ஈகரை தமிழ் களஞ்சியம் |
- கும்பகோணத்திற்கு செல்கிறேன் - விமந்தனி
- கிழவிகளும் அழகிகள்...
- தாய்முலை அறுக்காதே...
- மகனுக்கு அம்மா சொன்ன அட்வைஸ்..!
- பிளாட்டினக் கனவுகள்-ரா.ரா.
- உடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையை குறைக்க வேண்டுமா?
- சூரியாவின் "மாஸ்"வெளியீடு
- ந.க. துறைவன் ஹைக்கூ கவிதைகள்.
- Samayal
- To get pimple free face
- ஒரு கிளாஸ் இளஞ்சூடான எலுமிச்சை சாறு குடிப்பதால் கிடைக்கக் கூடிய நன்மைகள்…!
- பெங்கலூரில்....
- ந.க. துறைவன் கஜல் கவிதை
- நண்பர்களுக்கு....
- இளவரசிக்கு லைக் போடுங்க...
- நிக்கி கல்யாணி
- காத்திருப்பு
- அடிச்சுப்புடாதீங்க...
- டாஸ்மாக்' கடை
- நாக்கு
- வாழ்க்கை
- திருச்சியில் லிங்கா படம் ரிலீசாவதில் சிக்கல்- ரஜினி ரசிகர்கள் போராட்டம் நடத்த முடிவு
- அமெரிக்காவில் சர்ச்சைக்குள்ளான தேவ்யானி கோப்ரகடே மீது திடீர் நடவடிக்கை!
- சிலர்
- ரூ.1469-ல் விமான டிக்கெட்: ‘கோ ஏர்’ விமான நிறுவனம் அறிவிப்பு
- #படித்ததில் ரசித்தது:
- பக்கமிரண்டும் மின்னும் பாவாடை தொங்கி ஆடுது! – விடுகதைகள்
- காதல் என்பது பனைமரம் போல…
- புனித கதவு
- இருதய ஆண்டவர்!
- ஆமா…யாரு அந்த சக்களத்தி…!
- அரசு அதிகாரிகளை கடவுளா நினைக்கணும்…!!
- குழந்தைகளின் சூப்பர் ஸ்டார்” ..!
- வசந்தம் …
- அரையாண்டு விடுமுறை: செவ்வாய்க்கிழமை வண்டலூர் பூங்கா திறந்திருக்கும்
- பிறந்த குழந்தைகள் திறந்த புத்தகம்
- ஸ்ரீரங்கம் வைகுந்த ஏகாதசி விழா: ஜனவரி 1-இல் பரமபத வாசல் திறப்பு
| கும்பகோணத்திற்கு செல்கிறேன் - விமந்தனி Posted: 22 Dec 2014 11:44 AM PST ஈகரை உறவுகளுக்கு வணக்கம்! அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு கோயில் நகர கும்பகோணத்திற்கு விசிட் செய்ய இருக்கிறேன். ஆகவே... கும்பகோணத்தில் நம் ஈகரை உறவுகள் யாரேனும் இருக்கிறீர்களா...? (ஹி... ஹி... வேறொன்றுமில்லை.... நாங்கள் அனை(!)வரும் அவர் வீட்டிலேயே தங்கி சாப்பிட்டுக்கொள்ளலாம் என்று தான்... ) மறுபடியும் அடுத்த வாரத்தில் உங்களை சந்திக்கிறேன்... (முடிந்தால் இடையிடையே என் போனில்.........) அதுவரை, bye .... |
| Posted: 22 Dec 2014 11:21 AM PST உறவுகளே... கடந்த சில மாதங்களாக கர்நாடக மாநிலம் கூர்க் பகுதியில் ஊர் சுற்றிக் கொண்டிருந்த அனுபவம் அருமையானது. கூர்க் கிழவிகளும் அழகிகள்.அது வேறு விஷயம்.(எப்படித்தான் அவ்ளோ வெள்ளையா இருக்காங்களோ!...பெருமூச்சு மட்டும்தான் விடமுடியும்...) ஆனால்,அங்கு கண்ட ஒரு பொது விஷயம் புதிதாக இருந்தது.நிறைய பேர் தமிழ் பேசுகின்றனர். அது கூட பெரிதாகத் தெரியவில்லை.அங்கிருக்கும் கூர்க் மக்களில் பெரும்பாலானோர் தமிழன்-கன்னடன் முரண்பாட்டு மூட்டையை ஒதுக்கித் தூக்கித் தூர வீசி விட்டு நம் வைகைப்புயல் வடிவேலுவின் ... |
