள் உருவாகிவிட்டனர். இதனால் உள்ளூர்க் கோழிகள் எல்லாம் உற்சாகமாக பரோலில் திரிகின்றன. ...

மறக்க முடியாத மாமனிதர் எம்.ஜி.ஆர்.,: இன்று நினைவு தினம் !

Posted: 24 Dec 2014 06:26 AM PST

ஒவ்வொருவரது வாழ்க்கையிலும் எம்.ஜி.ஆர்., என்ற மாமனிதர் ஏதோ ஒரு வகையில் பிரதிபலித்தார். அதனால் தான் மறைந்து இத்தனை ஆண்டுகளாகியும் அவரது புகழ் சிறிதும் மங்கவில்லை. பத்திரிகையாளர்களிடம் நேரடியாக தொடர்பு கொண்டு அன்பு பாராட்டுபவர் அவர். அவரது தேர்தல் சுற்றுப்பயணம் என்றால் உடன் செல்லும் பத்திரிகையாளர் களுக்கு குஷியான அனுபவம் கிடைக்கும். பிரசாரத்தில் எம்.எஸ்.டபிள்யூ 2248 என்ற எண்ணுள்ள வேனை பயன்படுத்துவது எம்.ஜி.ஆர்., வழக்கம். அதைப் பார்த்து பிற கட்சி தலைவர்களும் வேன் பிரசாரத்தை பின்பற்றினர். ...

முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு பாரதரத்னா விருது அறிவிப்பு

Posted: 24 Dec 2014 06:23 AM PST

- முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் கல்வியாளர் மதன் மோகன் மாளவியா ஆகியோருக்கு மத்திய அரசு பாரதரத்னா விருது அறிவித்துள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான வாஜ்பாய் இருமுறை பிரதமராக இருந்தவர். மக்களவைக்கு 9 முறையும், மாநிலங்களவைக்கு 2 முறையும் அவர் தேந்தெடுக்கப்பட்டுள்ளார். - இதே போல் கல்வியாளர் மதன் மோகன் மாளவியாவுக்கும் பாரதரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. - இந்தியாவில் சாரண இயக்கத்தை நிறுவியவர்களில் ஒருவரான மதன் மோகன் மாளவியா காசி பல்கலையின் துணைவேந்தராகவும் ...

யார் சொல்வது நிறைகுடம் தளும்பாது என்று..!

Posted: 24 Dec 2014 05:13 AM PST


-

நீ நடந்து வருதைப் பார்த்த பின்பும்
யார் சொல்வது
நிறைகுடம் தளும்பாது என்று..!

-

-----------------------------
என்.லிங்குசாமி
நன்றி: ஆனந்த விகடன்
புகைப்படம்: இணையம்

நெஞ்சில் உரமும், நேர்மைத்திறமும் இரு கண்கள்: நாளை மூதறிஞர் ராஜாஜி நினைவு நாள்!

Posted: 24 Dec 2014 05:01 AM PST

இருபதாம் நூற்றாண்டில் அரசியலில் ஆட்சிப் பொறுப்பில் இருந்து கொண்டே, இலக்கியத்திற்கும் அருந்தொண்டாற்றிய ஓர் ஆற்றல்சால் ஆளுமை ராஜாஜி (1978-1972). அவர் 'மூதறிஞர்' 'ராஜரிஷி', 'சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார்'. 94 ஆண்டுகள் 17 நாட்கள் இம் மண்ணுலகில் நல்ல வண்ணம் வாழ்ந்து காட்டியவர். விவேகானந்தரின் வாழ்த்து: சென்னை சட்டக் கல்லூரியில் ராஜாஜி பி.எல். படிக்கும் போது, மாணவர் விடுதி ஒன்றில் தங்கினார். அப்போது நடந்த ஓர் அரிய நிகழ்ச்சி: சுவாமி விவேகானந்தர் சென்னைக்கு வந்த போது, ராஜாஜி தங்கி இருந்த ...

அனைவருக்கும் அன்பான கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்

Posted: 24 Dec 2014 04:58 AM PST

டிசம்பர் 25
-------------------

அனைவருக்கும் அன்பான கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்
-

பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Posted: 24 Dec 2014 03:31 AM PST

          தமிழ்த் திரைஉலகை திரும்பிப்  பார்ப்போமா ! அன்பு  நண்ப்ர்களே ! தமிழ்த் திரைப் பட உலகில் நிகழ்ந்த பல சுவையான சம்பவங்கள், நிகழ்ச்சிகள், படிப்பதற்க்கு  ஏற்றவை , இன்ப , துன்பங்கள்,, இவைகளை   சிறிதும்  கற்பனைக்க் கலப்பின்றி,  ஆதாரங்களுடன்  எழுத இந்த இழையை ஆரம்பித்து இருக்கின்றேன் . நான் வழங்கப் போகும்ம் அனைத்தும் : தமிழ்த் திரைப்பட உலகில்  பல்வேறு துறையினர்களின்  திரைப்பட உலகில் மட்டும் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பே ஆகும்  ! இவை எல்லாமே  நான் படித்த பத்திரிகைகள், புத்தகங்கள், ...

செல்போன் மூலம் இயங்கும் ரோபட் பளு தூக்கும் ஊர்தி: கலசலிங்கம் மாணவர்கள் கண்டுபிடிப்பு

Posted: 24 Dec 2014 02:25 AM PST

- விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழக மாணவர்கள் செல்போன் மூலம் இயங்கும் ரோபட் பளு தூக்கும் ஊர்தியை கண்டுபிடித்துள்ளனர். கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையில் படிக்கும் மாணவர்கள் ஆர்.விஜயஷங்கர், ஜி.அபிஷேக் லூயிஸ் ராஜ் ஆகியோர் துறைத் தலைவர் எம்.பள்ளிகொண்ட ராஜசேகரனின் ஆலோசனையின்படி இந்த ரோபோடைக் கண்டுபிடித்துள்ளார்கள். இந்த ஊர்தியை ஆன்ட்ராய்டு போன் மூலம் கட்டுப்படுத்தலாம். இதற்காக ஆன்ட்ராய்டு போனில் ஒரு ஆப்ஸன் உருவாக்கப்பட்டுள்ளது. ...

எப்போதும் போல் கூவிக் கொண்டிருக்கிறது குயில்..!

Posted: 24 Dec 2014 02:12 AM PST

-- - முதலில் தண்ணீர் இல்லை என்றார்கள் இப்போது ஆறே இல்லை என்கிறார்கள் - ---------------------------- - வீட்டில் நிகழ்ந்த மரணம் அறியாமல் எப்போதும் போல் கூவிக் கொண்டிருக்கிறது குயில் - ------------------------------- - தற்கொலை செய்துகொள்ள மனம் இல்லை கிணற்றிலி நிலவைப் பார்த்த பிறகு - -------------------------------- - அடுத்த மழை பார்ப்பதற்கில்லை ஈசல் - ------------------------------- --என்.லிங்குசாமி நன்றி: ஆனந்த விகடன் புகைப்படம்: இணையம்

சிந்தனைத்துளிகள்

Posted: 23 Dec 2014 11:49 PM PST

சிந்தனைத்துளிகள்..... Ø மனிதன் சூழ்நிலைக்காக படைக்கப்படவில்லை. சூழ்நிலைகளே மனிதனுக்காக படைக்கப்பட்டன. Ø ஒரு மரத்தில் உள்ள பழங்களை எண்ணிவிடலாம். ஆனால் ஒரு பழத்தால் உருவாகப்போகும் மரங்களை எண்ண முடியாது. Ø குழந்தையும், குடிகாரனும் உண்மையே பேசுவார்கள். Ø நாணயமாக இருப்பவனிடம் எப்போதும் குழந்தைத்தனம் காணப்படும். Ø தேவையில்லாததை நீ வாங்கினால் விரைவில் உனக்கு தேவையானதை விற்றுவிடுவாய்.. அன்பர்களே , பிழைகள் இருந்தால் தயவு செய்து மன்னிக்கவும் .

2ஜி: கருணாநிதியின் மகள் செல்விக்கு சம்மன்

Posted: 23 Dec 2014 11:44 PM PST

- 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு - வழக்கு -------------- ஜனவரி 5 முதல் 10ஆம் தேதி வரை நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்கவிருப்போரின் பட்டியலை மத்திய அமலாக்கத் துறை தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை அளித்தது. அதில், ஜி. ராஜேந்திரன் (கலைஞர் டிவியின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி), மனோகர் பிரசாத், (ஜெமினி குழும நிறுவனங்களின் இணை மேலாண் இயக்குநர்) ஆகியோர் வரும் ஜனவரி 5-ஆம் தேதியும், கோபால் கிருஷ்ணன் (அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி, சஃபையர் மீடியா அன்ட் இன்ஃபிராஸ்டிரக்சர்ஸ் ...

மறுபதிப்புக்குத் தயாராகும் கோட்ஸேவின் நூல்

Posted: 23 Dec 2014 10:40 PM PST

மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்ஸேவின் வாக்குமூலங்கள் உள்ளிட்டவை அடங்கிய புத்தகம் ஆங்கிலத்தில் மீண்டும் மறுபதிப்பு செய்யப்படவுள்ளது. "நான் ஏன் காந்தியைக் கொன்றேன்?' என்ற தலைப்பிலான இந்த நூல் மராத்தி மொழியில் நாதுராம் கோட்ஸேவின் சகோதரரான கோபால் கோட்ஸேவால் எழுதப்பட்டது. பின்னர் 1970-ஆம் ஆண்டு ஹிந்தியிலும், 1993-ஆம் ஆண்டு ஆங்கிலத்திலும் இந்த நூல் மொழிபெயர்க்கப்பட்டது. கைது செய்யப்பட்ட பின்னர், போலீஸாரிடம் கோட்ஸே அளித்த வாக்குமூலங்கள், வழக்கு விசாரணைகள், முக்கியப் புகைப்படங்கள் ...

இவங்களுக்கு ஞாபக மறதி ஓவரா இருக்கு டாக்டர்..!

Posted: 23 Dec 2014 09:26 PM PST

- - நிதி நிறுவனங்கள்ல கடன் வாங்கி படம் எடுக்கறீங்களே எதுக்கு? - நல்லா ஓடுங்கிற எதிர்பார்ப்பிலும் நம்பிகையிலும்தான்..! - >வி.ரேவதி - -------------------------------------------- - இவங்களுக்கு ஞாபக மறதி ஓவரா இருக்கு டாக்டர்..! - அப்படியென்ன பண்றாங்க? - தன்னோட ஹஸ்பென்ட்னு நினைச்சு பக்கத்துவீட்டுக்காரனான என்மேல அடிக்கடி கை நீட்டிடறாங்க, டாக்டர்..! - வி.ரேவதி - --------------------------------------------- - ஊழலுக்கு எதிரா நம்ம தலைவர் உண்ணாவிரதம் இருக்காரே ஏன்? - பின்ன ...

எதிர் விகிதாசாரம் என்பது என்ன?

Posted: 23 Dec 2014 08:43 PM PST

- எதிர் விகிதாசாரம் என்பது என்ன? - நடிகைக்கு ஆடை அளவு குறையும்போது சம்பளம் அதிகமாவது எதிர்விகிதாசாரம்...! - >மன்மதன் - ---------------------------------------- - தலைவர் ஏன் டாக்டர் பட்டம் வாங்கிய கையோடு மகளிரணித் தலைவி வீட்டுக்குப் போறாரு..? - காய்ச்சல்ல படுத்துட்டிருக்கிற அவங்களுக்கு ட்ரீட்மென்ட் பண்ணத்தான்..! - பர்வின் யூனூஸ் - ------------------------------------------ - புலவர் ரொம்ப டென்ஷனா இருக்காரே..ஏன்? - இவர் பாட்டுப் பாடியதும் மன்னர் பஞ்சப்பாடு பாடினாராம்..! - >எஸ்.சடையப்பன் - ---------------------------------------- - டியர்..நேத்து ...

விஷ்ணு விஷாலுக்கு ஜோடியானார் மியா ஜார்ஜ்

Posted: 23 Dec 2014 08:33 PM PST

- விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக மியா ஜார்ஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 'திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் படம் 'இன்று நேற்று நாளை'. இப்படத்தை புதுமுக இயக்குனர் ரவிக்குமார் இயக்குகிறார். இவர் இயக்குனர் நலன் குமாரசாமியின் அசிஸ்டெண்ட். ஆம்பள படத்துக்கு இசையமைக்கும் அதே 'ஹிப் ஹாப் தமிழா' ஆதி தான் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். ஆதியை முதலில் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்ததே இவர்கள்தானாம். வசந்த் ஒளிப்பதிவு செய்கிறார். கடந்த அக்டோபர் 3ஆம் தேதி இப்படத்திற்கான ...

பாலிவுட் படம் பி.கே. 2 நாளில் 50 கோடி ரூபாய் வசூல் சாதனை

Posted: 23 Dec 2014 08:18 PM PST

- அமீர்கான், அனுஷ்கா சர்மா இணைந்து நடித்திருக்கும் பாலிவுட் திரைப்படமான பி.கே. வெளியான இரண்டு நாளில் 50 கோடி ரூபாய் வசூல் சாதனைப் படைத்துள்ளது. - கடந்த வெள்ளிக் கிழமை உலகம் முழுவதும் இப்படம் வெளியானது. வெளியான முதல் நாளில் 26 கோடி ரூபாயாக இருந்த வசூல்  இரண்டாவது நாளில் 29 கோடி ரூபாயாக அதிகரத்தது. இதற்கு முன் ஹேப்பி நியூ இயர், சிங்கம் ரிட்டன்ஸ், கிக் போன்ற படங்கள் இந்த சாதனையை படைத்தன. - 2014 வருடத்தில் இப்படியொரு சாதனைப்படைத்த 4-வது படம் பிகே. - --தினமணி


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™