Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


மும்பை தாக்குதலை தடுக்கும் வாய்ப்பை தவறவிட்ட உளவு துறைகள்: அதிர்ச்சி ரிப்போர்ட்

Posted:

மும்பை: மும்பை தாக்குதலுக்கான சதித் திட்டத்தை ஓரளவு மோப்பம் பிடித்துவிட்ட போதிலும், அத்தகவல்களை இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து உளவுத் துறைகள், பகிர்ந்து கொள்ளத் தவறியதால், 166 பேர் உயிரிழக்க நேர்ந்தது என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.மேற்கண்டோர், 2008ம் ஆண்டு, நவம்பர் 26ம் தேதி, மும்பையில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய குண்டுவெடிப்பில் பலியாயினர்.அமெரிக்க பாதுகாப்பு அமைப்பின் முன்னாள் அதிகாரி எட்வர்ட் ஸ்னோடன் அம்பலப்படுத்திய உளவு தகவல்களின் அடிப்படையில், மும்பை சதித் திட்டம் குறித்த அறிக்கையை, 'நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகை ...

55 பயங்கரவாதிகளை தூக்கிலிட பாகிஸ்தான் நடவடிக்கை

Posted:

இஸ்லாமாபாத்: கருணை மனு நிராகரிக்கப்பட்ட, 55 பேருக்கு உடனடியாக மரண தண்டனையை நிறைவேற்ற, பாகிஸ்தான் அரசு ஆயத்தமாகி வருகிறது.பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள, ராணுவ பள்ளியில், தலிபான்கள் மிகப் பெரும் தாக்குதல் நடத்தி, 132 அப்பாவி பிஞ்சு குழந்தைகள் உட்பட, 148 பேரை ஈவு ஈரக்கமின்றி கொன்று குவித்தனர். இது, உலக நாடுகளை அதிர்ச்சிக்கு ஆளாக்கியதோடு, பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையை முடுக்கி விட வேண்டும் என்ற கோரிக்கையை வலு பெற செய்தது. இதன் எதிரொலியாக, பாகிஸ்தானில் மரண தண்டனையை நிறைவேற்ற விதிக்கப்பட்டிருந்த தடையை, பிரதமர் நவாஸ் ஷெரீப், அண்மையில் ரத்து செய்து ...

ரயில்வேக்கு ரூ.10 ஆயிரம் கோடி வருவாய்: விளம்பர இடம் மூலம் கிடைக்கும்

Posted:

புதுடில்லி: ரயில் நிலையங்கள், ரயில் பெட்டிகள் மற்றும் பயணச் சீட்டுகளில் விளம்பரத்திற்கான இடம் ஒதுக்குவதின் மூலம், ரயில்வே துறைக்கு, ஆண்டிற்கு, 10 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்க வாய்ப்பிருப்பதாக, மத்திய அரசிடம் அளிக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.முனைப்பு: ரயில்வே துறையின் வருமானத்தை உயர்த்தவும், சேவையை மேம்படுத்தவும், மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, பல்வேறு திட்டங்களை செல்படுத்துவதில் முனைப்பு காட்டி வருகிறார். இதன் ஒரு பகுதியாக, ரயில் நிலையங்கள், ரயில் பெட்டிகளில் விளம்பரத்திற்கு அனுமதி அளிப்பதன் மூலம், ...

மின் கட்டணத்தை செலுத்த செல்லும் பொதுமக்கள் தவிப்பு: ரூ.2,000க்கு மேல் ரொக்கமாக வாங்க வாரியம் மறுப்பு

Posted:

மின் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் மின் கட்டண தொகை 2,000 ரூபாய்க்கு மேல் இருந்தால் அதை ரொக்கமாக வாங்க மின் வாரிய ஊழியர்கள் மறுப்பதால் கட்டணத்தை செலுத்த முடியாமல் மக்கள் தவிக்கின்றனர்.தமிழ்நாடு மின் வாரியத்திற்கு வீடு வணிகம் தொழிற்சாலை என 2.72 கோடி மின் நுகர்வோர் உள்ளனர்.வீட்டு மின் இணைப்புக்கு இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் பயன்பாடு கணக்கு எடுக்கப்படுகிறது. பணம் வங்கி காசோலை, வரைவோலை, இணையதளம் என ஏதேனும் ஒன்றின் வாயிலாக கட்டணத்தை செலுத்த வேண்டும்.'மின் கட்டண தொகை 2,000 ரூபாய்க்கு மேல் இருந்தால் காசோலை அல்லது வரைவோலை மட்டுமே வாங்க வேண்டும்' என ...

சுங்க கட்டணம் செலுத்துவதில் தனியார் வாகனங்களுக்கு விலக்கு: இழப்பை ஈடு செய்யவும் அதிரடி திட்டம் தயார்

Posted:

புதுடில்லி: பஸ், கார், ஜீப் உள்ளிட்ட, வர்த்தக பயன்பாடு அல்லாத தனியார் வாகனங்களுக்கு, சுங்க கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் ஏற்படும் இழப்பை ஈடு செய்ய, பெட்ரோல், டீசல் விற்பனையில் கூடுதல் வரி விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.நாடு முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகளில், அனைத்து வாகனங்களுக்கும் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சாலை பராமரிப்பு பணிகளுக்காக இந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்காக, முக்கிய நெடுஞ்சாலைகளில் சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில், சுங்க ...

தத்தெடுக்க மனமில்லாத எம்.பி.,க்கள்: என்ன பாவம் செய்தன கிராமங்கள்?

Posted:

புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடி, 'ஒவ்வொரு எம்.பி.,க்களும், தலா மூன்று கிராமங்களை தத்தெடுத்து, வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதன்மூலம், கிராமப்புறங்கள் பெரும் வளர்ச்சி அடையும்' என, கடந்த அக்டோபரில் அறிவித்தார். ஆனால், கணிசமான எம்,பி.,க்களுக்கு, கிராமங்களை தத்ததெடுக்க இன்னும் மனம் வரவில்லை. லோக்சபாவில், மொத்தம் உள்ள, 541 எம்.பி.,க்களில், 101 எம்.பி.,க்களும் ராஜ்யசபாவில், 243 பேரில், 93 எம்.பி.க்களும் கிராமங்களை தத்தெடுக்கவில்லை. மம்தாவின் திரிணமுல் காங்கிரசைச் சேர்ந்த ஒரு எம்.பி., கூட, கிராம தத்தெடுப்பு விஷயத்தில் ஆர்வம் காட்டவில்லை. திரிணமுல் காங்., ...

எங்கள் பிரச்னைகளை தீர்த்து வையுங்க! பிரதமரிடம் தமிழக விவசாயிகள் கோரிக்கை

Posted:

காவிரியின் குறுக்கே, கர்நாடக அரசின் சார்பில், தடுப்பணைகள் கட்டும் பிரச்னை தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடியிடம், காவிரி டெல்டா விவசாயிகள் நேரில் முறையிட்டனர். அப்போது, 'சட்டப்படி, இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படும்' என, பிரதமர் தங்களிடம் வாக்குறுதி அளித்ததாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.கடும் எதிர்ப்பு: கர்நாடக மாநிலத்தில், காவிரி ஆற்றின் குறுக்கே, இரண்டு இடங்களில், புதிய அணை கட்டுவதற்கு, அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளதை தொடர்ந்து, டெல்டா விவசாயிகள் மத்தியில், கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கர்நாடக அரசின் நடவடிக்கையை ...

உயரப் பறக்கும் பன்னீர் கொடி: அதிருப்தியில் அமைச்சர்கள்

Posted:

எல்லாத் துறைகளிலும் முதல்வர் பன்னீர்செல்வம் பெயரைச் சொல்லி, பலரும் தலையிடுவதால், தாங்கள் முழுமையாக செயல்படாத நிலை ஏற்பட்டுள்ளதாக, அமைச்சர்கள் பலரும் புலம்ப ஆரம்பித்திருக்கும் விஷயம், தலைமை செயலக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.ஆட்சி பொறுப்பு: கடந்த, 2011ல் நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தில், அ.தி.மு.க., பெரும்பான்மையுடன் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது. ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்றார். சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை அடைந்ததால், ஜெயலலிதா, முதல்வர் பதவியையும், எம்.எல்.ஏ., பொறுப்பையும் இழந்தார். புதிய ...

சகாயத்துக்கு 8 வார அவகாசம்: அரசுக்கு ரூ.5,000 அபராதம்

Posted:

சென்னை:மதுரை மாவட்டத்தில் நடந்த கனிம முறைகேடுகள் குறித்து, விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயத்துக்கு, எட்டு வாரங்கள் அவகாசம் அளித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.விரைவில் அறிக்கை:சென்னையைச் சேர்ந்த, 'டிராபிக்' ராமசாமி தாக்கல் செய்த மனுவை, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி சத்தியநாராயணன் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' விசாரித்தது.மதுரை மாவட்டத்தில் நடந்த கனிம முறைகேடுகள் குறித்து, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் விசாரணை நடத்தி, விரைவில் அறிக்கை அளிக்கும்படி உத்தரவிட்டது. கடந்த மாதம், இந்த உத்தரவு ...

29ம் தேதி முதல் அரசு பஸ்கள் ஓடுமா: ஊழியர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு

Posted:

போக்குவரத்து கழக ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் குறித்து அறிவித்துள்ளதால், வரும், 29ம் தேதி முதல், அரசு பஸ்களை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.பொதுத் துறை நிறுவனமான, போக்குவரத்து கழகங்களில், 1.43 லட்சம் ஊழியர்கள் உள்ளனர். இவர்களுக்கு, மூன்று ஆண்டுக்கு, ஒரு முறை ஊதிய உயர்வு உட்பட பல்வேறு சலுகைகளுக்கு ஒப்பந்தம் போடப்படுகிறது.இந்த ஒப்பந்தம், கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்துடன் முடிந்தது. 12வது ஊதிய ஒப்பந்தம் குறித்து, பேச்சு வார்த்தை நடத்தவில்லை. இது தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.பேச்சு வார்த்தையை துவங்கக் கோரி, 11 ...

மாவோயிஸ்ட்கள் தாக்குதல்: கோவை அருகே பரபரப்பு

Posted:

பாலக்காடு - கோவை தேசிய நெடுஞ்சாலையில், இரு பன்னாட்டு நிறுவனங்களின் துரித உணவகங்களை தாக்கிய மாவோயிஸ்ட்டுகள், அட்டப்பாடியில் வனத்துறை அலுவலக ஜீப்பை தீ வைத்து எரித்த சம்பவம், கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கேரளா, பாலக்காடு மாவட்டம், அட்டப்பாடி வனத்தில் ஆதிவாசி மக்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர். இரு வாரங்களுக்கு முன், இங்குள்ள ஆதிவாசி குடியிருப்புக்கு இரவில் வந்த மாவோயிஸ்ட்கள், அரசுக்கு எதிராக ஆயுதமேந்த வலியுறுத்தும் வகையிலான முகாம்களை நடத்தினர்; நோட்டீஸ்களையும் வினியோகித்துச் சென்றனர்.தகவல் அறிந்த கேரள போலீஸ், ...

வாஜ்பாய் தான் தனது வழிகாட்டியும் முன்மாதிரியும்:அத்வானி

Posted:

டில்லி: வாஜ்பாய் தான் தனது அரசியல் வாழ்க்கையில் சிறந்த வழிகாட்டியாகவும் முன்மாதிரியுமாக இருந்துள்ளார் என தெரிவித்துள்ளார் பா.ஜ.க.,மூத்த தலைவர் அத்வானி. சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சிக்கு அத்வானி நேற்று அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது: இந்தியா போன்றதொரு நாட்டில் ஒருவர் அனைத்துச் சூழ்நிலைகளையும் சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும். நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, ஒரு கட்சி அரசு இருந்தது. எனினும் அந்த நிலை நீடிக்கவில்லை.வாஜ்பாய் அரசு கூட தனி கட்சி அரசு அல்ல. வாஜ்பாய் போன்ற தேசபக்தருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டால் அது மிகவும் பொருத்தமாக ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™