Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


வீட்டு உபயோக காஸ் சிலிண்டருக்கு மானியம் ரத்து: ஜன., மாதம் தமிழகத்தில் அமலாக வாய்ப்பு?

Posted:

சென்னை: காஸ் ஏஜன்சிகளில், 'ஆதார்' அட்டையை உடனடியாக பதிவு செய்ய எண்ணெய் நிறுவனங்கள் உத்தரவிட்டுள்ளதால், வீட்டு உபயோக, காஸ் சிலிண்டருக்கான மானியம், ஜன., மாதத்தில் ரத்து செய்யப்படும் என, தெரிகிறது.பொதுத்துறையைச் சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள், வீடு மற்றும் வர்த்தக பயன்பாட்டுக்கு என, இரண்டு வகை சமையல் காஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்கின்றன. சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப, மாதந்தோறும், வர்த்தக பயன்பாட்டு சிலிண்டர் விலையில், மாற்றம் செய்யப்படுகிறது. தற்போது, ...

மதுரை கிரானைட் கொள்ளையில் சிக்கப்போவது யார்? சகாயம் குழு விசாரணை இன்று துவக்கம்

Posted:

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, மதுரை கிரானைட் குவாரிகளில் நடந்த முறைகேடு குறித்த விசாரணையை, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம், இன்று துவக்குகிறார்.தமிழகம் முழுவதும் நடந்த, கனிமவள கொள்ளை குறித்து விசாரிக்க, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயத்தை, சென்னை உயர் நீதிமன்றம் நியமித்தது. முதற்கட்டமாக, மதுரை கிரானைட் கொள்ளை குறித்து விசாரிக்க, அவருக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.அதை தொடர்ந்து, குறிப்பிட்ட சில அதிகாரிகளை, விசாரணைக் குழுவில் இடம்பெற அனுமதிக்கும்படி, சகாயம் தரப்பில், அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. அரசு அதை ஏற்றுக் கொள்ளவில்லை. வேறு அதிகாரிகள் ...

மூன்று நாட்களுக்கு மட்டும் கூடும் சட்டசபை?

Posted:

சென்னை: தமிழக சட்டசபை கூட்டம், மூன்று நாட்கள் மட்டும் நடைபெற வாய்ப்புள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. சட்டசபை கூட்டம் நாளை துவங்குகிறது. இக்கூட்டத்தில், பருப்பு ஊழல், முட்டை முறைகேடு, பால் ஊழல், கனிமவள முறைகேடு, முல்லைப் பெரியாறு அணை பிரச்னை, அரசு அலுவலகங்களில், ஜெயலலிதா படத்தை அகற்றாதது என, பல பிரச்னைகளை எழுப்ப, எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதுகுறித்து, சட்டசபை செயலக அதிகாரிகள் கூறியதாவது: சட்டசபை கூட்டம் எத்தனை நாள் நடைபெறும் என்பது, கூட்டம் துவங்கும் நாளில், அலுவல் குழு கூடி முடிவு செய்து அறிவிக்கும். முதலில், ஒரு வாரம் கூட்டம் நடத்த, ...

ஜெ., மீதான வழக்கில் அப்பீல்: ஆவணங்கள் தயாரிப்பு பணி தீவிரம்

Posted:

பெங்களூரு: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட, நான்கு பேர் மீதான சொத்து குவிப்பு வழக்கின் ஆவணங்கள் தயாரிக்கும் பணி, பெங்களூரு தனி நீதிமன்றத்தில், வேகமாக நடந்து வருகிறது.ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி மீதான வழக்கில், பெங்களூரு தனி நீதிமன்றம் அளித்த தீர்ப்பையடுத்து, உச்ச நீதிமன்றத்தில், நிபந்தனை ஜாமின் கிடைத்தது. சொத்து குவிப்பு வழக்கு ஆவணங்களை, டிச., 18ம் தேதிக்குள் சமர்ப்பித்து, வழக்கை விரைவில் முடிக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்த வழக்கில், தீர்ப்பளித்த நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா மாற்றலானதை அடுத்து, புதிய நீதிபதியாக ...

போக்கு காட்டும் கட்சிகளால் கடும் எரிச்சல்: சாட்டையை சுழற்றுமா தகவல் ஆணையம்?

Posted:

'தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், பொதுமக்கள் கேள்விகள் கேட்டால், அதற்கு பதிலளிக்க வேண்டிய பொறுப்பு, பா.ஜ., - காங்., - பகுஜன் சமாஜ் உள்ளிட்ட ஆறு கட்சிகளுக்கும் உண்டு' என, மத்திய தகவல் ஆணையமான, சி.ஐ.சி., சில மாதங்களுக்கு முன் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, 18 மாதங்கள் கடந்து விட்டன. ஆனால், இந்த ஆறு கட்சிகளுமே, சி.ஐ.சி.,யின் உத்தரவுக்கு கட்டுப்பட மறுக்கின்றன. கட்சிகளுக்கு பொருந்தாது: 'தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வரம்பிற்குள் நாங்கள் இல்லை. அரசுத் துறை தொடர்பான அமைப்புகள், நிறுவனங்களுக்கு மட்டுமே, தகவல் அறியும் ...

அமைச்சரின் ராமர் பேச்சுக்கு பிரதமர் மோடி கண்டிப்பு

Posted:

புதுடில்லி: பொதுக்கூட்டத்தில் அவதூறாக பேசிய, மத்திய பெண் அமைச்சர், சாத்வி நிரஞ்சன் ஜோதி, 47, பார்லிமென்டில் மன்னிப்பு கேட்டார்.டில்லியில், விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பிரசாரத்தில் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.சமீபத்தில் அங்கு நடைபெற்ற, பா.ஜ., பிரசார கூட்டத்தில் பேசிய, மத்திய இணையமைச்சர் நிரஞ்சன் ஜோதி, 'ராமபிரானின் ஆட்சி வேண்டுமா; முறையற்ற வழியில் பிறந்த நபர்களின் ஆட்சி வேண்டுமா' என, பொதுமக்களிடம் கேட்டார். இதை, சில, 'டிவி' ஊடகங்கள் நேற்று முன்தினம் தொடர்ந்து வெளியிட்டன. நேற்று காலையில், பா.ஜ., - எம்.பி.,க்கள் கூட்டம் நடந்தது. ...

ஜெட்லிக்கு பணியாத ரகுராம் ராஜன்: ரிசர்வ் வங்கி வட்டியில் மாற்றமில்லை

Posted:

மும்பை: மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி கூறியும் கூட, ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன், வங்கி வட்டி விகிதங்களை குறைக்காமல் அப்படியே நீடிக்க விட்டு உள்ளார்.நேற்று, ரிசர்வ் வங்கியின் நிதி ஆய்வறிக்கையை, ரகுராம் ராஜன் வெளியிட்டு பேசியதாவது: தற்போதைய சூழலில், வட்டி விகிதங்களை குறைக்க அவசரப்படுவது சரியாக இருக்காது. பணவீக்கம் குறைவதற்கான சூழல் மற்றும் அரசின் நிதியாதாரங்கள் வலுப்பெறும்பட்சத்தில், அடுத்த ஆண்டு துவக்கத்தில், மாற்றம் செய்யலாம். இந்த மாற்றம், வழக்கமான நிதி ஆய்வுக் கொள்கையில் தான் அறிவிக்கப்படும் என்றும் கூற இயலாது. ஒரு சில ...

எல்லை மாநிலங்களில் சட்டவிரோத ஊடுருவல் பிரச்னைக்கு தீர்வு: இந்தியா - வங்கதேச நில எல்லை ஒப்பந்தத்தை அமலாக்க முடிவு

Posted:

புதுடில்லி: கடந்த, நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக முடங்கிக் கிடந்த, இந்தியா - வங்கதேச நில எல்லை மாற்று ஒப்பந்தத்தை செயல்படுத்தி, எல்லை மாநிலங்களில் சட்டவிரோத ஊடுருவலை கட்டுப்படுத்த பிரதமர் மோடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இதற்கு முன்னர் எதிர்ப்பு தெரிவித்து வந்த கட்சித் தலைவர்களையும் அவர் சமாதானம் செய்து, பிற கட்சிகளின் ஆதரவுடன், பார்லியில் மசோதாவை நிறைவேற்ற முடிவு செய்துள்ளார்.மாறுபட்ட கருத்து: கடந்த லோக்சபா தேர்தலின் போது, அசாம் உட்பட, வடகிழக்கு மாநிலங்கள் பலவற்றில் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, 'வங்கதேசத்திலிருந்து ...

அக்னி - 4 ஏவுகணை சோதனை வெற்றி

Posted:

பாலாசூர்: அணு ஆயுதத்தை சுமந்து சென்று இலக்கை தாக்கும் திறன் உடைய அக்னி - 4 ஏவுகணை சோதனை, நேற்று மீண்டும் வெற்றி கரமாக நடந்தது. அக்னி - 4 ஏவுகணைச் சோதனை, ஏற்கனவே மூன்று முறை வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டது. இந்நிலையில், ஒடிசா மாநிலம் பாலாசூர் அருகேயுள்ள வீலர் தீவிலிருந்து, நான்காவது முறையாக நேற்று வெற்றிகரமாக மீண்டும் பரிசோதித்து பார்க்கப்பட்டது. இதுகுறித்து, ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகமான, டி.ஆர்.டி.ஓ.,வின் மூத்த அதிகாரி ரவி குமார் கூறியதாவது: அக்னி - 4 ஏவுகணை, நேற்று காலை, 10:20க்கு, நடமாடும் ஏவுதளத்தின் உதவியுடன் பரிசோதித்து ...

டிச., 25 நல்லாட்சி நாளாக அறிவிப்பு

Posted:

புதுடில்லி: முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்த நாளை, நல்லாட்சி நாளாக கொண்டாட, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை, நேற்று காலையில் நடைபெற்ற, பா.ஜ., பார்லிமென்ட் குழு கூட்டத்தில் வெளியிட்ட பிரதமர் நரேந்திர மோடி, வரும், 25ம் தேதி, வாஜ்பாய் பிறந்த நாள், நல்லாட்சி நாளாக கொண்டாடப்படும் என்றார்.வாஜ்பாய் யார்? பா.ஜ., நிறுவன தலைவர்களில் முக்கியமானவர். சிறந்த பார்லிமென்டேரியன்; பல முறை, எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். மூன்று முறை பிரதமராக பதவி வகித்தவர். சிறந்த நிர்வாகத்தை வழங்கியதாக, பல தரப்பிலும் பாராட்டப்படுபவர். உடல் ...

தலைமை செயலர் உட்பட 12 அதிகாரிகள் மாற்றம்: பதவி ஏற்ற 60 நாட்களுக்குப்பின் ஓ.பி.எஸ்., வேகம்

Posted:

தமிழக அரசின் தலைமை செயலராக இருந்த மோகன் வர்கீஸ் சுங்கத் உட்பட, 12 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், நேற்று, அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். புதிய தலைமை செயலராக, மின்வாரிய தலைவராக இருந்த ஞானதேசிகன் நியமிக்கப்பட்டுள்ளார். முதல்வராக, ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்ற, 60 நாட்களுக்கு பிறகு, அவரது செயல்பாட்டில் வேகம் பிடித்துள்ளது.முதல்வராக பன்னீர்செல்வம் பதவியேற்ற பிறகு, ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகள், ஓரிருவர் மட்டும் மாற்றப்பட்டனர்.நேற்று, அதிரடியாக, தலைமைச் செயலர் மோகன்வர்கீஸ் சுங்கத், மின்வாரியத் தலைவர் ஞானதேசிகன், பொதுப்பணித் துறை செயலர் சாய்குமார், வருவாய் ...

என்.ஜி.ஓ.,க்களின் பொய் பிரசாரம்: மத்திய உள்துறை அமைச்சகம் கடுப்பு

Posted:

புதுடில்லி: ''வெளிநாடுகளில் இருந்து நிதி பெறும் சில அரசு சாரா அமைப்புகளான, என்.ஜி.ஓ.,க்கள், அணுமின் நிலையம் போன்ற விஷயங்களில் பொய் பிரசாரம் செய்வதால், நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது,'' என, மத்திய உள்துறை இணை அமைச்சரும், பா.ஜ.,வை சேர்ந்தவருமான கிரண் ரிஜிஜு கூறினார்.இதுகுறித்து, லோக்சபாவில் அவர் மேலும் கூறியதாவது: அணுமின் நிலையங்கள், சுரங்கங்கள் ஆகியவை தொடர்பான விஷயங்களை கையாளுவது மிகவும் சிக்கலான விஷயம். ஆனால், வெளிநாடுகளில் இருந்து நிதி பெறும் சில அரசு சாரா அமைப்புகள், இதுகுறித்து தொடர்ந்து பொய் பிரசாரம் செய்கின்றன. இது தொடர்பாக, 'கிரீன்பீஸ் ...

பீகார் சின்ஹாக்கள் சி.பி.ஐ.,யில் மீண்டும் ஆதிக்கம்

Posted:

புதுடில்லி: சி.பி.ஐ.,இயக்கனராக இருந்து வந்த ரஞ்சித்சி்ன்ஹா ஓய்வு பெற்றதை அடுத்து அப்பதவிக்கு புதிய இயக்குனராக அனில் சி்ன்ஹா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் பீகார் வாசிகளின் ஆதிக்கம் சி.பி.ஐ.,யில் தொடர்ந்து வருகிறது.இதுவரையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த சி.பி.ஐ., இயக்குனராக இருந்து வந்தார் ரஞ்சித்சின்ஹா. 2ஜி ஊழல் குறித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை சந்தித்தாக இவர் மீது புகார் கூறப்பட்டது. தொடர்ந்து அவரை 2ஜி வழக்கு விசாரணை நடத்துவதில் இருந்து விடுவிக்க சுப்ரீம கோர்ட் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் அவரது பதவிக்காலம் முடிவுக்கு ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™