Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


மைத்திரியின் ஆலோசனையின்படி வெளிநாடு சென்றேன்: ஹிருனிக்கா

Posted: 15 Dec 2014 07:38 AM PST

HP020214AD

HP020214ADதமக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதை அடுத்து ஆலோசனைக்கு அமையவே> தாமும் தாயாரும் வெளிநாடு சென்றதாக மேல் மாகாணசபை உறுப்பினர் ஹிருனிக்கா பிரேமசந்திர தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றின் மூலம் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பொதுவேட்பாளர் மைத்திரிபாலவுக்கு ஆதரவு வெளியிட்ட பின்னரே தமக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனையடுத்து மைத்திரிபால மற்றும் ராஜித சேனாரத்ன ஆகியோரின் அறிவுரைக்கு இணங்கவே வெளிநாடு சென்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் கடந்த வார இறுதியில் நாடு திரும்பியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில் உயிர் அச்சுறுத்தலையும் பொருட்படுத்தாது தற்போது தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதாக ஹிருனிக்கா தெரிவித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

தேர்தல் வெற்றிக்காக விடுதலைப்புலிகளுடன் உடன்படிக்கையை ஏற்படுத்திய மஹிந்த

Posted: 15 Dec 2014 07:35 AM PST

download

downloadமஹிந்த ராஜபக்சவும் அவரது அரசாங்கமும் விடுதலைப்புலிகளின் தலைவர் ஒருவருடன் பேச்சு நடத்தியதாக ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். 2005 ஆம் ஆண்டு லண்டனை தளமாகக் கொண்ட எமிழ்காந்தன் என்ற விடுதலைப் புலிகளின் தலைவருடன் தொடர்புகளை ஏற்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார். நூல் ஒன்றில் வெளியீட்டு நிகழ்வில் இன்று பங்கேற்ற ரணவக்க தமது உரையில் இந்த தகவலை வெளியிட்டார். விடுதலைப்புலிகளுடன் பேச்சு நடத்திய மஹிந்த ராஜபக்ச, ஆரம்பித்திலிருந்தே விடுதலைப்புலிகளை தோற்கடிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை கொண்டிருந்தார் என்ற பிழையான எண்ணக்கரு உருவாக்கப்பட்டிருந்தாக குறிப்பிட்டார். 20005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வெற்றியை உறுதி செய்வதற்காக மஹிந்த ராஜபக்ச விடுதலைப்புலிகளின் எமிழ்காந்தனுடன் பேச்சு நடத்தியமையானது, இந்த பிழையான கருத்தை உறுதிப்படுத்தியது என்றும் ரணவக்க கூறினார். தற்போது ஜாதிக ஹெல உறுமய, ஐக்கிய தேசியக்கட்சியுடன் உடன்பாட்டை செய்து கொண்டமையை அரசாங்கம் குறை கூறுகிறது. எனினும் 2005ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியுடன் உடன்பாட்டை ஏற்படுத்திக்கொண்ட விடுதலைப்புலிகளுடன் அரசாங்கம் பேச்சு நடத்தியதாக சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டினார். இறுதியாக 2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் மஹிந்தவின் அரசாங்கமும் விடுதலைப்புலிகளும் உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்திக்கொண்டனர். இது தொடர்பில் எதிர்காலத்தில் விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் ரணவக்க குறிப்பிட்டார். மாவிலாறு அணை மூடப்பட்ட போது ஜாதிக ஹெல உறுமய ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது. எனினும் அதனை மஹிந்த ராஜபக்ச தடுத்தார். எனவே நாட்டை தாமே காப்பாற்றியதாக மஹிந்த உரிமைக்கோர முடியாது என்றும் ரணவக்க சுட்டிக்காட்டினார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

பூதகரமாகும் ராதிகா விடயம்: முக்கிய அமைச்சரும் கண்டனம்

Posted: 15 Dec 2014 07:31 AM PST

Jason Kenney

Jason Kenneyதமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைஈசன் கனடியப் பாராளுமன்றத்தில் மாவீரர் தினத்தையொட்டி ஆற்றிய உரை தொடர்பாக கனடிய அரசில் பிரதமருக்கு அடுத்தபடியானவர் எனக் கருதப்படும் ஜேசன் கென்னி கருத்துத் தெரிவித்துள்ளார். இது குறித்த தனது பதிவில் "புதிய ஜனநாயகக் கட்சி தமிழ்ப்புலிகளின் நினைவு தினத்தையும் கனடியப் படைவீரர்களின் நினைவையும் ஒப்பிட்டது ஒரு நம்புதற்கரிய அவமரியாதையான விடயம்" எனக் குறிப்பிட்டுள்ளதோடு, மாவீரர் தினத்தை உருவாக்கிய தமிழ்புலிகள் ஒரு தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பு என்றும், அவர்களே தற்கொலைத் தாக்குதல்கள், பொதுமக்களை வேண்டுமென்றே கொல்லுதல், சிறார்களை படையில் இணைத்தல், மற்றும் இனச்சுத்திகரிப்பில் ஈடுபடுதல், இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொண்றமை மற்றும் தங்களை எதிர்க்கும் தமிழர்களைக் கொல்வது போன்றவற்றைச் செய்தவர்கள் என்பதை கருத்தில் கொள்ள வேண்டுமெனவும் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

தனிநபர் தலைகளைத் துண்டிக்கும் மனதை வருத்தும் காட்சிகள்

Posted: 15 Dec 2014 07:28 AM PST

IS-600x400

IS-600x400ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் தாங்கள் உருவாக்கியுள்ள புதிய நாட்டில் கடுமையான சட்டங்களை அமல்படுத்தியுள்ளனர். அங்கு கள்ளக்காதல், ஓரின சேர்க்கை மற்றும் மத அவமதிப்புகளில் ஈடுபடுபவர்களை தலை துண்டித்து கொலை செய்தல் மற்றும் பொது இடத்தில் கல்லால் அடித்து கொல்லுதல் போன்ற தண்டனைகளை வழங்கி வருகின்றனர். சமீபத்தில் சிரியாவில் மத அவமதிப்பு செய்த 4 ஆண்களின் தலை துண்டித்து கொன்றனர். புறநகரில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் போலீஸ் அமைப்பு இவர்களின் தலை துண்டித்து உயிரை பறித்தது. இவை தவிர மான்பிஜ் நகரில் கள்ளக்காதலில் ஈடுபட்ட ஒரு ஆண், ஒரு பெண் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டனர். இந்த தகவலை சிரியாவில் உள்ள மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. போரில் பிடிபட்ட வெளிநாட்டு ராணுவ வீரர்களையும், பிணைக் கைதிகளையும் தலை துண்டித்து கொன்று வருகின்றனர். கடந்த ஜூன் மாதம் முதல் சிரியா மற்றும் ஈராக்கில் தீவிரவாதிகள் தனி நாடு உருவாக்கியுள்ளனர். சிரியாவில் கடந்த ஜூன் முதல் நவம்பர் மாதம் வரை 1432 பேரை தலை துண்டித்தும், கல்லால் அடித்தும் கொன்றுள்ளனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™