Tamil Star |
- தனது வீடியோவை பார்க்குமாறு முப்படையினருக்கு உத்தரவிட்ட கோத்தபாய
- தமிழ் தேசிய கூட்டமைப்பும் எனக்கு ஆதரவு வழங்க வேண்டும்! மட்டக்களப்பில் மைத்திரி
- உணவு விடுதியில் இடம்பெற்ற கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் நால்வர் கைது
- கனடாவில் 2,60,000 ற்கும் அதிகமானோர் குடியுரிமையைப் பெற்றுள்ளனர்! மத்திய அரசு அறிவிப்பு!
| தனது வீடியோவை பார்க்குமாறு முப்படையினருக்கு உத்தரவிட்ட கோத்தபாய Posted: 29 Dec 2014 04:42 AM PST
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கடந்த 27 ஆம் திகதி சிங்கள தொலைக்காட்சி ஒன்றின் அரசியல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியதை இணையத்தளம் ஊடாக பார்வையிடுமாறு முப்படையினருக்கு உத்தரவிட்டுள்ளார். இதனடிப்படையில், முப்படையினர் அதனை பார்ப்பதை ஊக்குவிப்பதற்காக முப்படை அதிகாரிகள் சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். விமானப்படை தலைமையகத்தின் செயலகத்தின் உயரதிகாரியான சீ.எச்.ஆர். சொய்சா இந்த அரசியல் நிகழ்ச்சியை இணையத்தளத்தில் பார்க்குமாறு அறிவுறுத்த வேண்டும் எனக் கோரி கட்டளை அதிகாரிகளுக்கு உத்தரவொன்றை அனுப்பி வைத்துள்ளார். தேசிய பாதுகாப்பு தொடர்பான மிக முக்கியமான விடயங்களை அந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புச் செயலாளர் கூறியுள்ளதாக உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் பாதுகாப்புச் செயலாளரது குறித்த நிகழ்ச்சியானது ஜனாதிபதித் தேர்தலுடன் சம்பந்தப்பட்டது. அவர் தனியார் தொலைக்காட்சிகளில் இப்படியான சில அரசியல் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பாதுகாப்புச் செயலாளர் இணையத்தளத்தில் தனது நிகழ்ச்சியை பார்வையிடுமாறு உத்தரவிட்டுள்ள போதிலும் சுமார் சுமார் 300 பேரே அதனை இதுவரையில் பார்வையிட்டிருந்தனர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| தமிழ் தேசிய கூட்டமைப்பும் எனக்கு ஆதரவு வழங்க வேண்டும்! மட்டக்களப்பில் மைத்திரி Posted: 29 Dec 2014 04:38 AM PST
சகல இன மக்களும் எந்த எதிர்பார்ப்புமின்றி எனது பக்கம் வருகின்ற இந்த நேரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் உடனடியாக எனக்கு ஆதரவு வழங்கி எனது பக்கம் வரவேண்டும் என ஜனாதிபதி தேர்தல் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார். மட்டக்களப்பு, சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்ற தேர்தல் பிரட்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன மறை்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில் மக்களது பணங்களைக் கொண்டு மக்களுக்கு சேவை செய்யாமல் தனது பொக்கட்டில் போடுகிறார் மகிந்த. அரசாங்க ஊழியர்களையும் நீதித்துறையையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு அவர்களைச் சுதந்திரமாகச் செயற்பட முடியாமல் செய்வதுடன் ஒரு சர்வாதிகாரியாகச் செயற்படுகிறார். எனவே மட்டக்களப்பு மக்களே! நீங்கள் இப்படிப்பட்ட ஜனாதிபதியைக் காப்பாற்றப் போகிறீர்களா? அல்லத எமது நாட்டைக் காப்பாற்றப் போகிறீர்களா? சிந்தியுங்கள். எந்தவிதமான எதிர்பார்ப்புகளும் இன்றியே எனக்கு ஆதரவு வழங்கி எங்களது கட்சியில் வந்து சகல மக்களும் ஒன்று சேர்கிறார்கள். மேலும் நாங்கள் எங்களுக்கு ஆதரவு வழங்குகின்ற எந்தக் கட்சியுடனுமே எந்த உடன்படிக்கையையும் செய்யவில்லை அவர்கள் எந்த எதிர்பார்ப்பும் இனறியே எமக்கு ஆதரவு வழங்குகின்றனர். ஜாதிக ஹெல உறுமய, ஜேவிபி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போன்ற கட்சிகளுடன் நாங்கள் எந்த உடன்படிக்கையையும் செய்யவில்லை. இந்த நேரத்தில் வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் நான் ஒரு வேண்டுகோளை விடுக்கின்றேன். இன்னும் காலம் தாழ்த்தாமல் எனக்கு ஆதரவு வழங்கி என்னை வெற்றி பெறச் செய்யுங்கள் நான் உங்களுக்கு விடுதலை அளிக்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| உணவு விடுதியில் இடம்பெற்ற கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் நால்வர் கைது Posted: 29 Dec 2014 04:30 AM PST
