Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


சட்ட விரோதமாக கிரானைட் வெட்டி எடுப்பு: 3 பேர் மீது வழக்குப்பதிவு

Posted: 14 Dec 2014 01:27 PM PST

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே சட்ட விரோதமாக கிரானைட் வெட்டி எடுத்ததாக 3 பேர் மீது மங்கலம்பேட்டை போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

விதிகளை மீறும் பொறியியல் கல்லூரிகளை அரசு ஏற்க வேண்டும்: ராமதாஸ்

Posted: 14 Dec 2014 01:23 PM PST

விதிகளை மீறும் பொறியியல் கல்லூரிகளை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தினார்.

பூலாம்பாடியில் பாரதியார் பிறந்த நாள் விழா

Posted: 14 Dec 2014 01:22 PM PST

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே உள்ள பூலாம்பாடி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் பாரதியார் பிறந்த நாளையொட்டி மாணவ, மாணவிகளுக்கான கதை சொல்லும் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன.

வணிக வளாகத்தில் 40 டன் சின்ன வெங்காயம் ஏலம்

Posted: 14 Dec 2014 01:22 PM PST

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், செட்டிக்குளத்தில் உள்ள வெங்காய வணிக வளாகத்தில் 40 டன் சின்ன வெங்காயம் ரூ. 9 லட்சத்திற்கு ஏலமுறையில் விற்பனையானது.

ஜயங்கொண்டத்தில் ஆசிரியர்களுக்குப் பயிற்சி

Posted: 14 Dec 2014 01:22 PM PST

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் ஜயங்கொண்டம் வட்டார வளமையத்திற்குட்பட்ட தொடக்க, நடுநிலை பள்ளி ஆசிரியர்களுக்கு எளிய உடற்பயிற்சிகள், உள்ளரங்கப் பயிற்சி என்ற தலைப்பில் ஒருநாள் பயிற்சி சனிக்கிழமை அளிக்கப்பட்டது.

போலி மது தொழிற்சாலை நடத்தியவரைப் பிடிக்க 5 தனிப்படை

Posted: 14 Dec 2014 01:22 PM PST

பெரம்பலூர் அருகே உள்ள வாலிகண்டபுரத்தில் போலி மதுபானம் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தியவரைப் பிடிக்க, 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன என்றார் திருச்சி மண்டலக் காவல் துறை துணைத் தலைவர் செந்தாமரைக்கண்ணன்.

மயிலாடுதுறையில் ராஜேந்திர சோழன் முடிசூடிய 1000-வது ஆண்டு விழா

Posted: 14 Dec 2014 01:21 PM PST

மன்னன் ராஜேந்திர சோழன் முடிசூடிய 1000-மாவது ஆண்டு விழா மற்றும் பாரதியாரின் 133-வது பிறந்த நாள் விழா மயிலாடுதுறையில் சனிக்கிழமை நடைபெற்றது.

100 ஆண்டுகளாகியும் மாறாத தேயிலைத் தோட்டத் தொழிலாளர் நிலை: நிர்மலா சீதாராமன்

Posted: 14 Dec 2014 01:20 PM PST

இந்தியாவில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் நிலை 100 ஆண்டுகளுக்குப் பிறகும் மாறவில்லை என மத்திய தொழில், வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வேதனை தெரிவித்தார்.

நேரடி மானியத் திட்டம்: சிறப்பு முகாம்களில் 11 ஆயிரம் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பு

Posted: 14 Dec 2014 01:18 PM PST

சென்னை, திருவள்ளூரில் நடைபெற்ற சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்ட சிறப்பு முகாம்களில் 11 ஆயிரம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

போலி மது தொழிற்சாலை நடத்தியவரைப் பிடிக்க 5 தனிப்படை

Posted: 14 Dec 2014 01:17 PM PST

பெரம்பலூர் அருகே உள்ள வாலிகண்டபுரத்தில் போலி மதுபானம் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தியவரைப் பிடிக்க, 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன என்றார் திருச்சி மண்டலக் காவல் துறை துணைத் தலைவர் செந்தாமரைக்கண்ணன்.

பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்யக் கோரிக்கை

Posted: 14 Dec 2014 01:17 PM PST

பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்ய வேண்டுமென தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 14 Dec 2014 01:17 PM PST

கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டத்தில் ஓய்வு பெற்ற அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புற்றுநோயை தொடக்கத்தில் கண்டறிந்தால் 70% குணமாகும்

Posted: 14 Dec 2014 01:17 PM PST

புற்றுநோய் தொடக்கத்திலேயே கண்டறியப்படுவதால், உலக நாடுகளில் 70% குணப்படுத்தப்படுகிறது என்றார் புற்றுநோய் சிறப்பு மருந்தியல் மருத்துவர் எஸ். சுரேஷ்குமார்.

நூலகர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

Posted: 14 Dec 2014 01:17 PM PST

பெரம்பலூர் மாவட்ட நூலகத் துறையில் பணியாற்றும் நூலகர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி முகாம், துறைமங்கலத்தில் உள்ள இப்பா தொழிற்பயிற்சி மையத்தில் அண்மையில் அளிக்கப்பட்டது.

பைக்கிலிருந்து தவறி விழுந்த இருவர் சாவு

Posted: 14 Dec 2014 01:17 PM PST

பெரம்பலூர் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் மோட்டார் சைக்கிளிலிருந்து தவறி விழுந்த இருவர் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் உயிரிழந்தனர்.

காரைக்காலிலிருந்து கடத்தி வரப்பட்ட 480 மதுபான பாட்டில்கள் பறிமுதல்

Posted: 14 Dec 2014 01:17 PM PST

சீர்காழி அருகே தென்னலக்குடியில் வாகன தனிக்கையின்போது காரில் கடத்தி வரப்பட்ட 480 மதுபான பாட்டில்கள் மற்றும் காரை போலீஸார் சனிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனர்.

பழங்குடியின ஓவியக் கண்காட்சி இன்று தொடங்குகிறது

Posted: 14 Dec 2014 01:15 PM PST

சென்னை லலித் கலா அகாதெமியில் திங்கள்கிழமை (டிசம்பர் 15) முதல் பழங்குடியின ஓவியக் கண்காட்சி நடைபெறவுள்ளது.

காங்கோவில் படகு கவிழ்ந்து 129 பேர் பலி

Posted: 14 Dec 2014 01:06 PM PST

ஆப்பிரிக்க நாடான காங்கோவில் படகு கவிழ்ந்த விபத்தில் 129 பேர் உயிரிழந்தனர்.

கார்த்திகை மகா தீபம் நாளையுடன் நிறைவு

Posted: 14 Dec 2014 01:04 PM PST

திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை மீது எரிந்து வரும் கார்த்திகை மகா தீபம், செவ்வாய்க்கிழமை (டிச.16) காலையுடன் நிறைவு பெறுகிறது.

இந்த நாளில் அன்று (15.12.2004); வங்கிகளை இணைக்க அதிகாரிகள் சங்கம் எதிர்ப்பு; மியூசிக் அகாதமி வழக்கில் இடைக்கால தீர்ப்பு

Posted: 14 Dec 2014 12:57 PM PST

தேசிய வங்கிகளை ஒன்றோடொன்று இணைப்பதற்கு அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

நடப்பது நன்மைக்கே

Posted: 14 Dec 2014 12:57 PM PST

ஆட்டோ ஒன்றின் பின்புறத்தில், "யாமிருக்க நடை ஏன்?' என எழுதப்பட்ட வாக்கியம் கண்ணில்பட்டது.

வாராக்கடன்களை வசூலிக்க...

Posted: 14 Dec 2014 12:57 PM PST

வசூலிக்க முடியாத கடன் எனக் கருதி, கடந்த ஐந்து ஆண்டுகளில் வங்கிகள் நஷ்டக் கணக்கில் (ஜ்ழ்ண்ற்ற்ங்ய் ர்ச்ச்) எழுதிய தொகை ஒரு லட்சத்து அறுபத்தி ஓராயிரம் கோடி ரூபாய்.

இந்தியாவுக்காகத் தயாரிப்போம்!

Posted: 14 Dec 2014 12:57 PM PST

இந்தியாவை உலக உற்பத்தி மையமாக்கும் "இந்தியாவில் தயாரிப்போம்' என்கிற திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துவிட்டார் என்பதற்காக அதை வழிமொழியாமல், பொருளாதார வளர்ச்சிக்கு உத்தரவாதம் அளிக்காது என்றும் ஒரு பொருளாதார நிபுணரின் பார்வையில் துணிந்து கருத்துத் தெரிவித்திருக்கும் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜனைக் கைகுலுக்கிப் பாராட்ட வேண்டும்.

அனுமதியின்றி மது விற்ற 2 பேர் கைது

Posted: 14 Dec 2014 12:31 PM PST

கரூர் நகர்ப் பகுதியில் இரவு நேரத்தில் டாஸ்மாக் பார்கள் அருகே சிலர் அதிக விலைக்கு மது விற்பதாக நகர காவல் நிலையத்தினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் அங்குச் சென்று சோதனை நடத்தியபோது, மக்கள் பாதை பகுதியில் மதுவிற்ற இஸ்மாயில் தெருவைச் சேர்ந்த ஜாபர் அலியை (48)

சாந்தநாத சுவாமி கோயிலுக்குள் திருட்டு முயற்சி

Posted: 14 Dec 2014 12:31 PM PST

புதுக்கோட்டை சாந்தநாத சுவாமி கோயில் வளாகத்தில் உள்ள ஆஞ்சநேயர் சன்னதியின் கதவுகளை உடைத்து திருட முயன்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலில் லட்சார்ச்சனை விழா

Posted: 14 Dec 2014 12:30 PM PST

பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலில் 24-ம் ஆண்டு லட்சார்ச்சனை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக

திருக்களம்பூர் ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம்

Posted: 14 Dec 2014 12:30 PM PST

பொன்னமராவதி அருகே உள்ள திருக்களம்பூர் ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

பாஜக ஆட்சியில் சமூக ஏற்றத்தாழ்வுகள் அதிகரிப்பு: ஜி.ராமகிருஷ்ணன்

Posted: 14 Dec 2014 12:30 PM PST

பாஜக ஆட்சியில் சமூக ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்து வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

கண்டியாநத்தம்- புதுப்பட்டி சாலையை சீரமைக்க கோரிக்கை

Posted: 14 Dec 2014 12:30 PM PST

பொன்னமராவதி அருகே மிகவும் சேதமடைந்து காணப்படும் கண்டியாநத்தம் - புதுப்பட்டி சாலையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசு மருந்தாளுநர் சங்க முப்பெரும் விழா

Posted: 14 Dec 2014 12:30 PM PST

புதுக்கோட்டையில் தமிழ்நாடு அரசு மருந்தாளுநர் சங்க முப்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

புதுகை ரயில் நிலையத்தில் தூய்மை பணி

Posted: 14 Dec 2014 12:29 PM PST

புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் லெணாவிலக்கு செந்தூரான் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் சனிக்கிழமை தூய்மை பணி மேற்கொண்டனர்.

தூய்மை இந்தியா விழிப்புணர்வு பேரணி

Posted: 14 Dec 2014 12:29 PM PST

அறந்தாங்கியில் தூய்மை இந்தியா திட்டம் குறித்த கல்லூரி மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

குத்தாலத்தில் கடைஞாயிறு தீர்த்தவாரி

Posted: 14 Dec 2014 12:29 PM PST

குத்தாலத்தில் கார்த்திகை கடைஞாயிறை முன்னிட்டு காவிரி படித்துறையில் தீர்த்தவாரி உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை கொண்டு வர பாஜக அரசு முயற்சி

Posted: 14 Dec 2014 12:28 PM PST

இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை கொண்டு வர பாஜக அரசு முயற்சி செய்து வருகிறது என்றார் மனிதநேய மக்கள் கட்சியின் சட்டப்பேரவை குழுத் தலைவர் ஜவாஹிருல்லா.

3 ஆண்டுகளில் கங்கை நதி தூய்மைப்படுத்தப்படும்: உமா பாரதி

Posted: 14 Dec 2014 12:28 PM PST

"அடுத்த 3 ஆண்டுகளில் கங்கை நதி தூய்மைப்படுத்தப்படும்' என்று மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமா பாரதி ஞாயிற்றுக்கிழமை உறுதியளித்தார்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த இருவர் சாவு

Posted: 14 Dec 2014 12:28 PM PST

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள சிறுவயலூரைச் சேர்ந்தவர் சீனிவாசன் மகன் கண்ணன் (42). இவர், கடந்த 5-ம் தேதி இரவு அ.குடிக்காடு கிராமத்திலிருந்து சிறுவயலூருக்கு மோட்டார் சைக்கிளில் சிறுவயலூர் ஆற்றுப்பாலம் அருகே சென்றபோது தவறி கீழே விழுந்தார்.

நாகுடியில் கர்ப்பிணிகளுக்கு ஆரோக்கிய உணவு கண்காட்சி

Posted: 14 Dec 2014 12:28 PM PST

நாகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கான ஆரோக்கிய உணவுக் கண்காட்சி, சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

துப்பாக்கியால் சுட்டு மீனவர்கள் விரட்டியடிப்பு: இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து அட்டூழியம்

Posted: 14 Dec 2014 12:28 PM PST

ராமேசுவரம் பகுதியிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களை தனுஷ்கோடி கடல் பகுதியில் இலங்கைக் கடற்படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு அச்சுறுத்தி விரட்டியடித்தனர்.

மண்டல விளையாட்டுபோட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு

Posted: 14 Dec 2014 12:27 PM PST

நாகப்பட்டினத்தில் மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றது. டெல்டா மாவட்டங்களின் ஒருங்கணைந்த பள்ளிகள் சார்பில் நடைபெற்ற போட்டிகளில் நாகப்பட்டினம்

காரைக்காலிலிருந்து கடத்தி வரப்பட்ட 480 மதுபான பாட்டில்கள் பறிமுதல்

Posted: 14 Dec 2014 12:27 PM PST

சீர்காழி அருகே தென்னலக்குடியில் வாகன தனிக்கையின்போது காரில் கடத்தி வரப்பட்ட 480 மதுபான பாட்டில்கள் மற்றும் காரை போலீஸார் சனிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனர்.

மூளை செயல்வேகத் திறன் போட்டி:மயிலாடுதுறை மாணவர்கள் சிறப்பிடம்

Posted: 14 Dec 2014 12:27 PM PST

மூளை செயல் வேகத்திறன் போட்டிகளில் மயிலாடுதுறை பகுதிகளைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்றனர்.

இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை கொண்டு வர பாஜக அரசு முயற்சி

Posted: 14 Dec 2014 12:27 PM PST

 இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை கொண்டு வர பாஜக அரசு முயற்சி செய்து வருகிறது என்றார் மனிதநேய மக்கள் கட்சியின் சட்டப்பேரவை குழுத் தலைவர் ஜவாஹிருல்லா.

பார்வதீஸ்வரர் கோயிலில் கடை ஞாயிறு தீர்த்தவாரி

Posted: 14 Dec 2014 12:26 PM PST

ஸ்ரீ பார்வதீஸ்வர சுவாமி கோயில் அருகே உள்ள சூரிய புஷ்கரணியில் கார்த்திகை கடை ஞாயிறு தீர்த்தவாரி நடைபெற்றது.

பிரதமர் மோடிக்கு குமரி அனந்தன் பாராட்டு

Posted: 14 Dec 2014 12:26 PM PST

மது இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்று பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளதற்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

தட்டுப்பாடின்றி ரேஷன் பொருள் கிடைக்க நடவடிக்கை தேவை

Posted: 14 Dec 2014 12:26 PM PST

ரேஷன் கடைகளில் தட்டுப்பாடின்றி பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏஐடியுசி வலியுறுத்தியுள்ளது.

6,000 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

Posted: 14 Dec 2014 12:26 PM PST

தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் செவிலியர்கள் விரைவில் நியமனம் செய்யப்படவுள்ளதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறினார்.

கரும்பு நிலுவை ரூ. 18 கோடியை வழங்க வேண்டும்

Posted: 14 Dec 2014 12:25 PM PST

புகளூர் ஈஐடி பாரி சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ. 18 கோடி நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி வலியுறுத்தியுள்ளது.

அனுமதியின்றி மது விற்ற 2 பேர் கைது

Posted: 14 Dec 2014 12:25 PM PST

கரூர் நகர்ப் பகுதியில் இரவு நேரத்தில் டாஸ்மாக் பார்கள் அருகே சிலர் அதிக விலைக்கு மது விற்பதாக நகர காவல் நிலையத்தினருக்கு தகவல் கிடைத்தது.

நோயாளிகளுக்கு காங்கிரஸார் உதவி

Posted: 14 Dec 2014 12:24 PM PST

அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி பிறந்த நாளை முன்னிட்டு கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு பன், பிஸ்கட்டுகள் அண்மையில் வழங்கப்பட்டன.

மதிமுக மாணவர் மன்றம் ஆர்ப்பாட்டம்

Posted: 14 Dec 2014 12:24 PM PST

விவசாய நிலங்களில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தைக் கண்டித்து கரூர் மாவட்டம், லாலாபேட்டையில் மதிமுக மாணவர் மன்றம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சக்தி நர்சிங் மாணவிகள் உறுதியேற்பு நிகழ்ச்சி

Posted: 14 Dec 2014 12:23 PM PST

கரூர் ராயனூரை அடுத்த சக்தி நர்சிங் கல்லூரியில் முதலாமாண்டு மாணவிகள் உறுதிமொழியேற்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

ஆசிரியர்கள் மௌன அஞ்சலி ஊர்வலம்

Posted: 14 Dec 2014 12:23 PM PST

கரூரில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஞாயிற்றுக்கிழமை மௌன அஞ்சலி ஊர்வலம் நடத்தினர்.

நூலக அலுவலர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி முகாம்

Posted: 14 Dec 2014 12:23 PM PST

கரூரில் நூலக அலுவலர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி முகாமின் நிறைவு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

குளித்தலை அருகே இளைஞர் கொலை

Posted: 14 Dec 2014 12:22 PM PST

கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள வாழைத் தோட்டத்தில் இளைஞர் கொல்லப்பட்டுக் கிடந்தது ஞாயிற்றுக்கிழமை மாலை தெரியவந்தது.

அரவக்குறிச்சி அருகே விபத்து: கால்நடை மருத்துவர் சாவு

Posted: 14 Dec 2014 12:22 PM PST

அரவக்குறிச்சி அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சாலைத் தடுப்பில் கார் மோதி கால்நடை மருத்துவர் இறந்தார். 2 பேர் காயமடைந்தனர்.

தஞ்சை அலுவலகத்தை காலிசெய்தது கிரேட் ஈஸ்ட்ர்ன் எனர்ஜி நிறுவனம்

Posted: 14 Dec 2014 12:21 PM PST

காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூரில் நிலத்தடியிலிருந்து மீத்தேன் வாயுவை எடுக்க கிரேட் ஈஸ்ட்ர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் நிறுவனத்துக்கு மத்திய அரசு கடந்த 2010-ல் அனுமதி அளித்தது. இத்திட்டம் விவசாயிகள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் எனக் கூறி, திட்டத்தை செயல்படுத்த எதிர்ப்பு

"கூட்டுறவுத் துறை மூலம் ரூ. 90 கோடி பயிர்க் கடன்'

Posted: 14 Dec 2014 12:21 PM PST

2014-15 ஆம் ஆண்டில் கூட்டுறவுத் துறை மூலம் இதுவரை 16,851 விவசாயிகளுக்கு பயிர்க் கடனாக ரூ. 90 கோடி வழங்கப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.

கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

Posted: 14 Dec 2014 12:20 PM PST

பாடாலூர் அருகே உள்ள நக்கசேலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரெங்கராஜ் மகள் பிரவினா (19). இவர் பெரம்பலூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ படித்து வந்தார்.

குடும்ப அட்டையில் உள்தாள் ஒட்டும் பணி: இன்று தொடக்கம்

Posted: 14 Dec 2014 12:20 PM PST

குடும்ப அட்டையின் காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க வகை செய்ய அதனுள் உள்தாள் ஒட்டும் பணி திங்கள்கிழமை (டிசம்பர் 15) முதல் தொடங்குகிறது.

கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் வீணாவதைத் தடுக்க வலியுறுத்தல்

Posted: 14 Dec 2014 12:20 PM PST

பெரம்பலூர் அருகே கொள்ளிடம் கூட்டுக் குடிநீர்க் குழாய் உடைந்து குடிநீர் வீணாவதைத் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

டிசம்பர் 16 மின் தடை

Posted: 14 Dec 2014 12:20 PM PST

பெரம்பலூர் கோட்டம், மங்கூன் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், குரும்பலூர், மேலப்புலியூர், திருப்பெயர், நாவலூர், கே.புதூர், ஈச்சம்பட்டி, மூலக்காடு,

அதிக மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை தேவை

Posted: 14 Dec 2014 12:19 PM PST

பெரம்பலூர் நகரில் பள்ளி மாணவர்களை அதிகளவில் ஏற்றிச் செல்லும் தனியார் வாகனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

விழிப்புணர்வுப் பேரணிக்கு வரவேற்பு

Posted: 14 Dec 2014 12:19 PM PST

சென்னை ஜே.பி.ஆர் பொறியியல் கல்லூரி தேசிய மாணவர் படையினரின் புற்றுநோய், பெண் சிசுக்கொலை தொடர்பான விழிப்புணர்வு சைக்கிள் பேரணிக்கு பெரம்பலூரில் சனிக்கிழமை மாலை வரவேற்பு அளிக்கப்பட்டது.

புதிய அணை ஆய்வுக்கு கேரளத்துக்கு அனுமதி: கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்

Posted: 14 Dec 2014 12:19 PM PST

முல்லைப் பெரியாறில் கேரளம் புதிய அணை கட்டுவதற்கு சுற்றுச்சூழல் ஆய்வு நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதற்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்தார்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த இருவர் சாவு

Posted: 14 Dec 2014 12:19 PM PST

பெரம்பலூர் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் மோட்டார் சைக்கிளிலிருந்து தவறி விழுந்த இருவர் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் உயிரிழந்தனர்.

2 ஆண்டுகள் ஆனது பி.எட்., எம்.எட். படிப்புகள்: வழிகாட்டுதலை வெளியிட்டது என்.சி.டி.இ.

Posted: 14 Dec 2014 12:18 PM PST

தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் (என்.சி.டி.இ.) வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின்படி, பி.எட்., எம்.எட். ஆசிரியர் கல்வியியல் பட்டப் படிப்புகளின் படிப்புக் காலம் இரண்டு ஆண்டுகளாக உயர்ந்துள்ளது.

31 மாற்றுத்திறனாளிகளுக்கு விலையில்லா மோட்டார் சைக்கிள்கள்

Posted: 14 Dec 2014 12:18 PM PST

புதுக்கோட்டையில் 31 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 17.36 லட்சம் மதிப்பில் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட விலையில்லா மோட்டார் சைக்கிள்கள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

நூலகர்களுக்கு புத்துணர்வு பயிற்சி

Posted: 14 Dec 2014 12:18 PM PST

பொது நூலகத் துறையின் சார்பில் புதுக்கோட்டை மாவட்ட நூலகர்களுக்கு புத்துணர்வு பயிற்சி முகாம் புதுக்கோட்டையில் வெள்ளி, சனி ஆகிய இரண்டு நாள்கள் நடைபெற்றது.

ஆலங்குடி பேரூராட்சியில்குப்பை வண்டிகள் அளிப்பு

Posted: 14 Dec 2014 12:18 PM PST

ஆலங்குடி பேரூராட்சியில் குப்பைத் தொட்டிகளுடன் கூடிய தள்ளு வண்டிகள் மூலம் மக்கும், மக்காத குப்பைகளை அகற்றும் பணி சனிக்கிழமை தொடங்கியது.

நாகுடியில் கர்ப்பிணிகளுக்கு ஆரோக்கிய உணவு கண்காட்சி

Posted: 14 Dec 2014 12:17 PM PST

நாகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கான ஆரோக்கிய உணவுக் கண்காட்சி, சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

புதுகை, அறந்தாங்கி நகராட்சி அலுவலகங்களில்ஆதார் அட்டை பதிவு முகாம்

Posted: 14 Dec 2014 12:17 PM PST

புதுக்கோட்டை, அறந்தாங்கி நகராட்சி அலுவலகங்களில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அறந்தாங்கியில் மின் சிக்கன வார விழா

Posted: 14 Dec 2014 12:17 PM PST

அறந்தாங்கியில் மின் சிக்கன வார விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் ஆர். குமரேசன் தொடக்கி வைத்தார்.

பங்களிப்பு ஓய்வூதியதிட்டத்தை ரத்து செய்யக் கோரிக்கை

Posted: 14 Dec 2014 12:17 PM PST

தமிழக அரசு தற்போது கடைப்பிடித்து வரும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

கார் மோதியதில் முதியவர் சாவு

Posted: 14 Dec 2014 12:16 PM PST

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை- திருச்சி நான்கு வழிச்சாலையில் ராசநாயக்கன்பட்டி அருகே சாலையில் நடந்து சென்ற முதியவர் மீது திருச்சி நோக்கி சென்ற கார் மோதியது. இதில் பலத்த

கண் சிகிச்சை முகாம்: 67 பேர் அறுவைச் சிகிச்சைக்குப் பரிந்துரை

Posted: 14 Dec 2014 12:16 PM PST

பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமில் கலந்து கொண்டவர்களில் 67 பேர் அறுவைச் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.

ரூ. 12.18 லட்சம் நலத் திட்ட உதவிகள்

Posted: 14 Dec 2014 12:15 PM PST

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 55 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 12.18 லட்சம் மதிப்பில் உதவி உபகரணங்கள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

சிறப்பாக பயின்று முடிக்கும் மாணவர்களுக்கு தங்கப்பதக்கம்

Posted: 14 Dec 2014 12:15 PM PST

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் சிறப்பாக படித்து முடிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தங்கப்பதக்கம் வழங்கப்படும் என்றார் தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஆர். வைத்திலிங்கம்.

புற்றுநோயை தொடக்கத்தில் கண்டறிந்தால் 70% குணமாகும்

Posted: 14 Dec 2014 12:15 PM PST

புற்றுநோய் தொடக்கத்திலேயே கண்டறியப்படுவதால், உலக நாடுகளில் 70% குணப்படுத்தப்படுகிறது என்றார் புற்றுநோய் சிறப்பு மருந்தியல் மருத்துவர் எஸ். சுரேஷ்குமார்.

பாபநாசத்தில் அதிமுக சார்பில் மகா ருத்ர யாகம்

Posted: 14 Dec 2014 12:15 PM PST

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் 108 சிவாலயம் என அழைக்கப்படும் ராமலிங்க சுவாமி கோயிலில், தஞ்சாவூர் வடக்கு மாவட்ட ஜெ. பேரவை சார்பில் மகா ருத்ர யாகம், நவகிரஹ சாந்தி ஹோமம்

குழந்தைத் தொழிலாளர் முறையை வரலாற்றில் படிக்கும் காலம் வரும்: கைலாஷ் சத்யார்த்தி

Posted: 14 Dec 2014 12:09 PM PST

"குழந்தைத் தொழிலாளர் முறையை நாம் வரலாற்றில் படிக்கும் காலம் வரும்' என்று அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி தெரிவித்தார்.

ஏழை முஸ்லிம்களை மத மாற்றம் செய்ய ஹிந்து அமைப்புகள் முயற்சி

Posted: 14 Dec 2014 11:54 AM PST

ஏழை முஸ்லிம்களின் நிலையைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, அவர்களை மத மாற்றம் செய்ய ஹிந்து அமைப்புகள் முயற்சிப்பதாக அனைத்து இந்திய முஸ்லிம் சட்ட வாரியம் குற்றம்சாட்டியுள்ளது.

மேற்குவங்கம்: விரைவு ரயில் தடம் புரண்டது

Posted: 14 Dec 2014 11:53 AM PST

மேற்கு வங்க மாநிலம், ஹெளரா அருகே பூர்வா விரைவு ரயிலின் 12 பெட்டிகள் ஞாயிற்றுக்கிழமை தடம்புரண்டு விபத்துக்குள்ளாகின. எனினும், இதில் அதிர்ஷ்டவசமாக யாரும் காயமடையவோ அல்லது உயிரிழக்கவோ இல்லை.

ஆங்கிலேயர் கால நடைமுறைகளை பின்பற்றக் கூடாது: போலீஸாருக்கு மத்திய அரசு உத்தரவு

Posted: 14 Dec 2014 11:51 AM PST

"காவல்துறை உயர் அதிகாரிகளின் பயணங்களின்போது அவர்களின் பாதுகாப்புக்காக கீழ்நிலை ஊழியர்கள் உடன் செல்வது உள்பட ஆங்கிலேயர் கால நடைமுறைகளை பின்பற்ற வேண்டாம்' என்று அனைத்து மத்திய காவல் துறை அமைப்புகள், அரசு காவல் துறை தலைவர்களுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் தேர்தலுக்குப் பிறகு கூட்டணி இல்லை: பாஜக

Posted: 14 Dec 2014 11:50 AM PST

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஆட்சியமைப்பதற்காக, தேர்தலுக்குப் பிறகு எந்த பிராந்தியக் கட்சியுடனும் பாஜக கூட்டணி அமைக்காது என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான அருண் ஜேட்லி கூறினார்.

பேசினால் போதாது; செயலிலும் வேண்டும்: பிரதமரின் வானொலி உரை குறித்து இடதுசாரிக் கட்சிகள்

Posted: 14 Dec 2014 11:49 AM PST

போதைப் பழக்கம் குறித்து அகில இந்திய வானொலி மூலம் "மன் கீ பாத்' என்ற தலைப்பில் உரையாற்றும் போது பிரதமர் நரேந்திர மோடி கவலை தெரிவித்திருந்தது குறித்து இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

சுய விளம்பரத்துக்காகவே நாடாளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு

Posted: 14 Dec 2014 11:48 AM PST

"சுய விளம்பரம் தேடிக் கொள்ளவே எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்கின்றனர்' என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு ஞாயிற்றுக்கிழமை குற்றம்சாட்டினார்.

ஐ.எஸ். ஆதரவாளர் மெஹ்திக்கு 5 நாள் போலீஸ் காவல்

Posted: 14 Dec 2014 11:47 AM PST

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர் மெஹ்தி மஸ்ரூர் பிஸ்வாûஸ 5 நாள்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க பெங்களூரு மாஜிஸ்திரேட் அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

பாலியல் பலாத்கார வழக்குகள் நிலுவை: விரைவு நீதிமன்றங்களை அமைக்க உயர் நீதிமன்றங்களுக்கு அறிவுறுத்தல்

Posted: 14 Dec 2014 11:46 AM PST

"நிலுவையில் உள்ள பாலியல் பலாத்கார வழக்குகளை விரைந்து முடிக்க ஏதுவாக, விரைவு நீதிமன்றங்களை அமைக்க உயர் நீதிமன்றங்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

