Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


எனது பெயர் நாய் யகி, நான் இரண்டாம் வகுப்பு படிக்கிறேன்.

Posted: 23 Dec 2014 03:01 PM PST

எனது பெயர் நாய் யகி,
நான் இரண்டாம் வகுப்பு படிக்கிறேன்.

This posting includes an audio/video/photo media file: Download Now

அறிமுகம்

Posted: 23 Dec 2014 02:51 PM PST

ஈகரை அன்பர்களே.... நான் இலங்கையில் இருந்து உங்களோடு இணைவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்

நண்றி....

அந்தத் தமிழனின் கூற்று எடுபடவில்லை அல்லது அறியப்படவில்லை.

Posted: 23 Dec 2014 02:25 PM PST

ஓன்பதாம் நூற்றாண்டிலே வாழ்ந்த மணிவாசகர் தான் பாடிய திருவாசகத்திலே திரு அண்டப் பகுதியில் ஒரு கருத்தைச் சொல்கிறார். "அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் அளப்பெரும் தன்மை வளப்பெரும் காட்சி ஒன்றனுக்கு ஒன்று நின்று எழில் பகரின் நூற்று ஒரு கோடியின் மேல்பட விரிந்தன இன்நுழை கதிரின் துன் அணுப் புரைய சிறியவாகப் பெரியோன் தெரியின்" விளக்கம்: பிரபஞ்சம் உருண்டையாகத்தான் பிறந்துள்ளது. அதிலே நூற்றியொரு கோடிக்கும் அதிகமான கிரகங்களும் விண்மீன்களும் பூமிகளும் சூரியன்களும் சந்திரன்களும் இறைந்து கிடக்கின்றன. ...

இயக்குனர் கே.பாலசந்தர் காலமானார்

Posted: 23 Dec 2014 11:43 AM PST


-
இயக்குனர் கே.பாலசந்தர் இன்று காலமானார்.
உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில்
சிகிச்சை பெற்றுவந்த அவர் சிகிச்சை பலனின்றி
காலமானார்.
-
--தினமணி

பையன் இன்னும் எப்பவும் விரல் சூபபுரான் டாக்டர்.

Posted: 23 Dec 2014 11:11 AM PST

பெண் : டாக்டர் என்னோட ரெண்டு வயசு பையன் இன்னும் எப்பவும் விரல் சூபபுரான் . பெண் : என் பையன் இன்னும் எப்பவும் விரல் சூபபுரான் டாக்டர். டாக்டர் : ஒன்னும் problem இல்லை.....சரி பண்ணிடலாம் பெண் : ரொம்போ கேவலமா இருக்கு டாக்டர் ...எவ்வளோ செலவு ஆனாலும் பரவாயில்லை டாக்டர் : ஒன்னும் செலவு இல்லை ... ரெண்டு வயசு பையனுக்கு ஒரு பெரிய பையனோட ...... டவுசர மாட்டி வுட்டுடு....அவ்வளோதான் பெண் : (குழப்பமாக )......எதுக்கு டாக்டர்...????? டாக்டர் : அந்த டவுசர் அவனுக்கு லூசா இருக்கும் ... அதை ...

பெண்ணுங்க மூட்ல இருக்காங்களான்னு எப்படித் தெரிஞ்சுக்கலாம்…?

Posted: 23 Dec 2014 10:43 AM PST

ஆம்பளைஸுக்கு எல்லாமே ஈசிதான். பட்டென்று தேங்காய் உடைப்பது போல போட்டு உடைத்து விட்டுப் போய் விடுவார்கள் – அக்கம்பக்கம், இங்கிதம், சூழ்நிலை, வெட்கம் இதெல்லாம் ரொம்பப் பார்ப்பதில்லை. ஆனால் பெண்கள் அப்படியில்லை. எதையுமே படாரென்று கேட்டு விடவோ, பேசவோ அவர்களுக்குப் பிடிக்காது. பெரும்பாலும் தாங்கள் மனதில் நினைப்பதை குறிப்பால் உணர்த்துவார்கள். உறவுக்குப் போகலாம் என்பதைக் கூட கணவரிடம் பளிச்சென கூறுவதை எந்தப் பெண்ணும் விரும்புவதில்லை, பெரும்பாலும் செய்வதில்லை. அதற்கும் சில பரிபாஷைகளை வைத்திருப்பார்கள். ...

உதவி தேவை ! SAP தேவை !

Posted: 23 Dec 2014 10:20 AM PST

என் உறவுகளே ! எனக்கு  அக்கௌன்ட் சாப்ட்வேர்   SAP  கிராக் உடன் தேவைபடுகிறது .... கிடைத்தால் நன்று

மார்கழி மகிமை!

Posted: 23 Dec 2014 09:07 AM PST

''மாதங்களுள் நான் மார்கழி'' என்று கண்ணபிரான் கீதையில் திருவாய் மலர்ந்து அருளியுள்ளார். இதை தனுர் மாதம் என்றும் கூறுவர். இம்மாதம் சிறந்த புண்ணிய காலமாகும். மார்கழி மாதம் தேவர்களுக்கு அருணோதய காலமாகிறது. அதனால் அம்மாதம் முழுவதும் பகவானைத் தியானிப்பதும், அவனைத் தோத்திரம் செய்வதும், அவனைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பதும் நமக்கு சகல சௌபாக்கியங்களையும் அளிக்கிறது. நாம் நமது மனத்தைத் தெளிவுபடுத்தி ஆன்மிக மார்க்கத்தில் லயிக்கச் செய்வதற்கு மார்கழி மாதம் மிகச் சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது. இம்மாதத்திலுள்ள ...

கே.பாலசந்தர் பற்றி சுவையான சிறு குறிப்புகள்

Posted: 23 Dec 2014 08:37 AM PST

· தஞ்சைத் தரணியின் நன்னிலம்- நல்லமாங்குடி அக்ரஹாரத்தில் நமக்காகப் பிறந்தது 9, ஜீலை 1930-ல். ஆம், 80 வயது கே.பி-யின் கலையுலகப் பொது வாழ்வு அங்கே சிறு வயதில் திண்ணை நாடகங்களில் தான் ஆரம்பம்! · சென்னை ஏ.ஜி.ஆபிஸில் 12 ஆண்டுகள் பணிபுரிந்து கொண்டே, நாடகங்கள் நடத்தி வந்தார். `மேஜர் சந்திரகாந்த்' மிகப் பிரபலமான நாடகம். `எதிர்நீச்சல்', `நாணல்', `விநோத ஒப்பந்தம்' போன்றவை மிகுந்த வரவேற்பைப் பெற்ற நாடகங்கள்!. · கமல், ரஜினி, சிரஞ்சிவி, நாசர், பிரகாஷ்ராஜ், பூர்ணம் விஸ்வநாதன், ...

நெடுந் தொடர்

Posted: 23 Dec 2014 08:15 AM PST

நெடுந் தொடர் வில்லனும் வில்லியும் ​தொடராய் வெல்வர் வாரங்கள் பல பக்கச்சார்பாய் இயக்குநர் இயக்க மனங்கள் பதைக்க தொடர்ந்திடும் நாடகம் வன்மம் வெல்லும் பல காலம் தொடரும் தொடருமே பல வருடம் நாயகன் நாயகி தொடராய் அழுதிட பார்ப்பவர் கண்களும் குளமாய் மாறிட வில்லனும் வில்லியும் நிமிர்ந்தே செல்வர் முற்றும் வரைக்கும் நெடுந்தொடர் முற்றும் ஓர் நாள் முடிவுக்காய் ஏங்குவர் பல நாள் அன்றொருனாள் மட்டும் தோற்பர் வில்லர் வில்லர் மட்டுமா தோற்பர் தோற்றவர் அறியா ...

கலப்படம்

Posted: 23 Dec 2014 07:35 AM PST

"உணவுப்பொருட்களில் கலப்படம்" ஒத்த உருவமும், நிறமும் உடைய பல்வேறு பொருள்கள் தினசரி நாம் உபயோகிக்கும் உணவுப்பொருட்களுடன் கலப்படம் செய்யப்படுகிறது. உதாரணமாக...!! மிளகில் --------------------பப்பாளி விதை ஜீனியில் -------------------ரவா [அ ] வெள்ளை மணல் அரிசியில் ------------------கல் , நெல் வெண்ணையில் ---------மாவு நெய்யில் ---------------------டால்டா டீத்தூள் -----------------------மரத்தூள் [அ ] சாயத்தூள் பச்சை பட்டாணி ----------பச்சை நிற சாயம் அதிக விலையுள்ள எண்ணெய் --------குறைந்த ...

ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி பெயர்ப்பது எப்படி

Posted: 23 Dec 2014 07:20 AM PST

ஒரு தேர்வுக்காக ஆங்கிலத்தில் உள்ள பாடத்தை தமிழில் மொழி பெயர்ப்பது எப்படி.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (83)

Posted: 23 Dec 2014 07:03 AM PST

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் -  சென்னை -113

தொடத் தொடத் தொல்காப்பியம்(331)

Posted: 23 Dec 2014 06:36 AM PST

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

விவசாய தினம்

Posted: 23 Dec 2014 05:26 AM PST

ஒரு வேல சோறு தின்ன
உசுரகொடுத்து வேல செஞ்சி
நீ மூணு வேல நிம்மதியா இருக்க
தன் ரத்தசிந்தி வேல பாக்கும்
ஒவ்வொரு உழவனுக்கும்
இனிய விவசாய தின வாழ்த்துகள்

வாங்கும் பொருள் எந்த நாட்டுடையது

Posted: 23 Dec 2014 05:19 AM PST

வாங்கும் பொருள் எந்த நாட்டுடையது நீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டுடையது என்பதை பார் கோட் மூலம் அறிந்து கொள்வது ...எப்படி சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் என்றால் இப்பொழுது இந்தியா மட்டும் இல்ல, உலகமே சந்தேகம் கண் கொண்டு பாக்க ஆரம்பிச்சுருச்சு …பால் பவுடர் பிரச்சனை,சீன பொம்மைகள் என்று எல்லாத்துலயும் நச்சு பொருட்கள் இருபதாக சொல்ல படுகிறது,சிலர் சீன பொருட்கள் விலை குறைவாக கிடைகிறது என்று தேடி போய் சீன பொருட்களை வாங்குவார்கள் அவர்களுக்கும் இந்த தகவல் பயனுள்ளதாக இருக்கும். (தவிர்பதற்கும் சரி ...

நாளை …(கவிதை)

Posted: 23 Dec 2014 04:31 AM PST

- நாளை!…………. விடியலொன்று விழி திறக்குமேயானால் அதன் விடிவெள்ளி நானாக இருக்க வேண்டும்! நாளை ஒளியொன்று உலகத்தில் படருமேயானால் உதிக்கும் சூரியன் நானாக இருக்க வேண்டும்! நாளை விதையொன்று முளை விடுமேயானால் அதை விதைத்தது நானாக இருக்க வேண்டும்! நாளை விருட்சமொன்று விரிந்து கிடக்குமேயானால் அதன் வேருக்கு நீருற்றியது நானாக இருக்க வேண்டும்! நாளை தேவையொன்று தேடி அலையுமேயானால் அதன் முகவரி சொல்லும் முதல் மனிதன் நானாக இருக்க வேண்டும்! நாளை துயரமொன்று தொடருமேயானால் ...

நெடில் அல்ல குறில்...!!! - Mano Red

Posted: 23 Dec 2014 02:06 AM PST

முதன் முதலில் எழுதிய அந்த கவிதையில் வடிந்த அத்தனை எழுத்துக்களும் உயிர் எழுத்துக்கள் தான், ஆம் உயிரில் தடவி உணர்வில் வழித்தெடுத்த வார்ப்பு வார்த்தைகள்..!! அடுத்த வார்த்தையின் அமைப்பை அதன் அமைதி குலைக்காமல் அடுக்க எண்ணி, 'ஆ' நெடில் அல்ல 'அ' குறில் என தொடங்குவதாய் அமைத்த போது அத்தனையும் அழகியின் ஆணவங்கள்..!! நாள் பார்த்து நாழிகை பார்த்து தவித்து கிடந்து காத்திருந்தேன் அடுத்த வரிக்காக..... ஆள் அரவமில்லாத நடுக்காட்டில் வழிமறந்த அறிவாளியின் உளறல் போல மார்புக் ...

கள்ளநோட்டை கண்டுபிடிக்க எளிய வழி...

Posted: 23 Dec 2014 01:47 AM PST


-
பார்த்ததில் பிடித்தது

ஹா... ஹா... ஹா...

Posted: 23 Dec 2014 01:35 AM PST

தத்துவம் 1: இஞ்ஜினியரிங் காலேஜ்ல படிச்சா இஞ்ஜினியர் ஆகலாம் . ஆனா பிரசிடன்சி காலேஜ்ல படிச்சா பிரசிடன்ட் ஆக முடியுமா? தத்துவம் 2: ஆட்டோக்கு ' ஆட்டோ'ன்னு பேர் இருந்தாலும் , மேன்யுவலாத்தான் டிரைவ் பண்ண முடியும் . தத்துவம் 3: தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும் , ஆனா இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வராது ! (என்ன கொடுமை சார் இது !?!) தத்துவம் 4: வாழை மரம் தார் போடும் ஆனா....... அதை வச்சு ரோடு போட முடியாது! (ஹலோ ! ஹலோ !!!!) தத்துவம் 5: பல்வலி வந்தால் பல்லை புடுங்கலாம் , ஆனா ...

சமையலில் சந்தேகம் !

Posted: 23 Dec 2014 01:26 AM PST

சைவ சமையலில் புது பதார்த்தங்கள் செய்வது எப்படி (பிரியாணி, குருமா, பன்னீர் மசாலா)

பி.கு. : ஐயாவின் சொற்படி, தலைப்பை தமிழில் மாற்றிவிட்டேன் புன்னகை - கிருஷ்ணாம்மா புன்னகை

படிப்பது திருவாசகம், இடிப்பது சிவன் கோயில்

Posted: 23 Dec 2014 01:15 AM PST

-- நித்தம் சாவாருக்கு அழுவார் உண்டோ? - நில்லாத காலடி நெடுந்தூரம் போகும் - நெருப்பு சிறியதென்று முந்தானையில் முடியலாமா? - பிச்சைக்காரனுக்குப் பயந்து அடுப்பு மூட்டாம விடுவதா? - பலமரம் கண்ட தச்சன் ஒரு மரத்தையும் வெட்ட மாட்டான்..! - நெருப்பைக் கண்டு மிதித்தாலும் சுடும், காணாமல் மிதித்தாலும் சுடும் - பாதி சுரைக்காய் கறிக்கும், பாதி சுரைக்காய் விதைக்குமா? - மரத்திலிருந்து விழுந்தவனை மாடும் மிதித்தது போல - படிப்பது திருவாசகம், இடிப்பது சிவன் கோயில் - பருத்திக்கு உழும் முன்னே தம்பிக்கு ...

பருக்கள் இல்லா முகம் பெற !

Posted: 23 Dec 2014 01:12 AM PST

முகத்தை நன்றாக தண்ணீரில் கழுவிவிட்டு பின்னர் லேசாக துடைத்து விட்டு மஞ்சள் மற்றும் நீரை நன்றாக கலந்து முகத்தில் பூசி பத்து நிமிடம் கழித்து கழுவி வர முகபரு மறையும்.


பி.கு. : ஐயாவின் சொற்படி, தலைப்பை தமிழில் மாற்றிவிட்டேன் புன்னகை - கிருஷ்ணாம்மா புன்னகை

கடைசி ஆசை என்னான்னு கேட்டது தப்பா போச்சு..!!

Posted: 23 Dec 2014 12:56 AM PST

- - - - மரண தண்டனை கைதிகிட்டே கடைசி ஆசை என்னான்னு கேட்டது தப்பா போச்சு..! - ஏன் என்ன கேட்டுட்டுட்டான் அப்படி? - நமீதா மீண்டும 50 கே.ஜி அழகு தேவதையாகறதைப் பார்த்துட்டுத்தான் சாகணும்கிறான்...!! - ---------------------------------------- நகைச்சுவை தொடரும்...

புடவை பளிச்சுனு இருக்கே, வாஷிங் மெஷின்லே துவைச்சதா..?

Posted: 23 Dec 2014 12:53 AM PST


-
நகைச்சுவை தொடரும்...

பக்தியில் பலவகை உண்டு. - --வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Posted: 23 Dec 2014 12:53 AM PST

- - ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பக்தி செலுத்துகிறார்கள். சிலர் பிரதட்சணம்(கோயிலை வலம் வருதல்), சிலர் நமஸ்காரம் மட்டும் செய்வது என்று வழிபாட்டு முறை மாறுபடுகிறது. ஆழ்வார்கள் ஆடுவது, பாடுவது, பூத்தொடுப்பது என்று பலவிதமாக பக்தி செலுத்தியுள்ளனர். ஆக, எந்த விதத்திலும் பக்திசெலுத்தலாம். குழம்பு சாதம் மோர் சாதகமாகாது. மோர்சாதம் கேசரி ஆகாது. அதனதன் சுவையில் அது அது இருக்கும். அதுபோல, ஒவ்வொருவர் செலுத்தும் பக்தியும் தனித்துவம் வாய்ந்ததாக அமையும். எள் சாதம், எலுமிச்சை ...

சித்திரைத் திங்கள் சிரித்தெனை வாட்டுதடி! - கவிஞர் கி. பாரதிதாசன்

Posted: 23 Dec 2014 12:01 AM PST

- புத்துரை நூலே! புரட்டுகின்ற பக்கமெலாம் கொத்துரை போன்று குளிருட்டும்! – வித்தகியே! சித்திரைத் திங்கள் சிரித்தெனை வாட்டுதடி! நித்திரை இல்லை நினைந்து! ------------------------------------------------------------------------ - இத்தரை ஏனோ எனக்கு வெறுக்குதடி! பித்துறை நெஞ்சாய்ப் பிதற்றுதடி! – முத்தழகே! சித்தரைத் திங்கள் திரண்டெழும் காதலினால் நித்திரை நீங்கும் நினைத்து! - --------------------------------------------------------------------- - முத்தமொன்று தந்துவிடு! ...

பாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு

Posted: 22 Dec 2014 11:20 PM PST

மகாகவி பாரதியின் 133 வது பிறந்தநாள் விழாவில் (11/12/14) அன்று அவன் பிறந்த மண்ணான எட்டைய புரத்தில் பாரதி மணிமண்டபத்தில் பாரதியின் கீழ் உங்கள் ஆதிராவுக்கு 'பாரதி பணிச்செல்வர்' என்னும் விருதினை அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் வழங்கியது என்பதை என் ஈகரை உறவுகளிடம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்வு அடைகின்றேன். இந்த ஆண்டில் (2014ல்) பாரதியாரின் நினைவு நாள், பிறந்தநாள் இரண்டிலும் விருது பெற்றுள்ளேன். நினைவு நாளில் 'பாரதி கண்ட கல்வியாளர்'  விருதும் பிறந்தநாளில் 'பாரதி பணிச்செல்வர்' விருதும் பெற்றுள்ளது ...

அர்ஜூனன் காதலி - நாட்டிய நாடகம்

Posted: 22 Dec 2014 10:19 PM PST


-

-

30 வயதுக்காக காத்திருக்கும் தமன்னா!

Posted: 22 Dec 2014 10:07 PM PST

- - தமன்னாவை சந்திக்கும் தோழிகள், 'திருமண வயதாகி விட்டதே எப்போது திருமணம் செய்து கொள்வதாக உத்தேசம்?' என்று கேட்டு வருகின்றனர். அதற்கு, 'சினிமாவில் பெரிய அளவில் சாதிக்கத்தான் வந்தேன்; ஆனால், நான் வந்த வேலை இன்னும் எதிர் பார்த்தபடி நடக்கவில்லை. அதனால்தான் இப்போது வித்தியாசமான கதாபாத்திரங்கள் பக்கம், என் கவனத்தை திருப்பியிருக்கிறேன்…' என்கிறார். மேலும், 'நயன்தாரா மற்றும் அனுஷ்கா போன்ற நடிகைகளுக்கெல்லாம், 30 வயதுக்கு பின்தானே, வெயிட்டான கதைகள் கிடைத்து வருகின்றன. அதனால், நானும், ...

ஸ்தோத்ரம் – நலம் தருவாள் மீனாட்சி -

Posted: 22 Dec 2014 07:58 PM PST

- "பொதிகை மலைச் சாரலிலே பூத்து வந்த தென்றலிலே அல்லி மலர் தண்டெனவே நடந்துவரும் மீனாட்சி! - கிள்ளை மொழிப் பைந்தொடியாய் கிண்கிணியென சிரிப்புடனே கீழ்வானச் செஞ்சுடராய் திகழும் அழகு மீனாட்சி! - பச்சை நிறச் சாயலிலே பைந்தமிழின் இனிமையென பாசமதைப் பொழிந்து தரும் பால் நிலவே மீனாட்சி! - பொய்கை வளர் மீன்களென கெண்டை விழி ஓரங்களில் மைதீட்டிய மலர்க்கொடியே மங்கையவள் மீனாட்சி! - வைகை நதி நீராடி வையமெல்லாம் மகிழ்ந்திடவே வான் முகிலாம் கூந்தலிலே மலர் சூடிய மீனாட்சி! - மான் மழுவைக் கையேந்தும் மதியதனைச் ...

காதல் -கவிஞா் கி. பாரதிதாசன்-

Posted: 22 Dec 2014 07:30 PM PST

]b]கவிஞா் கி. பாரதிதாசன்- ஆயிரம் காதல் கவிதைகள் இயற்றியுள்ளார்... அவற்றிலிருந்து ஒரு சில[/b] - ----------------------------------------------------------- - பட்டென்(று) ஒருகவிதை பாடிடச் சொன்னவளே! சட்டென்(று) ஒருமுத்தம் தந்திடுக! – கட்டழகே கொட்டென்று கொட்டும் கவிமழை! சேர்ந்தாடச் சிட்டென்று மெல்லச் சிணுங்கு! - --------------------------------------------------------------------- - - முத்துமழை முன்பொழிய முத்தமழை நீ..பொழிய சொத்துமழை என்றெண்ணிச் சொக்குகிறேன் – முத்தமிழாய்க் கொட்டுமழை ...

இந்த வார சினிமா துளிகள்!

Posted: 22 Dec 2014 07:18 PM PST


-
* முதன்முறையாக தனுஷுடன் இணைந்துள்ள
காஜல்அகர்வால், அடுத்தபடியாக ஆர்யா மற்றும்
விஷாலுடன் ஜோடி சேருவதற்கு கதை கேட்டிருக்கிறார்.
-

இரவில் கனவு காண்பவர்களை விட…

Posted: 22 Dec 2014 07:05 PM PST

- —————————————————————————————– - இரவில் கனவு காண்பவர்களை விட, கவலை காண்பவர்களே அதிகம்..! - -கருத்துஜாய் —————————————————————– - எதில் எடுக்கிறீர்களோ இல்லையோ…மரம் விஷயத்தில் நயவுசெய்து 'நடு'நிலை எடுங்கள்..! - -அலெக்ஸ் - ————————————————————————- வலையில் வசீகரித்தவை

விராலிமலை கோயிலுக்கு வெள்ளி ஊஞ்சல் காணிக்கை

Posted: 22 Dec 2014 06:35 PM PST

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருள்மிகு சுப்ரமணியர் சுவாமி திருக்கோயிலுக்கு சென்னையைச் சேர்ந்த பக்தர் ஒருவர் ரூ.4 லட்சம் மதிப்பிலான வெள்ளி ஊஞ்சலை காணிக்கையாக ஞாயிற்றுக்கிழமை வழங்கினார். - விராலிமலை சுப்ரமணியர் சுவாமி திருக்கோயில் அருணகிரிநாதரால் பாடல் பெற்ற புராதன வழிபாட்டுத் தலமாகும். இக்கோயிலில் முருகன் ஆறு முகங்கள், 12 கைகளுடன் மயில் மேல் அமர்ந்து வள்ளி, தெய்வானை சமேதராக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இக்கோயிலில் தினமும் அர்த்தஜாம பூஜை முடிந்து, இரவு பள்ளியறை பூஜை நடத்தி ...

ரமணியின் கவிதைகள்

Posted: 22 Dec 2014 06:35 PM PST

கணினி போற்றுதும்!? ரமணி, 18/08/2012 கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும் பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! இன்றைய உலகின் எலிகள் போட்டியில் பகலும் இரவும் மனிதர் வாழ்வினை நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்! குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்! குடும்பம் முழுவதும் கணினி ...

அஜித்துக்கு இலங்கையிலும் ரசிகர்கள்!

Posted: 22 Dec 2014 06:21 PM PST

- தமிழகம் மட்டுமின்றி, இலங்கை ஈழத்தமிழர்கள் மத்தியிலும், அஜித்துக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர். அவர்களெல்லாம், என்னை அறிந்தால் படத்தின் ரிலீசை எதிர்பார்த்திருப்பதோடு, அஜித்துக்கு, 60 அடி ராட்சச, 'கட்-அவுட்'கள் தயார் செய்து, போக்குவரத்து மிகுந்த பகுதிகளில் வைத்திருக்கின்றனர். இலங்கையில் இதற்கு முன் எம்.ஜி.ஆருக்குத்தான், 40 அடி உயரத்தில், 'கட் – அவுட்' வைத்திருந்தனர். இலங்கை தமிழர்கள் மத்தியில், அஜித்துக்கு இருக்கும் வரவேற்பை பார்த்து, என்னை அறிந்தால் படத்தை, அதிக தியேட்டர்களில் வெளியிட ...

குடும்ப அட்டையில் உள்தாளை இணைத்துக் கொள்வதற்கு காலக்கெடு ஏதும் இல்லை

Posted: 22 Dec 2014 06:17 PM PST

காலக்கெடு ஏதுமில்லை: குடும்ப அட்டையில் உள்தாளை இணைத்துக் கொள்வதற்கு காலக்கெடு ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை. குடும்ப அட்டைகளில் உள்தாள்களை ஒட்டும் பணியை துரிதப்படுத்தி, மக்களுக்கு எந்தவித சிரமமுமின்றி விரைந்து முடிக்க வேண்டும். எந்தப் பொருளும் வாங்க விரும்பாத வெள்ளை நிற அட்டை வைத்துள்ளவர்கள், முகவரி ஆதாரத்துக்காக வழங்கப்படும் மஞ்சள் நிறமுடைய அட்டை வைத்துள்ளவர்கள் தங்களுடைய "என்' (எந்தப் பொருளும் வாங்காதவர்கள்) குடும்ப அட்டைகளை புதுப்பிக்க http://www.consumer.tn.gov.in என்ற இணையதளத்தில் வசதி ...

நாட்டு நடப்பு - அடடே - மதி கார்ட்டூன்

Posted: 22 Dec 2014 06:17 PM PST

பாமரர் தேவாரம்

Posted: 22 Dec 2014 06:08 PM PST

பாமரர் தேவாரம்: திருச்சோற்றுத்துறை (கலித்துறை: மா மா மா மா புளிமாங்காய்) (கோவில்: Chottruth Thurai பதிகம்: thiru aDangkal) அன்னம் காணிற் பசிபோய்க் கண்டோம் வரர்லோகம் முன்னோ னடியார் உண்ணச் செய்தல் உறுகோளே அன்னம் அளித்த முன்னோர் குலத்தின் வழிவந்தோர் இன்னும் சோற்றுத் துறையில் அன்னம் இடுவாரே. ... 1 [அன்னதானச் செய்தி: Aadalvallan மூவர் பாடிப் பரவும் பெம்மான் முழுதோனை மேவும் சோற்றுத் துறையில் முற்றும் விழியாரக் காவல் தெய்வம் போல நின்றே அருள்செய்வான் ஆவி சோரும் முன்னே தாளைப் பணிவோமே. ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™