Tamil Star |
- எட்மன்டன் மாகாணத்தை கதிகலங்க வைத்த முட்டாள்தனமான பாரிய படுகொலைகள்!
- வால்-மாட் நிறுவனமொன்றில் சோக காட்சி: எதிர்பாராத விதமாக தாயை சுட்ட 2-வயது சிறுவன்!
- மஹிந்தவுக்கு வாக்குச் சேகரிக்கும் சல்மான் ஒரு நம்பிக்கைத் துரோகி: வைகோ
- ராஜபக்சவின் பொய்ப் பிரச்சாரம்! இந்திய அரசும், பாஜகவினரும் ஏமாறக்கூடாது! திருமாவளவன் வேண்டுகோள்!
- ரொறொன்ரோவில் அதிகரித்து வரும் காய்ச்சல் நோய்!
- தீப்பிடித்த கிரீக் நாட்டு பயணப்படகில் இருந்து கனடியர் ஒருவர் காப்பாற்றப்பட்டார்!
| எட்மன்டன் மாகாணத்தை கதிகலங்க வைத்த முட்டாள்தனமான பாரிய படுகொலைகள்! Posted: 30 Dec 2014 11:01 PM PST
கனடா- எட்மன்டனில் இரு இளம் பிள்ளைகள் உட்பட்ட ஒன்பது பேர்களின் உயிர்களை குடித்த கொடிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனை ஒரு முட்டாள் தனமான பாரிய படுகொலை என தலைமை பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். இப்படுகொலைகள் மூன்று இடங்களில் ஒரே நபரால் செய்யப்பட்டுள்ளது. இவை ஒரு குழு சம்பந்தப்பட்டதல்ல எனவும் மாறாக உள்நாட்டு வன்முறையான சோக சம்பவம் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. திங்கள்கிழமை இரவு ஒரு பெண் எட்மன்டன் தெற்கில் உள்ள வீடொன்றில் கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. சில மணித்தியாலங்களின் பின்னர் ஒரு இளம் பெண் மற்றும் பையன் இவர்களுடன் இரு ஆண்களும் 3-பெண்களும் நகரின் வடகிழக்குப் பகுதியில் உள்ள வீடொன்றில் இறந்து கிடக்க கண்டுபிடிக்கப் பட்டனர்.அன்றய தினம் மாலை அதிகாரிகள் ஒரு தற்கொலை முயற்சிக்கான ஆண் சம்பந்தப்பட்ட அறிக்கை ஒன்றை கவனித்துள்ளனர். செவ்வாய் கிழமை காலை குறிப்பிட்ட மனிதனின் அடையாளங்களை ஒத்த மனிதன் ஒரு உணவகத்தில் இறந்து கிடக்க கண்டுபிடிக்கப்பட்டார் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். உணவக இடத்தில் இறந்து கிடந்தவர் வெளிப்படையான தற்கொலை என தோன்றுவதாக ஆர்சிஎம்பியினரால் தெளிவுபடுத்த கூடியதாக இருந்ததென கூறப்பட்டுள்ளது. பெயர்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இவர்களிற்கிடையிலான தொடர்புகளும் தெரியவரவில்லை. பொது மக்களிற்கு அபாயம் எதுவும் இல்லை எனவும் பொலிசார் வேறு சந்தேக நபர்களை தேடவில்லை எனவும் தெரியவந்துள்ளது. திங்கள்கிழமை மாலை 7-மணியளவில் பொலிசாருக்கு ஒரு மனிதன் வீடொன்றிற்குள் நுழைந்து துப்பாக்கி பிரயோகம் செய்து விட்டு ஓடியதாக கிடைத்த தகவலுடன் அனைத்தும் ஆரம்பமாகியது. நடுத்தர வயது பெண் சம்பவ இடத்தில் இறந்து விட்டார். இச்சம்பவத்தை பொலிசார் கையாளும் சமயத்தில் பொலிசாருக்கு வீடொன்றில் மன அழுத்தத்துடன் தற்கொலை மனிதன் காணப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் எதுவும் காணப்படவில்லை. நடு இரவிற்கு பின்னர் பொலிசாருக்கு புதிய தகவல் கிடைத்து அங்கு சென்ற போது அங்கு அவர்கள் ஏழு பேர்களின் உடல்களை கண்டுள்ளனர். பிள்ளைகளின் வயதுகள் வெளியிடப்படவில்லை. அவர்கள் மிகவும் இளவயதினர் என்ற தகவல் மட்டும் வெளியிடப்பட்டது. ஆனால் அவர்கள் 2 மற்றும் 6-வயதுடையவர்கள் என ஆதாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் இந்த நாடகம் வோட் சஸ்கற்சுவான் நகரில் ஒரு விஎன் எக்ஸ்பிரஸ் ஏசியன் உணவகத்திற்கு மாற்றப்பட்டது. அங்கு முன்னய துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் மற்றும் தற்கொலை மனிதன் சம்பந்தப்பட்ட கறுப்பு நிற SUV வாகனம் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு தந்திரோபாய அணியினர் வரவழைக்கப்பட்டு அப்பகுதி சுற்றி வழைக்கப்பட்டது. உணவகத்தின் முன்பகுதி வாகனம் ஒன்றினால் மோதப்பட்டு சிதைக்கப்பட்டிருந்தது. அங்கு தான் பொலிசாரால் தேடப்பட்ட தற்கொலை மனிதனின் உடல் கண்டுபிடிக்கப் பட்டது. விசாரனைகள் தொடர்கின்றன. இந்த நாள் எட்மன்டனுக்கு ஒரு பெருந்துயரமான நாள் என கூறப்பட்டுள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| வால்-மாட் நிறுவனமொன்றில் சோக காட்சி: எதிர்பாராத விதமாக தாயை சுட்ட 2-வயது சிறுவன்! Posted: 30 Dec 2014 10:57 PM PST
வாசிங்டன்- இரண்டு வயது சிறுவனொருவன் இடாஹோ என்ற இடத்தில் உள்ள வால்-மாட்டிற்குள் பெண் ஒருவரின் கைப்பையை எட்டியபோது தவறுதலாக சுடப்பட்டதால் அப்பெண் கொல்லப்பட்டுள்ளார். அப்பெண் மறைத்து வைத்திருந்த துப்பாக்கி வெடித்ததால் இச்சம்பவம் ஏற்பட்டதென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இப்பெண் பல பிள்ளைகளுடன் வால்-மாட்டிற்கு சென்றுள்ளார். பிள்ளைகளிற்கும் இவருக்கும் என்ன தொடர்பு என்பது தெரியாதென கூறப்பட்டுள்ளது. ஆனால் இச்சிறுவன் சுடப்பட்ட பெண்ணின் மகன் என அதிகாரிகள் தெரிவித்தனர். பெண்ணின் அடையாளம் வெளியிடப்படவில்லை. ஆனால் இவர் மறைத்து ஆயதம் வைத்திருக்கும் அனுமதி பெற்றிருந்துள்ளார். சூட்டு சம்பவம் எதிர்பாராத விதமாக நடந்ததென அதிகார தெரிவித்துள்ளார். சம்பவம் நடந்த சமயம் பெண்ணும் சிறுவனும் வால்-மாட்டின் பின்பகுதியில் மின்னணு உபகரண பகுதியில் இருந்துள்ளனர். சாட்சியங்களும் கடையின் கண்காணிப்பு வீடியோவும் துப்பாக்கிச்சூடு எதிர்பாராததென அதிகாரிகள் தீர்மானிக்க உதவியுள்ளன. சம்பவத்தின் பின்னர் கடை மூடப்பட்டது. புதன்கிழமை மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| மஹிந்தவுக்கு வாக்குச் சேகரிக்கும் சல்மான் ஒரு நம்பிக்கைத் துரோகி: வைகோ Posted: 30 Dec 2014 01:31 AM PST
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக மஹிந்தவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் பொலிவூட் நடிகர் சல்மான் கான் ஒரு நம்பிக்கைத் துரோகி என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இலங்கையில் எதிர்வரும் ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக சல்மான் கான் இலங்கைக்கு வந்தமை தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை கூறியுள்ளார். இது தொடர்பில் வைகோ கூறுகையில், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்து உலகத் தமிழர்களை சல்மான்கான் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார். சல்மான் கான் ஒரு நம்பிக்கைத் துரோகி. இலங்கையைச் சேர்ந்தவரும், பொலிவூட் நடிகையுமான ஜெக்குலின் பெர்னாண்டஸுடன் இணைந்து ராஜபக்ஷவுக்காக வாக்கு சேகரித்து பிரச்சாரம் செய்து அனைவரையும் அதிர வைத்துள்ளார். அவரது இந்த செயல் தமிழகத்திலும் அதிர்ச்சி அலைகளைப் ஏற்படுத்தியுள்ளது என்றார். இதேவேளை, சல்மான் இலங்கைக்கு விஜயம் செய்து ஜனாதிபதி மஹிந்தவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தமைக்கு தி.மு.க கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ராஜபக்சவின் பொய்ப் பிரச்சாரம்! இந்திய அரசும், பாஜகவினரும் ஏமாறக்கூடாது! திருமாவளவன் வேண்டுகோள்! Posted: 30 Dec 2014 01:27 AM PST
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைப் புகழ்வதன் மூலம் இந்தியாவையும் தமிழில் பேசுவதன் மூலம் தமிழ்நாட்டையும் ஏமாற்ற ராஜபக்ச முயற்சிக்கிறார். அவரது மோசடிக்கு பாஜகவினர் பலியாக வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம் என்று திருமாவளவன் கூறியுள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக எல்லாவிதமான ஏமாற்று வழிமுறைகளையும் ராஜபக்ச கையாண்டு வருகிறார். தமிழ்நாட்டுத் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணல் அதற்கு சாட்சியமாக இருக்கிறது. தமிழக மீனவர்களைத் தாக்கக்கூடாது எனக் கண்டிப்பாகக் கூறியிருக்கிறோம் என ராஜபக்ச சொல்கிறார். ஆனால் உண்மை என்ன என்பதை உலகம் அறியும். ஒவ்வொரு நாளும் தமிழக மீனவர்கள் தாக்கப்படுகிறார்கள். வலைகள் நாசமாக்கப்படுகின்றன. மீனவர்கள் சிங்களக் கடற்படையால் கைது செய்யப்படுகிறார்கள். படகுகள் பறிமுதல் செய்யப்படுகின்றன. பாதிக்கப்பட்ட மீனவர்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். வடக்கு மாகாணத்துக்கு அதிகாரப் பகிர்வு செய்யப்படவில்லையே எனக் கேட்டால் அவர்களுக்கு ஆட்சி நடத்தத் தெரியவில்லை எனக் கேலி பேசுகிறார். தமிழர் பகுதிகளில் தொடர்ந்து சிங்கள இராணுவத்தை நிறுத்தி வைத்தும்; தமிழர்களின் நிலங்களையெல்லாம் அபகரித்துக் கொண்டு அங்கே சிங்களவர்களைக் குடியேற்றியும், இந்துக் கோயில்களை இடித்து விட்டு பௌத்தக் கோயில்களைக் கட்டியும் அட்டூழியம் செய்துவரும் ராஜபக்ச அரசு தமிழர்கள் தமது வீட்டில் ஏதேனும் நிகழ்ச்சிகள் நடத்தினால் கூட இராணுவத்திடம் அனுமதிபெறவேண்டும் என வலியுறுத்தி வருகிறது. இந்தியா பலமுறை வலியுறுத்தியும்கூட 13வது சட்டத் திருத்தத்தின் அடிப்படையில் அதிகாரப் பகிர்வு செய்ய மறுக்கிறது. இத்தனை அநீதிகளையும் செய்துகொண்டு தமிழர்களை நான் சமமாக நடத்துகிறேன் என ராஜபக்ச சொல்வது கேலிக்கூத்தே தவிர வேறல்ல. இந்தியப் பெருங்கடலில் அண்மைக்காலமாக சீனப் போர்க்கப்பல்களின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. அவற்றுக்கு இலங்கைத் துறைமுகங்கள் திறந்து விடப்பட்டுள்ளன. இதனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகப்பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இந்தியா எங்களுக்கு உறவு! சீனா எங்களுக்கு நட்பு எனக் கூறும் ராஜபக்ச ஒரு சீனச் சார்பாளர் என்பதும் சீனாவைக் காட்டி இந்தியாவை மிரட்டுகிறார் என்பதும் உலகறிந்த உண்மை. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைப் புகழ்வதன் மூலம் இந்தியாவையும், தமிழில் பேசுவதன் மூலம் தமிழ்நாட்டையும் ஏமாற்ற ராஜபக்ச முயற்சிக்கிறார். அவரது மோசடிக்கு பாஜகவினர் பலியாக வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம். போர்க்குற்றங்களுக்காக ஐநா மனித உரிமைக் கவுன்சிலின் விசாரணைக்கு உள்ளாகியிருக்கும் ராஜபக்ச அதிலிருந்து தப்பிப்பதற்காகவே அவசரம் அவசரமாகத் தேர்தலை நடத்துகிறார். ராஜபக்ச மீண்டும் அதிபராவது ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும்கூட ஆபத்தாகவே முடியும். இதை இந்திய அரசும் பாஜகவினரும் புரிந்துகொள்ள வேண்டும். ராஜபக்சவின் தேர்தல் பிரச்சாரத்துக்குத் துணைபோவதைக் கைவிடவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ரொறொன்ரோவில் அதிகரித்து வரும் காய்ச்சல் நோய்! Posted: 30 Dec 2014 01:17 AM PST
கனடா- அண்மையில் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டோரின் தொகை அளவிற்கதிமாக உயர்ந்துள்ளதால் அவசர நிலைத்துறைகளில் பெரிய பின்னடைவு ரொறொன்ரோ பூராகவும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரொறொன்ரோ பொது சுகாதார பிரிவினரின் கணிப்பின்படி டிசம்பர் மாதம் 14-டிசம்பர் மாதம் 20-ற்கிடைப்பட்ட காலப்பகுதியில் 150-ற்கும் மேற்பட்ட புதிய காய்ச்சல் ஆய்வக நிகழ்வுகள் பதியப்பட்டுள்ளதாகவும் இந்த எண்ணிக்கை கடந்த 10-வருட சராசரியை மிஞ்சிவிட்டதாகவும் தெரியவந்துள்ளது. இந்த வருடம் மிகவும் கொடூரமான காய்ச்சல் பருவம் காணப்படுகின்றதென டாக்டர் பிரெட் பெல்செட்ஸ் செய்தியாளர் மத்தியில் தெரிவித்துள்ளார். ரொறொன்ரோவில் தான் பணியாற்றிய இரு அவசர மருத்துவ சேவை பிரிவின் அறைகளில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் தொகை கட்டுப்படுத்த முடியாத அளவில் காணப்பட்டதாக கூறியுள்ளார். இந்த வருடம் தடுப்பூசி 50-சதவிகிதமளவில் மட்டுமே பயனளிக்க கூடியதாக இருந்துள்ளதெனவும் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் பாதுகாப்பற்ற நிலையை விட 50-சதவிகிதம் பாதுகாப்பு சிறந்ததென்பதால் இதுவரை தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்கள் அதனை போடுவது சிறந்ததென வைத்தியர்கள் பரிந்துரைக்கின்றனர். வயோதிப குடியிருப்பாளர்களிற்கு நோய் பிடிப்பது மிக ஆபத்தானது. 57-நீண்டகால பராமரிப்பு நிலையங்களில் நோய் தோன்றல்கள் அதிகரித்து காணப்படுவதாகவும் நகரம் தெரிவித்துள்ளது. நோய் கண்டவர்கள் வைத்தியசாலைக்கு செல்லும்படி கேட்டுக்கொள்ளப் படுகின்றனர். அத்துடன் வெளியே சென்று மற்றவர்களையும் காய்ச்சல் தொற்ற செய்யாது வீடுகளில் இருக்கும் படியும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| தீப்பிடித்த கிரீக் நாட்டு பயணப்படகில் இருந்து கனடியர் ஒருவர் காப்பாற்றப்பட்டார்! Posted: 30 Dec 2014 01:15 AM PST
கனடா- ஆட்ரியாட்டிக் கடலில் தீப்பிடித்த கிரேக்க நாட்டு பயணப்படகில் இருந்து கனடிய குடிமகன் ஒருவர் காப்பாற்றப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு திங்கள்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது. காப்பாற்றப்பட்டவரின் நிலைமை உடனடியாக தெரியவில்லை. தனியுரிமை அக்கறைகளை கருத்தில் கொண்டு மேலதிக விபரங்களை வெளியிட முடியாதென வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. கனடாவை சேர்ந்த ஒரு வயது வந்த ஆண் என்.பெஜ்சினோவ்ஸ்கி என்ற பெயரில் காணப்பட்டுள்ளதாக கிரேக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தீவிபத்தில் 10-பேர்கள் வரை இறந்துள்ளனர். இப்பயண படகு கிரேக்க துறைமுகத்தில் இருந்து இத்தாலியின் அன்கோனா என்ற இடத்திற்கு சென்று கொண்டிருந்தது. திங்கள்கிழமை பிற்பகல் படகில் இருந்து 427-பேர்கள் காப்பாற்றப் பட்டுள்ளனர். இவர்களில் 56-பணிக் குழுவினரும் அடங்குவர். இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் கனடா வெளியுறவு அமைச்சு தங்கள் ஆழந்த அனுதாபத்தை தெரிவித்தது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

கனடா- எட்மன்டனில் இரு இளம் பிள்ளைகள் உட்பட்ட ஒன்பது பேர்களின் உயிர்களை குடித்த கொடிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனை ஒரு முட்டாள் தனமான பாரிய படுகொலை என தலைமை பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். இப்படுகொலைகள் மூன்று இடங்களில் ஒரே நபரால் செய்யப்பட்டுள்ளது. இவை ஒரு குழு சம்பந்தப்பட்டதல்ல எனவும் மாறாக உள்நாட்டு வன்முறையான சோக சம்பவம் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. திங்கள்கிழமை இரவு ஒரு பெண் எட்மன்டன் தெற்கில் உள்ள வீடொன்றில் கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. சில மணித்தியாலங்களின் பின்னர் ஒரு இளம் பெண் மற்றும் பையன் இவர்களுடன் இரு ஆண்களும் 3-பெண்களும் நகரின் வடகிழக்குப் பகுதியில் உள்ள வீடொன்றில் இறந்து கிடக்க கண்டுபிடிக்கப் பட்டனர்.அன்றய தினம் மாலை அதிகாரிகள் ஒரு தற்கொலை முயற்சிக்கான ஆண் சம்பந்தப்பட்ட அறிக்கை ஒன்றை கவனித்துள்ளனர். செவ்வாய் கிழமை காலை குறிப்பிட்ட மனிதனின் அடையாளங்களை ஒத்த மனிதன் ஒரு உணவகத்தில் இறந்து கிடக்க கண்டுபிடிக்கப்பட்டார் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். உணவக இடத்தில் இறந்து கிடந்தவர் வெளிப்படையான தற்கொலை என தோன்றுவதாக ஆர்சிஎம்பியினரால் தெளிவுபடுத்த கூடியதாக இருந்ததென கூறப்பட்டுள்ளது. பெயர்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இவர்களிற்கிடையிலான தொடர்புகளும் தெரியவரவில்லை. பொது மக்களிற்கு அபாயம் எதுவும் இல்லை எனவும் பொலிசார் வேறு சந்தேக நபர்களை தேடவில்லை எனவும் தெரியவந்துள்ளது. திங்கள்கிழமை மாலை 7-மணியளவில் பொலிசாருக்கு ஒரு மனிதன் வீடொன்றிற்குள் நுழைந்து துப்பாக்கி பிரயோகம் செய்து விட்டு ஓடியதாக கிடைத்த தகவலுடன் அனைத்தும் ஆரம்பமாகியது. நடுத்தர வயது பெண் சம்பவ இடத்தில் இறந்து விட்டார். இச்சம்பவத்தை பொலிசார் கையாளும் சமயத்தில் பொலிசாருக்கு வீடொன்றில் மன அழுத்தத்துடன் தற்கொலை மனிதன் காணப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் எதுவும் காணப்படவில்லை. நடு இரவிற்கு பின்னர் பொலிசாருக்கு புதிய தகவல் கிடைத்து அங்கு சென்ற போது அங்கு அவர்கள் ஏழு பேர்களின் உடல்களை கண்டுள்ளனர். பிள்ளைகளின் வயதுகள் வெளியிடப்படவில்லை. அவர்கள் மிகவும் இளவயதினர் என்ற தகவல் மட்டும் வெளியிடப்பட்டது. ஆனால் அவர்கள் 2 மற்றும் 6-வயதுடையவர்கள் என ஆதாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் இந்த நாடகம் வோட் சஸ்கற்சுவான் நகரில் ஒரு விஎன் எக்ஸ்பிரஸ் ஏசியன் உணவகத்திற்கு மாற்றப்பட்டது. அங்கு முன்னய துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் மற்றும் தற்கொலை மனிதன் சம்பந்தப்பட்ட கறுப்பு நிற SUV வாகனம் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு தந்திரோபாய அணியினர் வரவழைக்கப்பட்டு அப்பகுதி சுற்றி வழைக்கப்பட்டது. உணவகத்தின் முன்பகுதி வாகனம் ஒன்றினால் மோதப்பட்டு சிதைக்கப்பட்டிருந்தது. அங்கு தான் பொலிசாரால் தேடப்பட்ட தற்கொலை மனிதனின் உடல் கண்டுபிடிக்கப் பட்டது. விசாரனைகள் தொடர்கின்றன. இந்த நாள் எட்மன்டனுக்கு ஒரு பெருந்துயரமான நாள் என கூறப்பட்டுள்ளது.
வாசிங்டன்- இரண்டு வயது சிறுவனொருவன் இடாஹோ என்ற இடத்தில் உள்ள வால்-மாட்டிற்குள் பெண் ஒருவரின் கைப்பையை எட்டியபோது தவறுதலாக சுடப்பட்டதால் அப்பெண் கொல்லப்பட்டுள்ளார். அப்பெண் மறைத்து வைத்திருந்த துப்பாக்கி வெடித்ததால் இச்சம்பவம் ஏற்பட்டதென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இப்பெண் பல பிள்ளைகளுடன் வால்-மாட்டிற்கு சென்றுள்ளார். பிள்ளைகளிற்கும் இவருக்கும் என்ன தொடர்பு என்பது தெரியாதென கூறப்பட்டுள்ளது. ஆனால் இச்சிறுவன் சுடப்பட்ட பெண்ணின் மகன் என அதிகாரிகள் தெரிவித்தனர். பெண்ணின் அடையாளம் வெளியிடப்படவில்லை. ஆனால் இவர் மறைத்து ஆயதம் வைத்திருக்கும் அனுமதி பெற்றிருந்துள்ளார். சூட்டு சம்பவம் எதிர்பாராத விதமாக நடந்ததென அதிகார தெரிவித்துள்ளார். சம்பவம் நடந்த சமயம் பெண்ணும் சிறுவனும் வால்-மாட்டின் பின்பகுதியில் மின்னணு உபகரண பகுதியில் இருந்துள்ளனர். சாட்சியங்களும் கடையின் கண்காணிப்பு வீடியோவும் துப்பாக்கிச்சூடு எதிர்பாராததென அதிகாரிகள் தீர்மானிக்க உதவியுள்ளன. சம்பவத்தின் பின்னர் கடை மூடப்பட்டது. புதன்கிழமை மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக மஹிந்தவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் பொலிவூட் நடிகர் சல்மான் கான் ஒரு நம்பிக்கைத் துரோகி என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இலங்கையில் எதிர்வரும் ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக சல்மான் கான் இலங்கைக்கு வந்தமை தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை கூறியுள்ளார். இது தொடர்பில் வைகோ கூறுகையில், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்து உலகத் தமிழர்களை சல்மான்கான் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார். சல்மான் கான் ஒரு நம்பிக்கைத் துரோகி. இலங்கையைச் சேர்ந்தவரும், பொலிவூட் நடிகையுமான ஜெக்குலின் பெர்னாண்டஸுடன் இணைந்து ராஜபக்ஷவுக்காக வாக்கு சேகரித்து பிரச்சாரம் செய்து அனைவரையும் அதிர வைத்துள்ளார். அவரது இந்த செயல் தமிழகத்திலும் அதிர்ச்சி அலைகளைப் ஏற்படுத்தியுள்ளது என்றார். இதேவேளை, சல்மான் இலங்கைக்கு விஜயம் செய்து ஜனாதிபதி மஹிந்தவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தமைக்கு தி.மு.க கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைப் புகழ்வதன் மூலம் இந்தியாவையும் தமிழில் பேசுவதன் மூலம் தமிழ்நாட்டையும் ஏமாற்ற ராஜபக்ச முயற்சிக்கிறார். அவரது மோசடிக்கு பாஜகவினர் பலியாக வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம் என்று திருமாவளவன் கூறியுள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக எல்லாவிதமான ஏமாற்று வழிமுறைகளையும் ராஜபக்ச கையாண்டு வருகிறார். தமிழ்நாட்டுத் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணல் அதற்கு சாட்சியமாக இருக்கிறது. தமிழக மீனவர்களைத் தாக்கக்கூடாது எனக் கண்டிப்பாகக் கூறியிருக்கிறோம் என ராஜபக்ச சொல்கிறார். ஆனால் உண்மை என்ன என்பதை உலகம் அறியும். ஒவ்வொரு நாளும் தமிழக மீனவர்கள் தாக்கப்படுகிறார்கள். வலைகள் நாசமாக்கப்படுகின்றன. மீனவர்கள் சிங்களக் கடற்படையால் கைது செய்யப்படுகிறார்கள். படகுகள் பறிமுதல் செய்யப்படுகின்றன. பாதிக்கப்பட்ட மீனவர்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். வடக்கு மாகாணத்துக்கு அதிகாரப் பகிர்வு செய்யப்படவில்லையே எனக் கேட்டால் அவர்களுக்கு ஆட்சி நடத்தத் தெரியவில்லை எனக் கேலி பேசுகிறார். தமிழர் பகுதிகளில் தொடர்ந்து சிங்கள இராணுவத்தை நிறுத்தி வைத்தும்; தமிழர்களின் நிலங்களையெல்லாம் அபகரித்துக் கொண்டு அங்கே சிங்களவர்களைக் குடியேற்றியும், இந்துக் கோயில்களை இடித்து விட்டு பௌத்தக் கோயில்களைக் கட்டியும் அட்டூழியம் செய்துவரும் ராஜபக்ச அரசு தமிழர்கள் தமது வீட்டில் ஏதேனும் நிகழ்ச்சிகள் நடத்தினால் கூட இராணுவத்திடம் அனுமதிபெறவேண்டும் என வலியுறுத்தி வருகிறது. இந்தியா பலமுறை வலியுறுத்தியும்கூட 13வது சட்டத் திருத்தத்தின் அடிப்படையில் அதிகாரப் பகிர்வு செய்ய மறுக்கிறது. இத்தனை அநீதிகளையும் செய்துகொண்டு தமிழர்களை நான் சமமாக நடத்துகிறேன் என ராஜபக்ச சொல்வது கேலிக்கூத்தே தவிர வேறல்ல. இந்தியப் பெருங்கடலில் அண்மைக்காலமாக சீனப் போர்க்கப்பல்களின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. அவற்றுக்கு இலங்கைத் துறைமுகங்கள் திறந்து விடப்பட்டுள்ளன. இதனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகப்பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இந்தியா எங்களுக்கு உறவு! சீனா எங்களுக்கு நட்பு எனக் கூறும் ராஜபக்ச ஒரு சீனச் சார்பாளர் என்பதும் சீனாவைக் காட்டி இந்தியாவை மிரட்டுகிறார் என்பதும் உலகறிந்த உண்மை. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைப் புகழ்வதன் மூலம் இந்தியாவையும், தமிழில் பேசுவதன் மூலம் தமிழ்நாட்டையும் ஏமாற்ற ராஜபக்ச முயற்சிக்கிறார். அவரது மோசடிக்கு பாஜகவினர் பலியாக வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம். போர்க்குற்றங்களுக்காக ஐநா மனித உரிமைக் கவுன்சிலின் விசாரணைக்கு உள்ளாகியிருக்கும் ராஜபக்ச அதிலிருந்து தப்பிப்பதற்காகவே அவசரம் அவசரமாகத் தேர்தலை நடத்துகிறார். ராஜபக்ச மீண்டும் அதிபராவது ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும்கூட ஆபத்தாகவே முடியும். இதை இந்திய அரசும் பாஜகவினரும் புரிந்துகொள்ள வேண்டும். ராஜபக்சவின் தேர்தல் பிரச்சாரத்துக்குத் துணைபோவதைக் கைவிடவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.
கனடா- அண்மையில் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டோரின் தொகை அளவிற்கதிமாக உயர்ந்துள்ளதால் அவசர நிலைத்துறைகளில் பெரிய பின்னடைவு ரொறொன்ரோ பூராகவும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரொறொன்ரோ பொது சுகாதார பிரிவினரின் கணிப்பின்படி டிசம்பர் மாதம் 14-டிசம்பர் மாதம் 20-ற்கிடைப்பட்ட காலப்பகுதியில் 150-ற்கும் மேற்பட்ட புதிய காய்ச்சல் ஆய்வக நிகழ்வுகள் பதியப்பட்டுள்ளதாகவும் இந்த எண்ணிக்கை கடந்த 10-வருட சராசரியை மிஞ்சிவிட்டதாகவும் தெரியவந்துள்ளது. இந்த வருடம் மிகவும் கொடூரமான காய்ச்சல் பருவம் காணப்படுகின்றதென டாக்டர் பிரெட் பெல்செட்ஸ் செய்தியாளர் மத்தியில் தெரிவித்துள்ளார். ரொறொன்ரோவில் தான் பணியாற்றிய இரு அவசர மருத்துவ சேவை பிரிவின் அறைகளில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் தொகை கட்டுப்படுத்த முடியாத அளவில் காணப்பட்டதாக கூறியுள்ளார். இந்த வருடம் தடுப்பூசி 50-சதவிகிதமளவில் மட்டுமே பயனளிக்க கூடியதாக இருந்துள்ளதெனவும் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் பாதுகாப்பற்ற நிலையை விட 50-சதவிகிதம் பாதுகாப்பு சிறந்ததென்பதால் இதுவரை தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்கள் அதனை போடுவது சிறந்ததென வைத்தியர்கள் பரிந்துரைக்கின்றனர். வயோதிப குடியிருப்பாளர்களிற்கு நோய் பிடிப்பது மிக ஆபத்தானது. 57-நீண்டகால பராமரிப்பு நிலையங்களில் நோய் தோன்றல்கள் அதிகரித்து காணப்படுவதாகவும் நகரம் தெரிவித்துள்ளது. நோய் கண்டவர்கள் வைத்தியசாலைக்கு செல்லும்படி கேட்டுக்கொள்ளப் படுகின்றனர். அத்துடன் வெளியே சென்று மற்றவர்களையும் காய்ச்சல் தொற்ற செய்யாது வீடுகளில் இருக்கும் படியும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
கனடா- ஆட்ரியாட்டிக் கடலில் தீப்பிடித்த கிரேக்க நாட்டு பயணப்படகில் இருந்து கனடிய குடிமகன் ஒருவர் காப்பாற்றப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு திங்கள்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது. காப்பாற்றப்பட்டவரின் நிலைமை உடனடியாக தெரியவில்லை. தனியுரிமை அக்கறைகளை கருத்தில் கொண்டு மேலதிக விபரங்களை வெளியிட முடியாதென வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. கனடாவை சேர்ந்த ஒரு வயது வந்த ஆண் என்.பெஜ்சினோவ்ஸ்கி என்ற பெயரில் காணப்பட்டுள்ளதாக கிரேக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தீவிபத்தில் 10-பேர்கள் வரை இறந்துள்ளனர். இப்பயண படகு கிரேக்க துறைமுகத்தில் இருந்து இத்தாலியின் அன்கோனா என்ற இடத்திற்கு சென்று கொண்டிருந்தது. திங்கள்கிழமை பிற்பகல் படகில் இருந்து 427-பேர்கள் காப்பாற்றப் பட்டுள்ளனர். இவர்களில் 56-பணிக் குழுவினரும் அடங்குவர். இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் கனடா வெளியுறவு அமைச்சு தங்கள் ஆழந்த அனுதாபத்தை தெரிவித்தது.