மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- உத்தரப்பிரதேசத்தில் கிரிக்கெட் பந்து தாக்கி 13 வயது சிறுவன் பலி
- லஷ்மண ரேகையை தாண்டக்கூடாது: எம்.பி.க்களுக்கு மோடி எச்சரிக்கை
- கேரள மாநில லாட்டரி குலுக்கலில் ரூ.1 கோடி பரிசு பெற்ற ஆந்திர கூலி தொழிலாளி
- மார்கழி மாத பிறப்பையொட்டி நாளை முதல் திருப்பதியில் திருப்பாவை, திருவெம்பாவை நிகழ்ச்சி
- ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி 26–ந்தேதி திருப்பதி வருகை
- ஊழியரை பாதுகாப்பாக மீட்ட ஆஸ்திரேலியா-இந்தியாவுக்கு இன்போசிஸ் நன்றி
- 10 ஆண்டுகளில் 28 லட்சம் கோடி ரூபாய் கறுப்பு பணம் பதுக்கல்: உலகளவில் இந்தியா 4வது இடம்
- இந்தியாவில் தயாரான முதல் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்: சோதனை ஓட்டம் தொடங்கியது
- ஊழல் வழக்கில் இருந்து மாணியை பாதுகாக்க உம்மன்சாண்டி முயற்சி: அச்சுதானந்தன் புகார்
- சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு: அரசு வக்கீலாக பவானிசிங் ஆஜராக தடை கோரிய மனு வாபஸ்
- ஜெயலலிதா குறித்த ரெயில்வே துறைதேர்வு கேள்வி: பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் கடும் அமளி
- சர்ச்சைக்குரிய சாமியார் ராம்பாலின் சகோதரி உள்பட 5 பேர் கைது
- 2ஜி வழக்கு: 5 சாட்சிகளை விசாரிக்க தடைகோரிய மனு தள்ளுபடி
- சோனியா, ராகுலுக்கு எதிரான சம்மனுக்கு தடை நீட்டிப்பு: டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு
- சிட்னி, பெல்ஜியம் சம்பவங்கள் எதிரொலி: டெல்லியில் உஷார் நிலை
- ஏர் கலப்பைகள் தான் அறுவடையை தரும்-துப்பாக்கிகள் தருவதில்லை: ஜார்க்கண்டில் மோடி பேச்சு
- போலீசாருக்கு மயக்க மருந்து தந்து ஏ.கே.47 துப்பாக்கிகளுடன் கிரிமினல் குற்றவாளி தப்பியோட்டம்
- டிச.25ம் தேதி பிறந்த நாளின்போது பாரத ரத்னா விருதுக்கு வாஜ்பாயின் பெயர் அறிவிப்பு?
- ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட்டை 18-ந்தேதி விண்ணில் ஏவுவதற்கான ஒத்திகை வெற்றி
- ஜெகன் மோகன் ரெட்டியின் ரூ.47 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது
| உத்தரப்பிரதேசத்தில் கிரிக்கெட் பந்து தாக்கி 13 வயது சிறுவன் பலி Posted: 15 Dec 2014 11:08 PM PST உத்தரப்பிரதேச மாநிலம் சித்தார்த் நகர் மாவட்டம் பத்தரா கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன் சந்தன் யாதவ். 6–ம் வகுப்பு மாணவனான இவன் உள்ளூர் மாணவர்கள் மற்றும் சிறுவர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடினான். சந்தன் யாதவ் பேட்டிங் செய்தபோது எதிர் அணியைச் சேர்ந்த சிறுவன் வீசிய பந்து நேராக சந்தன் யாதவ் மார்பில் பட்டு பலமாக |
| லஷ்மண ரேகையை தாண்டக்கூடாது: எம்.பி.க்களுக்கு மோடி எச்சரிக்கை Posted: 15 Dec 2014 10:27 PM PST நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் நாட்டின் தலைமை பொறுப்பை ஏற்றுள்ள மோடி, வளர்ச்சி திட்டங்களில் தீவிர கவனம் செலுத்தி வந்த போதிலும், அவரது கட்சியின் மந்திரிகள் மற்றும் எம்.பி.க்களின் செயல்பாடுகள் அரசுக்கு பெரும் சங்கடங்களை விளைவிக்கிறது. |
| கேரள மாநில லாட்டரி குலுக்கலில் ரூ.1 கோடி பரிசு பெற்ற ஆந்திர கூலி தொழிலாளி Posted: 15 Dec 2014 09:32 PM PST கேரள மாநில அரசு காருண்யா லாட்டரி குலுக்கலை நடத்தி வருகிறது. இதில் முதல் பரிசு ரூ.1 கோடி ஆகும். இந்த மாதத்திற்கான குலுக்கல் சமீபத்தில் நடந்தது. இதில் முதல் பரிசு விழுந்த டிக்கெட் காஞ்சரப்பள்ளி பகுதியில் உள்ள கடையில் விற்பனை |
| மார்கழி மாத பிறப்பையொட்டி நாளை முதல் திருப்பதியில் திருப்பாவை, திருவெம்பாவை நிகழ்ச்சி Posted: 15 Dec 2014 09:31 PM PST திருமலை–திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:– மார்கழி மாதம் செவ்வாய்க்கிழமை (இன்று) மாலை 4.42 மணிக்கு பிறக்கிறது. அதையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் அதிகாலையில் 2.30 மணியளவில் நடக்கும் சுப்ரபாத சேவைக்கு பதிலாக புதன்கிழமை |
| ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி 26–ந்தேதி திருப்பதி வருகை Posted: 15 Dec 2014 09:30 PM PST ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வருகிற 26–ந்தேதி மேற்கு கோதாவரி மாவட்டம் பீமவரத்தில் உள்ள திருமலை தேவஸ்தான வேத பாட சாலையில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சி முடிந்ததும். ஹெலிகாப்டரில் ரேணுகுண்டா விமான நிலையத்தில் வந்து இறங்குகிறார். அன்று மாலை 4 மணிக்கு திருமலை செல்கிறார். 5.30 மணியளவில் |
| ஊழியரை பாதுகாப்பாக மீட்ட ஆஸ்திரேலியா-இந்தியாவுக்கு இன்போசிஸ் நன்றி Posted: 15 Dec 2014 09:29 PM PST ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள மார்ட்டின் பிளேசில் செயல்பட்டு வரும் லிண்ட் சாக்லேட் கஃபேவில் துப்பாக்கி முனையில் புகுந்த தீவிரவாதி ஒருவன் பொதுமக்கள் பலரை பிணைக்கைதியாக பிடித்து வைத்திருந்தான். |
| 10 ஆண்டுகளில் 28 லட்சம் கோடி ரூபாய் கறுப்பு பணம் பதுக்கல்: உலகளவில் இந்தியா 4வது இடம் Posted: 15 Dec 2014 09:19 PM PST வெளிநாடுகளில் பதுக்கப்பட்ட இந்தியர்களின் கறுப்பு பணத்தை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், கறுப்பு பண பதுக்கலில் உலகளவில் இந்தியா நான்காவது நிலையில் உள்ளதாக உலகளாவிய நிதி நேர்மை மையம் தெரிவித்துள்ளது. |
| இந்தியாவில் தயாரான முதல் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்: சோதனை ஓட்டம் தொடங்கியது Posted: 15 Dec 2014 09:13 PM PST இந்தியாவில் தயாரான முதல் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் 'ஐ.என்.எஸ். அரிஹந்த்'-தின் சோதனை ஓட்டத்தை பாதுகாப்புத்துறை மந்திரி மனோகர் பரிகர் விசாகப்பட்டினத்தில் நேற்று தேசியக் கொடியேற்றி தொடங்கி வைத்தார். இந்த சோதனை ஓட்டத்தில் கப்பல் நீரில் மூழ்கும் திறன், |
| ஊழல் வழக்கில் இருந்து மாணியை பாதுகாக்க உம்மன்சாண்டி முயற்சி: அச்சுதானந்தன் புகார் Posted: 15 Dec 2014 09:03 PM PST கேரளாவில் முழு மது விலக்கை அமல்படுத்தும் முயற்சியின் முதல் கட்டமாக அங்குள்ள மதுபான பார்களை மூட அரசு நடவடிக்கை எடுத்தது. மூடப்பட்ட பார்களை மீண்டும் திறக்க ஏற்பாடு செய்வதாக மாநில நிதி மந்திரி மாணி ரூ.5 கோடி லஞ்சம் கேட்டதாகவும், அதற்கு முதல் தவணையாக அவரிடம் ரூ.1 கோடி கொடுத்ததாக பார் உரிமையாளர்கள் சங்க தலைவர் பிஜு ரமேஷ் பரபரப்பு புகார் கூறினார். |
| சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு: அரசு வக்கீலாக பவானிசிங் ஆஜராக தடை கோரிய மனு வாபஸ் Posted: 15 Dec 2014 08:02 PM PST சுப்ரீம் கோர்ட்டில் வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி என்பவர் ஜெயலலிதா உள்ளிட்டோரின் மேல்முறையீட்டு மனுவின் மீது அரசு வக்கீலாக பவானிசிங் ஆஜராவதற்கு தடை விதிக்கக் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் சிறப்பு நீதிமன்றத்தில் அரசு வக்கீலாக |
| ஜெயலலிதா குறித்த ரெயில்வே துறைதேர்வு கேள்வி: பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் கடும் அமளி Posted: 15 Dec 2014 07:45 PM PST ரெயில்வே தேர்வு வாரியத்தின் ஜூனியர் என்ஜினீயர் பதவிக்கான தேர்வு நேற்று முன்தினம் நாடு முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வு 21 மண்டலங்களில் நடத்தப்பட்டது. இதில் சென்னை மண்டலத்தில் நடந்த தேர்வில் கீழ்க்கண்ட கேள்வி கேட்கப்பட்டு இருந்தது. |
| சர்ச்சைக்குரிய சாமியார் ராம்பாலின் சகோதரி உள்பட 5 பேர் கைது Posted: 15 Dec 2014 06:57 PM PST அரியானா மாநிலம் பர்வாலாவில் ஆசிரமம் நடத்தி வந்த சர்ச்சைக்குரிய சாமியார் ராம்பால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராகாததால் கடந்த மாதம் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. இதற்காக அவரை கைது செய்ய போலீசார் சென்ற போது அவரது ஆதரவாளர்களுக்கும், போலீசாருக்கும் |
| 2ஜி வழக்கு: 5 சாட்சிகளை விசாரிக்க தடைகோரிய மனு தள்ளுபடி Posted: 15 Dec 2014 03:29 PM PST 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சி.பி.ஐ தரப்பில் 153 சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன. இதில் ரிலையன்ஸ் நிறுவனத்தலைவர் அனில் அம்பானி, அவரது மனைவி டினா அம்பானி, பெரு நிறுவனங்களின் தரகர் நீரா ராடியா, அட்டர்னி |
| சோனியா, ராகுலுக்கு எதிரான சம்மனுக்கு தடை நீட்டிப்பு: டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு Posted: 15 Dec 2014 03:02 PM PST 'நேஷனல் ஹெரால்டு' பத்திரிகையின் சொத்துக்களை அபகரித்ததாக கூறி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் மீது சுப்பிரமணிய சுவாமி, வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சோனியா, ராகுல் உள்ளிட்டோருக்கு கடந்த ஜூன் மாதம் 26-ந் தேதி சம்மன் அனுப்பிய நீதிமன்றம், அனைவரும் ஆகஸ்டு 7-ந் தேதி ஆஜராகுமாறு கூறியிருந்தது. |
| சிட்னி, பெல்ஜியம் சம்பவங்கள் எதிரொலி: டெல்லியில் உஷார் நிலை Posted: 15 Dec 2014 10:21 AM PST ஆஸ்திரேலியாவில் ஓட்டலில் புகுந்து பொதுமக்களை பிணைக்கைதிகளாக பிடித்த தீவிரவாதி மீது ஆஸ்திரேலிய போலீசார் அதிரடி தாக்குதல் நடத்தி பலரை மீட்டனர். இதேபோல் பெல்ஜியம் நாட்டின் கென்ட் நகரில் தீவிரவாதிகள் பொதுமக்களை பிணைக்கைதிகளாக பிடித்துக்கொண்ட சம்பவம் நடந்துள்ளது. |
| ஏர் கலப்பைகள் தான் அறுவடையை தரும்-துப்பாக்கிகள் தருவதில்லை: ஜார்க்கண்டில் மோடி பேச்சு Posted: 15 Dec 2014 08:31 AM PST ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தலில் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து தும்கா மாவட்டத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, 'தோள்களில் ஏர் கலப்பைகளை தூக்குவதன் மூலமாக மட்டுமே அறுவடையை பெற |
| போலீசாருக்கு மயக்க மருந்து தந்து ஏ.கே.47 துப்பாக்கிகளுடன் கிரிமினல் குற்றவாளி தப்பியோட்டம் Posted: 15 Dec 2014 08:14 AM PST உத்தரப்பிரதேசத்தில் நடந்த ஒரு குற்றச் சம்பவம் தொடர்பாக உத்தரகாண்ட் தலைநகர் டேராடூனைச் சேர்ந்த அனிட் என்பவனை கைது செய்து அழைத்துவந்த உ.பி. போலீசார் அவனை பக்பட் மாவட்ட கோர்ட்டில் ஆஜர்படுத்த இன்று அழைத்துச் சென்றனர். |
| டிச.25ம் தேதி பிறந்த நாளின்போது பாரத ரத்னா விருதுக்கு வாஜ்பாயின் பெயர் அறிவிப்பு? Posted: 15 Dec 2014 07:56 AM PST நாட்டின் மிக உயரிய பாரத ரத்னா விருதுக்கான பெயர்கள் பிரதமரால் ஜனாதிபதிக்கு நேரடியாக பரிந்துரைக்கப்படுவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாகவே முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்க்கு இந்த விருது வழங்கப்பட வேண்டும் என்ற |
| ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட்டை 18-ந்தேதி விண்ணில் ஏவுவதற்கான ஒத்திகை வெற்றி Posted: 15 Dec 2014 07:09 AM PST இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் பி.எஸ்.எல்.வி, மற்றும் ஜி.எஸ்.எல்.வி. என்ற 2 வகை ராக்கெட்டுகளை இந்திய தொழில்நுட்பத்தில் வடிவமைத்து அதன்மூலம் செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. இதன்மூலம் விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் வல்லரசு நாடுகளுக்கு |
| ஜெகன் மோகன் ரெட்டியின் ரூ.47 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது Posted: 15 Dec 2014 06:35 AM PST ஆந்திர மாநில முன்னாள் முதல்–மந்திரி ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகனும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி மீது சொத்துக் குவிப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |