Tamil News | Online Tamil News |
- ஐ.எஸ்.ஐ.எஸ்., பிடியில் கல்யாண் இளைஞர்கள்
- மாவோயிஸ்ட்கள் 'மனித வெடிகுண்டு' திட்டம்? உளவுத்துறை எச்சரிக்கை; கேரளா பீதி
- சமூக தொடர்பு வலைதளங்களை கண்காணிக்க உளவுத்துறை முடிவு
- மூத்த குடிமக்களுக்கு எதிரான குற்றங்கள்: 8,973 கிரிமினல் வழக்குகள் பதிவு
- சமூக வலைதள பயன்பாடு: எந்தெந்த அமைச்சகம் 'டாப்?'
- விதியோடு நான் ஆடும் விளையாட்டை பாரு!
- விமான படை பலவீனமாக உள்ளது: பார்லிமென்ட் குழு தகவலால் அதிர்ச்சி
- கர்நாடகாவை விட்டு வெளியேறாதீங்க: முதல்வர் உருக்கம்
- தமிழகத்திலும் விவசாயிகள் தற்கொலை: பிரதமர் அலுவலகத்திற்கு ஐ.பி., உளவு அமைப்பு அறிக்கை
- ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்த தமிழக எம்.பி.,க்கள் அசட்டை: ரயில்வே திட்டங்களை நிறைவேற்றுவதில் ஆர்வம் இல்லை
- சாதனைகளை மக்களிடம் சொல்லுங்க: எம்.பி.,க்களுக்கு பிரதமர் மோடி உத்தரவு
- மாநில கட்சிகளுக்கு அடியா
- பா.ஜ.,வின் வெற்றி பயணம் தொடர்கிறது: ஜார்க்கண்டை கைப்பற்றியது: காஷ்மீரில் இரண்டாவது இடம்
- பயங்கரவாதிகளுக்கு பயந்து யாஸிடி பெண்கள் கூட்டாக தற்கொலை
| ஐ.எஸ்.ஐ.எஸ்., பிடியில் கல்யாண் இளைஞர்கள் Posted: பாக்தாத்:மகாராஷ்டிரா மாநிலம் கல்யாண் நகரில் இருந்து, ஈராக் சென்று, ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகளுடன் இணைந்த நான்கு பேரில், ஒருவர் நாடு திரும்பி விட, மீதமுள்ள மூன்று பேரையும் தப்ப விடாமல், பயங்கரவாதிகள் பிடித்து வைத்துள்ளனர்.ஆரிப் மஜீத், அமான் நயீம் டான்டெல், பாஹத் தவ்வீர் ஷேக் மற்றும் சாஹிம் பரூக் டாங்கி என்ற நான்கு இளைஞர்களும், இந்த ஆண்டின் ஜனவரியில், ஈராக்கின் தலைநகர் பாக்தாத் சென்று, பயங்கரவாதிகளின் பிடியில் உள்ள, மொசூல் நகருக்கு சென்று, ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகளுடன் சேர்ந்தனர். அங்கு சென்ற பின் தான், பயங்கரவாதிகளின் உண்மையான முகத்தை இந்த நான்கு ... |
| மாவோயிஸ்ட்கள் 'மனித வெடிகுண்டு' திட்டம்? உளவுத்துறை எச்சரிக்கை; கேரளா பீதி Posted: பாலக்காடு:கேரள மாநிலத்திலுள்ள போலீஸ் ஸ்டேஷன்களை குறிவைத்து, மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்த, மாவோயிஸ்ட்கள் திட்டமிட்டுள்ளதாக, அம்மாநில உளவுத்துறை எச்சரித்துள்ளது.கேரள மாநிலத்தில்,நேற்று முன்தினம், பாலக்காடு, அட்டப்பாடி, வயநாட்டிலுள்ள வெள்ளிமுண்டை ஆகிய பகுதிகளில் தாக்குதல் நடத்திய மாவோயிஸ்ட்கள், அம்மாநில போலீஸ் ஸ்டேஷன்களில், மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக, உளவுத்துறையினர் எச்சரித்துள்ளனர்.மாநில உளவுத்துறை அறிக்கையில், '2015 மார்ச் மாதத்திற்குள், வனஎல்லையிலுள்ள, 34 காவல் நிலையங்களில், தாக்குதல் நடத்தி, தங்களின் வலிமையை ... |
| சமூக தொடர்பு வலைதளங்களை கண்காணிக்க உளவுத்துறை முடிவு Posted: புதுடில்லி: சமூக வலைதளங்களை பயன்படுத்தி, பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆட்களை சேர்ப்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளதை அடுத்து, பேஸ்புக் மற்றும் டுவிட்டர் போன்ற அமெரிக்காவின் முன்னணி சமூக வலைதளங்களின் வருவாய் மற்றும் அதற்கான ஆதாரங்களை இந்திய உளவு அமைப்புகள் கண்காணிக்க துவங்கியுள்ளன. பெங்களூருவில், பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றிய, மேற்கு வங்கத்தை சேர்ந்த மெஹ்தி என்ற இளைஞன், சமூக வலைதளமான டுவிட்டர் மூலம், ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் செய்தித் தொடர்பாளர் அளவுக்கு செயல்பட்ட தகவல், சமீபத்தில், அவன் கைது செய்யப்பட்ட போது ... |
| மூத்த குடிமக்களுக்கு எதிரான குற்றங்கள்: 8,973 கிரிமினல் வழக்குகள் பதிவு Posted: புதுடில்லி: நடப்பாண்டில், அக்டோபர் வரையிலான காலத்தில், மூத்த குடிமக்களுக்கு எதிராக குற்றம் இழைத்தது தொடர்பாக, நாடு தழுவிய அளவில், 8,973 கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், மோசடி மற்றும் வழிப்பறி தொடர்பான வழக்குகளே மிக அதிகம் என, லோக்சபாவில் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக, மகாராஷ்டிராவில் தான், மூத்த குடிமக்களுக்கு எதிராக அதிகளவில் குற்றச்சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. அம்மாநிலத்தில் மட்டும், இது தொடர்பாக, 2,257 கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து, ஆந்திரா மற்றும் மத்திய பிரதேசத்தில் முறையே, 1,856 மற்றும் 1,205 கிரிமினல் ... |
| சமூக வலைதள பயன்பாடு: எந்தெந்த அமைச்சகம் 'டாப்?' Posted: புதுடில்லி: சமூக வலைதளங்களை பயன்படுத்தி, அதன் மூலம் மக்களின் வரவேற்பை பெறுவதில், மத்திய அமைச்சகங்களில், உள்துறை மற்றும் வெளியுறவு துறை அமைச்சகங்கள் முன்னணியில் உள்ளன. பா.ஜ., அரசு மத்தி யில் பதவியேற்றதில் இருந்து அனைத்து அமைச்சகங்களும், 'டுவிட்டர், பேஸ்புக்' போன்ற சமூக வலை தளங்களில், உடனுக்குடன் தகவல்களை வெளியிடுவதையும், பகிர்ந்து கொள்வதையும் வாடிக்கையாக வைத்துள்ளன. இதில், சில அமைச்சகங்களுக்கு, 'பேஸ்புக், டுவிட்டர்' பயன்படுத்துவோரிடையே அதிக வரவேற்பு கிடைத்து உள்ளது. 'டுவிட்டர்' வலை தளத்தை பொறுத்தவரை, உள்துறை அமைச்சகத்தை, 2.32 லட்சம் பேர், 'பாலோ' ... |
| விதியோடு நான் ஆடும் விளையாட்டை பாரு! Posted: பழம்பெரும் திரைப்பட இயக்குனர் கே.பாலசந்தர், 84, உடல் நலக்குறைவால், நேற்று காலமானார். சில மாதங்களுக்கு முன், அவர் மகன் கைலாசம் இறந்தார். இதனால், பாலசந்தர் மன ரீதியாக பாதிக்கப்பட்டிருந்தார். பத்து நாட்களுக்கு முன், காய்ச்சல், மூச்சுத்திணறலால் சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூச்சுத்திணறல், வயோதிக பிரச்னைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. திடீரென, சிறுநீரக தொற்று பாதிப்பு ஏற்பட்டு, சிக்கலான நிலையை அடைந்தார். டாக்டர்கள் குழு தொடர் சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி, நேற்று இரவு காலமானார். ... |
