Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


ரயில்வே தேர்வில் ஜெயலலிதா பற்றி கேள்வி: கொந்தளித்த அதிமுக எம்.பி.க்கள்

Posted: 17 Dec 2014 04:10 PM PST

ரயில்வே துறையில் காலியாக இருந்த ஜூனியர் என்ஜினியர் பதவிக்கான தேர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் நடைபெற்றது. இந்தியா முழுவதும் மொத்தம் 21 மண்டலங்களில் இந்த தேர்வு நடைபெற்றது. சென்னை மண்டலத்தில் நடந்த தேர்வில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பற்றி கேள்வி கேட்கப்பட்டதற்கு அதிமுக எம்பிக்கள் மாநிலங்களவையில் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். - கேட்கப்பட்ட கேள்வி: இந்தியாவில் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று முதல்வர் பதவியை முதலில் இழந்தவர் யார்? அ. ...

பிறந்த நாள் கொண்டாடும் க .நா.கல்யாணசுந்தரம் அவர்களை வாழ்த்துவோம் .

Posted: 17 Dec 2014 04:09 PM PST

பிறந்த நாள் கொண்டாடும் கவிஞர் க .நா.கல்யாணசுந்தரம் அவர்களை வாழ்த்துவோம் .

அகவை அறுபதை
அணுகிடும்  அன்பரே .
வளமும் நலமும் ,
வலம் வரட்டும் என்றும்  .




ரமணியன்

ஆப்கன் வங்கியில் தற்கொலைத் தாக்குதல்: 10 பேர் சாவு

Posted: 17 Dec 2014 04:06 PM PST

- ஆப்கானிஸ்தானில், வங்கியொன்றில் தலிபான் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதலில் 3 போலீஸார் உள்பட 10 பேர் உயிரிழந்தனர். அந்த நாட்டின் ஹெல்மண்ட் மாகாணத் தலைநகர் லஷ்கர் கா நகரிலுள்ள நியூ காபூல் வங்கிக் கிளைக்கு ஐந்து தற்கொலைப் படை பயங்கரவாதிகள் புதன்கிழமை வந்தனர். வங்கியின் வாயில் பகுதியில் ஒரு பயங்கரவாதி தனது உடலில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து பிற பயங்கரவாதிகளுக்கு வழியேற்படுத்தினார். அந்த வழியைப் பயன்படுத்தி நான்கு பயங்கரவாதிகளும் வங்கிக்குள் நுழைந்தனர். சம்பவ ...

உலக அழகி பட்டத்தை வென்ற தென்னாப்பிரிக்கப் பெண்

Posted: 17 Dec 2014 04:04 PM PST

- கேப்டவுன்: ஆப்பிரிக்காவைச் சேர்ந்த 22 வயதான ரோலென் ஸ்ட்ராஸ், 2014-ஆம் ஆண்டின் உலக அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். லண்டனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் அவர் கவுரவிக்கப்பட்டார். ஹங்கேரியின் எடினா மற்றும் அமெரிக்காவின் எல்சபெத் ஆகியோர் முறையே இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களைப் பிடித்தனர். - முன்னதாக, ஹோண்டுராஸ் நாட்டைச் சேர்ந்த அழகி திடீரென சுட்டுக் கொல்லப்பட்டத்தால் இந்தப் போட்டி நடைபெறுவதில் சந்தேகங்கள் நிலவின. இந்தப் போட்டியில் பங்கேற்ற 124 அழகிகளும், ஆக்ஸ்ஃபோர்ட் ...

அமெரிக்காவின் தலைமை மருத்துவராகிறார் விவேக் மூர்த்தி

Posted: 17 Dec 2014 04:01 PM PST

- வாஷிங்டன்: விவேக் மூர்த்தி என்ற 37 வயது இந்திய வம்சாவளி அமெரிக்கர் அந்நாட்டின் உயர்ந்த மருத்துவப் பதவியான அமெரிக்க பொது சுகாதார சேவை மையத்தின் தலைமை மருத்துவராக அந்நாட்டு மேலவை தேர்வு செய்துள்ளது. - விவேக் மூர்த்தியை நாட்டின் பொது சுகாதார சேவை மையத்தின் தலைமை மருத்துவராகத் தேர்ந்தெடுக்கும் முடிவை எடுத்ததற்காக மேலவையைப் பாராட்டிய அமெரிக்க அதிபர் ஒபாமா, அவர் செய்ய வேண்டிய பணி குறித்துப் பேசும் போது "ஒவ்வொரு அமெரிக்கருக்கும் தன்னையும் தன் குடும்பத்தையும் பாதுகாப்பதற்கான ...

வகுப்புக் கலவரம் என்றால் என்ன?'' -

Posted: 17 Dec 2014 09:34 AM PST

-- ""வகுப்புக் கலவரம் என்றால் என்ன?'' - "ட்ராயிங் பீரியடுக்கு பதிலா மேத்ஸ் பீரியட்னு சொல்லிக்கிட்டு மேத்ஸ் டீச்சர் வருவாரு பாரு..., அப்ப கிளாஸ்ல உருவாகறதுதான் வகுப்புக் கலவரம்" - -- கோ.வினோத், - ---------------------------------------- - "கடைக்குப் போய் பால் வாங்கிட்டு வரலேன்னு எங்கம்மா என்னை...,'' - ""என்ன செஞ்சாங்க'' - ""காச்சு, காச்சுன்னு காச்சிட்டாங்க'' - -- பூபதி ராவ், - ------------------------------------------ - "சர்க்கரை' என்ற வார்த்தையைக் கொண்டு ஒரு ...

கல்யாணம் இன்னும் கலர்ஃபுல்!

Posted: 17 Dec 2014 09:14 AM PST

பிரைடல் மேக்கப் 'மாற்றம் ஒன்றே மாறாதது' என்பது வேறு எதற்குப் பொருந்துகிறதோ, இல்லையோ, திருமண வைபவங்களுக்குக் கச்சிதமாகப் பொருந்தும். குறிப்பாக மணப்பெண் அலங்காரங்களுக்கு! போன வருடம் இருந்த ஃபேஷன், இந்த வருடம் இருக்காது. 'அடடா… இன்னும் கொஞ்சம் லேட்டா கல்யாணம் பண்ணியிருக்கலாமோ…' என ஒவ்வொரு பெண்ணையும் ஏங்க வைக்கிற மணப்பெண் அலங்காரத்தில், இன்றைய டிரெண்ட் என்ன? 'நேச்சுரல்ஸ்' வீணா குமாரவேல் விளக்கமாகப் பேசுகிறார்… ''பல பெண்களுக்கும் கல்யாணம்கிற சம்பவம்தான் முதல் மேக்கப்புக்கான வாய்ப்பா அமையுது. ...

சுனாமி

Posted: 17 Dec 2014 09:07 AM PST

உயிர்களுக்கு தாகம் எடுத்தால்
தண்ணீர் குடிக்கும் - இயற்கை !
தண்ணீருக்கு தாகம் எடுத்தால்
உயிர்கள் குடிக்கும்  - சுனாமி !!

மின் கட்டணம் செலுத்தப்போவதில்லை--ஈ.வி .கே .எஸ் .இளங்கோவன்

Posted: 17 Dec 2014 08:50 AM PST

மின் கட்டணம் செலுத்தப்போவதில்லை--ஈ.வி .கே .எஸ் .இளங்கோவன் மின் கட்டண உயர்வை திரும்பப் பெறாவிட்டால், மின் கட்டணம் செலுத்தப்போவதில்லை என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார். சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மின் கட்டண உயர்வை திரும்பப் பெறக்கோரி காங்கிரஸ் கட்சியின் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு இளங்கோவன் பேசியதாவது: மின் கட்டண உயர்வால் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ...

பிறந்த தினம் கொண்டாடும் மதுமிதாவை வாழ்த்தலாம்

Posted: 17 Dec 2014 08:42 AM PST

இன்று பிறந்த தினம் கொண்டாடும்
மதுமிதாவை வாழ்த்தலாம்





ரமணியன்

அன்பான, அலுப்புத்தட்டாத 27,000 பதிவுகள் கடக்க இருக்கும் நம் இனியவனை வாழ்த்த வாருங்கள் நண்பர்களே !

Posted: 17 Dec 2014 08:41 AM PST

அட்டகாசமான, அறுவையான, அருமையான , அன்பான, அலுப்புத்தட்டாத  27,000 பதிவுகள் கடக்க இருக்கும்  நம் இனியவனை வாழ்த்த வாருங்கள் நண்பர்களே !

#‎படித்ததில்‬ ரசித்தது:

Posted: 17 Dec 2014 08:24 AM PST

‪‪#‎படித்ததில்‬ ரசித்தது: வாழ்க்கை பழசே ஆவதில்லை. அது ஒவ்வொரு வினாடியும் புதுசு புதுசாய் பூக்கிறது. வாழ்கின்றவர்களுக்குத் தான் இது சலித்துப் போகிறது. பூ காய்ந்து போகிறது. உலர்ந்துபோகிறது. ஆனால், பூப்பு காய்ந்து போவதில்லை. உலர்ந்து போவதில்லை. மலர் உலரும், பழசாகும். மலர்ச்சி எப்பவும் பழசாகாது. இது தான் ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் உள்ள உறவு-அல்லது முரண். பூ ஜீவாத்மா! பூப்பு பரமாத்மா..!!! வாழ்க்கை பழசே ஆவதில்லை. அது ஒவ்வொரு வினாடியும் புதுசு புதுசாய் பூக்கிறது. வாழ்கின்றவர்களுக்குத் தான் ...

தமிழ்நாட்டில் தாவரங்கள் (82)

Posted: 17 Dec 2014 08:17 AM PST

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் -  சென்னை -113

2015 புத்தாண்டு பலன்கள் !

Posted: 17 Dec 2014 08:16 AM PST

மேஷம் ராசி பஞ்சாங்க ஜோதிடம் மேஷம் (அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய) வாக்கு சாதுர்யமும், வசீகர பேச்சுத்திறனும் கொண்ட மேஷ ராசி நேயர்களே! உங்களுக்கு இந்த 2015-ஆம் ஆண்டில் சனி அஷ்டம ஸ்தானமான 8-ல் சஞ்சரிப்பதால் அஷ்டமச் சனி நடைபெறுகிறது. ஆண்டின் தொடக்கத்தில் குரு பகவானும் சுக ஸ்தானமான 4-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்கிறார். இது அவ்வளவு சாதகமான அமைப்பு இல்லை என்றாலும் 6-ல் ராகு சஞ்சரிப்பதால் எதையும் சமாளிக்கக்கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டு ...

அனுஷ்காதான் டீச்சராக வரவேணும்...!

Posted: 17 Dec 2014 06:30 AM PST

இன்னும் ஐந்து செகண்டுகள் தான்..!

Posted: 17 Dec 2014 06:28 AM PST

படுவேகத்தில் வந்துகொண்டிருந்தது அந்த எக்ஸ்பிரஸ் ரயில். அடுத்தடுத்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் இடைவெளியில் உள்ள எச்சரிக்கைக் கம்பங்கள் பச்சையாய் வழிகாட்ட, எந்தத் தடையுமில்லாமல் தாராள வேகத்துடன் அது வந்துகொண்டிருந்தது. புலர்ந்துவிட்ட காலையின் 7 மணிப் பொழுது. இன்னும் ஒரு மணி நேரத்தில் பிரதான ஸ்டேஷனை அடைந்து விடலாம். இன்ஜின் டிரைவர் இரவுக் கண்விழிப்பில் சற்றே சோர்வு கொண்டிருந்தாலும், விரைவில் ஊர் வந்து சேர்ந்துவிடும் நிம்மதியில் ரயிலை இயக்கிக் கொண்டிருந்தார். பார்வை மட்டும் முன்னே நீண்டு செல்லும் ...

ஆதார் அட்டை-நகைச்சுவை

Posted: 17 Dec 2014 06:15 AM PST

ஆதார் அட்டை வாங்கிய பின்னர் 2020 ஆம் ஆண்டில் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்று கூறும் வகையில் ஒரு ஜோக் வாட்ஸ் அப்பில் பகிரப்பட்டு வருகிறது. சூடாக இருப்பவர்கள் இந்த ஜோக்கினை படித்து கூல் ஆகவும். கடை ஆப்பரேட்டர்: ஹலோ.. பீட்சா ஹட்.. நம்ம ஆளு: என்னோட ஆர்டரை எடுத்துக்குறீங்களா ப்ளீஸ்..? கடை ஆப்பரேட்டர்: ஆர்டர் சொல்றதுக்கு முன்னாடி உங்க ஆதார் கார்டு நம்பரை சொல்றீங்களா சார்..? நம்ம ஆளு: பீட்சா வாங்க இதெல்லாமா கேட்பீங்க... சரி எழுதிக்கங்க என்னோட ஆதார் கார்டு நம்பர் 889861356102049998-45-54610 கடை ...

பெட்ரோல் பாக்கி தராததால் சப்ளை நிறுத்தம்: ஸ்பைஸ்ஜெட் விமான சேவைகள் முடங்கின

Posted: 17 Dec 2014 04:56 AM PST

மலிவான கட்டணத்தில் விமானப்பயணம் என்ற இலக்குடன் உள்நாட்டு விமான சேவை துறைக்குள் காலடி பதித்த 'ஸ்பைஸ்ஜெட்' நிறுவனம் தற்போது சுமார் 2000 கோடி ரூபாய் நிதி சுமையில் சிக்கியுள்ளது. இந்த பொருளாதார சிக்கலில் இருந்து விடுபட உதவி செய்ய வேண்டும் என ஸ்பைஸ்ஜெட் நிர்வாகம் மத்திய அரசை கேட்டுக்கொண்டது. இதனையடுத்து, ஸ்பைஸ்ஜெட் நிர்வாகக்குழுவின் தலைவரின் தனிநபர் உத்திரவாதத்தை ஏற்று இந்நிறுவனத்துக்கு நாட்டின் பொதுத்துறை வங்கிகள் 600 கோடி ரூபாய் வரை கடன் வழங்க ஏற்பாடு செய்ய மத்திய அரசு தீர்மானித்துள்ளது. இந்நிலையில், ...

'ஷீ டாக்சி

Posted: 17 Dec 2014 04:24 AM PST

'ஷீ டாக்சி' திருவனந்தபுரம்: 'பெண்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையில், கேரளாவில் செயல்படும், 'ஷீ டாக்சி'யை நாடு முழுவதும் செயல்படுத்த தயார்' என, 'ஜென்டர் பார்க்' அமைப்பின் தலைவர் சுனிஷ் தெரிவித்துள்ளார். டில்லியில், உபெர் கால் டாக்சியில் பயணித்த பெண்ணை டாக்சி டிரைவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம், நாட்டில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அனைத்து கால் டாக்சி டிரைவர்களுக்கும் சிறப்பு பயிற்சி அளித்து, அவர்களின் விவரங்களை சேகரிக்க, டில்லி அரசு திட்டமிட்டு உள்ளது. இந்நிலையில், ...

திருமலை முன்னொரு காலத்தில்... ....with photos :)

Posted: 17 Dec 2014 03:13 AM PST

எங்கே பார்த்தாலும் செழிப்பும், வளமையும் பொங்கி ஒரு பிரமிக்கத்தக்க பிரம்மாண்டமான வளர்ச்சியுடன் காணப்படும் இன்றைய திருமலை ஒரு காலத்தில் எப்படி இருந்தது என்பதை அறிந்தால் நிறைய ஆச்சரியப்படுவீர்கள். யாராக இருந்தாலும் நடந்துதான் போகவேண்டும் என்ற நிலையில் பகலில் மட்டும் ஒரு குழுவாக சேர்ந்துதான் போய்வருவார்கள் அப்போதும் காட்டு விலங்குகளிலிடமிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக நிறைய முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வார்களாம். மேலும் நடக்கமுடியாதவர்களை ஐயப்பன் கோயிலுக்கு அழைத்துச் செல்வது போல டோலி கட்டி ...

பேராசை

Posted: 17 Dec 2014 02:05 AM PST

ஒரு ஏழையின் சிரிப்பைக் காண விரும்பிய கடவுள் அவன் முன்னே தோன்றி "உனக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டார். "பணம், செல்வம், தங்கம், வைரம்!" என்றான் ஏழை ஆசையோடு. கடவுள் வலது கையின் சுட்டுவிரலை நீட்டினார்.. அங்கிருந்த பீரோ தங்கமானது.! ஆனால் ஏழை பேசாமல் இருந்தான். கடவுள் மறுபடி விரலை நீட்ட, அங்கிருந்த மேடை தங்கமானது. அவன் பேசாமல் இருந்தான், கடவுள் வேக வேகமாக அந்த அறையில் உள்ள பொருட்களை எல்லாம் தங்கமாக்கினார்.. அப்போதும் ஏழை சிரிக்கவில்லை. சோர்ந்து போன கடவுள் ஏழையிடம் கேட்டார். "இன்னும் உனக்கு ...

கொலைவெறி

Posted: 17 Dec 2014 01:49 AM PST

முன்னொரு நாள் ஒரு திருமணமான தம்பதிகள் தங்களது 25 வது திருமண ஆண்டு விழாவை மகிழ்வுடன் கொண்டாடினார்கள்..அந்த ஊரில் 25 வருட திருமண வாழ்வில் ஒரு நாள் கூட அவர்களுக்குள் சண்டை சச்சரவுகள், வாக்குவாதங்கள் இருந்ததில்லை என்ற புகழுடன் அந்த நகரத்தில் அவர்கள் வாழ்ந்தார்கள்.. 'அப்படி அவர்கள் 'மகிழ்வுடன் செல்லும் வாழ்க்கை' வாழ என்ன ரகசியம் அவர்களுக்கிடையே பொதிந்துள்ளது' என அறியும் ஆவலுடன் பத்திரிக்கையாளர்கள் அவர்களின் வீட்டில் குழுமினர்.. ஒரு பத்திரிக்கை ஆசிரியர்," சார்.இது ஆச்சர்யமாகவும் நம்பமுடியாததாகவும் ...

நமது கலாச்சாரம்

Posted: 17 Dec 2014 01:45 AM PST

ஒரு ஆங்கிலேயரும், ஒரு இந்தியரும் உரையாடிக்கொள்கிறார்கள்....... இந்தியரைப் பார்த்து ஆங்கிலேயர் கேட்கிறார்..... ஆங்கிலேயர் : உங்கள் நாட்டில் உள்ள பெண்கள் ஏன் ஆண்களிடம் கை குலுக்க மறுக்கிறார்கள்,கை குலுக்குவது அப்படியொன்றும் தவறு இல்லையே..... இந்தியர் : உங்கள் நாட்டு மகாராணியிடம் உங்கள் நாட்டை சேர்ந்த பாமர மக்கள் கை குலுக்க முடியுமா ? ஆங்கிலேயர் : அது முடியாதே...... இந்தியர் : ஏன் முடியாது ? ஆங்கிலேயர் : அவர்கள் எங்கள் நாட்டு ராணி ஆயிற்றே.... இந்தியர் : உங்கள் நாட்டை பொறுத்தவரை ...

மார்கழி மகிமை!

Posted: 16 Dec 2014 10:02 PM PST

''மாதங்களுள் நான் மார்கழி'' என்று கண்ணபிரான் கீதையில் திருவாய் மலர்ந்து அருளியுள்ளார். இதை தனுர் மாதம் என்றும் கூறுவர். இம்மாதம் சிறந்த புண்ணிய காலமாகும். மார்கழி மாதம் தேவர்களுக்கு அருணோதய காலமாகிறது. அதனால் அம்மாதம் முழுவதும் பகவானைத் தியானிப்பதும், அவனைத் தோத்திரம் செய்வதும், அவனைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பதும் நமக்கு சகல சௌபாக்கியங்களையும் அளிக்கிறது. நாம் நமது மனத்தைத் தெளிவுபடுத்தி ஆன்மிக மார்க்கத்தில் லயிக்கச் செய்வதற்கு மார்கழி மாதம் மிகச் சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது. இம்மாதத்திலுள்ள ...

பாக்.,கில் 132 குழந்தைகள் சுட்டுக்கொலை; தலிபான் பயங்கரவாதிகள் கொடூரம்

Posted: 16 Dec 2014 09:22 PM PST

பெஷாவர்: - - பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் ராணுவத்தினர் நடத்தும் பள்ளியில் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்த தலிபான் பயங்கரவாதிகள் அங்கு நடத்திய கோர தாண்டவத்தில் 132க்கும் மேற்பட்ட பள்ளிக் குழந்தைகள் கொடூரமாக கொல்லப்பட்டனர்; மேலும் ஒன்பது ஆசிரியர் அலுவலர்கள் உட்பட 145 பேர் கொல்லப்பட்டனர். 125க்கும் மேற்பட்ட குழந்தைகள் படுகாயமடைந்தனர். இந்த கொடூர தாக்குதலை நடத்திய தலிபான் பயங்கரவாதிகள் ஆறு பேரை பாகிஸ்தான் அதிரடிப்படையினர் சுட்டுக்கொன்றனர். - - --தினமலர் ===================================================== பெஷாவர்: ...

கடைசி தலைமுறை......................

Posted: 16 Dec 2014 09:18 PM PST

*ஒளியும் ஒலியும் பாத்த கடைசி தலைமுறையும் நாமதான் ஓனிடா மண்டையன பாத்த கடைசி தலைமுறையும் நாமதான *செல்போன்ல பட்டன பாத்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும். *மஞ்சள் பூசிய பெண்கள் முகத்தை பார்த்த கடைசி தலைமுறை நாமாதான்...! *கேலண்டர் அட்டையில் தேர்வெழுதிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும். *மயில் இறகை நோட்டுக்குள்ள வெச்சி அரிசி போட்டு அது குட்டி போடும்னு நம்பின கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும். *வெட்டிப்போட்ட நுங்கை வைத்து வண்டியோட்டிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும். *தந்தியில் ...

ஒரு பக்கக் கதை - பொறுப்பு!

Posted: 16 Dec 2014 09:12 PM PST

சங்கரன் தனது மனைவி, மகன் வினோத்துடன் சென்னையிலிருந்து மதுரைக்குப் புறப்பட்டான். புறப்படும்முன் பக்கத்துவீட்டில் வசிக்கும் தனது நண்பரிடம், தான் வர ஒரு வாரம் ஆகும். அதுவரை தனது வீட்டில் உள்ள செடி கொடிகளுக்குத் தண்ணீர் ஊற்றும் படியும், நாய்க்கு தினமும் உணடு கொடுக்கும்படியும் கேட்டுக் கொண்டான். மதுரைக்கு வந்தபின்பு செடி கொடிகள், நாய் பற்றியும் ந ண்பரிடம் விசாரித்தான் சங்கரன். "அவர் கிட்ட பொறுப்பை ஒப்படைச்சாச்சே அப்புறம் அது பற்றி போன் பண்ணி கேட்கணுமா?' என்று அப்பாவிடம் கேட்டான் ...

பழகு - ஒரு பக்க கதை

Posted: 16 Dec 2014 09:11 PM PST

மனைவி

Posted: 16 Dec 2014 07:18 PM PST

பின் தூங்கி முன் எழுந்து என் துக்கம் ரசித்த உன்னை கடைக் கண்ணால் நான் ரசிப்பேன் உன் நனைந்த உடலழகை அடுப்பூதி தேநீர் வைத்து கடிக்க பால் அப்பமும் வாங்கி கால்தொட்டு எனை எழுப்பி கரம் பிடித்து உயர்த்தித் தந்தாய் என் உடைகள் தொட்டலைவதில் என்னபெருமிதம் உனக்கு அழுக்கடையும் முன்னே அழுக்ககற்ற எடுத்துச்செல்வாய் உணவு பரிமாறுகையில் நல்லுணவாய் எனக்குவைத்து நான் உண்ண நீ ரசித்து என் எச்சுணவில் என்ன சுகம் கண்டயோ இவற்றுக்கல்லாம் பரிகாரம் நான் என்ன செய்தேன் உன் கரம் பிடித்து மனையாக்கி அதிகாரம்தான் ...

தகவல் அறிவோம்

Posted: 16 Dec 2014 06:20 PM PST



-


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™