Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


விகடன் குழும தலைவர் பாலசுப்ரமணியன் மாரடைப்பால் காலமானார்

Posted:

சென்னை:விகடன்' குழுமங்களின் தலைவர் எஸ்.பாலசுப்ரமணியன், 79, நேற்று இரவு, சென்னையில், மாரடைப்பால் காலமானார்.இவரது தந்தை எஸ்.எஸ்.வாசன் தான், 'ஆனந்த விகடன்' வார இதழ் மற்றும் ஜெமினி ஸ்டூடியோவை நிறுவினார்; பல படங்களை இயக்கியவர். தந்தையைப் போலவே இவரும் சாதித்தார்.பாலசுப்ரமணியன், 1935 டிச., 28ல் சென்னையில் பிறந்தார். லயோலா கல்லுாரியில் பி.காம்., முடித்தார். 19 வயதில் 'விகடன்' மற்றும் ஜெமினி ஸ்டூடியோ நிர்வாகப் பொறுப்பை ஏற்றார்.இவரது தலைமையின் கீழ், 'விகடன்' குழுமத்தில் இருந்து, 'ஜூனியர் விகடன், நாணய விகடன்' உள்ளிட்ட வார இதழ்கள் துவங்கப்பட்டன. எம்.ஜி.ஆர்., என்.டி.ஆர்., ...

உயர் போலீஸ் அதிகாரிகளின் வீடுகளில் எடுபிடி வேலை: விடுதலை வேண்டி 'ஆர்டர்லிகள்' ஏக்கம்

Posted:

உயர் போலீஸ் அதிகாரிகளின் வீடுகளில், எடுபிடி வேலை செய்யும், 'ஆர்டர்லி' போலீசார், அடிமை வாழ்வில் இருந்து, விடுதலை கிடைக்காதா என, ஏக்கத்துடன் உள்ளனர்.தமிழக காவல் துறையில், டி.ஜி.பி., - கூடுதல் டி.ஜி.பி., முதல், காவலர் வரை, 1.20 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். அவர்களில், 5,000 போலீசார், உயர் போலீஸ் அதிகாரிகளின் வீடுகளில், எடுபிடி வேலை செய்யும், 'ஆர்டர்லி'யாக உள்ளனர்.உயர் போலீஸ் அதிகாரிகளின் வாரிசுகளை, பள்ளி, கல்லூரிக்கு அழைத்து செல்லுதல், காய்கறி வாங்கி வருதல், தோட்டம் மற்றும் நாய் பராமரிப்பாளர், குடும்பத் தலைவியை அழகு நிலையம் அழைத்து செல்லுதல் உள்ளிட்ட பணிகளில் ...

தேசிய சின்னங்களில் கிரானைட் கொள்ளை: சகாயம் விசாரணையில் 'திடுக்'

Posted:

மேலூர்:மதுரையில் தேசிய புராதன சின்னங்களை 'தீர்வையற்ற தரிசு' 'பயனற்ற குளம்' என போலி ஆவணம் தயாரித்து கிரானைட் கொள்ளைக்கு அரசு அதிகாரிகள் சிலர் துணை போனது ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் நேற்று நடத்திய விசாரணையில்அம்பலமானது.மதுரையில் கிரானைட் கொள்ளை குறித்து ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் விசாரணை நடத்தி வருகிறார். மதுரை அரிட்டாபட்டியில் கலிங்கமலை, கழுகுமலை, ஆப்டாம்மலை, தேங்கூர்மலை, ராமாயிமலை என ஏழு மலைகள் உள்ளன. இங்கு கி.மு., இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டுக்கள் உள்ளன. இம்மலைகளில் சமணர்கள் வாழ்ந்தனர். இவை தொல்லியல்துறையின் கட்டுப்பாட்டில் தேசிய புராதன ...

போலீஸ் 'சல்யூட்'டுக்கு பின்னணி என்ன? ஆர்ப்பாட்டத்தில் விஜயகாந்த் சூசக பேச்சு

Posted:

'அரசாங்கத்துக்கு உயர் நீதிமன்றம் அபராதம் விதித்தாலும், அதை சாதனை என்கின்றனர். இதைவிட கேவலம், வேறு என்ன இருக்க முடியும்?' என, மின் கட்டண உயர்வை கண்டித்து, மதுரையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பினார்.ஆர்ப்பாட்டத்தில், அவர் பேசியதாவது: அ.தி.மு.க., அரசு மின் கட்டணத்தை உயர்த்தி, மக்கள் தலையில், சுமையை ஏற்றியுள்ளது. ஆண்டுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டுவதாக கூறி, மூன்று ஆண்டுகளில், 45 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு, கட்டணங்களை உயர்த்தி விட்டனர்.மின் நிலையம் எங்கே? 'நாங்கள் ...

இன்றும் நாளையும் சென்னையில் அமித் ஷா முகாம்: தமிழக பா.ஜ.,வின் அரசியல் வியூகத்தில் மாற்றம் நிகழுமா

Posted:

பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா, இன்று சென்னை வருகிறார். சென்னையில், மாலை நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார். நாளை காலையில், தமிழக பா.ஜ., நிர்வாகிகளுடனும், மாலையில் மாவட்ட தலைவர்களுடனும், அவர் ஆலோசனை நடத்துகிறார்.பா.ஜ., தேசிய தலைவராக பொறுப்பேற்ற பின், அதிகாரப்பூர்வ பயணமாக அமித் ஷா, இன்று, முதன்முறையாக சென்னை வருகிறார். கொச்சியில் இருந்து விமானம் மூலம், இன்று பிற்பகல் 1:00 மணிக்கு, சென்னை விமான நிலையம் வருகிறார். அங்கு அவருக்கு, தமிழக பா.ஜ., சார்பில், வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதன்பின்னர் அவர், கிண்டியில் உள்ள லீ மெரிடியன் ஓட்டலில் ஓய்வெடுக்கிறார். மாலை, ...

மீனவர்களை கொன்ற மாலுமிகளை இந்தியாவுக்கு அனுப்ப இத்தாலி மறுப்பு

Posted:

புதுடில்லி: கேரள மீனவர்கள் கொலை வழக்கில் தொடர்புடைய, இரண்டு இத்தாலியர்களை, இந்தியாவிற்கு அனுப்புவதற்கான சூழல் தற்போது இல்லை என, இத்தாலி தெரிவித்துள்ளது.கடந்த, 2012ம் ஆண்டு, இத்தாலி கப்பல் மாலுமிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில், கேரளாவை சேர்ந்த இருமீனவர்கள் உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு அவர்கள் ஆஜராவார்கள் என, இத்தாலி அரசு உறுதி அளித்ததன் பேரில், மாலுமிகள் இருவரும் தாய்நாடு திரும்பினர். இந்நிலையில், ஜனவரியில் விசாரணைக்கு வரும் இவ்வழக்கில், மாலுமிகள் இருவரும் கண்டிப்பாக ஆஜராக வேண்டும். அவர்களுக்கு மேலும் கால அவகாசம் வழங்க முடியாது ...

வாத்ரா - டி.எல்.எப்., 'டீலிங்' இரண்டு பக்கங்கள் 'மிஸ்சிங்'

Posted:

புதுடில்லி: காங்., தலைவர் சோனியாவின் மருமகன் ராபர்ட் வாத்ராவுக்கும், முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான, டி.எல்.எப்.,க்கும் இடையே, அரியானா மாநிலத்தில் நடைபெற்ற நில பேரம் தொடர்பான, முக்கிய ஆவணங்கள், திடீரென காணாமல் போயுள்ளன. இதுகுறித்து, விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.அரியானாவில், இப்போது, பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான அரசு பதவியில் உள்ளது. இதற்கு முன், காங்கிரசை சேர்ந்த, பூபிந்தர் சிங் ஹூடா தலைமையிலான அரசின் ஆட்சியின் போது, சோனியா மருமகன் ராபர்ட் வாத்ரா, ஏராளமான நிலங்களை வாங்கிக் குவித்தார்.அவரின் மோசடிகளை ...

ரயில்வே மெத்தனத்தால் ரூ.1,635 கோடி இழப்பு: லோக்சபாவில் சி.ஏ.ஜி., அறிக்கை தாக்கல்

Posted:

புதுடில்லி: சரக்கு ரயில் போக்குவரத்தை சீரிய முறையில் நிர்வகிக்க தவறியதால், 2008 - 13ம் ஆண்டு வரையிலான காலத்தில், ரயில்வேக்கு, 1,635 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என, தலைமை கணக்கு தணிக்கை அலுவலகம் தெரிவித்து உள்ளது.இதுகுறித்து, லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை விவரம்:பல்வேறு ரயில் நிலையங்களில், அளவுக்கு அதிகமான சரக்கு ரயில் பெட்டிகள் தேக்கி வைக்கப்பட்டுள்ளன. இதனால், சரக்குகளை கொண்டு செல்லும் ரயில் பெட்டிகளுக்கு பற்றாக்குறை ஏற்படுகிறது. மேலும், சரக்கு ரயிலை இயக்குவதற்கான ரயில் இன்ஜின்கள் போதிய அளவில் கிடைப்பதில்லை. இதனால், சரக்கு ...

மத்திய அரசின் கெடுபிடியால் அதிகாரிகள் கலக்கம்: இ-சமிக் ஷா கண்காணிப்பால் பணிகள் ஜரூர்

Posted:

புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் திட்டங்கள், எளிதில் மக்களை சென்றடைய ஏதுவாக, 'இ - சமிக் ஷா' என்ற புதிய, டிஜிட்டல் கண்காணிப்பு முறையை, மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது.இதன் மூலம் திட்டங்களின் தற்போதைய நிலைமை குறித்து ஒவ்வொரு கட்டத்திலும், பிரதமர் மோடி மற்றும் கேபினட் செயலர் போன்ற உயரதிகாரிகள் அறிந்து, அவற்றை விரைந்து செயல்படுத்த அறிவுரை வழங்க முடியும். இதனால், முந்தைய ஆட்சியில் ஏமாற்றியது போல, ஏமாற்ற முடியாமல் அதிகாரிகள் விழி பிதுங்கி வருகின்றனர்.வசவு வரும்:மத்திய அரசின் ...

கிரிக்கெட் போட்டியில் ரூ.262 கோடி வரி ஏய்ப்பு

Posted:

புதுடில்லி: 'கிரிக்கெட் போட்டிகள் நடத்தியது தொடர்பான விஷயத்தில், 262 கோடி ரூபாய் அளவுக்கு, சேவை வரி ஏய்ப்பு நடந்துள்ளது' என, மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து, லோக்சபாவில், நேற்று மத்திய நிதித் துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா மேலும் கூறியதாவது: கடந்த 2009 10ல், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் இந்தியன் பிரிமியர் லீக் ஆகியவற்றின் சார்பாக, கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டதில், இந்த வரி ஏய்ப்பு நடந்துள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக, 213 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதுதவிர, கிரிக்கெட் போட்டிகள் நடத்தியது ...

கண்டக்டர், டிரைவர்களை நேரடியாக தேர்வு செய்ய தடை! எழுத்து தேர்வு நடத்த அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

Posted:

சென்னை: தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில், ஓட்டுனர், நடத்துனர் பணியிடங்களுக்கு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது; எழுத்து தேர்வு நடத்த அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள, எட்டு அரசு போக்குவரத்து கழகங்களில், ஓட்டுனர், நடத்துனர், இளநிலை தொழில்நுட்ப உதவியாளர், உதவி பொறியாளர், இளநிலை பொறியாளர் என, 7,500 காலி பணியிடங்கள் உள்ளன.பணியிடங்களுக்கு, வேலைவாய்ப்பகம் மூலமும், நேரடியாக விண்ணப்பிக்கவும் வாய்ப்பு வழங்கப்பட்டது. பணிகளில் சேர, போக்குவரத்து கழக அலுவலகங்களில், 2.31 லட்சம் பேர் விண்ணப்பம் ...

ஆட்சி மொழியாக தமிழ் கிடையாது: பார்லியில் மத்திய அரசு அறிவிப்பு

Posted:

புதுடில்லி:தமிழ் உட்பட எந்தவொரு மொழியையும், மத்திய அரசின் ஆட்சி மொழியாக அறிவிக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை' என, பார்லிமென்டில் நேற்று திட்டவட்டமாக, அமைச்சர் கூறினார்.ராஜ்யசபாவில் நேற்று, தமிழகத்தை சேர்ந்த, காங்கிரஸ் எம்.பி., சுதர்சன நாச்சியப்பன், 'தமிழ் மொழியை ஆட்சி மொழியாக, மத்திய அரசு அறிவிக்க வேண்டும்' என கொண்டு வந்த, தனிநபர் விவாதத்தில் குறுக்கிட்டு பேசிய, மத்திய உள்துறை இணையமைச்சர் ஹரிபாய் சவுத்ரி கூறியதாவது:மத்திய அரசின் ஆட்சி மொழியாக, இப்போது ஆங்கிலம் மற்றும் இந்தி உள்ளது. கூடுதலாக ஒரு மொழியை சேர்க்க வேண்டும் என்றால், அரசியல் அமைப்புச் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™