Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


திருமணமாகப் போகும் தன் மகளுக்கு ஒரு தந்தையின் அறிவுரை :

Posted: 19 Dec 2014 01:19 PM PST

வழக்கமாக மணப்பெண்ணிற்கு அம்மா மட்டும் தானே அறிவுரை கூறுவார்கள், பின் ஏன் புதிதாய் உன் அப்பா உனக்கு அறிவுரை கூறுகிறேன் என்று உனக்கு வியப்பாக இருக்கிறதா? செல்லமே! அப்பாவும் மனம் திறந்து உன்னிடம் சில விஷயங்களை கூற விரும்புகிறேன், உன் எதிர்கால மணவாழ்க்கையில் ஏதோ ஒரு தருணத்தில் உபயோகமாக இருக்கட்டும் என்ற நம்பிக்கையில்.. 1.என் அப்பாவின் நேர்மை, என் அப்பாவின் திறம்பட முடிவெடுக்கும் திறன், என் அப்பா...என அடுக்கடுக்காக நீ உன் அப்பாவிற்கு சூட்டும் க்ரீடமும் , என் அப்பாதான் 'பெஸ்ட்' என்ற எண்ணமும் ...

பாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு

Posted: 19 Dec 2014 11:07 AM PST

மகாகவி பாரதியின் 133 வது பிறந்தநாள் விழாவில் (11/12/14) அன்று அவன் பிறந்த மண்ணான எட்டைய புரத்தில் பாரதி மணிமண்டபத்தில் பாரதியின் கீழ் உங்கள் ஆதிராவுக்கு 'பாரதி பணிச்செல்வர்' என்னும் விருதினை அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் வழங்கியது என்பதை என் ஈகரை உறவுகளிடம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்வு அடைகின்றேன். இந்த ஆண்டில் (2014ல்) பாரதியாரின் நினைவு நாள், பிறந்தநாள் இரண்டிலும் விருது பெற்றுள்ளேன். நினைவு நாளில் 'பாரதி கண்ட கல்வியாளர்'  விருதும் பிறந்தநாளில் 'பாரதி பணிச்செல்வர்' விருதும் பெற்றுள்ளது ...

இணையத்தில் ரசித்த புகைப்படங்கள்

Posted: 19 Dec 2014 10:58 AM PST


-

-

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள்-வேளுக்குடி கிருஷ்ணன்

Posted: 19 Dec 2014 10:55 AM PST

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள்-வேளுக்குடி கிருஷ்ணன் 'கண்ணனை நினைக்காத நாளில்லையே...' என்ற பாடல் வரிகளுக்கேற்ப, கண்ணனைப் போற்றும் கதைகளை கண்ணனின் குணாதிசயமான சுறுசுறுப்போடும் துறுதுறுப்போடும் குதூகலத்தோடும் விளையாட்டு போல் எளியவரின் பக்தியாக உருக வைக்கும்படி அழகாகச் சொல்கிறது இந்த நூல். படிக்கப் படிக்க விறுவிறுப்பும் பக்திப் பரவசமும் நம்மை மெய்மறக்கச் செய்துவிடுகின்றன. சகல புண்ணியங்களும் பெற வேண்டுமென்றால் பகவானின் திவ்விய நாமங்களைச் சொன்னாலே போதும் என்கின்றன புராணங்கள். கண்ணனின் திருநாமங்களுக்கு ...

நீ நடுங்குவது யாருக்கோ?

Posted: 19 Dec 2014 10:54 AM PST

உன் கருங்கூந்தலை கைது செய்திருக்கும் காற்றை விடுதலை செய்ய என் விரல்களிடம் விவரம் கேட்கவா? உன் காது குழிகளில் சிக்கியிருக்கும் கறுத்துப்போன வேலங்குச்சிக்குப் பதிலாக கால்பவுனில் நகையெடுத்து நான் மாட்டவா? தேன் ஊறும் உந்தன் இதழ்களில் தேன் எடுக்க எந்தன் இதழை வண்டாக மாற்றி வரட்டுமா? தினந்தினம் உன்னைத் தேடித்தேடியே வாழ்நாளைக் கழிக்கின்ற எனக்கு வசந்தத்தைத் தரமாட்டாயோ? தாமரையாய் மலர்ந்திருக்கிற தாவணி நிலவே... உன்னைத் தாலிகட்டி ஊரறிய அழைத்துச் செல்ல தாம்பூழத் தட்டுடன் வந்து தலை ...

உளவியல் உங்களுக்காக - இராம. கார்த்திக் லெட்சுமணன்.

Posted: 19 Dec 2014 10:46 AM PST

"உளவியல் உங்களுக்காக!" என்று தலைப்பிடப்பட்டிருக்கும் இந்தப் புத்தகம் உளவியல் தொடர்பான 16 கட்டுரைகளை உள்ளடக்கியது. இந்தக் கட்டுரைகள் இன் அன்ட் அவுட் சென்னை என்ற மின்னிதழில் பல்வேறு வாரங்களில் வெளியிடப்பட்டவை. இதனை ஒரு புத்தகமாக வெளியிட யோசனை தந்த நண்பர் திரு. அன்வர் அவர்களுக்கும், இன் அன் அவுட் சென்னை மின்னிதழின் பதிப்பாசிரியர் திரு. விஜய குமார் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இந்தக் கட்டுரைகள் படிப்பவர்களுக்கு பயனுள்ளவைகளாய் இருக்கும் என்று உறுதியாய் நம்புகிறேன். படித்த பின் உங்கள் ...

எது கேட்டாலும் என் லவ்வர் வாங்கித் த ருவார்..!

Posted: 19 Dec 2014 10:40 AM PST

- வாய் கிழியப் பேசினாரே அந்த ஆசாமி…அப்பறம் என்ன ஆச்சு..? - டாக்டரிடம் போய் தையல் ஊசி போட்டுக்கிட்டு வந்தார்..! - ————————————————————————————– - உங்களுக்கு ஆபரேசன் பண்ணிடலாமா..? - சாதாரண இருமலுக்கு போய் ஏன் ஆபரேசன் டாக்டர்..? - கொல், கொல்'னு இருமறீங்களே..! - ————————————————————————————— - சின்ன வீடு கட்டலாம்னு என் கணவர்கிட்டே சொன்னது தப்புடி…! - ஏன்.? - சின்ன வீடு செட்டப் பண்ணிட்டாரே..! - ———————————————————————————— - எங்க நாய் ரொம்ப புத்திசாலி…! - எப்படி சொல்றே..? - என்னோட ...

வாழ்த்துவோம் க்ரிஷ்ணம்மாவை -29000

Posted: 19 Dec 2014 10:28 AM PST

வாழ்த்துவோம் க்ரிஷ்ணம்மாவை 29000

அதிவேக சூப்பர்  எக்ஸ்பிரஸ் ,
அடுப்பங்கரை அரசி
ஆன்மீக ஆச்சி
கிருஷ்ணம்மா அவர்களின்
29000 பதிவு அதிவீர ஹனுமான் .



வாழ்த்துவோம் வாருங்கள் உறவுகளே

ரமணியன்

இயல்பே அழகு என்பேன் -பாடல் இடம் பெற்ற திரைப்படம் எது..? -

Posted: 19 Dec 2014 10:19 AM PST

-

பெண்ணை அறிந்து கொண்டேன்
இயல்பே அழகு என்பேன்
-
பூவை வரைந்து
அதிலே மீசை வரைய மாட்டேன்
-
மௌனம் பேசும்போது
சத்தம் கேட்க மாட்டேன்
-
மூன்றாம் பிறையின் உள்ளே
நிலவைத் தேட மாட்டேன்..!
-

ஐ படத்துக்கு யு/ஏ சான்று! ஜனவரி 9ல் வெளியீடு

Posted: 19 Dec 2014 09:56 AM PST

- விக்ரம், எமி ஜாக்சன், சந்தானம், சுரேஷ் கோபி மற்றும் பலர் நடிக்க ஷங்கர் இயக்கியுள்ள படம் ஐ. ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிக்க பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய ஏர்.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். விக்ரம் 40 கிலோ கொண்ட ஒல்லிப் பிச்சானாகவும், 110 கிலோ எடை கொண்ட மாமிச மலையாகவும், "அந்நியன்' ரெமோ டைப்பிலான லவ்வர் பாயாகவும் நடித்திருக்கிறார். இதுதவிர நான்கு கெட் அப்கள் வேறு இருக்கிறது. படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இப்படத்திற்கு தணிக்கை அதிகாரிகள் யு/ஏ சான்றிதழ் ...

ஊஞ்சலாடும் உள்ளம் - முத்துலட்சுமி ராகவன் நாவல் .

Posted: 19 Dec 2014 08:55 AM PST

அரசும் புரட்சியும் - லெனின் எழுதிய நூல் தமிழில் .

Posted: 19 Dec 2014 08:53 AM PST

லெனினின் மேதைமைக்கும், புரட்சிகர உணர்வுக்கும் எடுத்துக்காட்டுகளாய்த் திகழும் நூல்களுள் தனிச்சிறப்பான ஒன்று இது. அரசு என்கிற நிறுவனத்தின் தோற்றம், எதன் பொருட்டு நிகழ்ந்தது? 'வர்க்கப் பகைமைகள் இணக்கம் காண முடியாதவை ஆனதன் விளைவாய்த் தோன்றியதே அரசு' என்கிறார் லெனின். 'சமுதாயத்திலிருந்து உதித்ததுதான், ஆனாலும் சமுதாயத்துக்கு மேலானதாய்த் தன்னை அமர்த்திக் கொள்கிறது. மேலும் மேலும் தன்னை அதற்கு அயலானாக்கிக் கொள்ளும் இந்தச் சக்தியே அரசு எனப்படுவது' என்ற ஏங்கெல்சின் வரையறையை மேற்கோளிட்டுத் தொடர்கிறார் ...

சமூகத்தின் வலிகளை பதிவிடும் -வலிப்போக்கனின் கவிதைகள்.

Posted: 19 Dec 2014 08:52 AM PST

வணக்கம். பத்தோடு பதினொன்றாக இல்லாமல் பனிரெண்டாக இருந்து நான் படித்த,கேட்ட,பார்த்த சமூக அவலங்களையும் அந்த அவலகங்களினுடே நான் பட்ட இம்சைகளின் அனுபவங்களை கவிதைகளாக இணையத்தில் "வலிப்போக்கன்" என்ற என் பிளாக்கரில் என் அறிவு மட்டத்தில் எழுதி வந்ததை மின்நூலாக கிரியேட்டீவ் காமன்ஸ் உரிமையின் மூலமாக FreeTamilEbooks குழுவினரால் இந்த குப்பையும் தங்களுக்கு படிக்க உதவும் என்ற நல்ல எண்ணத்தில் தொகுத்து வடிவமைத்து வெளியீட்டுள்ளார். இந்த மின் நூலுக்கான உழைப்பும் அந்த உழைப்பிற்க்கான உரிமையும் FreeTamilEbooks ...

பயத்தோடு வாழப் பழகிக் கொள் - ஜோதிஜி

Posted: 19 Dec 2014 08:50 AM PST

நான் வாழ்ந்து வந்த வாழ்க்கை , நான் வாழ்ந ்து கொண்டிருக்கும் வாழ்க்கை , இதன் வழியே நான் பார்த்த சமூகம் இதன் மூலமாக பெற்ற பாடங்கள் , நான் பெற்ற தாக்கம் மற்றும் நான் உணர்ந்து கொண்டவைகளை இங்கே கட்டுரைகளாக "பயத்தோடு வாழப் பழகிக் கொள்" என்ற பெயரில் உங்களுக்கு தொகுத்து கொடுத்துள்ளேன் . ஒவ்வொரு கட்டுரைக்கும் கீழே நான் எழுதிய தேதியை குறிப்பிட்டு உள்ளேன் . அதன் மூலம் அந்த சம்பவம் நடந்த காலத்தை உங்களால் ஒப்பிட்டுக் கொள்ள முடியும் . இதில் உள்ள ஒவ்வொரு கட்டுரைகளிலும் நீங்களும் வாழ்ந்து இருக்கக்கூடும் ...

விகடன் பத்திரிகை குழும தலைவர் பாலசுப்ரமணியன்--மறைவு

Posted: 19 Dec 2014 08:28 AM PST

விகடன் பத்திரிகை குழும தலைவர் பாலசுப்ரமணியன்--மறைவு சென்னை: விகடன் பத்திரிகை குழும தலைவர் பாலசுப்ரமணியன் மாரடைப்பு காரணமாக இன்று இரவு 7.45 மணியளவில், சென்னை மலர் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 79. ஜெமினி ஸ்டுடியோ எஸ்.எஸ். வாசனின் மகனான பாலசுப்ரமணியன், கடந்த 1936ம் வருடம் டிசம்பர் 28ம் தேதி சென்னையில் பிறந்தார். இவர் லயோலா கல்லூரியில் பி.காம்., பட்டப்படிப்பு படித்தார். விகடன் குழுமத்தில், கடந்த 1956ம் ஆண்டு இணைந்தார். பின்னர் அவரது தந்தை மரணத்திற்கு பின் ஜெமினி மற்றும் விகடன் ...

அதென்ன கூவிப்படை..?

Posted: 19 Dec 2014 08:09 AM PST

தலைவர் ஒரு புறம் கூலிப்படையும் இன்னொரு புறம் கூவிப்படையும் வெச்சிருக்காரு..! - அதென்ன கூவிப்படை..? - தலைவரோட புகழை எப்பவும் கூவிப்பாடும் படை..! +++++++++ ++++++++++++++++++++++++ பக்கத்து வீட்டுக்கு தெரியும்படி நீயும் உன் மாமியாரும் சண்டை போட்டுக்கிறீங்களே…ஏன்? பக்கத்து வீட்டு பாமாவை குஷிப்படுத்தத்தான்…! ++++++++++ +++++++++++++++++++++ டேய், 2 வருடத்தில முடிக்க வேண்டிய "correspondance course" அது எப்படி 6 மாசத்துல முடிச்சுட்ட? அதுவா, நான் "courier" மூலம் படிச்சேன் ...

கள்ளநோட்டை கண்டுபிடிக்க எளிய வழி...

Posted: 19 Dec 2014 05:42 AM PST


-
பார்த்ததில் பிடித்தது

தமிழில் வருகிறது சச்சின் சுயசரிதை

Posted: 19 Dec 2014 02:59 AM PST

= புனே: இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கை வரலாறு, 'பிளேயிங் இட் மை வே' என்ற பெயரில் அண்மையில் ஆங்கிலத்தில் புத்தகமாக வெளியானது. - இந்நிலையில் அந்தப் புத்தகத்தை தமிழ், மராத்தி, இந்தி, மலையாளம், வங்காளம், அசாமி, தெலுங்கு, குஜராத்தி ஆகிய மொழிகளிலும் மொழிபெயர்த்து வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. - முதற்கட்டமாக மராத்தியில் 2015 மார்ச் மாதத்தில் வெளியிடப்படும் என்றும் மற்ற ஏழு மொழிகளிலும் ஜூலை மாதத்திற்குள் அந்தப் புத்தகம் வெளியீடு ...

சிங்கப்பூரில் குடிபோதையில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: இந்தியருக்கு ஒன்பது மாத சிறை

Posted: 19 Dec 2014 02:54 AM PST

சிங்கப்பூரில் வேலை பார்த்து வரும் 26 வயது இந்தியரான சத்திய இளையராஜா கடந்த நவம்பர் 7 ஆம் தேதி, 39 வயதான ஒரு அழகுக் கலை நிபுணருடன் அடுக்கு மாடி குடியிருப்பின் லிஃப்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென இளையராஜா அப்பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் நான்காவது மாடியில் இறங்கியுள்ளார். இளையராஜா அந்தப் பெண்ணை பின் தொடர்ந்து மீண்டும் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து அந்தப் பெண் தன்னைத் தற்காத்துக்கொள்ள கையில் இருந்த குடையால் ...

21st. Dec.ஹனுமத் ஜெயந்தி ...என் 29000 வது பதிவு - கிருஷ்ணாம்மா :)

Posted: 19 Dec 2014 01:22 AM PST

டிசம்பர்  21, மார்கழி மாத அமாவாசை அதுவும் தவிர ஹனுமத் ஜெயந்தி எப்படிப்பட்ட விசேஷமான நாள்! ஹனுமன் என்று நினைத்தாலே அவருடைய கம்பீரமும், கூடவே பக்திகலந்த அவரது பணிவும் கண்ணுக்குள் நிறைகிறது. " அசாத்ய சாதக ஸ்வாமின் அசாத்யம் தவகிம்வத: ராமதூத க்ருபா சிந்தோ மத்கார்யம் சாதயப் ப்ரபோ" ஹனுமனை நினைத்தாலே எப்படிப்பட்ட காரியமானாலும் அதில் ஜெயம் கிடைத்துவிடும். அப்படிப்பட்ட சக்தி வாய்ந்த ஒரு அபூர்வ தெய்வம் அல்லவோ ஹனுமன்? ஆண்டவனை தொழுவதை விட அவருடைய மெய்யடியார்களை தொழுவது சிறந்த பலனைத் தரும். ...

ஒளி மயமான எதிர்காலம் – ஹன்சிகா

Posted: 19 Dec 2014 12:57 AM PST

- - நடிகை ஹன்சிகாவை பொறுத்தவரையில் 2015ம் ஆண்டு சிறந்த ஆண்டாகத்தான் இருக்கப் போகிறது. காரணம், அவர் நடித்த படங்கள் தொடர்ந்து வெளியாக உள்ளது. தனது வசீகர இளைய உள்ளங்களையும், ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவும் மனப்பான்மை மூலம் எல்லோருடைய அன்பையும் ஈன்ற ஹன்சிகா 2015 ஆம் ஆண்டின் முதல் விடியலுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார். அரண்மனை திரைப்படத்தின் மாபெரும் வெற்றி தந்த தன்னைம்பிக்கையுடன் ஹன்சிகா கூறியதாவது' அரண்மனை திரை உலகில் எனக்கு ஒரு விசாலமான இடத்தை தந்து உள்ளது. என்னுடைய திறமை மேல் நம்பிக்கைக் ...

சென்னையில் இன்று முதல் மங்கோலியத் திரைப்பட விழா

Posted: 18 Dec 2014 11:59 PM PST

- சென்னையில் மங்கோலியத் திரைப்பட விழா வெள்ளிக்கிழமை (டிச.19) தொடங்குகிறது. புது தில்லியிலுள்ள மங்கோலிய தூதரகம், தமிழகத்திலுள்ள அதன் துணைத் தூதரகம் ஆகியவை இணைந்து இதற்கு ஏற்பாடு செய்துள்ளன. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷ்ய கலாசார மைத்தில் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் இந்தியாவுக்கான மங்கோலியத் தூதர் சஞ்ஜாசூரென் பாயாரா இத் திரைப்பட விழாவைத் தொடங்கி வைக்கிறார். இதில், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சங்கத் தலைவர் பி.சசிக்குமார், மங்கோலிய துணைத் தூதர் சி.என். ...

அஜீத்தின் “என்னை அறிந்தால்” ட்ரெய்லர் டிச.24ல் வெளியீடு

Posted: 18 Dec 2014 11:57 PM PST

- கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகும். அஜீத்தின் என்னை அறிந்தால் ட்ரெய்லர் வரும் 24ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. - "என்னை அறிந்தால்" படத்தில் அஜீத், அனுஷ்கா, த்ரிஷா, அருண் விஜய் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான என்னை அறிந்தால் டீசர், இந்தியாவில் அதிக லைக்குகள் பெற்று பெரும் சாதனை படைத்தது. - மேலும் டீசர் வெளியான அன்று சமூக வலைதளங்களில் என்னை அறிந்தால் பெயரில் புதிய ட்ரெட்டிங்கை உருவாக்கி இந்தியாவில் ...

சாமி என் மனைவி எனக்கு அடங்கி நடக்கணும்..!

Posted: 18 Dec 2014 09:26 PM PST

சாமி என் மனைவி எனக்கு அடங்கி நடக்கணும்..! - என் சக்திக்கு உட்பட்டதை மட்டும் கேளு மகனே..! - -அசோக்ராசா - ——————————————————————————— – என்னப்பா இது..திடீர்னு ஆபரேசன் வேண்டாம்னுட்டே? - உங்க நர்ஸைப் பார்த்தேன், வாழணும்னு ஆசை வந்திடுச்சு டாக்டர்..! - -அசோக்ராசா - ———————————————————————————— - கிரிக்கெட்ல ஆடுற சிய ர் கேர்ள்ஸ் எதுக்கு ஆசிரமத்தில் இருக்காங்க..? - தியானப் பயிற்சிக்கு வந்தவர்களை உற்சாகப்படுத்த ஸ்வாமி பண்ணின ஏற்பாடு இது..! - -அமுதா அசோக்ராசா -

வேலன்:-இணையத்தில் தமிழில் தட்டச்சு செய்ய

Posted: 18 Dec 2014 09:13 PM PST

மைக்ரோசாப்ட்அப்ளிகேஷன்கள்.கூகுள்குரோம்.ஜிமெயில்.யாகூமெயில்.இன்டர்நெட் எக்ஸ்புளோரர்.நோட்பேட்.வேர்ட்பேட்.அடோப் அப்ளிகேஷன்கள் என அனைத்திலும் தமிழில் எளிமையாக தட்டச்சு செய்திட இந்த இலவச குறள் சாப்ட்வேர் பயன்படுகின்றது. இதனுடைய முகவரி தளம் காண இங்கு கிளிக் செய்யவும். இந்த சாப்ட்வேரினை பதிவிறக்க்ம் செய்து இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.  இதில் உள்ள என்கோடிங் கிளிக் செய்திட கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.அதில் UNICODE.TSC.TAB.TAM.LIPI T OLD.ஆகிய கோடிங வகைகள் ...

அழகி

Posted: 18 Dec 2014 09:12 PM PST

அவள் ஆடை அழகு அவள் அணிந்த பிறகு மிளிர்ந்திடும் அணங்கு உடை அழகா இல்லை அவள் அழகா ! அவள் அணிந்ததால் ஆடை பெற்றது அழகு சிறை பட்டது மனது போதை ஏற்றுது அவள் உடல் அழகு ! நிலவென்ன அழகு இவள் முன்னே கிரங்கிடும் உள்ளம் நிலவதைக் கண்டால் விழுந்திடுமா மனம் ! இவள் நினைவதில் விழுந்ததால் கவி யாத்திட்டான் புலவன் வழி தெரியாமல் விழுந்திட்டான் பாவம் ! உச்சி முதல் கால் பாதம்வரை உச்சி கொட்டியே ரசித்திட்டான் தினம் மறந்திட்டான் நித்திரையை ! அவன் படைப்பினில் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™