Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


சீன கம்யூ.,வை மிஞ்ச பா.ஜ., திட்டம்: மாதம் 2 கோடி உறுப்பினர் சேர்க்க தீவிரம்

Posted:

புதுடில்லி: உலகிலேயே பெரிய கட்சியாக இருக்க விரும்பும், பா.ஜ., வரும் மார்ச் மாதத்திற்குள், ஒன்பது கோடி உறுப்பினர்களை சேர்க்கவும், அதன் மூலம் சீன கம்யூனிஸ்ட் கட்சியை மிஞ்சவும் திட்டமிட்டு உள்ளது.மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவியேற்றதை அடுத்து, அனைத்து மாநிலங்களிலும், கீழ்மட்ட அளவில் தங்களின் செல்வாக்கை அதிகரிக்க திட்டமிட்டுள்ள பா.ஜ., கட்சி, நவ., 1ம் தேதி, கட்சிக்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் நடவடிக்கையை துவக்கியது. கடந்த ஒரு மாதத்தில், ஒரு கோடி உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர். இந்த உறுப்பினர் சேர்க்கை நடவடிக்கையை, சமூக ...

ஜம்மு - காஷ்மீர் 2ம் கட்ட தேர்தலில் 55 கோடீஸ்வரர்கள்

Posted:

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், இன்று, இரண்டாம் கட்டமாக நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், 18 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. இந்த, 18 தொகுதிகளில் போட்டியிடும், 175 வேட்பாளர்களில், 55 பேர் கோடீஸ்வரர்கள், 28 பேர், பள்ளிப் படிப்பை பாதியில் கைவிட்டவர்கள்.ஜம்மு - காஷ்மீர் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில், நவம்பர் 25ம் தேதி முதல், இம்மாதம், 20ம் தேதி வரை, ஐந்து கட்டங்களாக, சட்டசபை தேர்தல் நடக்கிறது. முதற்கட்ட தேர்தல், கடந்த 25ம் தேதி நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று, இரண்டாம் கட்ட தேர்தல் நடக்கிறது. ஜம்மு - காஷ்மீரில், இரண்டாம் கட்ட தேர்தலில், 18 தொகுதிகளில் ...

ஜெயலலிதா, சசிக்கு வருமான வரித்துறை ரூ.2 கோடிஅபராதம்: முழுமையாக கட்டி விட்டதாக கோர்ட்டில் தகவல்

Posted:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சசி என்டர்பிரைசஸ் நிறுவனம், வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தவறிய வழக்கில், அபராத தொகை, வருமான வரி தொகை, வழக்கு செலவு தொகை என, இரண்டு கோடி ரூபாயை முழுமையாக செலுத்தி விட்டதாக, சென்னை, கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோர், பங்குதாரர்களாக இருந்த, சசி என்டர்பிரைசஸ் நிறுவனம், 1991 - 92, 92 - 93ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை. ஜெயலலிதா, சசிகலா, தனிப்பட்ட முறையில், 1993 - 94ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை.இவர்கள், வருமான ...

ராணுவ அமைச்சகத்தின் கடுமையான சவால்களை பாரிக்கர் சமாளிப்பாரா? அந்தோணி கோட்டை விட்டதை சரி செய்ய வேண்டிய கட்டாயம்

Posted:

புதுடில்லி : முந்தைய மத்திய அரசில், ஒன்பது ஆண்டுகளாக ராணுவ அமைச்சராக பதவி வகித்த, ஏ.கே.அந்தோணி, ராணுவத்திற்கான ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் கொள்முதல் செய்யும் விஷயத்தில் சரியான, விரைவான முடிவுகளை எடுக்காததால், தற்போதைய ராணுவ அமைச்சராக பொறுப்பேற்றுள்ள மனோகர் பாரிக்கர், பல சவால்களை சந்திக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. அவரின் பணி, மிகவும் கடுமையாக இருக்கும் என, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.மத்திய அமைச்சரவை, கடந்த மாதம் விஸ்தரிக்கப்பட்ட போது, நாட்டின், 36வது ராணுவ அமைச்சராக, கோவா மாநில முதல்வராக இருந்த, மனோகர் பாரிக்கர் பதவியேற்றார். ...