வன்கூவரில் கிறிஸ்மஸ் தினத்தில் களியாட்டத்தில் ஈடுபட்டிருந்த 4 இளைஞர்கள் அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த இளைஞர்கள் இரு உணவு விடுதிகளினுள் புகுந்து அங்கிருந்தவர்களை மிரட்டியதாக வன்கூவர் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதாகவும் பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் அவர்களை கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் சம்பவமாக Hot Delivery உணவு விடுதியினுள் ஆயுதங்களுடன் புகுந்த இளைஞர்கள் இருவர் அங்கிருந்த பொருட்களை திருடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை இரண்டாவது சம்பவம் Truong Thanh Vietnamese உணவு விடுதியினுள் புகுந்த மற்றைய இருவரும் ஆயுதங்களை காட்டி அங்கிருந்த வாடிக்கையாளர்களை அவர்களின் விலைமதிப்பற்ற பொருட்களை வழங்குமாறு மிரட்டியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து குறித்த சந்தேக நபர்களை தொடர்ந்து சென்ற பொலிஸார் அவர்களை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அத்துடன் சந்தேக நபர்கள் 17 முதல் 34 வயதிற்கு உட்பட்டவர்கள் என தெரிவித்துள்ள பொலிஸார் அவர்கள் மீது கொள்ளை மற்றும் ஆயுத பாவனை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| கனடாவில் 2,60,000 ற்கும் அதிகமானோர் குடியுரிமையைப் பெற்றுள்ளனர்! மத்திய அரசு அறிவிப்பு! Posted: 29 Dec 2014 04:15 AM PST
கனேடியர்களாக வரவேற்றுள்ளதாக கனேடிய மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. 2014ஆம் ஆண்டில் இரண்டு இலட்சத்து அறுபது ஆயிரத்திற்கும் அதிகமானோர் புதிதாக கனேடிய குடியுரிமையை பெற்றுக் கொண்டுள்ளதாக மத்திய குடிவரவு மற்றும் குடியுரிமை துறை அமைச்சர் கிறிஸ் அலெக்ஸ்சான்டர் தெரிவித்துள்ளார். கடந்த வருடம் கனேடிய குடியுரிமையை பெற்றுக்கொண்டவர்களுடன் ஒப்பிடுகையில் இந்த வருட எண்ணிக்கை இரண்டு மடங்கினை விடவும் அதிகம் எனவும், கனேடிய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு இந்த வருடத்திலேயே இவ்வளவு அதிகளவானோருக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குடியுரிமைக்கான விண்ணப்பங்களை பரிசீலிக்கும் நடைமுறைகளில் அண்மையில் புதிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டதனையும் சுடடிக்காட்டியுள்ள அவர், விண்ணப்பங்களை துரிதமாக பரிசீலிக்கும் செயற்பாட்டின் விளைவுகளை தற்போது காணக்கூடியதாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். குடியுரிமை விண்ணப்பங்களை பரிசீலித்து முடிவு செய்யும் மூன்று படிமுறைகள் ஒரு படிமுறையாக மாற்றப்பட்ட இந்த புதிய நடைமுறை கடந்த ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதியில் இருந்து நடப்புக்கு வந்துள்ளமை குறிப்பிடத்த்ககது. இந்த புதிய நடைமுறை அமுலுக்கு வந்த பின்னர் இதுவரை 115,000 ற்கும் அதிகமானோர் கனேடிய குடியுரிமையைப் பெற்றுக்கொண்டுள்ளதாகவும், கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 90 சதவீதம் அதிகம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |


சகல இன மக்களும் எந்த எதிர்பார்ப்புமின்றி எனது பக்கம் வருகின்ற இந்த நேரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் உடனடியாக எனக்கு ஆதரவு வழங்கி எனது பக்கம் வரவேண்டும் என ஜனாதிபதி தேர்தல் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார். மட்டக்களப்பு, சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்ற தேர்தல் பிரட்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன மறை்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில் மக்களது பணங்களைக் கொண்டு மக்களுக்கு சேவை செய்யாமல் தனது பொக்கட்டில் போடுகிறார் மகிந்த. அரசாங்க ஊழியர்களையும் நீதித்துறையையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு அவர்களைச் சுதந்திரமாகச் செயற்பட முடியாமல் செய்வதுடன் ஒரு சர்வாதிகாரியாகச் செயற்படுகிறார். எனவே மட்டக்களப்பு மக்களே! நீங்கள் இப்படிப்பட்ட ஜனாதிபதியைக் காப்பாற்றப் போகிறீர்களா? அல்லத எமது நாட்டைக் காப்பாற்றப் போகிறீர்களா? சிந்தியுங்கள். எந்தவிதமான எதிர்பார்ப்புகளும் இன்றியே எனக்கு ஆதரவு வழங்கி எங்களது கட்சியில் வந்து சகல மக்களும் ஒன்று சேர்கிறார்கள். மேலும் நாங்கள் எங்களுக்கு ஆதரவு வழங்குகின்ற எந்தக் கட்சியுடனுமே எந்த உடன்படிக்கையையும் செய்யவில்லை அவர்கள் எந்த எதிர்பார்ப்பும் இனறியே எமக்கு ஆதரவு வழங்குகின்றனர். ஜாதிக ஹெல உறுமய, ஜேவிபி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போன்ற கட்சிகளுடன் நாங்கள் எந்த உடன்படிக்கையையும் செய்யவில்லை. இந்த நேரத்தில் வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் நான் ஒரு வேண்டுகோளை விடுக்கின்றேன். இன்னும் காலம் தாழ்த்தாமல் எனக்கு ஆதரவு வழங்கி என்னை வெற்றி பெறச் செய்யுங்கள் நான் உங்களுக்கு விடுதலை அளிக்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
வன்கூவரில் கிறிஸ்மஸ் தினத்தில் களியாட்டத்தில் ஈடுபட்டிருந்த 4 இளைஞர்கள் அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த இளைஞர்கள் இரு உணவு விடுதிகளினுள் புகுந்து அங்கிருந்தவர்களை மிரட்டியதாக வன்கூவர் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதாகவும் பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் அவர்களை கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் சம்பவமாக Hot Delivery உணவு விடுதியினுள் ஆயுதங்களுடன் புகுந்த இளைஞர்கள் இருவர் அங்கிருந்த பொருட்களை திருடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை இரண்டாவது சம்பவம் Truong Thanh Vietnamese உணவு விடுதியினுள் புகுந்த மற்றைய இருவரும் ஆயுதங்களை காட்டி அங்கிருந்த வாடிக்கையாளர்களை அவர்களின் விலைமதிப்பற்ற பொருட்களை வழங்குமாறு மிரட்டியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து குறித்த சந்தேக நபர்களை தொடர்ந்து சென்ற பொலிஸார் அவர்களை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அத்துடன் சந்தேக நபர்கள் 17 முதல் 34 வயதிற்கு உட்பட்டவர்கள் என தெரிவித்துள்ள பொலிஸார் அவர்கள் மீது கொள்ளை மற்றும் ஆயுத பாவனை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
கனேடியர்களாக வரவேற்றுள்ளதாக கனேடிய மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. 2014ஆம் ஆண்டில் இரண்டு இலட்சத்து அறுபது ஆயிரத்திற்கும் அதிகமானோர் புதிதாக கனேடிய குடியுரிமையை பெற்றுக் கொண்டுள்ளதாக மத்திய குடிவரவு மற்றும் குடியுரிமை துறை அமைச்சர் கிறிஸ் அலெக்ஸ்சான்டர் தெரிவித்துள்ளார். கடந்த வருடம் கனேடிய குடியுரிமையை பெற்றுக்கொண்டவர்களுடன் ஒப்பிடுகையில் இந்த வருட எண்ணிக்கை இரண்டு மடங்கினை விடவும் அதிகம் எனவும், கனேடிய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு இந்த வருடத்திலேயே இவ்வளவு அதிகளவானோருக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குடியுரிமைக்கான விண்ணப்பங்களை பரிசீலிக்கும் நடைமுறைகளில் அண்மையில் புதிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டதனையும் சுடடிக்காட்டியுள்ள அவர், விண்ணப்பங்களை துரிதமாக பரிசீலிக்கும் செயற்பாட்டின் விளைவுகளை தற்போது காணக்கூடியதாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். குடியுரிமை விண்ணப்பங்களை பரிசீலித்து முடிவு செய்யும் மூன்று படிமுறைகள் ஒரு படிமுறையாக மாற்றப்பட்ட இந்த புதிய நடைமுறை கடந்த ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதியில் இருந்து நடப்புக்கு வந்துள்ளமை குறிப்பிடத்த்ககது. இந்த புதிய நடைமுறை அமுலுக்கு வந்த பின்னர் இதுவரை 115,000 ற்கும் அதிகமானோர் கனேடிய குடியுரிமையைப் பெற்றுக்கொண்டுள்ளதாகவும், கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 90 சதவீதம் அதிகம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்