Tamil News | Online Tamil News |
- போக்குவரத்து கழகங்களுக்கு பல லட்சம் இழப்பு: சுங்க சாவடி கட்டண முறை மாற்றத்தால் சலுகை ரத்து
- கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியால் அரசுக்கு ரூ.1 லட்சம் கோடி மிச்சம்
- மெஹதி கைதுக்கு பழிக்கு பழி: ஐ.எஸ்.ஐ.எஸ்., மிரட்டல்
- உயிர் காக்கும் மருந்துகள் சப்ளையை குறைத்த நிறுவனங்கள்
- அனைத்து கட்சி குழுவுடன் பிரதமரை சந்தியுங்க! முதல்வர் பன்னீருக்கு கருணாநிதி யோசனை
- போதையில்லா பாரதத்தை உருவாக்க மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு
- சுவிட்சர்லாந்தில் இருந்து வந்த தங்கத்தின் மதிப்பு ரூ.1 லட்சம் கோடி: கறுப்பு பணத்தின் 'திருவிளையாடல்' என தகவல்
- உயர்கிறது ரயில் கட்டணம்: பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும்
- தமிழகத்தில் கறிக்கோழி விலை மீண்டும் உயர்வு: பறவை காய்ச்சல் பீதி ஓய்ந்ததால் கடைகளில் கூட்டம்
- ஆர்.டி.ஐ., விண்ணப்ப கட்டணமாக தபால் தலை: மத்திய தகவல் ஆணையம் அரசுக்கு பரிந்துரை
- மின்னல் தாக்கி இறந்தால் இனி இழப்பீடு?
- எதிர்க்கட்சி தலைவர் பதவி யாருக்கு?காங்., - தேசியவாத காங்., மோதல்
- துறைமுகங்களுக்கு தனி ரயில்: மத்திய அரசு புதிய திட்டம்
| போக்குவரத்து கழகங்களுக்கு பல லட்சம் இழப்பு: சுங்க சாவடி கட்டண முறை மாற்றத்தால் சலுகை ரத்து Posted: அரசு விரைவு பஸ்களுக்கு, இதுநாள் வரை சுங்கச் சாவடிகளில் மாதாந்திர கட்டணம் செலுத்தப்பட்டு வந்தது. இந்த நடைமுறையை மாற்றி, 'தினமும் கட்டணம் செலுத்த வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் நிலைமை உருவாகி உள்ளது.முன் கூட்டியே...:தமிழகத்தில், தேசிய நெடுஞ்சாலைகளில், 41 இடங்களில், வாகன நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் சுங்கச் சாவடிகள் உள்ளன. அரசு பஸ்களுக்கு மாதந்தோறும் சுங்கக் கட்டணம் செலுத்தி விடுகின்றனர். ஒவ்வொரு மாதத்திற்கும், முன்கூட்டியே கட்டணம் செலுத்தப்படுகிறது.அரசு பஸ்களுக்கு, இந்த ... |
| கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியால் அரசுக்கு ரூ.1 லட்சம் கோடி மிச்சம் Posted: புதுடில்லி:கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியால், மத்திய அரசுக்கு, ஒரு லட்சம் கோடி ரூபாய் மிச்சமாகும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.இது, நிதியமைச்சர் அருண்ஜெட்லி சமர்ப்பிக்க உள்ள, 2015-16ம் நிதியாண்டு பட்ஜெட்டில், குறிப்பிடத்தக்க அளவு, நிதிச் செலவின ஒதுக்கீட்டை குறைக்க உதவும்.கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, தற்போது ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை, 40 சதவீதம் குறைந்து, 60 டாலர் என்ற அளவிற்கு வீழ்ச்சி கண்டுள்ளது.இறக்குமதி:இந்தியா, நாள் ஒன்றுக்கு, 40 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்கிறது. இதற்காக, நடப்பு 2014-15ம் நிதியாண்டில், 5.44 லட்சம் ... |
| மெஹதி கைதுக்கு பழிக்கு பழி: ஐ.எஸ்.ஐ.எஸ்., மிரட்டல் Posted: பெங்களுரு:''மெஹதியின் கைதுக்கு பழிக்கு பழி வாங்குவோம்,'' என, பெங்களுரு போலீஸ் துணை கமிஷனர் அபிஷேக் கோயலுக்கு, 'டுவிட்டர்'ல் ஐ.எஸ்.ஐ.எஸ்., ஆதரவாளர்கள் மிரட்டல் விடுத்துஉள்ளனர். |
| உயிர் காக்கும் மருந்துகள் சப்ளையை குறைத்த நிறுவனங்கள் Posted: புதுடில்லி:அத்தியாவசிய மருந்துகளுக்கு, மத்திய அரசு, விலை கட்டுப்பாடு விதித்துள்ளதால், மருந்து நிறுவனங்கள் அவற்றின் சப்ளையை குறைத்துள்ளன. இதனால், குறிப்பிட்ட நிறுவனத்தின் மருந்து கிடைக்காமல், வேறு நிறுவனங்களின் மருந்துகளை அதிக விலைக்கு, பொதுமக்கள் வாங்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது.கட்டாயம்:விலை கட்டுப்பாடு சட்டத்தின் கீழ், 2013ல், 348 அத்தியாவசிய மருந்துகள் கொண்டு வரப்பட்டன. இதனால், நோய் எதிர்ப்பு மருந்து, வலி நிவாரணி, நீரிழிவு, தலைவலி, புற்றுநோய் உட்பட, பல நோய்களுக்கான மருந்துகளின் விலையை, மருந்து நிறுவனங்கள், குறைக்க ... |
| அனைத்து கட்சி குழுவுடன் பிரதமரை சந்தியுங்க! முதல்வர் பன்னீருக்கு கருணாநிதி யோசனை Posted: முல்லைப் பெரியாறு பகுதியில், புதிய அணை கட்டுவதற்கான சுற்றுச் சூழல் ஆய்வு நடத்த, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதற்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:மேகதாதுவில், இரு அணைகள் கட்ட கர்நாடகா அரசு ஈடுபட்டுள்ள நேரத்தில், முல்லை பெரியாறு பகுதியில், புதிய அணைக்கான சுற்றுச் சூழல் ஆய்வு நடத்த, கேரள அரசுக்கு, மத்திய அரசின் தேசிய வன விலங்குகள் வாரியம் அனுமதி அளித்துள்ளது.இது, தமிழகத்திற்கு பாதகம் விளைவிப்பது மட்டுமின்றி, உச்ச நீதிமன்ற உத்தரவை புறக்கணிக்கும் செயலாகும். பாம்பாற்றின் குறுக்கே, கேரள அரசு, அணை ... |
| போதையில்லா பாரதத்தை உருவாக்க மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு Posted: புதுடில்லி: நாட்டு மக்களிடையே, வானொலியில், மூன்றாவது முறையாக உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இளைஞர்களின் போதைப் பொருள் பயன்பாடு குறித்த தன் ஆழ்ந்த வருத்தங்களை பகிர்ந்து கொண்டார். போதையில்லா பாரதத்தை உருவாக்க அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.கடந்த மே மாதம், நாட்டின் பிரதமராக பொறுப்பேற்ற நரேந்திர மோடி, நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வசிக்கும், சாதாரண மக்களுக்கும் தன் கருத்துக்கள் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில், 'மனதின் குரல்' என்ற நிகழ்ச்சியின் மூலம், வானொலியில் உரை நிகழ்த்தி வருகிறார்.மோடி தன் முதல் உரையில், 'துாய்மை ... |
| Posted: புதுடில்லி:சுவிட்சர்லாந்து வங்கிகளில், கறுப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ள, இந்தியர்கள் மீதான நடவடிக்கை கடுமையாகி உள்ளதை அடுத்து, அந்த கறுப்பு பணத்தையெல்லாம் தங்கமாக மாற்றி, இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்வதாக, தகவல் வெளியாகி உள்ளது. இந்தாண்டில் மட்டும், சுவிட்சர்லாந்தில் இருந்து, 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது.வரி செலுத்துவதை தவிர்ப்பதற்காகவும், முறைகேடாக சம்பாதித்த பணத்தை பதுக்குவதற்காகவும், நம் நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதிகள், பெரும் தொழிலதிபர்கள் உள்ளிட்ட வி.வி.ஐ.பி.,க்கள், ... |
| உயர்கிறது ரயில் கட்டணம்: பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் Posted: புதுடில்லி:ரயில்வே துறை, கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. ஊழியர்களின் சம்பளத்திற்கும், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் புதிய திட்டங்களை நிறைவேற்றுவதற்கும் ஏராளமான நிதி தேவைப்படுகிறது.மேலும், ரயில்களை இயக்குவதற்கான டீசல் போன்ற எரிபொருள் கட்டணமும், சமீபகாலமாக கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால், எரிபொருள் விலை உயர்வுக்கேற்ப, ரயில் கட்டணத்தை, ஆண்டுக்கு இரண்டு முறை மாற்றியமைப்பதென, ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துஉள்ளது.கடந்த ஜூனில், எரிபொருள் விலை, 4.2 சதவீதம் உயர்ந்தது. இதையடுத்து, ரயில் கட்டணம், அதிகரிக்கப்பட்டது. கடந்த சில ... |
| தமிழகத்தில் கறிக்கோழி விலை மீண்டும் உயர்வு: பறவை காய்ச்சல் பீதி ஓய்ந்ததால் கடைகளில் கூட்டம் Posted: பறவை காய்ச்சல் அச்சம் நீங்கியதால், தமிழகத்தில் வீழ்ச்சி அடைந்திருந்த கோழிக்கறி விலை, மீண்டும் உயர்ந்து வருகிறது. விதவிதமான கோழி உணவுகளை ருசிக்கும் ஆர்வத்தில், கோழிக்கறி வாங்க, கடைகளில் மக்கள் குவிந்து வருகின்றனர்.கடந்த மாத இறுதியில், கேரள மாநிலம், ஆலப்புழா, கோட்டயம் உள்ளிட்ட மாவட்டங்களில், பறவை காய்ச்சல் (ஹெச்5 என்1 வைரஸ்) பாதிப்பு ஏற்பட்டது. 15 ஆயிரத்துக்கும் அதிகமான வாத்துகள் இறந்தன. பாதிப்பு காரணமாக, வளர்ப்புக்கு தகுதியற்றவை என, 1.50 லட்சம் வாத்து மற்றும் கோழிகள் அழிக்கப்பட்டன.பரிசோதனை:தமிழகத்திற்கும், பறவை காய்ச்சல் பரவக் ... |
| ஆர்.டி.ஐ., விண்ணப்ப கட்டணமாக தபால் தலை: மத்திய தகவல் ஆணையம் அரசுக்கு பரிந்துரை Posted: புதுடில்லி:'தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விவரங்களை பெற, தற்போது செலுத்தப்படும் கட்டணத்திற்கு பதிலாக தபால் தலைகளை பயன்படுத்தலாம்' என, மத்திய தகவல் ஆணையம், மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.பொதுமக்கள் தாங்கள் அறிய விரும்பும் தகவல்களை பெற, ஆர்.டி.ஐ., எனப்படும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். உரிய காரணங்களுக்காக கோரப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, விண்ணப்பதாரர் களுக்கு தேவையான தகவல்கள் அனுப்பி வைக்கப்படும். இதை, மத்திய தகவல் ஆணையம் கண்காணிக்கிறது.ஆர்.டி.ஐ., மூலம் விண்ணப்பிக்க, தற்போதைய நடைமுறையின் படி, 10 ... |
| மின்னல் தாக்கி இறந்தால் இனி இழப்பீடு? Posted: புதுடில்லி:மின்னல் தாக்கி இறப்போரின் குடும்பத்தினருக்கு, இழப்பீடு வழங்கும் புதிய திட்டம், மத்திய நிதி கமிஷனின் பரிசீலனையில் உள்ளது.புயல், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களில் இறப்போரின் குடும்பத்தினருக்கு, மத்திய, மாநில அரசுகள், தேசிய பேரிடர் நிவாரண திட்டத்தின் கீழ் நிதி அளிக்கின்றன. ஆனால், மின்னல் தாக்கி இறப்போருக்கு இதுபோன்ற நிவாரண நிதி எதுவும் வழங்கப்படுவது இல்லை. இத்தனைக்கும், மற்ற நாடுகளை ஒப்பிடும்போது, இந்தியாவில் தான், ஆண்டுக்கு சராசரியாக, 400 பேர் மின்னல் தாக்கி உயிரிழக்கின்றனர். இதனால், மின்னல் தாக்கி இறப்போருக்கும் நிவாரண நிதி வழங்க ... |
| எதிர்க்கட்சி தலைவர் பதவி யாருக்கு?காங்., - தேசியவாத காங்., மோதல் Posted: மும்பை: மகாராஷ்டிரா சட்டசபையில், எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெறுவதற்கு, பழைய கூட்டாளிகளான, காங்., - தேசியவாத காங்., கட்சிகளிடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.மகாராஷ்டிராவில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., ஆட்சியை பிடித்தது. அந்த கட்சியின் தேவேந்திர பட்நாவிஸ் முதல்வராக உள்ளார். தேர்தலுக்கு முன், பா.ஜ., கூட்டணி யில் இருந்து பிரிந்த சிவசேனா, தற்போது மீண்டும் கூட்டணியில் சேர்ந்துள்ளது.கடந்த, 15 ஆண்டுகளாக ஆளும் கட்சி கூட்டணியில் அங்கம் வகித்த காங்., - தேசியவாத காங்., கூட்டணியிலும், தொகுதி ஒதுக்கீடு பிரச்னை காரணமாக விரிசல் ஏற்பட்டது. இரண்டு ... |
| துறைமுகங்களுக்கு தனி ரயில்: மத்திய அரசு புதிய திட்டம் Posted: புதுடில்லி:நாட்டின் முக்கிய துறை முகங்களுக்கு, பிரத்யேக ரயில் போக்குவரத்து மேற்கொள்ளப்பட உள்ளது.இதுகுறித்து, மத்திய சாலை, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர், நிதின் கட்காரி கூறியதாவது:ரயில்வே கார்ப்பரேஷன் என்ற நிறுவனம், 12 பெரிய துறைமுகங்களுக்கு, ரயில் போக்குவரத்திற்கான இணைப்பு வசதிகளை ஏற்படுத்தும். இந்நிறுவனத்தில், அந்தந்த துறைமுகங்கள் ஈட்டும் லாபத்தின் அடிப்படையில், பங்கு மூலதனம் மேற்கொள்ளப்படும். துறைமுகங்களின் லாபம், 200 - 400 கோடி ரூபாயாக உள்ளது. துறைமுகங்களின் சரக்கு கையாளும் திறனை உயர்த்த, ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |டிசம்பர் 15,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |