Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


கால் டாக்சிகளுக்கு கட்டண நிர்ணயம் சாத்தியமா? பல கோணங்களில் யோசிக்கும் போக்குவரத்து துறை

Posted:

கால் டாக்சிக்கு கட்டண நிர்ணயம் செய்ய, இருக்கையை கணக்கிடுவதா; கார் மாடலை கணக்கிடுவதா; எரிபொருளைகணக்கிடுவதா; கார் விலையை கணக்கில் கொள்வதா என, பல கோணங்களில் போக்குவரத்து துறையினர் யோசித்தும், முடிவை எட்ட முடியவில்லை.பொதுநல மனு:'ஆட்டோக்களுக்கு கட்டணம் நிர்ணயம் செய்தது போல், கால் டாக்சிகளுக்கும் கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும்' என, காஞ்சிபுரம் மாவட்டம், ஊரப்பாக்கத்தை சேர்ந்த சஞ்சீவிநாதன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், 'இந்த விவகாரத்தை, தமிழக அரசு ...

பயங்கரவாதிக்கு என்ன மரியாதை...! ஐ.நா., கவுன்சில் மீது இந்தியா கடும் அதிருப்தி

Posted:

புதுடில்லி : மும்பை தாக்குதல் சம்பவத்தின் மூளையாக செயல்பட்ட, பயங்கரவாதி ஹபீஸ் சயீதை, 'சாகிப்' என்ற மரியாதையான வார்த்தையில் குறிப்பிட்டு, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கடிதம் எழுதி யுள்ளது, மத்திய அரசுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.விசாரணை:கடந்த, 2008ல், மும்பை சத்ரபதி சிவாஜி ரயில்வே ஸ்டேஷன், தாஜ் ஓட்டல் உள்ளிட்ட இடங்களில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், அப்பாவி மக்கள், பாதுகாப்பு படையினர் உட்பட, 166 பேர் கொல்லப்பட்டனர்.இந்த தாக்குதல் சம்பவத்துக்கு, லஷ்கர் அமைப்பைச் சேர்ந்த ஹபீஸ் சயீது என்ற ...

தி.மு.க., பக்கம் சாய்கிறாரா விஜயகாந்த்? அமித் ஷாவை சந்திக்காததால் பா.ஜ.,வினர் அதிருப்தி

Posted:

பா.ஜ., தலைவர் அமித் ஷாவை சந்திக்க மறுத்த விஜயகாந்த், தி.மு.க., துாதரை, கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்க வரும்படி அழைப்பு விடுத்துள்ளார். இதனால், அவரின் கூட்டணி வியூகத்தை புரிய முடியாமல், தே.மு.தி.க., நிர்வாகிகள் கடும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.விரைவில்...:இதுதொடர்பாக, தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:லோக்சபா தேர்தலில் நேரத்தில், தமிழகத்தில், பா.ஜ., தலைமையில் அமைந்த கூட்டணியில், தே.மு.தி.க., - ம.தி.மு.க., மற்றும் பா.ம.க., போன்ற கட்சிகள் சேர்ந்தன. தற்போது, இந்தக் கூட்டணியில் இருந்து, ம.தி.மு.க., விலகி விட்டது; விரைவில், பா.ம.க.,வும் ...

ஜன., 2 ம் தேதிக்கு பின்ஜெ., வழக்கு சூடுபிடிக்கும்

Posted:

சொத்து குவிப்பு வழக்கின், 'அப்பீல்' மனுக்கள் மீதான விசாரணையை, மூன்று மாதங்களில் முடிக்கும்படி, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் நகல், ஜன., 2ம் தேதி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதை தொடர்ந்து, நீதிபதி நியமனம், விசாரணை என, 'அப்பீல்' வழக்கு விசாரணை சூடுபிடிக்க துவங்கும்.அப்பீல் மனு:வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு, பெங்களூரு தனி நீதிமன்றம், நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. ஜெ.,வுக்கு, 100 கோடி ரூபாய் அபராதமும் ...

பங்கு சந்தையில் பல ஆயிரம் கோடி கறுப்பு பணம்: 'செபி' அதிரடி நடவடிக்கை

Posted:

மும்பை: பங்குச் சந்தையில், பல நிறுவனங்கள், பல்லாயிரம் கோடி ரூபாய் கறுப்பு பணத்தை புழக்கத்தில் விட்டு, வரி ஏய்ப்பு செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பு (செபி) மேலும் பல நிறுவனங்கள் மீதான கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது.முறைகேடு:குறிப்பாக, கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளில், வங்கி சாரா நிதி நிறுவனங்கள், பங்குத் தரகர்கள் உள்ளிட்டோரின் முறைகேடான பரிவர்த்தனைகளை 'செபி' ஆராயத் துவங்கியுள்ளது.இதையடுத்து, 500 கோடி ரூபாய் அளவிற்கு நடைபெற்ற, முறைகேடான பரிவர்த்தனைகளுக்காக, ...

குஜராத்தில் இந்துக்கள் ஆயினர் 225 கிறிஸ்தவர்கள்: வி.எச்.பி.,யின் செயல்பாட்டால் வேற்று மதத்தினர் ஆவேசம்

Posted:

வல்சாட் : குஜராத்தில், விஷ்வ இந்து பரிஷத் சார்பில் நடத்தப்பட்ட, மீள் மதமாற்ற நிகழ்ச்சியில், 225 கிறிஸ்தவர்கள், இந்து மதம் திரும்பினர். தாய் மதம் திரும்பிய அனைவருக்கும், இந்துக்களின் புனித நுாலான பகவத் கீதை வழங்கப்பட்டது.குஜராத் மாநிலம், வல்சாட் மாவட்டதில் உள்ள அர்னாய் கிராமத்தில், ஏராளமான மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர். இவர்களில், இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்தை தழுவிய சிலரும் வசிக்கின்றனர்.இந்நிலையில், இந்து மதத்திலிருந்து வேறு மதத்திற்கு மாறியவர்களை, மீண்டும் தாய் மதத்திற்கு அழைத்து வரும் பணியை, விஷ்வ இந்து பரிஷத் மேற்கொண்டு உள்ளது. ...

60 லட்சம் பேர்: தமிழக பா.ஜ.,வில் உறுப்பினராக சேர்க்க அமித் ஷா கட்டளை

Posted:

கடந்த இரு நாட்களாக, சென்னையில் முகாமிட்டிருந்த, பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா, நேற்று காலை,தமிழக பா.ஜ., நிர்வாகிகளுடனும், மாலையில் மாவட்ட நிர்வாகிகளுடனும் ஆலோசனை நடத்தினார். அதில் பேசிய அவர், 'முதலில், 60 லட்சம் பேரை கட்சியில் சேருங்கள்; ஆட்சி அமைப்பது என் பொறுப்பு' என்றார்.தமிழக பா.ஜ., அலுவலகமான, கமலாலயத்தில், நேற்று காலையில், மாநில நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. ஒரு மணி நேரம் நடந்த இக்கூட்டத்தில், தமிழக பா.ஜ., முன்னாள் தலைவரும், மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய பொறுப்பாளர் முரளீதர் ராவ், தேசிய செயலர் எச்.ராஜா, மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், ...

ராஜினாமா செய்வேன் மோடி மிரட்டல்?

Posted:

புதுடில்லி : ஆர்.எஸ்.எஸ்., மற்றும் சங் பரிவார் தலைவர்கள் மீதான அதிருப்தியால், பிரதமர் நரேந்திர மோடி, தன் பதவியை ராஜினாமா செய்வேன் என, மிரட்டியதாக செய்திகள் வெளியாகி உள்ளன.இந்து மதத்திலிருந்து பிற மதங்களுக்கு மாறியவர்களை, தாய் மதத்திற்கு மாற்றும் முயற்சியில், ஆர்.எஸ்.எஸ்., ஆதரவு, சங் பரிவார் அமைப்புகள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளன. மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேவின் சிலையை, நாடு முழுவதும் வைக்கப் போவதாக, இந்து அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.சில மாநிலங்களில், பா.ஜ., மூத்த தலைவர்கள் பலரும், சிறுபான்மையின மக்கள் மீது, வேறுபாடு பாராட்டும் வகையில் ...

நில உச்சவரம்பு சட்டத்தை மீறிய சோனியாவின் மருமகன் கைது?

Posted:

சண்டிகர்: காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மருமகன், ராபர்ட் வாத்ரா, அரியானா மாநிலத்தில் செய்த நில முறைகேடுகளால், அவருக்கு இரண்டாண்டு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது. அந்த மாநில நில உச்சவரம்பு சட்டத்தை மீறி, 146 ஏக்கர் நிலத்திற்கு சொந்தக்காரராக விளங்கும் ராபர்ட் வாத்ரா மீதான விசாரணையின் பிடி இறுகி வருவதால், அவர் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என, கூறப்படுகிறது.டில்லிக்கு அருகே உள்ள அரியானா மாநிலத்தில், சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற சட்டசபை தேர்தலில், ஆட்சியிலிருந்த, முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா தலைமையிலான காங்கிரஸ் அரசு தோல்வி அடைந்து, ...

டில்லி திகார் சிறை கைதிகளுக்கு ஆயுள், விபத்து காப்பீடு! 'ஜன் தன்' திட்டம் மூலம் வங்கி கணக்கும் உண்டு

Posted:

புதுடில்லி: டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தண்டனை கைதிகளுக்கு, பிரதமரின், 'ஜன் தன்' திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்கு துவங்கி, அதன் மூலம், தனிநபர் விபத்துக் காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டதை நிறைவேற்ற, இந்தியன் வங்கி முன் வந்துள்ளது.ஊதியம்:நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த, ௪,௫௦௦ குற்றவாளிகள், டில்லியில் உள்ள பிரபல திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள், தங்கள் தண்டனை காலத்தில், தங்களுக்கு தெரிந்த ஏதேனும் ஒரு பணியை மேற்கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர். அதற்காக ...

ஐடியா கொடுங்க சார்! கேட்கிறது பஞ்சாப் அரசு

Posted:

சண்டிகர்: 'வருவாயை பெருக்கும் வழிமுறைகளை சொல்லுங்க' என, பஞ்சாப் மாநில வரித்துறை, அத்துறையில் பணியாற்றும் பியூன் முதல் பெரிய அதிகாரிகளிடம் யோசனை கேட்டுள்ளது.வழக்கமாக, இது போன்ற முடிவுகளை, அரசு உயரதிகாரிகள் தான் எடுப்பர். வருவாயை பெருக்க என்னென்ன செய்யலாம் என்பது தொடர்பாக, அதிகம் படித்த உயரதிகாரிகள் மற்றும் வல்லுனர்கள் தான் முடிவெடுத்து அறிவிப்பர்.ஆனால், வழக்கத்திற்கு மாறாக, பஞ்சாப் மாநில அரசு, துறையில் பணியாற்றும் பியூன் முதல் மேலதிகாரிகள் வரை, அனைத்து தரப்பினரிடமும் அறிவுரை கேட்டுள்ளது. நல்ல, பின்பற்றத்தக்க அறிவுரைக்கு சன்மானம் வழங்கப்படும் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™