Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


இந்திய தண்டனை சட்டத்தில் மாற்றம்: தற்கொலை முயற்சி இனி குற்றமாகாது

Posted:

புதுடில்லி: 'தற்கொலை செய்து கொள்ள முயற்சிப்பது, குற்றமல்ல' என, இந்திய தண்டனை சட்டத்தில், மத்திய அரசு திருத்தம் கொண்டு வர உள்ளது. தற்கொலை முயற்சிக்கு, ஓராண்டு சிறை தண்டனை உறுதி என்ற நிலையில், பல்வேறு காரணங்களால், ஏராளமானோர் தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கும் நிலையில், அதை தண்டனையில்லை என, அறிவித்தால், தற்கொலை மிரட்டல் சம்பவங்கள் அதிகரிக்கும் என, சில மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.இந்திய தண்டனை சட்டம், 309வது பிரிவின் கீழ், தன் உயிரை தானே மாய்த்துக் கொள்ள, யாருக்கும் உரிமையில்லை. தங்களுக்கு நேர்ந்த பிரச்னை, துன்பம், இழப்பு போன்றவற்றை பொறுத்து ...

தி.மு.க.,வில் உருவாகும் வர்த்தக அணி: கருணாநிதியிடம் கனிமொழி வலியுறுத்தல்

Posted:

தமிழகத்தில், பல கட்சி களிலும் இருக்கும் வர்த்தக அணி போல, தி.மு.க., விலும் உடனடியாக அந்த அணியை ஏற்படுத்த வேண்டும்; அது சட்ட சபைத் தேர்தலுக்கு, பெரும் உதவியாக இருக்கும் என, கட்சித் தலைவர் கருணாநிதிக்கு, கட்சியின் ராஜ்யசபா எம்.பி.,க்கள் குழு தலைவர் கனிமொழி வலியுறுத்தி சொல்லியுள்ளதாக, தகவல் வெளியாகி இருக்கிறது.6 பேர் குழு: கடந்த லோக்சபா தேர்தலில், கட்சி படுதோல்வி அடைந்ததும், கட்சியை சீரமைத்து பலப்படுத்துவதற்கென்று, ஆறு பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு, அக்குழு தலைமைக்கு ஏகப்பட்ட பரிந்துரைகளை வழங்கியது. அதன்படி, 34 மாவட்டங்களாக இருந்த தி.மு.க., ...

கூரை வீட்டில் வசித்த பெண்ணை மருமகளாக்கிய நடிகர் வடிவேலு

Posted:

மதுரை: தன் கடந்த கால ஏழ்மையை மனதில் வைத்து, கூரை வீட்டில் வசித்த பெண்ணை, தன் மகனுக்கு மணம் முடித்தார், நடிகர் வடிவேலு.தமிழ் சினிமாவில், சிரிப்பு நடிகராக, கொடி கட்டிப் பறப்பவர், வடிவேலு. கடந்த சட்டசபைத் தேர்தலில், தி.மு.க.,விற்காக பிரசாரம் செய்து, எடுபடாமலும், சினிமாவில் ஓரங்கட்டப்பட்டாலும், இன்றும், தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை தக்க வைத்துள்ளார். சினிமா வாய்ப்பிற்கு முன், மதுரை விரகனூரில் வசித்த வடிவேலு, ஏழ்மையில் பல சிரமங்களை சந்தித்தவர். சினிமா மூலம் வசதியான வாழ்க்கை அமைந்த பிறகும், தன் சொந்த ஊர், உறவுகளுடனான தொடர்பில் அவர் விலகவில்லை. சில ...

'உபெர்' கால் டாக்சிக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு: மும்பையில் தாக்குதல்; ஐதராபாத்தில் தடை

Posted:

மும்பை: டில்லியில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதற்கு முக்கிய காரணமாக இருந்த, 'உபெர்' கால் டாக்சி நிறுவனத்துக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மும்பையில் அந்த நிறுவனத்தின் பொது மேலாளர் தாக்குதலுக்கு ஆளானார். ஐதராபாத்தில், அந்த நிறுவனத்தின் சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவை தலைமையிடமாக வைத்து, 'உபெர்' கால் டாக்சி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில், இந்த நிறுவனத்தின் கால் டாக்சி சேவை உள்ளது. சமீபத்தில், தலைநகர் டில்லி யில், இந்த நிறுவனத்தின் கால் டாக்சியில் சென்ற இளம்பெண், அதன் டிரைவர் ...

சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்ற போது பிரியங்கா படம் பார்த்த பா.ஜ., எம்.எல்.ஏ.,

Posted:

பெலகாவி: சட்டசபை கூட்டத்தொடரின் போது, மொபைல் போனில், பிரியங்கா படத்தை பார்த்துக்கொண்டிருந்த, பா.ஜ.,--எம்.எம்.ஏ., வின் செயலுக்கு பல தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.பெலகாவி ஸ்வர்ண விதான் சவுதாவில், கர்நாடகா சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. நேற்று, தொடர் நடந்து கொண்டிருந்த போது, பீதர் மாவட்டம் அவுரத் தொகுதி, பா.ஜ.,- எம்.எல்.ஏ., பிரபு சவுஹான், தன் தலையில் ஒரு கூடையை வைத்து கொண்டு, அதில், பி.பி.எல்., ரேஷன் கார்டுகளை வைத்து, விற்பது போன்று, பா.ஜ.,- எம்.எல்.ஏ., க்கள் அமர்ந்திருந்த பகுதிக்கு சென்று, வந்து கொண்டிருந்தார். காங்கிரஸ் அரசில், போலி ரேஷன் ...

கைலாஷ் சத்யார்த்தி, மலாலா நோபல் பரிசு பெற்றனர்

Posted:

ஆஸ்லோ: இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு இந்தியாவை சேர்ந்த கைலாஷ் சத்யார்த்தி, பாகிஸ்தானை சேர்ந்த மலாலா யூசப்சாய் ஆகியோருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடைபெற்ற விழாவில் அவர்களுக்கு தங்க முலாம் பூசப்பட்ட 175 கிராம் எடையுள்ள நோபல் விருதும் 11 லட்சம் டாலர் (6.60 கோடி ரூபாய்) ரொக்கப் பரிசும் கிடைத்தது.இவ்விழாவில் நார்வே நோபல் விருது குழு தலைவர் தார்ப்ஜார்ன் ஜக்லந்து பேசியதாவது: ஆல்பர்ட் நோபல் தமது உயிலில் குறிப்பிட்ட 'சமாதான வீரர்கள்' என்ற சொல்லுக்கு கைலாஷ் சத்யார்த்தியும் மலாலாவும் மிகப் பொருத்தமானவர்களாக உள்ளனர். ...

ஜெ.,வுக்கு ஏன் ஜாமின் தரப்பட்டது? மறுபரிசீலனை செய்ய கோரிக்கை

Posted:

சொத்துக்குவிப்பு வழக்கில், தண்டனை பெற்ற, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு, சுப்ரீம் கோர்ட் வழங்கிய ஜாமினை, மறுபரிசீலனை செய்திடக் கோரி, மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த, சொத்துக்குவிப்பு வழக்கின் முடிவில், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய நான்கு பேருக்கும், சிறை தண்டனை வழங்கப்பட்டது. தங்களை, ஜாமினில் விடக்கோரி, நான்கு பேரும் தாக்கல் செய்த மனுவை, கர்நாடகா ஐகோர்ட் நிராகரித்து விட்டது. பின்னர், சுப்ரீம் கோர்ட்டில், நான்கு பேருக்கும் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த சுப்ரீம் ...

ரஷ்ய அதிபர் புடின் இந்தியா வருகை: முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன

Posted:

புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் முன்னிலையில், இந்தியா - ரஷ்யா இடையே அணுசக்தி, எரிவாயு, ராணுவம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த, 15 - 20 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.அணு உலை: இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள புடின் - பிரதமர் மோடி இடையேயான பேச்சுவார்த்தையில், ராணுவம் மற்றும் தொழில்நுட்ப கூட்டுறவுடன், புதிய அணு உலைகளின் கட்டுமானம் முக்கிய அம்சமாக இடம் பெறும். இந்தியாவில், ஏற்கனவே, 14 - 16 அணு மின் நிலையங்கள் அமைக்க ரஷ்யா ஒப்புக் கொண்டுள்ளது. இது, 20 -24 ஆக தற்போது உயர்த்தப்படும் என, ...

6 கோடியில் 74 லட்சம் போலி: ஓட்டுனர் உரிமத்தில் 'திடுக்'

Posted:

புதுடில்லி: 'இதுவரை வினியோகிக்கப்பட்டுள்ள, ஆறு கோடி ஓட்டுனர் உரிமங்களில், 74 லட்சம் உரிமங்கள் போலி' என, தேசிய தகவல் மையம் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில், ஓட்டுனர் உரிமங்கள் வழங்கப்படுகின்றன. ஒரே நபர், பல வட்டார அலுவலகங்களில் ஓட்டுனர் உரிமங்கள் கோரி விண்ணப்பித்தாலும், கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதனால் போலி மற்றும் நகல் ஓட்டுனர் உரிமங்கள் அதிக அளவில் பயன்பாட்டில் உள்ளன. அவற்றை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த முறைகள் இல்லை. இது குறித்து, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™