| விமான படை பலவீனமாக உள்ளது: பார்லிமென்ட் குழு தகவலால் அதிர்ச்சி Posted: புதுடில்லி: விமானப் படையில் உள்ள விமானங்களின் எண்ணிக்கை கணிசமாக குறைக்கப்பட்டுள்ளதால், உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக, பார்லிமென்ட் குழு கவலை தெரிவித்துள்ளது.பார்லிமென்ட் குழு சார்பில், ராணுவ விவகாரம் தொடர்பான அறிக்கை, சமீபத்தில் லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:* நம் விமானப் படையில், 45 பிரிவுகள் (ஸ்குவார்டன்) இருந்தன. இந்த ஒவ்வொரு பிரிவிலும், தலா, 18 போர் விமானங்கள் இருந்தன.* தற்போது, விமானங்களின் எண்ணிக்கை கணிசமாக குறைக்கப்பட்டு, 25 பிரிவுகள் மட்டுமே உள்ளன.* சீனா மற்றும் பாகிஸ்தான் என, ... |
| கர்நாடகாவை விட்டு வெளியேறாதீங்க: முதல்வர் உருக்கம் Posted: பெங்களூரு: "கர்நாடகத்தில், தொழில் துறை வளர்ச்சிக்கும், புதிதாக தொழில் துவங்கவும், தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தர, அரசு தயாராக உள்ளது. எனவே, கர்நாடகத்தை விட்டு, யாரும் வெளியேற வேண்டாம்,'' என, கர்நாடக தொழிலதிபர்கள் மத்தியில், முதல்வர் சித்தராமையா, உருக்கமாக கேட்டுக்கொண்டார்.பெங்களூரில், கர்நாடக மாநில சிறிய தொழிற்சாலைகள் வளர்ச்சி கழகத்தின் நிகழ்ச்சியை துவக்கி வைத்து, முதல்வர் பேசியதாவது: தொழிற்சாலைகள், கர்நாடக மாநிலத்தை விட்டு, வேறு மாநிலங்களுக்கு இடம் பெயர்கின்றன என்ற வதந்திகளை நம்பாதீர்கள். 'ஹீரோ மோட்டார்ஸ்' நிறுவனம் கேட்டிருந்த நிலத்தை விட, ... |
| தமிழகத்திலும் விவசாயிகள் தற்கொலை: பிரதமர் அலுவலகத்திற்கு ஐ.பி., உளவு அமைப்பு அறிக்கை Posted: புதுடில்லி: 'தமிழகம் உட்பட பல மாநிலங்களில், விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். விவசாயிகள் பிரச்னைக்கு தற்காலிக தீர்வாக சலுகைகள், நிவாரணங்கள் அளிப்பதற்கு பதில், பரவலான நீண்ட கால தீர்வுகள் அளிக்கப்பட வேண்டும்' என, பிரதமர் அலுவலகத்திற்கு, 'ஐ.பி.,' எனப்படும், மத்திய உளவு அமைப்பு அறிக்கை அளித்துள்ளது.தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பிரதமர் அலுவலக மூத்த அதிகாரிகள், நிர்பேந்திர மிஸ்ரா, பி.கே.மிஸ்ரா, கேபினட் செயலர் அஜித் சேத் ஆகியோரிடம், கடந்த வாரம் இந்த அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.அதில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய ... |
| Posted: ரயில்வே பட்ஜெட் குறித்து, மாநில வாரியாக, எம்.பி.,க்களை அழைத்துப் பேசும் வகையில், ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடல் கூட்டத்திற்கு, தமிழகத்தைச் சேர்ந்த, ஒரு எம்.பி., கூட வராதது, ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.வரும் பிப்ரவரியில், நரேந்திரமோடி அரசின் முழு அளவிலான முதல் ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. முக்கிய திட்டங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, அவற்றை விரைந்து நிறைவேற்றும் வகையில் பட்ஜெட் தயாரிப்பு பணிகள் துவங்கியுள்ளன. இதற்கான வேலைகளில் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, ... |
| சாதனைகளை மக்களிடம் சொல்லுங்க: எம்.பி.,க்களுக்கு பிரதமர் மோடி உத்தரவு Posted: புதுடில்லி: ''பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசு நிறைவேற்றும் திட்டங்கள் குறித்து, பொதுமக்களிடம் எடுத்துச் சொல்லி, அரசுக்கு ஆதரவை திரட்டுங்கள்,'' என, பா.ஜ., - எம்.பி.,க்களிடம், பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.பார்லிமென்டின் குளிர்கால கூட்டத்தொடர், நேற்றுடன் நிறைவடைந்ததை அடுத்து, டில்லியில், பார்லி., வளாகத்தில் நேற்று, பா.ஜ., - எம்.பி.,க்கள் கூட்டம் நடைபெற்றது. அதில், கட்சி எம்.பி.,க்களிடம் பிரதமர் மோடி பேசும் போது, ''மக்களுக்காக, மத்திய அரசு ஏராளமான திட்டங்களை நிறைவேற்றி உள்ளது. நிறைய சட்டங்களை எளிமைப்படுத்தி உள்ளது. அவற்றை, மக்கள் மத்தியில் ... |
| Posted: ஏற்கனவே அரியானா, மகாராஷ்டிரா மாநிலங்களில் பல ஆண்டுகளாக கோலோச்சிக்கொண்டு இருந்த மாநில கட்சிகளை பின்னுக்குத் தள்ளி பெரிய அளவில் முன்னேற்றத்தைக் கண்டது பா.ஜ.,இதே நிலை தான் ஜார்க்கண்டிலும் காஷ்மீரிலும் ஏற்படும் என்று ஏற்கனவே ஹேஸ்யங்கள் கூறப்பட்டன. அதை மீண்டும் நிரூபிப்பதுபோல் ஜார்க்கண்ட்டில் முக்தி மோர்ச்சா, காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சி ஆகியவற்றை பின்னுக்குத் தள்ளி புதிய வரலாறு படைத்துள்ளது பா.ஜ., இதே நிலை, வரும் காலத்தில் தமிழகத்திலும் ஏற்படுமா என்ற கேள்வியையும் அரசியல் விமர்சகர்கள் மத்தியில் எழுப்பி உள்ளது. |
| பா.ஜ.,வின் வெற்றி பயணம் தொடர்கிறது: ஜார்க்கண்டை கைப்பற்றியது: காஷ்மீரில் இரண்டாவது இடம் Posted: புதுடில்லி: பிரதமர் மோடி தலைமையிலான, மத்தியில் ஆட்சி செய்யும், பா.ஜ.,வின் வெற்றிப் பயணம், ஜம்மு - காஷ்மீர், ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல்களிலும் தொடர்கிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில், ஆட்சியை கைப்பற்றியுள்ள பா.ஜ., ஜம்மு - காஷ்மீரில், இரண்டாவது இடத்தைப் பெற்று, அமோக வெற்றி பெற்றுள்ளது. அதன் கூட்டணி வியூகங்கள் சாத்தியமானால், அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ள, மக்கள் ஜனநாயக கட்சியுடன் இணைந்து, ஜம்மு - காஷ்மீரிலும் ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளது.ஐந்து கட்டங்களாக நடைபெற்ற, ஜம்மு - காஷ்மீர், ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று காலை, அந்தந்த ... |
| பயங்கரவாதிகளுக்கு பயந்து யாஸிடி பெண்கள் கூட்டாக தற்கொலை Posted: பெய்ரூட்: ஈராக்கில், ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள் வசம் சிக்கிய, யாஸிடி சிறுபான்மையின பெண்களை, அந்த பயங்கரவாதிகள், செக்ஸ் அடிமைகளாக பயன்படுத்திய கொடுமையும், அதற்கு அஞ்சி, ஏராளமான சிறுமியரும், பெண்களும் தற்கொலை செய்து கொண்ட தகவலும் தெரிய வந்துள்ளது.மேற்காசிய நாடுகளான சிரியா மற்றும் ஈராக்கின் பல பகுதிகளை கைப்பற்றியுள்ள, ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள், கிறிஸ்தவர்கள், ஷியா பிரிவு முஸ்லிம்கள், யாஸிடி இனத்தவர் போன்ற சிறுபான்மையினத்தவருக்கு சொல்லொணா துயரங்களை கொடுத்து வருகின்றனர்.குறிப்பாக, ஈராக்கின் வடக்கு பகுதியில் வாழும் யாஸிடி இனத்து ஆண்களை கொன்று ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |டிசம்பர் 24,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |