Tamil News | Online Tamil News |
- மானிய விலை மண்ணெண்ணெய்: தமிழக அரசு மனு தள்ளுபடி
- 'கெஜ்ரிவாலின் 49 பொய்கள்': டில்லி பா.ஜ., தீவிர பிரசாரம்
- மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இணையதளம் முடக்கம்: சரஸ்வதி மகாலை அடுத்து தமிழகத்தில் தொடர் கைவரிசை
- முடிவுக்கு வந்தது சிட்னி முற்றுகை: ஆஸி., உணவகத்தில் பயங்கரவாதியிடம் சிக்கியவர்கள் விடுவிப்பு
- சமையல் காஸ் சிலிண்டர் மானியம்: ஆதார் தேவையில்லை: வங்கி கணக்கு அவசியம்
- வலைதள குற்றவாளிகளால் இந்திய நிறுவனங்களுக்கு ரூ.24,000 கோடி இழப்பு: ரிசர்வ் வங்கி பெயரிலேயே போலி வலைதளம்
- கிறிஸ்துமஸ் விடுமுறை சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி
- திருப்பூரில் முடங்கிக்கிடக்கும் திட்டங்கள் புதிய வாக்குறுதிகளை அள்ளித்தெளிக்கும் அமைச்சர்கள்
- சகாயத்திடம் கண்ணீர் விட்ட போலீசார்: பி.ஆர்.பி., நிறுவனத்தினர் மிரட்டினர்
- ஐ.ஏ.எஸ்., அதிகாரியை தேர்வு செய்வதில் குழப்பம்: யு.பி.எஸ்.சி.,க்கு அனுப்பிய பட்டியலை நிறுத்திய அரசு
- சோனியா, ராகுல் ஆஜராக பிறப்பித்த சம்மனுக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்தது ஐகோர்ட்
- இந்தியாவின் முதல் ஐ.என்.எஸ். ஏர்ஹன்ட் அணுசக்தி நீர்முழ்கி கப்பல் வெள்ளோட்டம்
| மானிய விலை மண்ணெண்ணெய்: தமிழக அரசு மனு தள்ளுபடி Posted: மத்திய தொகுப்பிலிருந்து வழங்கப்பட்டு வந்த, மானிய விலை மண்ணெண்ணெய்யின் அளவை குறைத்ததை எதிர்த்து, தமிழக அரசு தொடர்ந்த வழக்கை, சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. மேலும், 'இப்பிரச்னையில், மத்திய அரசுக்கு எதிராக, ரிட் மனுதாக்கல் செய்ய முடியாது. இதே கோரிக்கைக்காக, சிவில் வழக்கை, தமிழக அரசு தொடரலாம்' என்றும், அறிவுறுத்தப்பட்டுள்ளது.தமிழகத்துக்கு, மத்திய தொகுப்பில் இருந்து வழங்கப்படும், மானிய விலை மண்ணெண்ணெயின் அளவு, திடீரென, கடந்த 2010ம் ஆண்டு குறைக்கப்பட்டது. அதுவரையில், தமிழகத்துக்கு என, 59 ஆயிரத்து 780 கிலோ லிட்டர் அளவு வழங்கிக் கொண்டிருந்த மத்திய அரசு, ... |
| 'கெஜ்ரிவாலின் 49 பொய்கள்': டில்லி பா.ஜ., தீவிர பிரசாரம் Posted: புதுடில்லி: டில்லி சட்டசபை தேர்தலுக்கான பிரசார வியூகம் வகுத்து வரும் பா.ஜ.,வினர், ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிரான கோஷங் களை முன்னிறுத்த திட்டமிட்டுள்ளனர்.டில்லி சட்டசபை கலைக்கப்பட்டுள்ளதை அடுத்து, விரைவில் அங்கு தேர்தல் நடக்கவுள்ளது. இந்நிலையில், கடந்த முறை அதிக இடங்களில் வெற்றி பெற்றும், ஆட்சி அமைக்க முடியாத பா.ஜ., இம்முறை எப்படியும், ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை பெற்றுவிட வேண்டும் என்பதில், தீவிரம் காட்டி வருகிறது. அதேபோல், இம்முறை தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் முயற்சியில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி ... |
| மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இணையதளம் முடக்கம்: சரஸ்வதி மகாலை அடுத்து தமிழகத்தில் தொடர் கைவரிசை Posted: மதுரை: தமிழகத்தில், பாக்., பயங்கரவாதிகளின் கைவரிசை தொடர்கிறது. தஞ்சை, சரஸ்வதி மகால் நூலக இணையதளத்தை முடக்கி, அதிர்ச்சியை ஏற்படுத்தியவர்கள், தற்போது, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இணையதளத்தை முடக்கி, அட்டூழியம் செய்துள்ளனர். 'பாகிஸ்தான் டீன் லீட்ஸ்' என்ற பெயரில், மீனாட்சி அம்மன் கோவில் இணையதளத்தை முடக்கியவர்கள் குறித்த தகவல்களை தரும்படி, அமெரிக்க நிறுவனத்திடம், தமிழக போலீசார் கேட்டுள்ளனர்.இரண்டு நாட்களுக்கு முன், தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்தின் இணையதளம், பாக்., பயங்கரவாதிகள் பெயரில் முடக்கப்பட்டது.நேற்று முன்தினம், மாலை 4:00 மணி முதல், மதுரை ... |
| முடிவுக்கு வந்தது சிட்னி முற்றுகை: ஆஸி., உணவகத்தில் பயங்கரவாதியிடம் சிக்கியவர்கள் விடுவிப்பு Posted: சிட்னி : சிட்னி: சிட்னி உணவகத்தில் அப்பாவி மக்களை பிணைக் கைதியாக பிடித்து வைத்து போலீசாரை மிரட்டிய, மோனிஸ் என்ற ஈரானிய பயங்கரவாதியை போலீசார் சுட்டுக் கொன்றதை அடுத்து முற்றுகை முடிவுக்கு வந்தது.சாக்லெட் கபே உணவகத்தில் மோனிசால் பிடித்து வைக்கப்பட்டிருந்தவர்களில் இந்தியர்களான விஸ்வகாந்த் அங்கித் ரெட்டி மற்றும் புஷ்பெண்டு கோஷ் ஆகிய இருவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாக அவர்களின் உறவினர்களும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜும் நேற்று நள்ளிரவு தெரிவித்தனர்.இந்த முற்றுகையில் போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் பயங்கரவாதி மோனிஸ், ... |
| சமையல் காஸ் சிலிண்டர் மானியம்: ஆதார் தேவையில்லை: வங்கி கணக்கு அவசியம் Posted: புதுடில்லி: 'சமையல் காஸ் மானியம் பெறுவதற்கு ஆதார் அட்டை அவசியம் இல்லை; ஆனால் கண்டிப்பாக வங்கியில் சேமிப்பு கணக்கு இருக்க வேண்டும்' என மத்திய அரசு தெரிவித்துள்ளது.மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் லோக்சபாவில் நேற்று கூறியதாவது:சமையல் காஸ் சிலிண்டருக்கு மானியம் பெறுவதற்கான நடவடிக்கைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன. இதில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலான செய்திகள் தற்போது வெளியாகி வருகின்றன. இதில் எந்த வகையான குழப்பமும் தேவையில்லை.சமையல் காஸ் மானியம் பெறுவதற்கு ஆதார் அட்டை அவசியமில்லை. ஆதார் இல்லாவிட்டாலும் மானியம் ... |
| Posted: புதுடில்லி : வலைதளங்களில் ஊடுருவி பண மோசடி செய்யும் குற்றவாளிகளால், கடந்த ஆண்டு, இந்திய நிறுவனங்கள் 24 ஆயிரம் கோடி ரூபாய் இழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.இது, இந்தாண்டு, 31 ஆயிரம் கோடி ரூபாயாக உயரும் என, அமெரிக்க ஆய்வு நிறுவனம் ஒன்று மதிப்பிட்டுள்ளது.தனி நபர்களின் வங்கி கணக்கு விவரங்களை திருடி, மோசடி செய்து வந்தவர்களின் பார்வை, இப்போது பெரிய நிறுவனங்கள் பக்கம் திரும்பியுள்ளது.சில்லரை திருட்டை விட, நிறுவனங்களை ஏமாற்றி, கோடி கோடியாக அள்ளலாம் என, மோசடி பேர்வழிகள் நினைக்கின்றனர்.இத்தகைய குற்றங்கள் அதிகரிக்க அது தான் காரணம்.நைஜீரியா ... |
| கிறிஸ்துமஸ் விடுமுறை சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி Posted: புதுடில்லி : ''கிறிஸ்துமஸ் திருநாளில் பள்ளிகள் செயல்படும் என, செய்தித் தாளில் வெளியான செய்தி தவறானது. அன்று வழக்கம் போல் பள்ளிகளுக்கு விடுமுறையே,'' என, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.ஆண்டு தோறும், டிச., 25ல் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதே நாளில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் இந்து மகாசபையின் தலைவர் மதன்மோகன் மாளவியா ஆகியோரின் பிறந்த நாளும் வருவதால், மத்தியில் ஆட்சி பொறுப்பேற்றுள்ள பிரதமர் மோடி தலைமையிலான அரசு, டிச., 25ஐ, 'நல்லாட்சி நாள்' என்ற பெயரில் கொண்டாட திட்டமிட்டுள்ளது. இதையடுத்து, ... |
| திருப்பூரில் முடங்கிக்கிடக்கும் திட்டங்கள் புதிய வாக்குறுதிகளை அள்ளித்தெளிக்கும் அமைச்சர்கள் Posted: திருப்பூரில் சமீபத்தில் நடந்த விழாக்களில் பங்கேற்ற தமிழக அமைச்சர்கள், ஏற்கனவே அறிவித்த, முடங்கியுள்ள பல்வேறு திட்டங்களை செயல்படுத்தப் போவதாக, மீண்டும் அறிவித்துச் சென்றுள்ளனர். தொழில் துறை மீது கடந்த மூன்று ஆண்டுகளாக இல்லாத அக்கறை, தற்போது மட்டும் ஏன் ஏற்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது.பின்னலாடை நகரான திருப்பூரில், ஆண்டுக்கு ரூ.18 ஆயிரம் கோடி மதிப்பில் ஏற்றுமதி வர்த்தகம்; ரூ.10 கோடி மதிப்பில் உள்நாட்டு வர்த்தகம் மேற்கொள்ளப்படுகிறது. பல லட்சம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெறுகின்றனர். தொழில் வளர்ச்சி சிறப்பாக இருந்தும் கூட, கட்டமைப்பு வசதிகள் ... |
| சகாயத்திடம் கண்ணீர் விட்ட போலீசார்: பி.ஆர்.பி., நிறுவனத்தினர் மிரட்டினர் Posted: மதுரை : கிரானைட் குவாரி உரிமையாளர்கள் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நிலங்களை அபகரித்ததாக, மதுரையில் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயத்திடம் பாதிக்கப்பட்டோர் கண்ணீர் விட்டனர்.சென்னை ஐகோர்ட் உத்தரவின்படி மதுரை மாவட்ட கிரானைட் முறைகேடு குறித்து சகாயம் நேற்று 2வது கட்ட விசாரணையை துவக்கினார். அவருடன் சென்னை அறிவியல் நகர மூத்த விஞ்ஞானிகள் ஹேமா, தேவசேனாபதி வந்திருந்தனர். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நிலங்களை, குவாரி உரிமையாளர்கள் அபகரித்ததாக பாதிக்கப்பட்டோர் கண்ணீர் விட்டனர்.அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ.,க்கள் விஜயாள், சாந்தி, ... |
| ஐ.ஏ.எஸ்., அதிகாரியை தேர்வு செய்வதில் குழப்பம்: யு.பி.எஸ்.சி.,க்கு அனுப்பிய பட்டியலை நிறுத்திய அரசு Posted: மாநில அரசு அதிகாரிகளுக்கு, ஐ.ஏ.எஸ்., அந்தஸ்து அளிக்க, மத்திய பணியாளர் தேர்வாணையமான யு.பி.எஸ்.சி.,க்கு அனுப்பிய தேர்வாளர் பட்டியலை, தமிழக அரசு நிறுத்தி உள்ளது.வாய்ப்பு :நடப்பாண்டில் தமிழகத்துக்கு, வருவாய் துறை அல்லாத பிற துறையில் இருந்து, ஒரு ஐ.ஏ.எஸ்., அந்தஸ்து பதவியை நிரப்ப, வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.இதற்காக, கல்வித் துறையைச் சேர்ந்த இளங்கோ, அறிவொளி; ஊரக வளர்ச்சித் துறையைச் சேர்ந்த பொன்னையா, லட்சுமிபதி; கூட்டுறவுத் துறையைச் சேர்ந்த சிவன் அருள் என, ஐந்து பேர் கொண்ட பட்டியலை, யு.பி.எஸ்.சி.,க்கு தமிழக அரசு அனுப்பியது. |
| சோனியா, ராகுல் ஆஜராக பிறப்பித்த சம்மனுக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்தது ஐகோர்ட் Posted: புதுடில்லி : 'நேஷனல் ஹெரால்டு' சொத்தை அபகரித்ததாக தொடரப்பட்ட வழக்கில், காங்., தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுலுக்கு எதிராக, பிறப்பிக்கப்பட்ட சம்மனுக்கு விதிக்கப்பட்ட தடையை, டில்லி உயர் நீதிமன்றம் நீட்டித்து உள்ளது.நன்கொடை:ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்த காலத்தில், காங்கிரசுக்கு சாதகமான செய்திகளை வெளியிட, 'அசோசியேட்டட் ஜர்னல்' என்ற நிறுவனம் மூலம், 'நேஷனல் ஹெரால்டு' என்ற பத்திரிகை துவக்கப்பட்டது.இந்தப் பத்திரிகையின் நிர்வாகச் செலவுகளுக்காகவும், நஷ்டத்தை தவிர்க்கவும், காங்கிரசுக்கு நன்கொடையாக வந்த பணத்தில் இருந்து, 90 கோடி ... |
| இந்தியாவின் முதல் ஐ.என்.எஸ். ஏர்ஹன்ட் அணுசக்தி நீர்முழ்கி கப்பல் வெள்ளோட்டம் Posted: விசாகப்பட்டினம்; இந்தியாவின் முதல் அணுசக்தி நீர்முழ்கி கப்பல் ஐ.என்.எஸ். ஏர்ஹன்ட், நேற்று கடலில் வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது.இதனை மத்திய ராணுவ அமைச்சர் கொடியசைத்து துவக்கி வைததார்.இந்தியாவிடம் தற்போது ஐ.என்.எஸ். சக்ரா, அகூலா -2 ஆகிய அணுசக்தி நீர்முழ்கி கப்பல்கள் உள்ளன. இவை,ரஷ்யாவிடமிருந்து கடந்த 20120ம் ஆண்டு முதல் 10 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்துள்ளது. இவை தான் இந்திய கப்பற்படையின் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில் முழுக்க இந்தியாவில் தயாரான ஐ.என்.எஸ். ஏர்ஹன்ட் அணுசக்தி நீர்முழ்கி கப்பல் கட்டும் பணி இந்துஸ்தான் கப்பல் கட்டும் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |டிசம்பர் 16,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |