Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


பாதுகாப்பை அதிகரிக்க மாநிலங்களுக்கு உத்தரவு: பாகிஸ்தான் தாக்குதல் சம்பவம் எதிரொலி

Posted:

புதுடில்லி: பாகிஸ்தான் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் எதிரொலியாக, பாதுகாப்பை பலப்படுத்தும்படி, அனைத்து மாநில அரசுகளுக்கும், மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.பாகிஸ்தானின் பெஷவார் நகரில், ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளியில், தலிபான் பயங்கரவாதி கள் நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தினர். இதில், மாணவர்கள் உட்பட 141 பேர் பரிதாபமாக இறந்தனர். உலகை உலுக்கிய இந்த சம்பவத்தை அடுத்து, நம் நாட்டிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான ராஜ்நாத் சிங் கூறியதாவது: முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, ...

விமானத்தை கடத்தினால் இனி மரண தண்டனை

Posted:

புதுடில்லி: விமானத்தை கடத்தும் குற்றத்தில் ஈடுபடுவோருக்கு, மரண தண்டனை அளிக்கும் சட்ட திருத்த மசோதா, ராஜ்யசபாவில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் அசோக் கஜபதி ராஜு, விமான கடத்தலை தடுக்கும் சட்ட திருத்த மசோதாவை, ராஜ்ய சபாவில் நேற்று தாக்கல் செய்தார். இதில், 'விமான கடத்தல் தடுப்பு சட்டம், 1982' பல திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.மசோதாவின் முக்கிய அம்சங்கள்:* மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்தும் சதியுடன், விமானங்களை கடத்தும் குற்றத்தில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கப்படும்.* ...

பணக்காரர்களுக்கு மானிய விலை சிலிண்டர் தொடர்ந்து கிடைக்கும்

Posted:

புதுடில்லி: 'பணக்காரர்களுக்கு மானிய விலையில் காஸ் சிலிண்டர் வழங்குவதை நிறுத்தும் எண்ணம் எதுவும் மத்திய அரசுக்கு இல்லை' என, பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், ராஜ்யசபாவில் தெரிவித்தார். எம்.பி., ஒருவரின் கேள்விக்கு பதிலளித்து, அவர் மேலும் கூறியதாவது: மானிய விலையில் சமையல் காஸ் சிலிண்டர் வேண்டாம் என கருதுபவர்கள், அது குறித்து பெட்ரோலிய நிறுவனங்களிடம் தெரிவித்தால், அதை ஏற்றுக் கொள்ளுமாறு, அந்த நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். இதற்காக, www.myLPG.in என்ற இணையதளத்தை, தேவைப்படுபவர்கள் அணுகலாம். இவ்வாறு, தர்மேந்திர பிரதான் ...

சலுகைக்காக புதிய வங்கி கணக்கு தேவையில்லை: பிரதமர் மக்கள் நிதி திட்டம் குறித்து அரசு விளக்கம்

Posted:

புதுடில்லி: 'ஜன் தன் யோஜனா' எனப்படும் பிரதமரின் மக்கள் நிதி திட்டத்தின் சலுகைகளை பெற, புதிய வங்கி கணக்கு துவக்க வேண்டிய தேவை இல்லை என, மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கை விவரம்: ஒருவர் ஏற்கனவே வங்கி கணக்கு வைத்திருந்தால், அந்த கணக்கிலேயே, பிரதமரின் மக்கள் நிதி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சலுகைகளை பெறலாம். அவருக்கு ஏற்கனவே உள்ள கணக்கின் கீழ், 'ரூபே' கார்டு, 1 லட்சம் ரூபாய்க்கான விபத்து காப்பீடு, ஆயுள் காப்பீடு, 5,000 ரூபாய் ஓவர் டிராப்ட் வசதி ஆகியவை கிடைக்கும். இந்த அட்டையை பெற்ற 45 நாட்களுக்கு உள்ளாக, ...

அணு உலை ஒப்பந்தம் தொடர்பாக எதையும் சமாளிக்க இந்தியா தயார்

Posted:

புதுடில்லி: ''சீனா - பாக்., அணுஉலை ஒப்பந்தம் தொடர்பான, எந்த அச்சுறுத்தலையும் சமாளிக்க, இந்தியா தயாராக உள்ளது,'' என, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், லோக்சபாவில் தெரிவித்தார்.இதுகுறித்து, கேள்வி நேரத்தில் அவர் மேலும் கூறியதாவது: சீனாவின் உதவியுடன், பாக்.,கில், 'சஷ்மா - 1' மற்றும் 'சஷ்மா - 2' அணுஉலைகள் இயங்கி வருகின்றன. அடுத்து, மேலும் இரு அணு உலைகளை சீனா வழங்க உள்ளது. இதுகுறித்த கவலையை, இந்தியா, இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது, சீனாவிடம் பகிர்ந்து கொண்டது. அதற்கு, சர்வதேச கொள்கைப்படி, ஆக்கபூர்வ பயன்பாட்டிற்காக மட்டுமே, அணு உலைகள் வழங்கப்பட உள்ளதாக, ...

மகளிர் சுய உதவி குழுக்களை முடக்குவதா?அ.தி.மு.க., - தி.மு.க., கட்சிகள் கடும் கண்டனம்

Posted:

'ஜன் தன் என்ற வங்கி கணக்கு திட்டம் மூலம், தனி நபருக்கு கடன் வழங்கப்படுவதால், மகளிர் மற்றும் ஆடவர் சுய உதவிக் குழுக்கள் கலைக்கப்படலாம்' என, மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா கூறியிருப்பது, அ.தி.மு.க., - தி.மு.க., கட்சிகளுக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. தேர்தல் நேரத்தில், சுய உதவிக் குழுக்களில் உள்ள ஒரு கோடி பேரின், ஓட்டு வங்கியை இழக்க நேரிடுமோ என, இக்கட்சிகள் அலறத் துவங்கி உள்ளன.வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களுக்கு, வங்கி கணக்கு துவங்கும் திட்டமான, 'ஜன் தன்' திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.இத்திட்டம் ...

இந்தியா வர்த்தக தடைகளை அகற்ற அமெரிக்கா, ஐரோப்பா வேண்டுகோள்

Posted:

வாஷிங்டன்: இந்தியாவில், எளிமையாக வர்த்தகம் புரிவதற்கு தடையாக உள்ள, அம்சங்களை நீக்க வேண்டும் என, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.இந்நாடுகளை சேர்ந்த வாகனம், ஜவுளி உள்ளிட்ட, 12 துறைகளின் தொழில், வர்த்தக கூட்டமைப்புகள் இணைந்து, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமனுக்கு கடிதம் அனுப்பியுள்ளன.அதில் கூறியிருப்பதாவது:அமெரிக்க, ஐரோப்பிய நிறுவனங்கள், இந்திய சந்தையில் பல்வேறு சவால்களை சந்திக்கின்றன. உறுதி அளித்தபடி, வர்த்தகம் மற்றும் முதலீட்டு கொள்கைகளின் மேம்பாட்டை அவை எதிர்நோக்குகின்றன.இதற்காக, ...

அரசியல் கட்சிகளின் பலே மோசடிகள் அம்பலம்: தோலுரித்து காட்டியது பிரபல தன்னார்வ அமைப்பு

Posted:

புதுடில்லி: 'கறுப்பு பணத்தின் அடிப்படை ஆதாரமாக, அரசியல் கட்சிகள் தான் விளங்குகின்றன. முறைகேடான விதங்களில் பணத்தை பெறும் கட்சிகள், அதில் பெரும்பாலான தொகையை மறைத்து வைத்துக் கொண்டு, குறைந்த பணத்தை தான், கணக்கு காட்டுகின்றன. தேர்தல் செலவுக் கணக்கை கட்சிகள் சரிவர காண்பிப்பதில்லை; காண்பித்தாலும், தவறான, மோசடியான விவரங்களையே, தருகின்றன' என, ஜனநாயக உரிமைகளுக்கான சங்கமான, ஏ.டி.ஆர்., என்ற தன்னார்வ அமைப்பு குற்றம்சாட்டி உள்ளது.இந்தியாவில், முறைகேடாக சம்பாதித்த பணத்தை, வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கியுள்ள இந்தியர்கள் குறித்த விவரங்களை சேகரித்து, விசாரணை ...

சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலை மோசம்: பராமரிப்பை மறந்த சுங்க கட்டண வசூலிப்பு நிறுவனம்

Posted:

சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலை பிரச்னையில், சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளதை தொடர்ந்து, சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையும், சர்ச்சையில் சிக்கி உள்ளது. இந்த சாலையில் விரிவாக்கம் மற்றும் பராமரிப்பு பணியை, முறையாக மேற்கொள்ளாமல், சுங்கக் கட்டணம் வசூலிப்பில் மட்டுமே, தனியார் நிறுவனம் ஆர்வம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையின், ஒரு பகுதியாக, சென்னை - தடா இடையிலான, 54 கி.மீ., சாலை உள்ளது. நான்கு வழித்தடமாக உள்ள இந்த சாலையை, 334 கோடி ரூபாய் செலவில், ஆறு வழித்தடமாக தரம் உயர்த்தி, சுங்கக் கட்டணம் ...

மின் வாரியம் அலட்சியத்தால் ரூ.2,400 கோடி தண்டம்: எண்ணூர், உடன்குடி அனல் மின் நிலையங்கள் தாமதம் ஏன்?

Posted:

எண்ணூர், உடன்குடி அனல் மின் நிலைய கட்டுமான பணிகள், குறித்த காலத்தில் துவங்காததால், அரசுக்கு, 2,400 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.ஒப்புதல்: தமிழ்நாடு மின் வாரி யம், எண்ணூர் விரிவாக் கம், எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டலம், உடன்குடி என, மூன்று புதிய அனல் மின் நிலையங்கள் அமைக்க முடிவு செய்தது. திருவள்ளூர் மாவட்டத்தில், 660 மெகாவாட் திறன் கொண்ட, எண் ணூர் விரிவாக்க மின் நிலையம் அமைக்க, தமிழக அரசு, 2012, மார்ச் மாதம் ஒப்புதல் அளித்தது. திட்ட செலவு, 4,000 கோடி ரூபாய்.எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல மின் நிலையத்திற்கு, 2011, ஜன., மாதம் ஒப்புதல் ...

ஜனவரி முதல் சமையல் காஸ் நேரடி மானியம் உறுதி: பதிவு செய்யாதவர்களுக்கு மார்ச் வரை தான் அவகாசம்

Posted:

சென்னை: ''சமையல் காஸ் சிலிண்டர், நேரடி மானிய திட்டத்தில், சர்வதேச கச்சா எண்ணெய் நிலவரத்திற்கு ஏற்ப, ஒவ்வொரு மாதமும், மானிய தொகையில் மாற்றம் இருக்கும்,'' என, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் செயல் இயக்குனர் மன்னூர் தெரிவித்தார்.30 லட்சம் பேர்: இதுகுறித்து, அவர் கூறியதாவது: தமிழகத்தில், 1.54 கோடி சமையல் காஸ் வாடிக்கையாளர் உள்ளனர். நேரடி மானிய திட்டத்தில், இதுவரை, 30 லட்சம் பேர் இணைந்து உள்ளனர்.அவர்களின் வங்கிக் கணக்கில், முன் வைப்பு தொகையாக, தலா 568 ரூபாய் வரவு வைக்கப்படும். ஜன., 1 முதல், சந்தை விலையில், காஸ் சிலிண்டர் வாங்க வேண்டும். ...

பயங்கரவாதிகளுக்கு இனி இடமில்லை: நவாஸ், இம்ரான் கான் கூட்டாக உறுதி

Posted:

இஸ்லாமாபாத்: 'பாகிஸ்தானில், இனி, ஒரு பயங்கரவாதியை கூட, விட்டு வைக்க மாட்டோம். இதற்கான செயல் திட்டம், ஏழு நாட்களுக்குள் வகுக்கப்படும்' என, பாக்., பிரதமர் நவாஸ் ஷெரீப்பும், எதிர்க்கட்சி தலைவரான இம்ரான் கானும், கூட்டாக அறிவித்து உள்ளனர்.பாகிஸ்தானின், பெஷவார் நகரில், பள்ளி ஒன்றுக்குள் புகுந்து, பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 141 பேர் கொல்லப்பட்டனர். உலகம் முழுவதும், பெரும் அதிர்வு அலைகளை ஏற்படுத்திய இந்த கொடூர சம்பவம், எதிரும், புதிருமாக இருந்த பாக்., அரசியல் கட்சிகளை ஒருங்கிணத்து உள்ளது.பாக்., பிரதமரும், பாக்., முஸ்லிம் லீக் கட்சி தலைவருமான, நவாஸ் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™