வடகிழக்கு மாநில சுற்றுலா வளர்ச்சிக்கு ரூ.28 ஆயிரம் கோடியை ஒதுக்கினார் மோடி

Posted:

கோகிமா : நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகாலாந்தில் நேற்று நடைபெற்ற பாரம்பரியமிக்க ஹார்ன்பெல் திருவிழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். நாகாலாந்து பழங்குடியின மக்களின் பாரம்பரிய அலங்காரத்துடன் காட்சியளித்த மோடி மக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பல்வேறு நலத்திட்ட உதவிகளை அறிவித்தார்.இயற்கை வளம்:நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் ஏராளமான இயற்கை வளங்கள் உள்ளன. உள்நாட்டிலிருந்தும் ஏராளமான வெளிநாடுகளிலிருந்தும் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகின்றனர். ...

தோல்வியில் இருந்து பாடம் கற்காத ராகுல்: வாரிசு அரசியலை விடாததால் கட்சி தள்ளாட்டம்

Posted:

புதுடில்லி: தோல்வி மேல் தோல்வியை சந்தித்தாலும், காங்கிரசும், அதன் தலைவர்களும், இதுவரை தப்பை உணர்ந்ததாகவும், அவற்றை திருத்திக் கொள்ள நடவடிக்கை எடுத்ததாகவும் தெரியவில்லை. அத்துடன், ராகுல், கட்சியின் துணைத் தலைவருக்கான முதிர்ச்சியுடன் செயல்படாமல், ஒரு மாணவர் தலைவர் போல செயல்படுவதால், அந்தக் கட்சியின் எதிர்காலம் கேள்விக் குறியாகி உள்ளது என, அரசியல் ஆய்வாளர்கள் விமர்சித்து உள்ளனர்.இதுதொடர்பாக, அரசியல் ஆய்வாளர்கள் கூறியதாவது:கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடந்த லோக்சபா தேர்தலிலும், அக்டோபரில் நடந்த மகாராஷ்டிர, அரியானா மாநில சட்டசபைத் ...

மின்துறையின் பெரும் ஊழலுக்கு மற்றொரு ஆதாரம் உள்ளது: கருணாநிதி

Posted:

சென்னை : 'மின்துறை செய்யும் கொள்முதலில், பெரும் ஊழல் நடந்துள்ளது என்று, தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் புகாருக்கு, மற்றொரு ஆதாரம் உள்ளது' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:தனியாரிடம் செய்யும் மின் கொள்முதலில் ஊழல் நடந்துள்ளது; இதுகுறித்து விசாரித்து, அமைச்சர் நத்தம் விஸ்வநாதனை, முதல்வர் பன்னீர்செல்வம் நீக்க வேண்டும் என, தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார்.மேலும், மின்துறை செய்யும் கொள்முதலில், பெரும் ஊழல் நடந்துள்ளது என, தெரிவித்திருக்கிறார். இந்த தகவலுக்கு மற்றொரு ஆதாரமாக, நடப்பு ...

தேசியத்தை பின்பற்றாத அமைப்புகளுக்கு ஆப்பு: தமிழக பா.ஜ.,வை பலப்படுத்த அமித் ஷா திட்டம்

Posted:

தனி ஈழ ஆதரவுக்காக, தேசியத்தை பின்பற்றாமல் செயல்படும் தமிழக அமைப்புகளை, மக்களிடம் இருந்து முழுமையாக ஓரங்கட்டி, தமிழகத்தில் பா.ஜ.,வை பலப்படுத்த, 'பலே' திட்டங்களுடன் விரைவில் தமிழகம் வருகிறார், கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா.அரசியல் களத்தைப் பொறுத்த வரையில், தேசியத்தை பின்பற்றுகிறவர்கள், பின்பற்றாதவர்கள் என, இரண்டு தரப்பினர் உள்ளனர். அவர்களில், தேசியத்தை பின்பற்றும் அவ்வளவு பேரையும் பா.ஜ., பக்கம் கொண்டு வருவதற்கான முயற்சியில், அக்கட்சி இறங்கி உள்ளது. எதிர்ப்பாளர்களை பயங்கரவாதிகள் என, முத்திரைக் குத்தி, மக்களிடம் இருந்து அவர்களை தனிமைப்படுத்த ...

ம.தி.மு.க.,வை தடை செய்வேன்: வைகோவுக்கு சாமி எச்சரிக்கை

Posted:

''மோடியை கடுமையாக விமர்சிக்கும் வைகோ, பா.ஜ., கூட்டணியில் இருந்து வெளியேறுமாறு நான் சொன்னதில் எந்த மாற்றமும் இல்லை; விடுதலைப் புலிகள் ஏஜன்டாக இருக்கும் அவர், தன்னுடைய நாவை அடக்கிக் கொள்ள வேண்டும்; இல்லையென்றால், விளைவுகள் மோசமாக இருக்கும்,'' என, பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி, பதிலடி கொடுத்தார்.இது தொடர்பாக, அவர் அளித்த பேட்டி:முன்னாள் பிரதமர் ராஜிவை கொன்ற விடுதலைப் புலிகளை, நான் என்றைக்கும் ஏற்க மாட்டேன்; அவர்களை ஆதரிப்பவர்களையும் ஏற்க மாட்டேன். இந்தியாவில் அமைதி நிலவ வேண்டும் என்றால், விடுதலைப் புலிகள் போன்ற தீவிரவாத அமைப்புகளை ...

பாலைவனமாக மாறிய பாலாறு, பெண்ணையாறு: நீரோட்டத்திற்கு நீர்வள துறை வழி செய்யுமா?

Posted:

'பாலைவனமாக மாறியுள்ள பாலாறு மற்றும் பெண்ணையாற்றில், கிடப்பில் உள்ள திட்டங்களை செயல்படுத்தி, நீரோட்டத்திற்கு வழிசெய்ய வேண்டும்' என, அரசுக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.தமிழகத்தில் பெரும்பாலான ஆறுகள், கிழக்கு பக்கமாக ஓடி கடலில் கலக்கின்றன.ஆறுகள், எப்போதும் நீரோட்டம் உள்ளவை, எப்போதாவது நீரோட்டம் உள்ளவை, அவ்வப்போது நீரோட்டம் உள்ளவை என, மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன.தமிழகத்தின் பெரும்பாலான ஆறுகள், மூன்றாவது வகையை சேர்ந்தவை.பருவமழை காலங்களில் ஏற்படும் வெள்ளப் பெருக்கே, இந்த ஆறுகளின் நீர்வள ஆதாரம். இவற்றில், பாலாறு, பெண்ணையாறு ...

காசு... பணம்... துட்டு...: கண்ணீர் வடிக்கும் போக்குவரத்து கழக ஊழியர்கள்

Posted:

விடுமுறை தினத்தில், சம்பளத்தை பிடிக்காமல் இருக்க பணம்; கூடுதலாக பணி செய்ய விரும்பினாலும் பணம்; 'ஏசி' பஸ்களை இயக்க வேண்டுமானாலும் பணம் என, பஸ் ஓட்டுனர்களிடம், பல வழிகளில் உயரதிகாரிகள் கறப்பதால், அவர்கள் கண்ணீர் வடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத ஓட்டுனர்கள் சிலர் கூறியதாவது:ஒவ்வொரு பணிமனையிலும், 'கன்ட்ரோலர்' பொறுப்பில் உள்ளவர்களே, ஓட்டுனர், நடத்துனர்களுக்கான தினசரி பணியை முடிவு செய்கின்றனர்.*விடுமுறை தினத்தில், பணியின்றி ஓய்வு எடுத்துக் கொண்டால், அன்றைய தினத்திற்கான சம்பளத்தை பிடித்தம் செய்வதாக, ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™