Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


ஆழ்வார் திருமஞ்சனம்: திருப்பதி கோவிலில் 5 மணி நேரம் தரிசனம் ரத்து

Posted: 29 Dec 2014 10:52 PM PST

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருகிற 1–ந் தேதி வைகுண்ட ஏகாதசி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோவிலை சுத்தப்படுத்தும் விதமாக ஆழ்வார் திருமஞ்சனம் இன்று நடந்தது. இதன் காரணமாக ஏழுமலையானுக்கு காலை நடக்கும் அஷ்ட தலபாத பத்மாரதனை சேவை ரத்து செய்யப்பட்டது. மேலும் 6 மணி முதல் 11 மணி வரை பக்தர்கள் தரிசனமும் ரத்து செய்யப்பட்டது.

ஆந்திர புதிய தலைநகருக்கு நிலம் கொடுக்காத விவசாயிகளின் நெற்பயிர்கள் தீ வைத்து எரிப்பு

Posted: 29 Dec 2014 10:02 PM PST

ஆந்திராவில் புதிய தலைநகர் விஜயவாடா – குண்டூர் இடையே அமைக்கப்படுகிறது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணியில் அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது. ஆனால் குண்டூர் அருகே சில கிராம விவசாயிகள் நிலங்களை கொடுக்க

வரலாறு காணாத பனிப்பொழிவு: டெல்லியில் ரெயில்-விமான சேவைகள் பாதிப்பு

Posted: 29 Dec 2014 09:53 PM PST

வட மாநிலங்களில் கடந்த சில தினங்களாக வரலாறு காணாத அளவுக்கு பனிப்பொழிவு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையில் கடும் அவதியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் டெல்லியில் தட்பவெட்பம் 2.6 டிகிரி செல்சியசாக

பெங்களூரில் வெடித்தது பைப் வகை வெடிகுண்டு: தடயவியல் நிபுணர்கள் தகவல்

Posted: 29 Dec 2014 09:43 PM PST

பெங்களூர் சர்ச் தெருவில் நேற்று முன்தினம் இரவு நடந்த குண்டுவெடிப்பை நடத்தியது யார் என்பதை கண்டுபிடிக்க விசாரணை தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. மத்திய விசாரணைக்குழு உளவுத்துறை மற்றும் கர்நாடகா மாநில போலீசார் ஆகியோர் ஒருங்கிணைந்து விசாரணையை நடத்தி வருகிறார்கள். குண்டு

கவர்னர் மாளிகை நோக்கி பேரணி: இளைஞர் காங்கிரசார் விரட்டியடிப்பு

Posted: 29 Dec 2014 09:42 PM PST

கேரள மாநில இளைஞர் காங்கிரசார் நேற்று கேரள கவர்னர் மாளிகை நோக்கி பேரணி நடத்தினார்கள். கோட்சேவுக்கு சிலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இதை மத்திய அரசு தடுத்து நிறுத்தாததற்கு கண்டனம் தெரிவித்தும் இந்த பேரணி நடந்தது. மாநில காங்கிரஸ் தலைவர் சுதீரன் இந்த பேரணியை தொடங்கி வைத்தார். பேரணியாக சென்றவர்களை கவர்னர் மாளிகை அருகே போலீசார் தடுத்து

ஜன்தன் யோஜனா திட்டத்தில் 10 கோடி பேர் வங்கி கணக்கு தொடங்கி சாதனை

Posted: 29 Dec 2014 09:04 PM PST

அனைவருக்கும் வங்கி கணக்கு தொடங்கும் 'ஜன்தன் யோஜனா' திட்டத்தை பிரதமர் மோடி சுதந்திரதின உரையில் அறிவித்தார். இந்த திட்டத்தின் கீழ், எந்தவித வைப்புத்தொகையும் இல்லாமல் ஏழைகள் வங்கி கணக்கு தொடங்கலாம். இவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் விபத்து காப்பீடு வழங்கப்படுகிறது.

சபரிமலை கோவில் நடை இன்று திறப்பு: 14–ந்தேதி மகரவிளக்கு பூஜை

Posted: 29 Dec 2014 08:19 PM PST

சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடைபெறும் பூஜைகளில் மிகவும் பிரசித்தி பெற்றது மகர விளக்கு பூஜையாகும். வருகிற ஜனவரி 14–ந்தேதி இரவு 7.31 மணிக்கு சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜை நடைபெற உள்ளது. அன்று சபரிமலை பொன்னம்பலமேட்டில் சுவாமி அய்யப்பன் ஜோதி வடிவில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பதாக ஐதீகம். இதைக்காண ல

காஷ்மீரில் காங்கிரஸ், தேசிய மாநாடு கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி: மக்கள் ஜனநாயக கட்சி பரிசீலனை

Posted: 29 Dec 2014 06:40 PM PST

காஷ்மீரில் காங்கிரஸ், தேசிய மாநாடு கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்பது பற்றி மக்கள் ஜனநாயக கட்சி தீவிரமாக பரிசீலித்து வருகிறது. 87 உறுப்பினர்களை கொண்ட காஷ்மீர் மாநில சட்டசபைக்கு நடந்த தேர்தலில் தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு எந்த கட்சிக்கும்

பெங்களூரு குண்டுவெடிப்பு: குற்றவாளிகள் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.10 லட்சம் பரிசு

Posted: 29 Dec 2014 06:28 PM PST

பெங்களூரு சர்ச்தெருவில் நேற்று முன்தினம் இரவு குண்டுவெடித்த இடத்திற்கு போலீஸ் கமிஷனர் எம்.என்.ரெட்டி நேரில் விசாரணை மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- குண்டுவெடிப்புக்கு எந்த ஒரு தீவிரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பு

தீவிரவாதத்துக்கு எதிரான செயல்திட்டம் 24 மணி நேரத்தில் வெளியிடப்படும்: ராஜ்நாத் சிங் உறுதி

Posted: 29 Dec 2014 06:15 PM PST

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பெங்களூரு நகரில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் சென்னையைச் சேர்ந்த பவானி என்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் மேலும் சிலர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் டெல்லியில்

அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் வெளிநாட்டு வங்கிகளில் உள்ள வைப்புத்தொகையை தெரிவிக்க வேண்டும்

Posted: 29 Dec 2014 03:33 PM PST

அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் வெளிநாட்டு வங்கிகளில் தாங்கள் வைத்துள்ள வைப்புத்தொகையை தெரிவிக்க வேண்டும் என்று லோக்பால் சட்ட புதிய விதியின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளது.

நேதாஜி மாயமானது பற்றி நீதி விசாரணை?: ஆர்.எஸ்.எஸ். உதவியை குடும்பம் நாடுகிறது

Posted: 29 Dec 2014 03:11 PM PST

சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், 1945-ம் ஆண்டு ஆகஸ்டு 18-ந்தேதி மாயமாகி விட்டார். அப்போது நடந்த ஜப்பான் விமான விபத்தில் அவர் பலியாகி விட்டதாக கூறப்பட்டு வருகிறது.

பெங்களூருவில் இன்னும் 2 நாளில் குண்டுகள் வெடிக்கும்: டுவிட்டர் மூலம் மீண்டும் மிரட்டல்

Posted: 29 Dec 2014 12:35 PM PST

பெங்களூரு சர்ச் தெருவில் நேற்று முன்தினம் குண்டுவெடித்து சென்னை பெண் பலியானார். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த நிலையில், அப்துல் என்பவரது பெயரில் பெங்களூருவில் குண்டுகள் வெடிக்கும் என்று 'டுவிட்டர்' மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூர் குண்டு வெடிப்பு: பலியான பெண்ணின் உடல் சென்னைக்கு கொண்டுவரப்பட்டது

Posted: 29 Dec 2014 10:56 AM PST

பெங்களூரு நகருக்கு தீவிரவாதிகளால் தொடர்ந்து மிரட்டல் வந்த வண்ணம் இருந்தது. இதையடுத்து, நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்று முன்தினம் நகரின் இதயம் போன்ற பகுதியான எம்.ஜி.ரோடு அருகே சர்ச் தெருவில் உள்ள தனியார் ஓட்டல் முன்புள்ள நடைபாதையில் குண்டுவெடித்து சிதறியது.

நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்துக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல்

Posted: 29 Dec 2014 10:00 AM PST

மத்திய அரசு இப்போது உள்ள நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் உள்ள விதிகளை எளிமையாக்கவும், பல ஆயிரக்கணக்கான கோடி அளவில் வருமானம் வரக்கூடிய இரும்புத்தாது போன்ற கனிமவள திட்டங்களுக்காகவும் புதிய அவசர சட்டத்தை தயாரித்தது. மத்திய மந்திரி சபை கூடி இந்த அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது.

கோட்சேவுக்கு கோயில் கட்ட முயற்சித்தால் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது: உ.பி. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

Posted: 29 Dec 2014 08:07 AM PST

மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாது ராம் கோட்சேவுக்கு கோயில் கட்ட முயற்சிப்பவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள சிதாபூர் மாவட்ட மாஜிஸ்திரேட் அறிவித்துள்ளார். உ.பி. மாநிலம், சிதாபூர் மாவட்டத்தில் நாது ராம் கோட்சேவுக்கு வரும் ஜனவரி மாதம் சிலை வைக்கப்படும் என அங்குள்ள கமலேஷ் திவாரி என்பவர் அறிவித்தார். சிலை வைக்கும் இடத்தில் கோயில் கட்டுவதற்காக பரா கிராமத்தில் உள்ள தனக்கு சொந்தமான நிலத்தின் ஒரு பகுதியையும் அவர் ஒதுக்கித் தந்துள்ளார்.

டெல்லி காலனிகளை முறைப்படுத்துவதாக பா.ஜ.க. கூறுவது தேர்தலுக்கு முந்தைய மாய வித்தை: கெஜ்ரிவால் காட்டம்

Posted: 29 Dec 2014 07:46 AM PST

டெல்லியில் உள்ள 895 காலனிகளை முறைப்படுத்துவதாக பா.ஜ.க. அறிவித்துள்ளது தேர்தலுக்கு முந்தைய மாய வித்தையாக தான் பார்க்க வேண்டும் என ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த கெஜ்ரிவால் கூறியுள்ளார். நாட்டின் தலைநகரான டெல்லியின் பிரதான சாலைகளின் இருபுறங்களிலும், அரசு அலுவலகங்களை ஒட்டியிருக்கும் காலி இடங்களிலும் லட்சக்கணக்கான ஏழை-எளிய மக்கள் சிறிய அளவிலான தகரக்

ஜன் தன் யோஜனா திட்டத்தில் அனைவருக்கும் வங்கிக் கணக்குகளை தொடங்கி டெல்லி சாதனை

Posted: 29 Dec 2014 07:24 AM PST

பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பின்படி, தொடங்கப்பட்ட 'ஜன் தன் யோஜனா' என்ற திட்டத்தின் கீழ் டெல்லியில் வசிக்கும் அனைத்து குடும்பங்களும் முழுமையாக இணைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜன் தன் திட்டம் அல்லது பிரதமர் மக்கள் நிதி திட்டம் என்ற பெயரில் வீட்டுக்கு ஒரு வங்கிக்கணக்கு இருக்கும் வகையிலான புதிய திட்டத்தை

தீவிரவாதி லக்வியின் தடுப்புக்காவல் ரத்து: பாகிஸ்தானுக்கு இந்தியா சம்மன்

Posted: 29 Dec 2014 06:26 AM PST

மும்பைத் தாக்குதல் தீவிரவாதி லக்வியின் தடுப்புக் காவலை பாகிஸ்தான் ரத்து செய்தற்கு இந்தியா தனது கவலையை தெரிவித்து சம்மன் அனுப்பியுள்ளது. மும்பைத் தாக்குதல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தின் மூத்த கமாண்டரான ஜைகுர் ரஹ்மான் லக்வி, பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டு ராவல்பிண்டியில் உள்ள ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தான். அவனுக்கு பாகிஸ்தான் தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் கடந்த 18-ம் தேதி ஜாமீன் வழங்கியது.

டெல்லியில் அனுமதியில்லாத காலனிகளை முறைப்படுத்த அவசர சட்டத்துக்கு ஒப்புதல்:60 லட்சம் மக்கள் பயனடைவர்

Posted: 29 Dec 2014 06:22 AM PST

தலைநகர் டெல்லியில் கடுமையான பனி பொழிந்து வருகின்றது. 2.6 டிகிரி அளவுக்கு உள்ள பனிப்பொழிவின் தாக்கத்தால் நண்பகல் வரை வீடுகளை விட்டு வெளியே வருவதற்கு பலரும் தயங்குகின்றனர். வெளி மாநிலங்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து பிழைப்பு தேடி வந்து டெல்லியில் ஒதுங்கியுள்ள ஏழை மக்கள் தங்குவதற்கு வீடின்றி, மூடிய சில கடைகளின் நிழலிலும், சிறு பாலங்கள் மற்றும் மேம்பாலங்களுக்கு


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™