அரசியல்வாதிகள்தான் குடியரசுத் தலைவராக வேண்டும்: பிரணாப் முகர்ஜி

Posted: 14 Dec 2014 11:43 AM PST

குடியரசுத் தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு அரசியல்வாதிகளைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

முக்கிய நதிகள் விரைவில் தூர்வாரப்படும்: உ.பி. அமைச்சர்

Posted: 14 Dec 2014 11:39 AM PST

"உத்தரப் பிரதேச மாநிலத்தின் முக்கிய நதிகளைத் தூர்வாரும் பணிகள் ஓரிரு வாரங்களில் தொடங்கும்' என்று மாநில நீர்வளத் துறை அமைச்சர் ஷிவ்பால் சிங் யாதவ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

வன்முறையைக் கைவிட்டு: நக்ஸலைட்டுகள் காங்கிரஸில் சேர வேண்டும்: திக்விஜய் சிங்

Posted: 14 Dec 2014 11:38 AM PST

வன்முறையைக் கைவிட்டு, காங்கிரஸ் கட்சியில் நக்ஸலைட்டுகள் சேர வேண்டும் என்று அந்தக் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங் அழைப்பு விடுத்தார்.

மகாபாரதமும், ராமாயணமும் சிறந்த தகவல் களஞ்சியங்கள்: அத்வானி

Posted: 14 Dec 2014 11:37 AM PST

""மகாபாரதம், ராமாயணம் ஆகியவை அரசியல், அறநெறி ஆகியவற்றைக் கற்றுத்தரும் சிறந்த தகவல் களஞ்சியங்கள். அதனை மக்கள் நிச்சயம் படிக்க வேண்டும்'' என்று பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி வலியுறுத்தினார்.

போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் சங்கம் ஆதரவு

Posted: 14 Dec 2014 11:36 AM PST

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு, ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் சங்கம் ஆதரவு அளிப்பது என தீர்மானித்துள்ளது.

12 பெரிய துறைமுகங்களுக்கு ரயில் தொடர்புகளை ஏற்படுத்த புதிய நிறுவனம்: மத்திய அரசு திட்டம்

Posted: 14 Dec 2014 11:36 AM PST

நாட்டில் உள்ள 12 பெரிய துறைமுகங்களுக்கு ரயில் தொடர்புகளை ஏற்படுத்தித் தருவதற்காக தனியாக ரயில்வே நிறுவனம் ஒன்றை அமைப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தஞ்சை அலுவலகத்தை காலிசெய்தது கிரேட் ஈஸ்ட்ர்ன் எனர்ஜி நிறுவனம்

Posted: 14 Dec 2014 11:36 AM PST

தஞ்சாவூரில் இருந்த மீத்தேன் வாயு எடுக்கும் திட்ட அலுவலகமான கிரேட் ஈஸ்ட்ர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் நிறுவன அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை முழுவதுமாகக் காலிசெய்யப்பட்டது.

மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பினர் பிரசாரம்

Posted: 14 Dec 2014 11:36 AM PST

மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மயிலாடுதுறை பகுதிகளில் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பினர் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்டனர்.

வாகீஸ்வரர் சுவாமி கோயிலில் நாளை சனிப் பெயர்ச்சி

Posted: 14 Dec 2014 11:35 AM PST

மயிலாடுதுறையை அடுத்துள்ள பெருஞ்சேரி சுவதந்திர நாயகி உடனுறை வாகீஸ்வரர் சுவாமி கோயிலில் சனிப்பெயர்ச்சி விழாவுக்கான

4-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

Posted: 14 Dec 2014 11:35 AM PST

நாகப்பட்டினத்தில் விசைப்படகு மீனவர்கள் 4-வது நாளாக கடலுக்குச் செல்லவில்லை. நாகையில் மீனவ சங்கப் பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில்

முசாஃபர்நகர் கலவரம்: மேலும் 6 பேர் கைது

Posted: 14 Dec 2014 11:35 AM PST

உத்தரப் பிரதேச மாநிலம், முசாஃபர்நகரில் கடந்த ஆண்டு நேரிட்ட கலவரத்தின்போது 8 பேர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக மேலும் 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

குத்தாலத்தில் கடைஞாயிறு தீர்த்தவாரி

Posted: 14 Dec 2014 11:35 AM PST

குத்தாலத்தில் கார்த்திகை கடைஞாயிறை முன்னிட்டு காவிரி படித்துறையில் தீர்த்தவாரி உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™