மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- டெல்லியில் ராணுவ மந்திரி, அதிகாரிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை
- டெல்லி தேர்தலில் பா.ஜ. சார்பில் ஸ்மிருதி இரானி முதல்-மந்திரி வேட்பாளர்?: கெஜ்ரிவால் சொல்கிறார்
- மாற்று வழியில் சேதுசமுத்திரத் திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும்: நிதின்கட்கரி தகவல்
- உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை: ஜஸ்வந்த்சிங் ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினார்
- என்கவுன்டர் வழக்குகளில் அமித்ஷா விடுவிப்பு மிகவும் கவலைக்குரியது: காங்கிரஸ் தாக்கு
- எமர்ஜென்சி காலத்தை விட மோடி அரசு மோசம்: மம்தா குற்றச்சாட்டு
- போலி என்கவுன்டர் வழக்கில் இருந்து பா.ஜனதா தலைவர் அமித் ஷா விடுவிப்பு
- உத்தரகாண்ட் கவர்னர் ஆசிஷ் குரேஷி மிசோரமுக்கு மாற்றம்
- ஜம்மு- காஷ்மீரில் ஆட்சி அமைப்பது பற்றி இதுவரை முடிவு எடுக்கவில்லை: பி.டி.பி.
- மேற்கு வங்காளத்தில் கார் தீப்பிடித்து எரிந்ததில் 3 பேர் பலி
- கோட்சேவுக்கு கோவில் கட்ட லக்னோவில் இடம் தேர்வு: பூமி பூஜை நடத்த இந்து மகாசபை முடிவு
| டெல்லியில் ராணுவ மந்திரி, அதிகாரிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை Posted: 30 Dec 2014 06:40 PM PST டெல்லியில் உள்நாட்டு பாதுகாப்பு குறித்து, ராணுவ மந்திரி, அதிகாரிகளுடன் ராஜ்நாத் சிங் முக்கிய ஆலோசனை நடத்தினார். பெங்களூருவில் கடந்த 28-ந்தேதி நடந்த குண்டுவெடிப்பில் சென்னையை சேர்ந்த பெண் பவானிதேவி, பலியானார். |
| டெல்லி தேர்தலில் பா.ஜ. சார்பில் ஸ்மிருதி இரானி முதல்-மந்திரி வேட்பாளர்?: கெஜ்ரிவால் சொல்கிறார் Posted: 30 Dec 2014 04:18 PM PST டெல்லி மாநில சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடத்தப்பட உள்ளது. பாரதீய ஜனதா கட்சி, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் தேர்தல் பிரசார ஆயத்த பணிகளில் ஈடுபட்டுள்ளன. |
| மாற்று வழியில் சேதுசமுத்திரத் திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும்: நிதின்கட்கரி தகவல் Posted: 30 Dec 2014 03:01 PM PST மாற்று வழியில் சேதுசமுத்திரத் திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என்று மத்திய சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து மந்திரி நிதின்கட்கரி தெரிவித்தார். மத்திய சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை மந்திரி நிதின்கட்கரி டெல்லியில் நேற்று பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:- |
| உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை: ஜஸ்வந்த்சிங் ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினார் Posted: 30 Dec 2014 01:14 PM PST பிரதமர் வாஜ்பாய் ஆட்சியின்போது, வெளியுறவுத்துறை மந்திரியாக செயல்பட்டவர் ஜஸ்வந்த்சிங் (வயது 76). பின்னர் அவர் கருத்துவேறுபாடு காரணமாக பா.ஜனதா கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். கடந்த தேர்தலில் கட்சி வேட்பாளரான சோனாராம் சவுத்திரியை எதிர்த்து, ராஜஸ்தான் மாநிலம் பார்மர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார், |
| என்கவுன்டர் வழக்குகளில் அமித்ஷா விடுவிப்பு மிகவும் கவலைக்குரியது: காங்கிரஸ் தாக்கு Posted: 30 Dec 2014 09:30 AM PST குஜராத்தில் நடந்த சோலி சொராபுதீன், பிரஜாபதி ஆகியோரது என்கவுன்டர் வழக்கு தொடர்பாக அப்போதைய குஜராத் உள்துறை மந்திரி அமித்ஷா, மற்றும் மாநிலத்தின் உயர் போலீஸ் அதிகாரிகள் உள்பட 37 பேர் மீது சி.பி.ஐ. குற்றம் சாட்டி வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்குகள் மீதான விசாரணை |
| எமர்ஜென்சி காலத்தை விட மோடி அரசு மோசம்: மம்தா குற்றச்சாட்டு Posted: 30 Dec 2014 08:11 AM PST மோடி தலைமையிலான மத்திய அரசால் இந்தியா, 1970-ல் நடைபெற்ற எமர்ஜென்சி ஆட்சியை விட மோசமாக செல்கிறது என்று கொல்கத்தா முதல் மந்திரி மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். நிலம் கையகப்படுத்தும் முறையில் புதிய மாற்றங்களை செய்ய திட்டமிட்டுள்ள மத்திய அரசு அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி கூறுகையில், நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர அவசர சட்டம் கொண்டு வரப்பட உள்ளது என தெரிவித்தார். இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. |
| போலி என்கவுன்டர் வழக்கில் இருந்து பா.ஜனதா தலைவர் அமித் ஷா விடுவிப்பு Posted: 30 Dec 2014 07:20 AM PST சொராபுதீன் ஷேக் போலி என்கவுன்டர் வழக்கில் இருந்து பா.ஜனதா தலைவர் அமித் ஷாவை சி.பி.ஐ. கோர்ட்டு விடுவித்தது. சொராபுதீன் ஷேக் போலி என்கவுன்டரில் அமித் ஷாவிற்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. இதனையடுத்து அமித்ஷா கடந்த 2010-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டதையடுத்து அப்போதைய குஜராத் மாநில மோடி தலைமையிலான அமைச்சரவையில் இருந்து விலகினார். மூன்று மாதங்களுக்கு பின்னர் ஜாமீனில் வெளிவந்தார். |
| உத்தரகாண்ட் கவர்னர் ஆசிஷ் குரேஷி மிசோரமுக்கு மாற்றம் Posted: 30 Dec 2014 07:19 AM PST உத்தரகாண்ட் மாநில கவர்னராக இருப்பவர் ஆசிஸ் குரேஷி. பா.ஜனதா கட்சி மத்தியில் ஆட்சியை பிடித்தவுடன் பா.ஜனதாவைச் சேர்ந்த மூத்த தலைவர்களுக்கு கவர்னர் பதவிகள் வழங்க காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்ட கவர்னர்களை ராஜினாமா செய்ய வலியுறுத்தியது. ஆனால், ஆசிஷ் குரேஷி ராஜினாமா செய்ய மறுத்தார். அத்துடன், நீதிமன்றத்தில் முறையீட்டார். அதில், கவர்னரை நீக்கும் உரிமை |
| ஜம்மு- காஷ்மீரில் ஆட்சி அமைப்பது பற்றி இதுவரை முடிவு எடுக்கவில்லை: பி.டி.பி. Posted: 30 Dec 2014 04:57 AM PST ஜம்மு- காஷ்மீரில் தேர்தல் முடிந்து கடந்த 23-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. 87 தொகுதிகளைக் கொண்ட இந்த மாநிலத்தில் மக்கள் ஜனநாயக கட்சி (பி.டி.பி.) அதிகபட்சமாக 28 இடங்களில் வெற்றி பெற்றது. பா.ஜனதா 25 இடங்களில் வெற்றிப் பெற்றது. தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் அங்கு ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலை ஏற்பட்டு உள்ளது. ஜனவரி 19-ந்தேதிக்குள் புதிய ஆட்சி அமையாவிட்டால் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டிய நிலை ஏற்படும் |
| மேற்கு வங்காளத்தில் கார் தீப்பிடித்து எரிந்ததில் 3 பேர் பலி Posted: 30 Dec 2014 04:20 AM PST மேற்கு வங்காளத்தில் வேகமாகச் சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் 3 பேர் உடல் கருகி பிணமானார்கள். இரண்டு பேர் பயங்கர தீக்காயங்களுடன் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அலிபுர்தார் மாவட்டத்தில் உள்ள ஜெயந்தி பகுதியில் ஒரு கார் வேகமாகச் சென்று கொண்டிருந்தது. இந்த கார் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இரண்டு |
| கோட்சேவுக்கு கோவில் கட்ட லக்னோவில் இடம் தேர்வு: பூமி பூஜை நடத்த இந்து மகாசபை முடிவு Posted: 30 Dec 2014 02:06 AM PST கோட்சேக்கு கோவில் கட்ட லக்னோவில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில் பூமி பூஜை நடக்கிறது. டெல்லியில் 1948–ம் ஆண்டு ஜனவரி 30–ந்தேதி மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். அவரை நாதுராம் கோட்சே என்ற 39 வயது ஆர்.எஸ்.எஸ்., இந்து மகாசபா உறுப்பினர் சுட்டுக் கொன்றார். |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |