Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


ஜெயலலிதாவுக்கு ஜாமின் மேலும் 4 மாதங்களுக்கு நீட்டிப்பு: அப்பீல் மனுவை தினமும் விசாரிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Posted:

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உட்பட நான்கு பேருக்கும்ஜாமினை, மேலும் நான்கு மாதங்களுக்கு நீட்டித்துள்ள சுப்ரீம் கோர்ட், வழக்கை தினந்தோறும் நடத்தி, மூன்று மாதங்களுக்குள் முடிக்க வேண்டுமென்றும் உத்தரவிட்டுள்ளது. இதற்காகவே, கர்நாடகா ஐகோர்ட்டில், சிறப்பு அமர்வை ஏற்படுத்தும் படியும் உத்தரவிட்டுள்ளது.சொத்துக் குவிப்பு வழக்கில், பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர், தங்களுக்கு, ஜாமின் வழங்கும்படி கர்நாடகா ஐகோர்ட்டில் முறையிட்டனர். அங்கு அவர்களது ...

ஜி.எஸ்.எல்.வி., மார்க் 3 சோதனை வெற்றி

Posted:

சென்னை: இந்திய தொழில்நுட்பத்தில் உருவான அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்களை விண்ணிற்கு எடுத்துச் செல்லும் அடுத்த தலைமுறை ரக சோதனை ரீதியிலான, ஜி.எஸ்.எல்.வி., 'மார்க் 3' ராக்கெட், நேற்று காலை, வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.பி.எஸ்.எல்.வி., மற்றும் ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட்டுகளை, 'இஸ்ரோ' விண்ணில் செலுத்தி வருகிறது. இந்திய தொழில்நுட்பத்தில் உருவான, அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட, ஜி.எஸ்.எல்.வி., மார்க் 3 ராக்கெட்டை, 'இஸ்ரோ' விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இந்த ராக்கெட், சோதனை முறையில் நேற்று காலை, 9:30 மணிக்கு, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ...

சமூக வலைதளங்களில் இ - மெயிலில் கருத்து பதிவு செய்தால் கைது இல்லை: கருத்து சுதந்திரத்திற்கு ஆபத்தில்லை என மத்திய அரசு விளக்கம்

Posted:

புதுடில்லி: 'தகவல் தொழில்நுட்ப சட்டத்தின், 66 - ஏ பிரிவு, உடல் ரீதியாகவோ அல்லது கலாசார ரீதியாகவோ பிறரை மிரட்டி, இடையூறு செய்ய நினைப்பவர்கள் மேல் தான் பாய வேண்டுமே தவிர, சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிப்பவர்கள் மீது பாயக் கூடாது' என, சுப்ரீம் கோர்ட்டில், மத்திய அரசு தன் தரப்பு கருத்தை பதிவு செய்தது.பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களிலும், தகவல் தொழில்நுட்ப ஊடகங்களான, மொபைல் போன் எஸ்.எம்.எஸ்., மற்றும் இ - மெயில் போன்றவற்றில், ஒருவர் தெரிவிக்கும் கருத்து, பதிவு செய்யும் விஷயங்கள், ஒரே நேரத்தில் பலரையும் சென்றடைகின்றன. அத்தகைய கருத்துக்களால் ...

மருத்துவ மாணவர் சேர்க்கை மோசடியில் ரூ.10,000 கோடி: கொழிக்கும் தனியார் மருத்துவ கல்லூரிகள்

Posted:

புதுடில்லி: 'நாடு முழுவதும், எம்.பி.பி.எஸ்., மற்றும் மருத்துவ மேல்படிப்பு மாணவர் சேர்க்கையில், ஒவ்வொரு ஆண்டும், 10 ஆயிரம் கோடி ரூபாய் கறுப்பு பணம் புழங்குகிறது' என்ற அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. இந்த மோசடியில், பெரும்பாலான தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கும், சிறுபான்மையினர் நடத்தும் மருத்துவக் கல்லூரிகளுக்கும், தங்கள் வாரிசுகளை மருத்துவர்களாக ஆக்க வேண்டும் என, ஆசைப்படும் தனிநபர்களுக்கும் பங்கிருக்கிறது என்பது தெரிய வந்துள்ளது.நாடு முழுவதும் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில், 27 ஆயிரம் இடங்கள் உள்ளன. அவற்றில், 30 சதவீத இடங்களை, அந்தந்த ...

மயானத்தையும் விட்டு வைக்காத கிரானைட் குவாரிகள்: ஆய்வு செய்த சகாயம் அதிர்ச்சி

Posted:

மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் திருவாதவூர் அருகே புராதன சின்னங்கள், விளைநிலங்கள், நீர் ஆதாரங்கள், மேய்ச்சல் மற்றும் பஞ்சமி நிலங்கள், மயானம் போன்றவை கிரானைட் குவாரிகளால் சின்னபின்னமானது கண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் அதிர்ச்சியுற்றார்.சென்னை ஐகோர்ட் உத்தரவின்படி மதுரை மாவட்ட கிரானைட் முறைகேடு குறித்து சகாயம் விசாரணை நடத்தி வருகிறார்.நேற்று திருவாதவூர் அருகே கிரானைட் குவாரிகளை ஆய்வு செய்தார். அவருடன் சென்னை அறிவியல் நகர மூத்த விஞ்ஞானிகள் ஹேமா, தேவசேனாதிபதி, விவசாயத்துறை இணை இயக்குனர் ஜெய்சிங் ஞானதுரை, கனிம வள உதவி இயக்குனர் ஆறுமுக நயினார் மற்றும் ...

மாவட்ட செயலர் தேர்தல் திருப்புமுனை: கருணாநிதியை சந்தோஷப்படுத்திய இளைஞர்

Posted:

தி.மு.க., உட்கட்சித் தேர்தலில், ஏற்கனவே மா.செ.,க்களாக இருந்தவர்களே, மீண்டும் பதவிக்கு வர முயற்சிக்கின்றனர். இந்நிலையில், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தில் நடக்கவிருக்கும் மா.செ., தேர்தலில், 28 வயது இளைஞர் செந்தில்முருகன், முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜனை எதிர்த்து களமிறங்க, தி.மு.க., தலைவர் கருணாநிதி சந்தோஷப்பட்டதாக கூறப்படுகிறது.கடும் மோதல்: தமிழகம் முழுவதும், தி.மு.க., உட்கட்சித் தேர்தல், அரிவாள் வெட்டு, ஓட்டுப் பெட்டி திருட்டு என, ஏக களேபரங்களுடன் நடந்து வருகிறது. வட்ட செயலர் தேர்தல் முதல், மாவட்ட செயலர் தேர்தல் வரையில், எல்லா ...

அமெரிக்கா- கியூபா 56 ஆண்டு பகைமை 'அவுட்': அதிபர் ஒபாமா, ரால் காஸ்ட்ரோ முயற்சிகள் வெற்றி

Posted:

வாஷிங்டன்: உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவுடன், 56 ஆண்டுகளாக எதிரி நாடாக விளங்கிய கியூபா, அதிபர் ஒபாமாவின் நல்லெண்ண நடவடிக்கைகளால், நட்பு நாடாக மாறியுள்ளது. உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ள இந்த முயற்சிக்கு, அதிபர் ஒபாமாவும், கியூபா அதிபர் ரால் காஸ்ட்ரோவும் தான் காரணம்.மத்திய அமெரிக்க தீவு நாடான கியூபாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நிலவி வந்த பகைமை மாறி, நட்புறவு என்ற பூ பூத்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன், வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களை சந்தித்த அதிபர் ஒபாமா, நீண்ட உரையாற்றினார். அதில், கியூபாவுடனான பகைமை நீங்கி, இரு நாடுகளுக்கும் ...

என்ன கொடுமை புடின்...: ரஷ்யாவிற்கு வந்த சோதனை

Posted:

சென்னை: அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார தடை, கச்சா எண்ணெய் விலை சரிவு, பாதாளத்திற்கு சென்றுள்ள ரஷ்ய ரூபிள் கரன்சியின் மதிப்பு... இப்படி பல சோதனைகளுக்கு ஆளாகியுள்ளது, ரஷ்யா.இயற்கை எரிவாயு: ரஷ்ய பொருளாதாரத்தின் ஆணிவேராக, கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உள்ளது. சர்வதேச இயற்கை எரியாவு உற்பத்தியில், இரண்டாவது இடமும், திரவ பெட்ரோலிய பொருட்கள் உற்பத்தியில், மூன்றாவது இடத்திலும், ரஷ்யா உள்ளது. ரஷ்ய பட்ஜெட் வருவாயில், பெட்ரோலியப் பொருட்கள் மூலம் மட்டுமே, 50 சதவீதம் கிடைக்கிறது. இதனால், ஜாம்ஜாம் என்று போய்க் கொண்டிருந்த ரஷ்ய ...

சாலைகளை சீரமைக்க ரூ.60 கோடி போதுமா: அரசுக்கு விஜயகாந்த் கேள்வி

Posted:

சென்னை: மாநிலம் முழுவதும், லட்சக்கணக்கான கி.மீ., சாலைகள் சேதம் அடைந்துள்ள நிலையில், யானை பசிக்கு சோளப் பொறியாக, அவற்றை சீரமைக்க, 60 கோடி ரூபாய் மட்டும் ஒதுக்கப்பட்டு உள்ளது' என, தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.அவரது அறிக்கை: சென்னை மாநகராட்சியில் சாலைகள், குண்டும், குழியுமாகவும், கழிவுநீர் தேங்கி சேறும், சகதியுமாகவும் உள்ளன. கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு, சாலைகளில், கழிவுநீர் ஆறாக ஓடும் நிலையில், குடிநீரில் கழிவுநீர் கலக்கும் அவலநிலையும் உள்ளது. ஆனால், ஜெயலலிதாவின் வழிகாட்டுதல்படி நடக்கும் ஆட்சியில், இரண்டு ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™