Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


காவல் உதவி மையம் திறப்பு

Posted: 19 Dec 2014 01:45 PM PST

விருத்தாசலத்தில் காவல் உதவி மையத் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விருத்தாசலம் பாலக்கரை, நகரின் முக்கியப் பகுதியாக உள்ளது. இப்பகுதியில் அனைத்துக் கட்

விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி

Posted: 19 Dec 2014 01:45 PM PST

விருத்தாசலத்தை அடுத்த குப்பநத்தம் கிராமத்தில் இயற்கை வேளாண்மையின் முக்கியத்துவத்தை விளக்கி அண்மையில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

கேபிள் டிவி ஆபரேட்டர்கள் 23}ல் உண்ணாவிரதம்

Posted: 19 Dec 2014 01:45 PM PST

கேபிள் டிவி கட்டணத்தை ரூ.150-ஆக உயர்த்தக்கோரி சென்னையில் வரும் 23-ஆம் தேதி உண்ணாவிரதம் நடைபெற உள்ளது.

ஆதிதிராவிடர் ஈமச் சடங்கு நிதி: விண்ணப்பிக்க அழைப்பு

Posted: 19 Dec 2014 01:44 PM PST

ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்துவ ஆதிதிராவிடர்கள் இறந்தால், அவர்களின் இறுதிச் சடங்கிற்காக இறந்தவரின் குடும்பத்துக்கு ரூ.2,500 உதவித் தொகை

ஆசிரியர் வீட்டில் மடிக்கணினி திருட்டு

Posted: 19 Dec 2014 01:44 PM PST

நெல்லிக்குப்பத்தை அடுத்த கொண்டூரில் பட்டப் பகலில் ஆசிரியர் வீட்டின் கதவை உடைத்து மடிக்கணினியை திருடி சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

கண்தானம்

Posted: 19 Dec 2014 01:44 PM PST

நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி தாலுகா எருக்கூர் கிராமத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி (67) வியாழக்கிழமை காலமானார். இவரது கண்கள் சிதம்பரம் தன்னார்வ ரத்ததானக்கழகம் சார்பில் தானமாக பெறப்பட்டு புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

வியாபாரிகள் சாலை மறியல்

Posted: 19 Dec 2014 01:43 PM PST

வேப்பூர் கூட்டுரோட்டில் நடைபெறும் வாரச்சந்தையில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி விருத்தாசலம்-சேலம் இடையேயான நெடுஞ்சாலையில் வியாபாரிகள் வெள்ளிக்கிழமை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

நடராஜர் கோயில் புதிய தேர்: 25}ல் வெள்ளோட்டம்

Posted: 19 Dec 2014 01:43 PM PST

சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலில் ரூ.1.25 கோடி செலவில் சீரமைக்கப்பட்டுள்ள புதிய தேர் வருகிற 25-ஆம் தேதி வெள்ளோட்டம் விடப்படுகிறது.

ரங்கமன்னாராக சரநாராயணப் பெருமாள் நாளை காட்சி

Posted: 19 Dec 2014 01:43 PM PST

மார்கழி மாத அமாவாசையை (ஞாயிற்றுக்கிழமை) முன்னிட்டு பண்ருட்டி திருவதிகை ஸ்ரீ சரநாராயணப்பெருமாள் ஸ்ரீவில்லிபுத்தூரில் எழுந்தருளியிருக்கும் ஆண்டாள் ரங்கமன்னாராக அருள்புரிய உள்ளார்.

லால்பேட்டையில் 60 மி.மீ. மழை

Posted: 19 Dec 2014 01:41 PM PST

கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேர நிலவரப்படி 60 மில்லி மீட்டர் மழை பதிவானது.

மனுநீதி முகாம் 26-ஆம் தேதிக்கு மாற்றம்

Posted: 19 Dec 2014 01:41 PM PST

கடலூர் மாவட்டம், ரெட்டிச்சாவடி குறுவட்டத்துக்குள்பட்ட நல்லாத்தூர் கிராமத்தில் சனிக்கிழமை (டிசம்பர் 20) நடைபெறுவதாக இருந்த சிறப்பு மனுநீதி நாள் முகாம் தவிர்க்க முடியாத நிர்வாக

என்எல்சி தலைவருக்கு சிறந்த தலைமை அதிகாரி விருது

Posted: 19 Dec 2014 01:41 PM PST

என்எல்சி தலைவர் பி.சுரேந்திரமோகனுக்கு உன்னதமான தொழிலுறவை நிலைநிறுத்தி வரும் அதிகாரிக்கான விருதையும், என்எல்சி நிறுவனத்துக்கு தொழில்துறையில் சிறந்து விளங்கும் நிறுவனத்துக்கான விருதையும் இந்திய பொறியாளர் கழகம் வெள்ளிக்கிழமை வழங்கியது.

பெண் கொலை: 14 ஆண்டுகளுக்குப் பிறகு சிபிஐ விசாரணைக்கு உத்தரவு

Posted: 19 Dec 2014 01:34 PM PST

பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு பெண் கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணையை, சிபிஐ வசம் ஒப்படைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குரூப்-4 தேர்வு ஏற்பாடுகள் தீவிரம்

Posted: 19 Dec 2014 01:29 PM PST

கடலூர் மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வலியுறுத்தல்

Posted: 19 Dec 2014 01:29 PM PST

கடலூர் மாவட்டத்தில் மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டுமென விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியுள்ளது.

தலைமைச் செயலக சங்கத் தேர்தல்: 86.3 சதவீத வாக்குகள் பதிவு

Posted: 19 Dec 2014 01:29 PM PST

தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத் தேர்தலில் 86.3 சதவீத வாக்குகள் பதிவாகின. சங்கத்தின் தலைவர், செயலாளர், இணைச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், தலைமைச் செயலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அண்ணாமலைப் பல்கலை.யில் காளான் வளர்ப்பு பயிற்சி

Posted: 19 Dec 2014 01:29 PM PST

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழத்திலுள்ள கடல்வாழ் உயிரின உயராய்வு மையத்தில், மத்திய அரசு அறிவியல் மற்றும் தொழில்நுட்பக்கழக உதவியுடன் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கான ஒரு மாத கால காளான் வளர்ப்பு பயிற்சி முகாம் வியாழக்கிழமை தொடங்கியது.

நாளை இலவச கண் சிகிச்சை முகாம்

Posted: 19 Dec 2014 01:29 PM PST

பண்ருட்டி ஒன்றியம் விசூர் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றியப் பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை கண்சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது.

என்எல்சி தலைவருக்கு சிறந்த தலைமை அதிகாரி விருது

Posted: 19 Dec 2014 01:28 PM PST

என்எல்சி தலைவர் பி.சுரேந்திரமோகனுக்கு உன்னதமான தொழிலுறவை நிலைநிறுத்தி வரும் அதிகாரிக்கான விருதையும், என்எல்சி நிறுவனத்துக்கு தொழில்துறையில் சிறந்து விளங்கும்

வாஜ்பாய் பிறந்த தினம்: பேச்சுப் போட்டி நடத்த பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தல்

Posted: 19 Dec 2014 01:28 PM PST

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த தினம் "சிறந்த நிர்வாகத் திறன் நாளாக' கொண்டாடப்படுவதை முன்னிட்டு, பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்க பல்கலைக்கழகங்களை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.

கரும்பு நிலுவைத் தொகை: குறைகேட்பு கூட்டத்தில் கூச்சல்- குழப்பம்

Posted: 19 Dec 2014 01:27 PM PST

கரும்புக்கான நிலுவைத் தொகை வழங்கக் கோரி குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் ஒட்டுமொத்தமாக எழுந்து நின்று பேசியதால் கூச்சல்- குழப்பம் ஏற்பட்டது.

பாதுகாப்பு கோரி பாஜக நிர்வாகி மனு

Posted: 19 Dec 2014 01:27 PM PST

பாதுகாப்பு கோரி பாஜக நிர்வாகி விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விக்கிரமனிடம் மனு அளித்துள்ளார்.

ஆவடியில் பராமரிப்புப் பணிகள்: ரயில் சேவையில் மாற்றம்

Posted: 19 Dec 2014 01:27 PM PST

ஆவடியில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

மேல்மலையனூரில் நலத் திட்ட உதவிகள்

Posted: 19 Dec 2014 01:27 PM PST

செஞ்சி வட்டம் மேல்மலையனூர் ஒன்றியம் பின்னனூர் கிராமத்தில் வியாழக்கிழமை பயனாளிகளுக்கு ரூ. 5.36 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட வழங்கல் அலுவலர் சண்முகம் வழங்கினார்.

மணல் லாரி பறிமுதல்: 2 பேர் கைது

Posted: 19 Dec 2014 01:27 PM PST

திண்டிவனம் அருகே தென்பெண்ணையாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிச் சென்ற லாரியை மயிலம் போலீஸார் பறிமுதல் செய்து இருவரை வியாழக்கிழமை கைது செய்தனர்.

ஹோட்டல் ஊழியர் மீது தாக்குதல்

Posted: 19 Dec 2014 01:26 PM PST

திண்டிவனத்தில் ஹோட்டல் ஊழியரை தாக்கியதாக இளைஞர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து வியாழக்கிழமை கைது செய்தனர்.

மின் சிக்கன விழிப்புணர்வு வாரம்: பள்ளி மாணவர்களுக்கு பரிசு

Posted: 19 Dec 2014 01:26 PM PST

மின்சார சிக்கன விழிப்புணர்வு வாரத்தையொட்டி, சென்னையில் பள்ளி மாணவர்களுக்கு நடைபெற்ற கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

கரும்பு விவசாயிகள் உண்ணாவிரதம்

Posted: 19 Dec 2014 01:26 PM PST

தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் கோரிக்களை வலியுறுத்தி தியாகதுருகம் பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை முன் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

கல்லூரியில் ரத்த தான முகாம்

Posted: 19 Dec 2014 01:26 PM PST

செஞ்சி வட்டம் சத்தியமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் ஆலம்பூண்டி ஸ்ரீரங்கபூபதி கல்வியியல் கல்லூரியில் ரத்த தான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்குப் பயிற்சி

Posted: 19 Dec 2014 01:26 PM PST

திருக்கோவிலூர் அருகே ரிஷிவந்தியம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பாசார், முனிவாழை, முட்டியம், வெங்கலம் ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கான மூன்று நாள் பயிற்சி முகாம் வியாழக்கிழமை தொடங்கியது.

மின் சிக்கன வார விழிப்புணர்வு மனிதச் சங்கிலி

Posted: 19 Dec 2014 01:26 PM PST

விழுப்புரத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் மின் சிக்கன வார விழிப்புணர்வு மனிதச் சங்கிலி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கிறிஸ்துமஸ் குடில்கள் விற்பனை மும்முரம்

Posted: 19 Dec 2014 01:25 PM PST

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கள்ளக்குறிச்சி பகுதியில் நட்சத்திரங்கள், அலங்கார தோரணங்கள், கிறிஸ்துமஸ் தாத்தா பொம்மைகள், குடில்களை கிறிஸ்தவர்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்

புதுச்சேரி பந்த்: விழுப்புரத்தில் இருந்து அரசுப் பேருந்துகள் இயங்கும்

Posted: 19 Dec 2014 01:25 PM PST

புதுச்சேரியில் சனிக்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள பந்த் போராட்டத்தையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து புதுச்சேரிக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்துகளுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மின் பகிர்மானக் கழகச் செயல்பாடு: வெள்ளை அறிக்கை தேவை

Posted: 19 Dec 2014 01:25 PM PST

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் செயல்பாடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.

பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற கம்யூ. வலியுறுத்தல்

Posted: 19 Dec 2014 01:24 PM PST

விழுப்புரம் நகரில் பாதாள சாக்கடைத் திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.

ஆற்றுப் பள்ளத்தில் தேங்கிய நீரில் மூழ்கி மாணவர் சாவு

Posted: 19 Dec 2014 01:24 PM PST

விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றில் மணல் அள்ளப்பட்டதால் ஏற்பட்ட பள்ளத்தில் தேங்கிருந்த நீரில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவர் விஜய்  வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

நாளை குரூப்-4 தேர்வு: 58,399 பேர் எழுதுகின்றனர்

Posted: 19 Dec 2014 01:24 PM PST

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வரும் டிசம்பர் 21-ம் தேதி நடத்தும் குரூப்-4 தேர்வை விழுப்புரம் மாவட்டத்தில் 58399 பேர் எழுதுகின்றனர். இதற்காக விழுப்புரம் மாவட்டத்தில் 152 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பாஜக உறுப்பினர் சேர்க்கை

Posted: 19 Dec 2014 01:24 PM PST

திருக்கோவிலூர் அருகே ரிஷிவந்தியத்தில் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

மாநில சீனியர் பெண்கள் கபடிப் போட்டி துவக்கம்

Posted: 19 Dec 2014 01:23 PM PST

62-வது மாநில சீனியர் பெண்கள் சாம்பியன்ஷிப் கபடி போட்டி கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை துவங்கியது.

சுனாமிக்குப் பின் பெண்களின் முன்னேற்றம் குறித்து ஆய்வு

Posted: 19 Dec 2014 01:23 PM PST

விழுப்புரம் மாவட்டத்தில் சுனாமிக்கு பின் நீடித்த வாழ்வாதார திட்டத்தின் கீழ் பெண்களின் பொருளாதார முன்னேற்றம் குறித்து மகளிர் ஆணைய உயர்மட்டக் குழுவினர் வெள்ளிக்கிழமை ஆய்வு நடத்தினர்.

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் உண்டியல் வரவு ரூ.27 லட்சம்

Posted: 19 Dec 2014 01:23 PM PST

செஞ்சி வட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் கார்த்திகை மாத உண்டியல் எண்ணும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆசிரமம் முன் 2ஆம் நாளாக முற்றுகைப் போராட்டம்

Posted: 19 Dec 2014 01:22 PM PST

ஆசிரமப் பெண்கள் மூவரின் தற்கொலையைக் கண்டித்து, புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமம் முன் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

பள்ளித் தேர்வு தேதி மாற்றம்

Posted: 19 Dec 2014 01:22 PM PST

புதுச்சேரியில் முழு அடைப்பு நடைபெற்றாலும் சனிக்கிழமை பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும். தேர்வுகள் ஜனவரி 2ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளன என கல்வித் துறை இயக்குநர் குமார் தெரிவித்துள்ளார்.

மாநில அரசே பொறுப்பு: காங்கிரஸ்

Posted: 19 Dec 2014 01:22 PM PST

அரவிந்தர் ஆசிரமத்தில் வெளியேற்றப்பட்ட சகோதரிகள் தற்கொலை சம்பவத்துக்கு புதுவை மாநில அரசும், காவல்துறையுமே பொறுப்பேற்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் வி.வைத்திலிங்கம் கூறியுள்ளார்.

சிபிஐ விசாரணை தேவை: அதிமுக

Posted: 19 Dec 2014 01:21 PM PST

அரவிந்தர் ஆசிரமப் புகார்கள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என அதிமுக வலியுறுத்தி உள்ளது.

இன்று முழு அடைப்பு

Posted: 19 Dec 2014 01:21 PM PST

அரவிந்தர் ஆசிரமப் பெண்கள் தற்கொலை விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி, புதுவையில் இடதுசாரிகள் கூட்டமைப்பு சார்பில் சனிக்கிழமை (டிசம்பர் 20) முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படுகிறது.

புதை சாக்கடை இணைப்பு: பொதுமக்களுக்கு வேண்டுகோள்

Posted: 19 Dec 2014 01:21 PM PST

புதுச்சேரி நகராட்சிக்குள்பட்ட உருளையன்பேட்டை, ராஜ்பவன், உப்பளம் ஆகிய தொகுதிகளில் புதை சாக்கடை வசதி நடைமுறையில் உள்ள பகுதிகளில், இதுவரையில் இத் திட்டத்தில் இணைப்பு பெறாதவர்கள் 30 நாள்களுக்குள் நகராட்சிக்கு தெரிவிக்க வேண்டும்.

வீட்டுச் சுவர் இடிந்து சிறுமி சாவு

Posted: 19 Dec 2014 01:20 PM PST

புதுவையில், வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுமி உயிரிழந்தார். தாய் படுகாயமடைந்தார்.

அரியாங்குப்பத்தில் மகளிர் தின விழா

Posted: 19 Dec 2014 01:20 PM PST

புதுச்சேரி ஒருங்கிணைந்த குழந்தைகள் நலத் திட்டம் சார்பில் அரியாங்குப்பத்தில் மகளிர் தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கடல் சீற்றம்: துறைமுகத்தில் ஓய்வெடுக்கும் படகுகள்

Posted: 19 Dec 2014 01:20 PM PST

புதுவையில் தொடர் கடல் சீற்றம் காரணமாக விசைப் படகுகளை மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி மீனவர்கள் பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முழு பட்ஜெட் எப்போது? முதல்வர் பதில்

Posted: 19 Dec 2014 01:20 PM PST

வரும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என முதல்வர் என்.ரங்கசாமி கூறியுள்ளார்.

ஆன்லைனில் 22 முதல் விண்ணப்பிக்கலாம்

Posted: 19 Dec 2014 01:19 PM PST

எஸ்.எஸ்.எல்.சி. தனித் தேர்வுக்கு வரும் 22ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என முதன்மைக் கல்வி அலுவலர் ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.

தேசிய புத்தகக் கண்காட்சி தொடக்கம்

Posted: 19 Dec 2014 01:19 PM PST

புதுவையில் கூட்டுறவு புத்தகச் சங்கம் சார்பில் தேசிய புத்தகக் கண்காட்சியை முதல்வர் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.

லத்தீன் அமெரிக்க நாடுகளுடன் பொருளாதார உறவை மேம்படுத்த நடவடிக்கை

Posted: 19 Dec 2014 01:18 PM PST

லத்தீன் அமெரிக்க நாடுகளுடன் பொருளாதார உறவை மேம்படுத்த இந்தியா தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என வெளியுறவுத் துறை இணைச் செயலர் ரீவா கங்குலி தாஸ் தெரிவித்துள்ளார்.

நித்யகல்யாண பெருமாள் கோயிலில் பகல் பத்து டிச. 22-ல் தொடக்கம்

Posted: 19 Dec 2014 01:18 PM PST

காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் கோயிலில் பகல் பத்து உற்சவம் வரும் 22-ம் தேதி தொடங்குகிறது.

கடைகள், வணிக வளாகம், உணவு விடுதிகள் வாடகையை முறைப்படுத்த நடவடிக்கை

Posted: 19 Dec 2014 01:18 PM PST

புதுவை வீட்டு வசதி வாரிய வணிக வளாகங்களில் உள்ள கடைகள், உணவு விடுதிகள், தங்கும் விடுதிகளின் வாடகையை முறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பயனாளிகளுக்கு ரூ.4 கோடி நிதி விநியோகம்

Posted: 19 Dec 2014 01:18 PM PST

குடிசை மாற்று வாரியம், ஆதிதிராவிடர் நலத் துறை சார்பில் இலவச வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நெட்டப்பாக்கம் தொகுதியைச் சேர்ந்த பயனாளிகளுக்கு ரூ.4 கோடி நிதியை எல்.பெரியசாமி எம்.எல்.ஏ. வெள்ளிக்கிழமை வழங்கினார்.

காரைக்கால் அருகே நடுக்கடலில் மூழ்கிய இழுவைக் கப்பலில் இருந்து 7 பேர் மீட்பு

Posted: 19 Dec 2014 01:17 PM PST

காரைக்கால் அருகே நடுக்கடலில் வெள்ளிக்கிழமை மூழ்கிய இழுவைக் கப்பலில் இருந்த 8 பேரில் 7 பேரை இந்திய கடலோரக் காவல்படையினர் மீட்டனர். ஒருவரின் நிலை தெரியவில்லை.

தொடரும் காரைக்கால் மீனவர்கள் வேலைநிறுத்தம்

Posted: 19 Dec 2014 01:17 PM PST

இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள காரைக்கால் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நடைபெறும் காரைக்கால் விசைப்படகு மீனவர்களின் வேலைநிறுத்தம் 9-வது நாளாக வெள்ளிக்கிழமையும் தொடர்ந்தது.

நாளை பன்னாட்டு ஆய்வு கருத்தரங்கு

Posted: 19 Dec 2014 01:17 PM PST

மயிலம் பரிமளவேல் தமிழ் உயராய்வு மையம், பாரதிதாசன் மகளிர் கல்லூரி ஆகியன இணைந்து தமிழ் இலக்கியங்களில் காலந்தோறும் முருகன் என்ற பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.

தபால் ஊழியர் பதுக்கிய ஆதார் அட்டைகள் மீட்பு

Posted: 19 Dec 2014 01:16 PM PST

திருப்பூரில் ஓராண்டுக்கும் மேலாக விநியோகிக்கப்படாமல், தபால் ஊழியரால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட தபால்கள், ஆதார் அட்டைகள் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டன.

சேலம்

Posted: 19 Dec 2014 01:16 PM PST

பெங்களூரு

Posted: 19 Dec 2014 01:15 PM PST

வேலூர்

Posted: 19 Dec 2014 01:15 PM PST

மதுரை

Posted: 19 Dec 2014 01:15 PM PST

பாஜகவில் இன்று இணைகிறார் கங்கை அமரன்

Posted: 19 Dec 2014 01:15 PM PST

திரைப்பட இசையமைப்பாளரும், இளையராஜாவின் சகோதரருமான கங்கை அமரன் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா முன்னிலையில் சனிக்கிழமை (டிச.20) அக்கட்சியில் இணைகிறார்.

திருநெல்வேலி

Posted: 19 Dec 2014 01:15 PM PST

ஈரோடு

Posted: 19 Dec 2014 01:14 PM PST

கோயமுத்தூர்

Posted: 19 Dec 2014 01:14 PM PST

டிசம்பர் 25-இல் கட்டுரைப் போட்டி நடத்துவதற்கு எதிர்ப்பு

Posted: 19 Dec 2014 01:13 PM PST

நல்லாட்சி தினத்தை கடைப்பிடிக்கும் விதமாக, பள்ளி மாணவர்களுக்கு இணைய வழி கட்டுரைப் போட்டிகளை டிசம்பர் 25-ஆம் தேதி நடத்தக் கூடாது என பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பு மத்திய அரசிடம் வலியுறுத்தியது.

அரசுப் போக்குவரத்துக் கழக பணி நியமனம்: நேர்முகத் தேர்வு மூலம் மட்டுமே நிரப்பக் கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

Posted: 19 Dec 2014 01:12 PM PST

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் பணி நியமனங்கள் நேர்முகத் தேர்வு மூலமாக மட்டுமே நடைபெறக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டது.

ஜம்மு-காஷ்மீர், ஜார்க்கண்டில் இன்று இறுதிக் கட்டத் தேர்தல்

Posted: 19 Dec 2014 01:06 PM PST

ஜம்மு-காஷ்மீர், ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைகளுக்கு சனிக்கிழமை (டிச.20) இறுதிக் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, இரு மாநிலங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மின் சிக்கன கருத்தரங்கு

Posted: 19 Dec 2014 01:06 PM PST

திருவண்ணாமலை, சன் கலை, அறிவியல் கல்லூரியில் "மின் சிக்கனமும், பாதுகாப்பும்' என்ற தலைப்பில் விழிப்புணர்வுக் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கரும்பு நிலுவைத் தொகை கேட்டு விவசாயிகள் நூதன போராட்டம்

Posted: 19 Dec 2014 01:06 PM PST

திருவண்ணாமலை மாவட்டத்தில் தனியார் சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய கரும்பு நிலுவைத் தொகையைக் கேட்டு வெள்ளிக்கிழமை (டிசம்பர் 19) விவசாயிகள் அரை நிர்வாணத்துடன் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்

கார்த்திகை தீபத் திருவிழா உண்டியல் காணிக்கை ரூ.1.63 கோடி

Posted: 19 Dec 2014 01:06 PM PST

திருவண்ணாமலை, ஸ்ரீ அருணாசலேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற கார்த்திகை தீபத் திருவிழாவின்போது, ரூ. 1.63 கோடி ரொக்கம், 275 கிராம் தங்கம், 900 கிராம் வெள்ளியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

"கரும்பு நிலுவைத் தொகை வழங்காத சர்க்கரை ஆலைகள் மீது நடவடிக்கை'

Posted: 19 Dec 2014 01:06 PM PST

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரும்பு நிலுவைத் தொகை வழங்காத தனியார் சர்க்கரை ஆலைகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் அ.ஞானசேகரன் தெரிவித்தார்.

அருணாசலேஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு

Posted: 19 Dec 2014 01:06 PM PST

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் பெரிய நந்தி, தங்கக் கொடி மரம் அருகே உள்ள நந்தி, மூலவர் சன்னிதி எதிரே உள்ள நந்தி உள்பட கோயிலின் பல்வேறு பகுதிகளில் உள்ள 8-க்கும் மேற்ப

ஷேர் ஆட்டோ கவிழ்ந்து 7 பேர் காயம்

Posted: 19 Dec 2014 01:06 PM PST

செய்யாறு அருகே ஷேர் ஆட்டோ வெள்ளிக்கிழமை கவிழ்ந்ததில், 7 தொழிலாளர்கள் காயம் அடைந்தனர்.

இலவச கண் சிகிச்சை முகாம்

Posted: 19 Dec 2014 01:06 PM PST

போளூரை அடுத்த ஓகூர் ஊராட்சியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

வங்கிக் கணக்கு இல்லாதவர்கள் கவனத்துக்கு...

Posted: 19 Dec 2014 01:06 PM PST

திருவண்ணாமலை மாவட்டத்தில் வங்கிக் கணக்கு இல்லாதவர்கள் உடனடியாக அருகில் உள்ள வங்கிகளில் கணக்கு தொடங்கலாம் என்று ஆட்சியர் அ.ஞானசேகரன் தெரிவித்துள்ளார்.

நாளை குரூப்-4 தேர்வு: 44 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்

Posted: 19 Dec 2014 01:06 PM PST

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 21) நடைபெறும் குரூப்-4 தேர்வை 155 மையங்களில் 44 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்.

திகார் சிறையைத் தாக்க லஷ்கர் பயங்கரவாதிகள் திட்டம்

Posted: 19 Dec 2014 12:59 PM PST

தில்லியில் உள்ள திகார் சிறையில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பு திட்டமிட்டிருப்பதாக உளவுத் துறை அளித்த தகவலையடுத்து, அங்கு உச்ச கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சீன அரசு நிறுவன அதிகாரி மீது லஞ்ச வழக்கு விசாரணை தொடக்கம்

Posted: 19 Dec 2014 12:53 PM PST

சீனாவில் அரசுக்குச் சொந்தமான கார் தயாரிப்பு நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவருக்கு எதிரான லஞ்ச வழக்கில் அந்நாட்டு ஊழல் கண்காணிப்பு அமைப்பு விசாரணையைத் தொடங்கி உள்ளது.

நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் கடந்த ஆண்டைவிட இரு மடங்கு உயர்வு

Posted: 19 Dec 2014 12:52 PM PST

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த இரு மாதங்களாக பரவலாகப் பெய்த மழை காரணமாக, அனைத்து அணைகளிலும் நீர்மட்டம் கடந்தாண்டைவிட இரு மடங்கு உயர்ந்துள்ளது.

தலையாட்டும் கிறிஸ்துமஸ் தாத்தா

Posted: 19 Dec 2014 12:52 PM PST

கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி, தஞ்சாவூர் பூம்புகார் விற்பனை நிலையத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய கண்காட்சியில் கிறிஸ்துமஸ் தாத்தா தோற்றத்திலான தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை உள்ளிட்ட கலைப் பொருள்கள் இடம் பெற்றுள்ளன.

ஐஐடி வேலைவாய்ப்பு முகாம்: 880 பேருக்கு பணி வாய்ப்பு

Posted: 19 Dec 2014 12:52 PM PST

சென்னை ஐஐடி நடத்தி வரும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாமின் முதல்கட்ட முடிவில் 880 மாணவ, மாணவிகளுக்கு உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களில் பணி வாய்ப்பு கிடைத்துள்ளது.

முதுமலை காப்பகம் அருகே இரு புலிகளின் சடலங்கள் மீட்பு

Posted: 19 Dec 2014 12:52 PM PST

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் அருகேயுள்ள ஆடிக்கொம்பை பகுதியில் இறந்த நிலையில் இரண்டு புலிகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.

ஆவடியில் பராமரிப்பு பணிகள்: ரயில் சேவையில் மாற்றம்

Posted: 19 Dec 2014 12:31 PM PST

ஆவடியில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

காரைக்கால் அருகே நடுக்கடலில் மூழ்கிய இழுவைக் கப்பல்: 7 பேர் உயிருடன் மீட்பு; ஒருவர் மாயம்

Posted: 19 Dec 2014 12:30 PM PST

காரைக்கால் அருகே நடுக்கடலில் வெள்ளிக்கிழமை மூழ்கிய இழுவைக் கப்பலில் இருந்த 8 பேரில் 7 பேரை இந்திய கடலோரக் காவல்படையினர் மீட்டனர். ஒருவரின் நிலை தெரியவில்லை.

4,000 கிலோ எடையுள்ள செயற்கைக்கோளுக்கான ராக்கெட் என்ஜின் மகேந்திரகிரியில் தயாரிப்பு

Posted: 19 Dec 2014 12:30 PM PST

ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் சோதனை வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, அடுத்ததாக 4 ஆயிரம் கிலோ எடையுள்ள செயற்கைக்கோளை சுமந்து செல்லும் ராக்கெட்டுக்கான என்ஜினை வடிவமைப்பதற்கான பணிகள் மகேந்திரகிரி திரவ உந்தும திட்ட மையத்தில் தொடங்கப்படவுள்ளதாக, மைய இயக்குநர் கார்த்திகேசன் தெரிவித்தார்.

விஜயகாந்த் மீதான வழக்கு: மார்ச் 10-க்கு ஒத்திவைப்பு

Posted: 19 Dec 2014 12:29 PM PST

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பற்றி அவதூறாகப் பேசியதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணையை அடுத்த ஆண்டு மார்ச் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நாகர்கோவில் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

சிவகாசி: காகித ஆலையில் மின்சாரம் பாய்ந்து 3 பேர் சாவு

Posted: 19 Dec 2014 12:29 PM PST

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே காகித ஆலையில் மின்சாரம் பாய்ந்து மூன்று பேர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனர்.

பாக்ஸ்கான் ஆலை மூடப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்: மார்க்சிஸ்ட்

Posted: 19 Dec 2014 12:29 PM PST

ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் பாக்ஸ்கான் கைப்பேசி உதிரிப் பாகங்கள் தயாரிக்கும் பாக்ஸ்கான் ஆலை மூடப்படுவதை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் வலியுறுத்தினார். இது குறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

ஜனவரி 7-இல் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்

Posted: 19 Dec 2014 12:20 PM PST

வங்கி ஊழியர்கள், அதிகாரிகளின் ஊதிய உயர்வு ஒப்பந்தம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜனவரி 7-ஆம் தேதி அடையாள வேலை நிறுத்தம் நடைபெறும். ஜனவரி 21 முதல் 24 வரை வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்படும்.

கணினி ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நிறுத்திவைப்பு

Posted: 19 Dec 2014 12:19 PM PST

தமிழகத்தில் 652 கணினி ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தாற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

தமிழ் ஆட்சி மொழி, திருக்குறள் தேசிய நூல் விவகாரம்: மாநிலங்களவையில் தீர்மானம் தோல்வி

Posted: 19 Dec 2014 12:19 PM PST

தமிழை ஆட்சிமொழியாக்குவது, திருக்குறளை தேசிய நூலாக அறிவித்து, திருவள்ளுவர் பிறந்த நாளை தேசிய மொழிகள் தினமாகவும் கொண்டாட வேண்டும் என்று வலியுறுத்தி, வெள்ளிக்கிழமை தமிழக உறுப்பினர் கொண்டு வந்த தீர்மானம் மாநிலங்களவையில் தோல்வி அடைந்தது.

ஸ்ரீரங்கம் வைகுந்த ஏகாதசி விழா: ஜனவரி 1-இல் பரமபத வாசல் திறப்பு

Posted: 19 Dec 2014 12:18 PM PST

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் வைகுந்த ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகத்துடன் ஞாயிற்றுக்கிழமை (டிச.21) தொடங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியான பரமபத வாசல் ஜனவரி 1-ஆம் தேதி திறக்கப்படுகிறது.

அதிமுக, திமுகவை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: விஜயகாந்த்

Posted: 19 Dec 2014 12:16 PM PST

அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுமே மக்களை ஏமாற்றி வருவதால், அவ்விரு கட்சிகளையும் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.

பாலிடெக்னிக் புதிய பாடத் திட்டம்: கருத்துகள் வரவேற்பு

Posted: 19 Dec 2014 12:14 PM PST

பாலிடெக்னிக்குகளுக்கான பாடத் திட்டத்தை வருகிற 2015-16-ஆம் கல்வியாண்டில் மாற்றியமைக்க தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலகம் முடிவு செய்துள்ளது.

கிரானைட் முறைகேடு விசாரணையில் குளமானது மலை: சகாயம் அதிர்ச்சி

Posted: 19 Dec 2014 12:13 PM PST

கிரானைட் முறைகேடு சம்பந்தமாக இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை விசாரணை நடத்திய அதிகாரியிடம், கீழவளவு பஞ்சபாண்டவர் மலையை 58 ஏக்கர் பரப்பளவுள்ள கண்மாய் என வருவாய்த் துறையினர் ஆவணங்களை சமர்ப்பித்தது, அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™