Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


திருப்பதியில் ரூ.100 கோடியில் இந்திய கலாச்சார மையம்: மத்திய அரசு அமைக்கிறது

Posted: 28 Dec 2014 10:37 PM PST

இந்திய கலாச்சாரம், சம்பிரதாயங்களை உலகறியச் செய்யவும், இந்திய கலைகளை மேம்படுத்தவும் திருப்பதி திருமலையில் இந்திய கலாச்சார மையம் மற்றும் ஆய்வு நிலையத்தை அமைக்க ஆந்திர அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. ரூ.100 கோடி மதிப்பில் தொடங்கப்படும் இந்த திட்டத்துக்கு ''திவ்யா ராமம்'' என பெயரிடப்பட்டு உள்ளது.

நடிகர் அமிதாப்பச்சனுக்கு நாகேஸ்வரராவ் விருது: சந்திரசேகரராவ் வழங்கினார்

Posted: 28 Dec 2014 10:03 PM PST

ஐதராபாத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நாகேஸ்வரராவ் பெயரிலான விருது வழங்கும் விழா நடந்தது. அக்கினேனி இன்டர்நேசனல் பவுண்டேசன் சார்பில் நடந்த இந்த விழாவில் நடிகர் நாகேஸ்வரராவின் மகன் நடிகர் நாகார்ஜூனா, அவரது மனைவி அமலா, மகன்களும், நடிகர்களுமான நாகசைதன்யா, அகில் உள்பட குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். விழாவில் பிரபல இந்தி நடிகர் அமிதாப்பச்சன் கலந்து கொண்டார். அவருக்கு

சென்னை பெண் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்: முதல்–மந்திரி சித்தராமையா அறிவிப்பு

Posted: 28 Dec 2014 09:45 PM PST

பெங்களூரில் குண்டு வெடித்த போது முதல்– மந்திரி சித்தராமையா மைசூரில் இருந்தார். சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் உடனடியாக பெங்களூர் விரைந்தார். இன்று அதிகாலையில் சம்பவ இடத்தை பார்வையிட்டார். பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:– பெங்களூரில் சமீபத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த மேதி கைது செய்யபட்ட பின்னர் போலீசார் உஷார் படுத்தப்பட்டு பாதுகாப்பு

பெங்களூரில் குண்டு வெடிப்பு: முக்கிய நகரங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு

Posted: 28 Dec 2014 09:27 PM PST

பெங்களூர் சர்ச் தெருவில் நேற்றிரவு 8.30 மணிக்கு நடந்த குண்டு வெடிப்பில் சென்னையைச் சேர்ந்த பவானிதேவி (38) என்பவர் பலியானார். அவரது உறவினர்கள் 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு பெங்களூர் மல்லையா மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சபரிமலை அய்யப்பன் கோவில் 18–ம் படி சீரமைப்பு பணி: மகரவிளக்கு பூஜைக்கு பிறகு பழுதுபார்க்க முடிவு

Posted: 28 Dec 2014 09:10 PM PST

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் நேற்று முன்தினம் மண்டல பூஜை விழா நிறைவு பெற்றது. அடுத்து நாளை மாலை 5.30 மணிக்கு மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட உள்ளது. அய்யப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் இருமுடி கட்டுடன் கோவிலின் பதினெட்டாம்படியில் ஏறி சென்று அய்யப்பனை தரிசிப்பது வழக்கம். மண்டல பூஜைக்காக கடந்த மாதம் 17–ந் தேதி திறக்கப்பட்ட கோவில் நடை கடந்த 27–ந் தே

இந்தியாவில் விமான சேவைக்கு பாதிப்பு இல்லை: ஏர் ஏசியா

Posted: 28 Dec 2014 07:36 PM PST

இந்தோனேசியாவில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட ஏர் ஏசியா விமானம் மாயமானது. ஏர் ஏசியா நிறுவனம், சென்னை, பெங்களூரு, கொச்சி உள்பட 7 முக்கிய நகரங்களில் இருந்து தினசரி விமான சேவையை நடத்தி வருகிறது.

உ.பி.,யில் சமாஜ்வாடி அரசு கவிழும்: பா.ஜனதா

Posted: 28 Dec 2014 07:02 PM PST

உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி அரசு கவிழும் என்று அந்த மாநில பாரதீய ஜனதா தலைவர் லஷ்மிகாந்த் பாஜ்பாய் கூறி உள்ளார். லஷ்மிகாந்த் பாஜ்பாய் நேற்று அமேதியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வட மாநிலங்களில் கடும் பனிமூட்டம்: ரெயில், விமான போக்குவரத்து பாதிப்பு

Posted: 28 Dec 2014 03:51 PM PST

காஷ்மீர், இமாசலபிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம், பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக குளிர் மிகவும் அதிகமாக இருக்கிறது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரு நாள் உண்டியல் காணிக்கை ரூ.2 கோடியே 96 லட்சம்

Posted: 28 Dec 2014 03:20 PM PST

ஆங்கில புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசி விழாக்களை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் சற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது. நேற்று முன்தினம் அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு ஆகிய நடைபாதைகளில் 22 ஆயிரம் பக்தர்கள் பாதயாத்திரையாக வந்தனர்

தமிழக காங்கிரஸ் கட்சியில் காலியாக உள்ள பதவிகளில் நிர்வாகிகளை நியமிக்க நடவடிக்கை: இளங்கோவன் பேட்டி

Posted: 28 Dec 2014 02:47 PM PST

காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டு 130 ஆண்டுகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் கட்சியின் நிறுவன தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மாநிலத்தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தலைமை

பெங்களூரில் குண்டு வெடிப்பு சம்பவம் - பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம்: சித்தராமையா வேண்டுகோள்

Posted: 28 Dec 2014 02:35 PM PST

மைசூருவில் முதல்–மந்திரி சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– பெங்களூருவில் உள்ள சர்ச்தெருவில் இரவு 8.30 மணியளவில் குண்டுவெடித்ததில் தமிழ்நாட்டை சேர்ந்த பவானி என்ற பெண் பலியாகி

காங்கிரஸ் அலுவலகத்தில் வாலிபர் அடித்துக்கொலை: நண்பர் கைது

Posted: 28 Dec 2014 12:59 PM PST

சத்தீஷ்கார் மாநிலம் பட்கோன் மாவட்டத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் கொலை செய்யப்பட்டு கிடந்தவர் பிரதீப் ஜெயின் (வயது

ஏ.டி.எம்.மில் பணம் நிரப்பிக் கொண்டிருந்தபோது ரூ.11 லட்சம் கொள்ளை: தமிழ்நாட்டை சேர்ந்த 6 பேர் கைது

Posted: 28 Dec 2014 12:34 PM PST

பெங்களூரு சாந்திநகர் பஸ் நிலையம் அருகே கர்நாடக வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு ஏ.டி.எம். மையத்தில் பணம் நிரப்புவதற்காக ஊழியர்கள் காரில் வந்தனர். அவர்கள் காவலாளிகள் உதவியுடன் பணம் நிரப்பிக் கொண்டிருந்தனர்.

காங்கிரஸ் கட்சியின் 130-வது ஆண்டு விழா: சோனியா காந்தி கலந்து கொண்டார்

Posted: 28 Dec 2014 11:47 AM PST

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி 1885-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 28-ந்தேதி தொடங்கப்பட்டது. கட்சிக்கு இது 130-வது ஆண்டு ஆகும். இதையொட்டி டெல்லியில் நேற்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் எளிமையான விழா

ராஜஸ்தான் மந்திரிகளுக்கு இ மெயில் மூலம் மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

Posted: 28 Dec 2014 10:54 AM PST

ராஜஸ்தானில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. இங்குள்ள மாநில உள்துறை மந்திரி குலாப்சாந்த் கதாரியா, சமூகநலத்துறை மந்திரி அருண் சதுர்வேதி உள்ளிட்ட 16 மந்திரிகளுக்கு இ மெயில் மூலமாக மர்மநபர் கடந்த 22-ந்தேதி கொலை மிரட்டல் விடுத்து இருந்தார். மேலும்,

பெங்களூரில் குண்டு வெடிப்பு: ஒருவர் பலி - இருவர் காயம்

Posted: 28 Dec 2014 08:28 AM PST

பெங்களூரில் பரபரப்பாக இயங்கக்கூடிய இடங்களில் ஒன்று சர்ச் தெரு. இங்கே உள்ள ஒரு ரெஸ்டாரண்ட் முன்பு இன்று இரவு 8.30 மணியளவில் வீரியம் குறைந்த குண்டு ஒன்று வெடித்தது.

400 சீடர்களின் ஆண்மையை பறித்தேனா?: நிரூபித்தால் என் தலையை துண்டியுங்கள் - சாமியார் சவால்

Posted: 28 Dec 2014 07:52 AM PST

சீக்கியர்களை எதிர்த்து கருத்து தெரிவித்ததன் மூலம் பரபரப்பை ஏற்படுத்தியவர், குர்மீட் ராம் ரஹிம் சிங். டேரா ஸச்சா சவுதா என்ற அமைப்பை ஏற்படுத்தி சில சமூக சேவைகளை செய்துவரும் இவருக்கு அரியானா மாநிலத்தில் உள்ள சிர்ஸா நகரில் பெரிய ஆசிரமம் உள்ளது. இந்த ஆசிரமத்தில் பல ஆண்,பெண் சீடர்கள் தங்கியுள்ளனர். இங்கு தங்கியிருக்கும் ஆண் சீடர்களுக்கு இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும்

300 அடி பாதாளத்தில் ஜீப் கவிழ்ந்தது: 3 போலீசார் பலி

Posted: 28 Dec 2014 07:36 AM PST

மராட்டிய மாநிலம், சஸ்வாத் மாநிலத்தில் 300 அடி பாதாளத்துக்குள் ரோந்து ஜீப் கவிழ்ந்த விபத்தில் 3 போலீசார் பலியாகினர். இங்குள்ள சுபே-பன்வாடி சாலையில் நேற்றிரவு ஒரு ஜீப்பில் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். வளைவான பகுதியில் ஜீப்பை திருப்பியபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் சாலையோரம் இருந்த சுமார் 300 அடி ஆழமுள்ள பாதாளத்துக்குள் பாய்ந்தது.

அசாமில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்துவது ஏற்கத்தக்கதல்ல: காங்கிரஸ்

Posted: 28 Dec 2014 06:23 AM PST

அசாம் மாநிலத்தில் கடந்த 23-ந்தேதி 5 ஆதிவாசிகள் கிராமங்களுக்குள் புகுந்த போடோ தீவிரவாதிகள் சரமாரியாக துப்பாக்கிகளால் சுட்டதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 74 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் அசாமில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. ஆகவே, ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று அசாம் மாநில பா.ஜனதா உள்பட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் அசாம் மாநிலத்தில் ஜனாதிபதி

ஆசாராம் மீது பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு: மாயமான பெண் போலீசில் ஆஜர்

Posted: 28 Dec 2014 05:57 AM PST

சர்ச்சைக்குரிய சாமியார் மீது பாலியல் பலாத்கார வழக்கு தொடர்ந்த பெண், இரண்டு வாரங்களுக்கு முன்னதாக தனது வீட்டில் இருந்து மர்மமான முறையில் காணாமல் போனார். அவர் இன்று சூரத் போலீஸ் நிலையத்தில் ஆஜரானார். சர்ச்சைக்குரிய சாமியார் ஆசராம் பாபு தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்தார். ஆசராம் பாபுவின் மகன் நாராயண் சாய் தன்னை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தார் என்று அவருடைய சகோதரியும் புகார் அளித்தார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™