| Posted: 22 Dec 2014 11:19 AM PST உறவுகளே... சமீபத்தில் திரைப்பாட்டுகளைக் கேட்டபோது சில பாடல்கள் மனதுக்கு சிநேகமாகி சில்மிஷம் செய்துகொண்டிருக்கின்றன.சிலது சில்லுச் சில்லாக உடைத்துப் போடுகிறது. முயல் போல புலன்களுக்குள் புகுந்து மென்புயல் போல மிச்சம் மீதி வைக்காமல் உச்சத்தில் உழன்று சுழன்று அடித்து ஓர் சூறாவளியாய்ச் சுற்றிக்கொண்டே இருக்கிறது கயல் திரைப்படப் பாடல்கள். அதில் "என் ஆளப் பார்க்கப் போறேன்" பாடல் என் மனதிற்குள் மகுடி வாசிக்கும் பாடல். "என்னை நானே தரப் போறேன்"... "அதப் பார்த்து நானே அழப் போறேன்"...என மிக மிகச் ... |
| மகனுக்கு அம்மா சொன்ன அட்வைஸ்..! Posted: 22 Dec 2014 11:13 AM PST - மகன்: அம்மா ஸ்கூல் பஸ் வந்துடுச்சி. நான் கிளம்பறேன். அம்மா: டேய்… டேய்… லஞ்ச் எடுத்துட்டுப் போடா… சாம்பார் சாதம் பண்ணியிருக்கேன். மகன்: அதை நீயே சாப்பிடு. நான் கேண்டீன்ல நூடுல்ஸ் சாப்பிட்டுக்கிறேன். அம்மா: அப்படியா… மகனே இன்னிக்கு ராத்திரிக்கு உனக்குச் சாம்பார் சாதம்தான். மகன்: சாம்பார் சாதத்தைக் கொடுத்துத் தொலை. ஒரு நாளாவது உன் சாப்பாட்டிலிருந்து தப்பிக்கவிட மாட்டியே… - ஜி.மஞ்சரி, கிருஷ்ணகிரி. - ————————————- - "பதினெட்டு வயதுக்குள் பிள்ளைகளை வேலைக்கு அனுப்பினால் ... |
| Posted: 22 Dec 2014 11:03 AM PST எல்லோர் வீட்டிலும் தமிழே இருக்கட்டும்-நம் இருதய வால்வுகளில் ரோஜாக்கள் பூக்கட்டும்! என் எண்ணங்களை எண்ணம்போல் வண்ணமயமாகக் கிறுக்கவே இந்தத் திரி... விமர்சனங்கள் வழக்கம்போல விமரிசையாக வரவேற்கப்படுகின்றன...நன்றி... |
| உடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையை குறைக்க வேண்டுமா? Posted: 22 Dec 2014 09:00 AM PST விடியற்காலையில், மிதமான சுடுநீரில் தேன் கலந்து பருகி வந்தால், இரண்டு மாதங்களில் உடல் இளைத்து விடும். உடம்பிலுள்ள கூடுதல் கொழுப்பை தேன் எளிதில் கரைத்து விடும்.இஞ்சியை சாறு பிழிந்து, தேன் விட்டு சூடுபடுத்தி, ஆற வைக்க வேண்டும். காலை உணவுக்கு முன் ஒரு கரண்டியும், மாலையில் ஒரு கரண்டியும் உட்கொண்டு, வெந்நீர் அருந்தி வந்தால், 40 நாட்களில் தொப்பை குறைந்து விடும். ஒரு நாளைக்கு தேவையான மாங்கனீஸ் உப்பைப் பெற ஒரு கப் பழத் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் போதும் அல்லது அரைப்பழம் . பழம் புதிய பழமாக இருக்க வேண்டும். ... |
| Posted: 22 Dec 2014 08:51 AM PST வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் 'மாஸ்'. 'அஞ்சான்' தோல்வியைத் தொடர்ந்து சூர்யா நடித்து வரும் படம் என்பதால், இப்படத்திற்காக மிகுந்த சிரத்தை எடுத்து நடித்து வருகிறார் சூர்யா. வெங்கட் பிரபுவுக்கும் 'பிரியாணி' படம் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. ஆகவே, இவருடைய உழைப்பும் இந்த படத்தில் அதிமாக இருப்பதாக கூறப்படுகிறது. இப்படம் வருகிற தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14-ந் தேதி ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மார்ச் 27-ந் தேதியே படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக ... |
| Posted: 22 Dec 2014 08:19 AM PST தும்பிகள்…!! * தும்பைப் பூவின் மீது அமைந்து எதையோ? ஆராய்கிறது தும்பிகள். * வரலாற்று சின்னமாய் பாஷோவின் தவளை குதித்த குளம். * துவங்கிய இடத்திலேயே முடிந்தது ஓட்டப் பந்தயம். * |
| Posted: 22 Dec 2014 04:59 AM PST சைவ சமையலில் புது பதார்த்தங்கள் செய்வது எப்படி (பிரியாணி, குருமா, பன்னீர் மசாலா) |
| Posted: 22 Dec 2014 04:50 AM PST முகத்தை நன்றாக தண்ணீரில் கழுவிவிட்டு பின்னர் லேசாக துடைத்து விட்டு மஞ்சள் மற்றும் நீரை நன்றாக கலந்து முகத்தில் பூசி பத்து நிமிடம் கழித்து கழுவி வர முகபரு மறையும். |
| ஒரு கிளாஸ் இளஞ்சூடான எலுமிச்சை சாறு குடிப்பதால் கிடைக்கக் கூடிய நன்மைகள்…! Posted: 22 Dec 2014 04:39 AM PST தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் இளஞ்சூடான எலுமிச்சை சாறு குடிப்பதால் கிடைக்கக் கூடிய நன்மைகள்…! - - 1. எமது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது… எலுமிச்சையில் நிறைய விட்டமின் சீ அடங்கியுள்ளதால், தடிமன் முதலிய சிறு நோய்களில் இருந்து பாதுகாக்கிறது. பொட்டாசியம் மூளை, நரம்பு கடத்துகையை சீராக்கிறது. குருதிச் சுற்றோட்டத்தை கட்டுப்படுத்துகிறது. 2. உடலின் pH ஐ சீராக்குகிறது.. எலுமிச்சைச் சாறில் சிட்ரிக் அமிலம் இருக்கிறது. ஆயினும், சமிபாட்டு செயன்முறையால், அது மூலச்சேர்க்கையாக ... |
| Posted: 22 Dec 2014 04:21 AM PST பெங்களூருவில் ஆன் லைனில் அபராதம் செலுத்திய இஞ்சினியர் பெங்களூரு: பெங்களூருவில் ட்ரினிட்டி சர்கிள் அருகே கம்ப்யூட்டர் இஞ்சினியர் ஒருவர் அபராதத்தை ஆன் லைனில் செலுத்தினார். போக்குவரத்து விதியை மீறிய ஒருவரை போலீசார் தடுத்து நிறுத்தி அபராதம் விதித்தனர். அப்போது அவர் தன்னிடம் பணம் இல்லை என்று கூறினார். போலீசார் அபராதம் செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்தியதால், அவர் தன்னிடம் இருந்த மடிகணினியை சாலையின் ஓரத்தில் உள்ள நடைப்பாதையில் அமர்ந்து இணையதள பணப்பரிமாற்றம் மூலம் அபராதத்தை செலுத்தினார். இது ... |
| Posted: 22 Dec 2014 02:23 AM PST காலம் முச்சூடும் தோள் கொடுப்பாய் என்று நினைத்திருந்தேன். நீயோ, வாயால் தேள் கொடுக்காய் கொட்டிவிட்டாய்? நீ கொடுத்தது வலி அதற்கு நானல்லவா பலி. * |
| Posted: 22 Dec 2014 01:26 AM PST எனது பதிவில் விடப்பட்டிருந்த தவறான தமிழ் சொற்ப்பிழைகளை சுட்டிக்காட்டிய நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள் இனி அவ்வாறு நடக்காமல் பார்ததுக் கொள்கிரேன் நன்றி |
| Posted: 21 Dec 2014 10:11 PM PST ![]() |
| Posted: 21 Dec 2014 10:07 PM PST -- - --ஆனந்த விகடன் |
| Posted: 21 Dec 2014 09:27 PM PST வானம் ஏற்றிவைத்த நிலா வெளிச்சத்துல தெருவிளக்கும் சேர்ந்து போட்டிபோட வாசல் முற்றத்தில் காதுகுடையும் தாத்தாவோடும் கண்டிக்கும் பாட்டியோடும் கதைபேசி மகிழும் அம்மாவோடும் கண்ணாமூச்சி விளையாடும் அக்காவோடும் காத்திருக்கிறேன் நான்.... வேலைமுடிந்து வேர்க்கடலை வாங்கிவரும் அப்பாவுக்காக.... |
| Posted: 21 Dec 2014 09:24 PM PST அழுக்குச் சட்டையானாலும் தொவச்சிப்போட்டு அழாமயிருக்க அம்பதுகாச கையிலகொடுத்து அரைமைல் தூரம் இடுப்புல சுமந்து அழகு முகத்தையும் கறுப்பாக்க வந்த சூரியன கந்தல்புடவையின் முந்தானையால மறைச்சி காத்தடிச்சா பறந்துபோகும் கொட்டாயி பள்ளிக்கூடத்தல கொண்டுபோயி இறக்கிவிட்ட கையுடன் வாத்தியார பார்த்து, அய்யா, புள்ள படிக்கலைனாலும் பரவாயில்ல... அடிச்சுப்புடாதீங்க...ன்னு அனுதாபத்தச் சொல்லிட்டு அரக்கப்பரக்க களத்துமேட்டேறி கள பறிக்கயிலே, சேத்துக்கால சேப்போ கறுப்போ எது கடிச்சாலும் அதபத்தி கவலைப்படாம அப்போதும் ... |
| Posted: 21 Dec 2014 09:17 PM PST ஆயிரமாயிரம் பேர் சாதி மதம் இல்லாமல் சகட்டுமேனிக்கு வயலில் இறங்கி காலம் நேரம் பாராமல் களைப்புக்குக்கூட உண்ணாமல் சத்தான பயிர்களுக்காக களை பறித்த பொன் விளைந்த பூமி - இன்று அதே ஆயிரமாயிரம் பேர்களை சாதி மதம் இல்லாமல் வரவேற்கிறது! சாகடிக்கும் மருந்துகளை விற்பனை செய்யும் டாஸ்மாக்' கடையாக! |
| Posted: 21 Dec 2014 09:14 PM PST நாக்குக்கும் கற்பு உண்டு மௌனம்..... - வேலன். |
| Posted: 21 Dec 2014 09:12 PM PST நம் வாமும் போகும் காலத்தை வருடத்தில் எண்ணாதிர்கள் நாள்கள் எண்ணுகள் அப்போது தெரியும் தப்புகள் குறையும் பிற உயிர்கள் இடத்தில் அன்பு மேல்ஓங்கும்........... ![]() |
| திருச்சியில் லிங்கா படம் ரிலீசாவதில் சிக்கல்- ரஜினி ரசிகர்கள் போராட்டம் நடத்த முடிவு Posted: 21 Dec 2014 09:10 PM PST திருச்சி: விநியோகஸ்தர்களுக்கும், தியேட்டர் உரிமையாளர்களுக்கும் இடையே நீடித்து வரும் பிரச்சினையால் திருச்சியில் லிங்கா படம் ரிலீசாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எந்ததெந்த தியேட்டர்களில் படம் ரீலஸ் ஆகிறது என்று தெரியாமல் தவிக்கும் ரசிகர்கள், மதியத்துக்குள் பிரச்சினை தீர்க்கப்படவில்லை என்றால் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். கே.எஸ். ரவிகுமார் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள லிங்கா படம் தமிழகம் முழுவதும் நாளை வெளியாகவுள்ளது. ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தை ... |
| அமெரிக்காவில் சர்ச்சைக்குள்ளான தேவ்யானி கோப்ரகடே மீது திடீர் நடவடிக்கை! Posted: 21 Dec 2014 09:07 PM PST புதுடெல்லி: - - அமெரிக்காவில் கைது நடவடிக்கைக்கு ஆளான தேவ்யானி கோப்ரகடே, அமைச்சகப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். - கடந்த ஆண்டு நியூயார்க்கில் இந்திய துணைத் தூதராகப் பணியாற்றிய தேவ்யானி அவரது வீட்டில் வேலை செய்த பணிப்பெண் சங்கீதாவுக்கு மிகக் குறைவான சம்பளம் வ ழங்கினார் என்றும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. - இந்த நிலையில், இது தொடர்பாக விசா மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு, ஆடை களைந்து சோதனைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்த ... |
| Posted: 21 Dec 2014 09:07 PM PST சிலர் வருவதும் சிலர் இருப்பதும் சிலர் போவதும் சிலர் செயற்கையாய் சிலர் இயல்பாய் சிலர் உண்மையாய் சிலர் போற்றுவதும் சிலர் தூற்றுவதும் சிலர் குறைப்படுவதும் இந்த சிலரும் வேறு பலரும் இன்னும் சிலருமாக.. எத்தனை அனுபவங்களை மனங்களை தினுசுதினுசாக காலத்தில் கடக்கிறோம்..! |
| ரூ.1469-ல் விமான டிக்கெட்: ‘கோ ஏர்’ விமான நிறுவனம் அறிவிப்பு Posted: 21 Dec 2014 09:06 PM PST - ரூ.1469-ல் மிகக்குறைந்த கட்டண சலுகையை அறிவித்திருக்கிறது 'கோ ஏர்' விமான நிறுவனம். வரும் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை பயணம் செய்ய ஏற்ற வகையில் இந்த ஸ்பெஷல் ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று முதல் 25-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மும்பையை சேர்ந்த இந்த விமான நிறுவனம் உள்நாட்டு விமான போக்குவரத்தில் 22 இடங்களில் சேவையை அளித்து வருகிறது. 19 ஏ320 ஏர்பஸ் ரக விமானங்களையும் கொண்டுள்ளது. - ———————————————- –தினத்தந்தி |
| Posted: 21 Dec 2014 09:04 PM PST #படித்ததில் ரசித்தது: வாழ்க்கை பழசே ஆவதில்லை. அது ஒவ்வொரு வினாடியும் புதுசு புதுசாய் பூக்கிறது. வாழ்கின்றவர்களுக்குத் தான் இது சலித்துப் போகிறது. பூ காய்ந்து போகிறது. உலர்ந்துபோகிறது. ஆனால், பூப்பு காய்ந்து போவதில்லை. உலர்ந்து போவதில்லை. மலர் உலரும், பழசாகும். மலர்ச்சி எப்பவும் பழசாகாது. இது தான் ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் உள்ள உறவு-அல்லது முரண். பூ ஜீவாத்மா! பூப்பு பரமாத்மா..!!! வாழ்க்கை பழசே ஆவதில்லை. அது ஒவ்வொரு வினாடியும் புதுசு புதுசாய் பூக்கிறது. வாழ்கின்றவர்களுக்குத் தான் ... |
| பக்கமிரண்டும் மின்னும் பாவாடை தொங்கி ஆடுது! – விடுகதைகள் Posted: 21 Dec 2014 06:49 PM PST 1) பஞ்சுபோல் இருக்கும் பஞ்சல்ல, நூல் போலிருக்கும் நூலல்ல, உடைபோலிருக்கும் உடையல்ல, உடையவனுக்கோ அது வீடு! - 2) நீண்ட நெடிய கருநாகம், தீண்டாது படுத்திருக்கும், சீண்டுவது நாமும் வாகனமும்தான்! - 3) களங்கமில்லாதவன் கை பட்டால் கலங்குவான். - 4) சிறகின்றிப் பறப்பான், திக்கெட்டும் சுற்றுவான். - 5) பக்கமிரண்டும் மின்னும் பாவாடை தொங்கி ஆடுது! - 6) அடுக்கடுக்காய் மலர்ந்து அனைவரையும் ஈர்க்கும் இனிப்பான பூப்பந்து! - 7) நெற்றிக்குக் கோடாகி நித்தமும் மெலிவான்! - 8) ஓடியவன் நின்றால் ஆடியவன் ... |
| Posted: 21 Dec 2014 06:39 PM PST - – பேசப்போவது எல்லாவற்றையும் நன்றாக யோசி ஆனால் யோசிப்பதை எல்லாம் பேசி விடாதே..! - —————————————— - வளமான காலத்தில் நண்பர்கள் நம்மைத் தெரிந்து கொள்கிறார்கள் வறுமை காலத்தில் நாம் நண்பர்களைத் தெரிந்து கொள்கிறோம்..! - —————————————— உறுதியும் அன்பும் நம்மிடம் இருந்தால் பெரும் கவலை என்ற சுமையும் நீங்கும். - ———————————————————- - சோம்பல் எல்லாவற்றையும் கடினமாக்கும்; சுறுசுறுப்பு எல்லாவற்றையும்…எளிதாக்கும். - —————————————- - காதல் என்பது பனைமரம் போல…ஏறினால் நுங்கு கீழே ... |
| Posted: 21 Dec 2014 05:59 PM PST - வாடிகனில் உள்ள புனித பீட்டர் ஆலயத்தில், புனித கதவு ஒன்று உள்ளது. அதை, 'போர்ட்டா சான்டா' என அழைக்கின்றனர். இதை, 25 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் திறப்பர். - இப்பழக்கம், கி.பி., 15ம் நூற்றாண்டிலிருந்து நடக்கிறது எனக் கூறப்பட்டாலும், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பெர்ரோடேபர், தான் எழுதியுள்ள புத்தகத்தில், கடந்த, 1437ம் ஆண்டில் இருந்தே இக்கதவு திறக்கப்படுவதை பார்த்ததாக எழுதியுள்ளார். - ஒரு காலத்தில், பாவ காரியங்களில் ஈடுபட்டவர்கள் இக்கதவு வழியாக உள்ளே சென்றால், பாவம் மறைந்து விடும் என ... |
| Posted: 21 Dec 2014 05:55 PM PST - கிறிஸ்துவ தேவாலயங்களைப் பொறுத்தவரை, ஆண்டவர் இயேசு, தன் இரு கைகளாலும் ஆசிர்வாதம் செய்வது போலவே அவரது உருவம் அமைக்கப்பட்டிருக்கும். - ஆனால், சிவகங்கை மாவட்டம், இடைகாட்டூரில் உள்ள தேவாலயத்தில் மட்டும் இயேசு, தன் இதயத்தை திறந்து காட்டிய நிலையில் இருப்பார். - இது மாதிரியான உருவ அமைப்பு கொண்ட சிலை, உலகிலேயே மூன்று இடங்களில் மட்டுமே உள்ளன. ஒன்று, பிரான்ஸ் நாட்டிலுள்ள, மார்க்கரேட் மேரியின் கான்வென்ட் மற்றும் ரீம்ஸ் நகரில் உள்ள கதீட்ரல் சபையிலும், மூன்றாவது, இந்தியாவில் இடைக்காட்டூரிலும் ... |
| Posted: 21 Dec 2014 05:48 PM PST ![]() |
| அரசு அதிகாரிகளை கடவுளா நினைக்கணும்…!! Posted: 21 Dec 2014 05:44 PM PST ![]() |
| குழந்தைகளின் சூப்பர் ஸ்டார்” ..! Posted: 21 Dec 2014 05:39 PM PST - சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு புரோமஷன் ஆனவர்களில் இமான் அண்ணாச்சியும் ஒருவர். தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய இவர் அப்படியே கிடைக்கும் படங்களில் சிறு, சிறு, வேடங்களில் தலை காட்டத் தொடங்கினார். அதில் கோலி சோடா திரைப்படம் இவருக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்தது என்று சொல்லலாம். இந்தப் படத்திற்கு பின்னர் இமான் அண்ணாச்சிக்கு படங்கள் குவிந்து வருகிறதாம். அனைத்தும் காமெடி கேரக்டர்தான். தற்போது மிகவும் பிஸியாக உள்ள காமெடி நடிகர்களில் இமான் ... |
| Posted: 21 Dec 2014 05:34 PM PST - பனிப்போர்வை போன்று எங்கும் பசுமையான மரங்கள் குன்றாத வளமை. எங்கு பார்த்தாலும் பறவைகளின் கீச்சிடும் ஓசை. அதுமட்டுமல்லாது அருவிகளின் தாலாட்டுடன் அங்கு மகிழ்ச்சியாக குருவிகள் வாழ்ந்து வந்தன. - சிட்டுக்குருவி ஒன்று தன் தாய் தந்தையிடம் நம் கானகத்தில் பொழுதுபோக்குவதற்கு இடமே இல்லை. எப்பொழுதும் பார்த்த மரங்களையே பார்த்து அலுத்துவிட்டது. எனவே நாம் நகரத்தை நோக்கிச் செல்வோம் என்றது. - தாய் குருவி தந்தையிடம் பழகப் பழக பாலும் புளிக்கும். அதுபோல்தான் இருக்கிறது நம் மகன் கூறியதும். அவன் கூறியவாறு ... |
| அரையாண்டு விடுமுறை: செவ்வாய்க்கிழமை வண்டலூர் பூங்கா திறந்திருக்கும் Posted: 21 Dec 2014 05:24 PM PST - அரையாண்டு தேர்வு முடிந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் செவ்வாய்க்கிழமைகளில் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா பொது மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் இம்மாதம் செவ்வாய்க்கிழமைகளில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா மற்றும் கிண்டி சிறுவர் பூங்கா இயங்கும். ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை அன்று பராமரிப்பு பணிகளுக்காக பூங்கா விடுமுறை தினமாகும். எனினும் பள்ளி அரையாண்டு தேர்வு விடுமுறையை ... |
| பிறந்த குழந்தைகள் திறந்த புத்தகம் Posted: 21 Dec 2014 05:21 PM PST - பிரம்மா குமாரிகள் மற்றும் மித்ரா பவுண்டேஷன் சார்பில் சென்னை சேப்பாக்கம் அண்ணா அரங்கில் சிறப்பு தியானம் மற்றும் ஆன்மிக சொற்பொழிவு சமீபத்தில் நடைபெற்றது. உலக அளவில் புகழ் பெற்ற பிரம்மா குமாரிகள் அமைப்பின் வாழ்வியல் பேச்சாளரான ஷிவானி, முதன்முறையாக சென்னை வந்து கலந்துகொண்டு பார்வையாளர்களுக்கு மன இறுக்கம், கோபம், ஆணவம், பயம் மற்றும் தாழ்வு மனப்பான்மை போன்ற எதிர்மறை உணர்ச்சிகளை போக்கும் ராஜயோக தியானத்தை கற்றுக்கொடுத்தார். பின்னர் ஷிவானி பேசுகையில், ""பரமாத்மாவும் ஜீவாத்மாக்களும் தனித் ... |
| ஸ்ரீரங்கம் வைகுந்த ஏகாதசி விழா: ஜனவரி 1-இல் பரமபத வாசல் திறப்பு Posted: 21 Dec 2014 05:20 PM PST - ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் வைகுந்த ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகத்துடன் ஞாயிற்றுக்கிழமை (டிச.21) தொடங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியான பரமபத வாசல் ஜனவரி 1-ஆம் தேதி திறக்கப்படுகிறது. வைணவத் திருத்தலங்களில் மிகவும் சிறப்பாக நடைபெறும் திருவிழா வைகுந்த ஏகாதசி விழா. இந்த விழா பகல் பத்து, இராப்பத்து என 21 நாள்கள் நடைபெறும். ஒவ்வோர் ஆண்டும் மார்கழி மாதத்தில் இந்த விழா தொடங்கும். இந்த விழா ஸ்ரீரங்கம் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்குகிறது. இதற்காக நம்பெருமாள் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
.jpg)

சிலர் வருவதும் 
