மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- பாராளுமன்ற தாக்குதல் நினைவு தினம்: பிரதமர் மோடி– தலைவர்கள் அஞ்சலி
- திருப்பதி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்: ரூ.2 கோடி உண்டியல் வருமானம்
- பெங்களூரில் இயங்கிய ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு கண்டுபிடிப்பு: வலைத்தளம் இயக்கியவர் கைது
- காஷ்மீர், ஜார்க்கண்டில் நாளை 4–வது கட்ட தேர்தல்
- யாரும் உதவிக்கு வராததால் ரெயிலில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த திருநங்கைகள்
- உயிர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் செல்போன் டவர் கதிர்வீச்சு: ஆய்வு நடத்த ம.பி. அரசு முடிவு
- பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு சொகுசு காரில் எரிசாராயம் கடத்தல்
- யூரியா உரம் விலையை உயர்த்தும் திட்டம் இல்லை: டெல்லி மேல்-சபையில் மந்திரி பதில்
- நிதி மந்திரி பதவி விலக வலியுறுத்தல்: எதிர்க்கட்சிகளின் அமளியால் கேரள சட்டமன்றம் ஒத்திவைப்பு
- ஐ.நா. அறிவித்த சர்வதேச யோகா தினத்துக்கு பாராளுமன்றம் வரவேற்பு
- பொது வினியோக திட்டத்திலிருந்து வருமான வரி செலுத்துவோரை நீக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசு
- பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதில் மத்திய அரசு உறுதி: சதானந்த கவுடா தகவல்
- தீவிரவாத தாக்குதல்கள் முடிவுக்கு வரவேண்டுமானால் பாகிஸ்தானுக்கு பலத்த அடி கொடுக்க வேண்டும்: ராணுவ மந்திரி பேச்சு
- மீனவர்கள் பிரச்சினை குறித்த விவாதத்தின்போது டெல்லி மேல்-சபையில் அதிமுக, திமுக மோதல்
- தேர்தலில் தோற்ற என்னை இந்திரா காந்தி மந்திரி ஆக்கினார்: புத்தகத்தில் பிரணாப் முகர்ஜி தகவல்
- டெல்லி விமான நிலையத்தில் பெண்ணிடம் சில்மிஷம் செய்ய முயன்ற வாலிபர் கைது
- உ.பி.: பெண்களை கேலி செய்ததை தட்டிக்கேட்ட போலீஸ்காரரை அடித்துக் கொன்ற சிறார் குற்றவாளிகள்
- சட்டசபைக்குள் எம்.எல்.ஏ.க்கள் செல்போன் பயன்படுத்த தடை: கர்நாடக சபாநாயகர் உத்தரவு
- குழந்தையை நரபலியிட்டவனுக்கு தூக்குத் தண்டனை: பீகார் கோர்ட் உத்தரவு
- வேலை கிடைக்காததால் முதல் மந்திரி வீட்டு வாசலில் தீக்குளித்த பெண்: பஞ்சாபில் பரபரப்பு
| பாராளுமன்ற தாக்குதல் நினைவு தினம்: பிரதமர் மோடி– தலைவர்கள் அஞ்சலி Posted: 12 Dec 2014 10:48 PM PST 2001–ம் ஆண்டு டிசம்பர் 13–ந்தேதி பாராளுமன்றம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இந்த சம்பவத்தில் 6 பாதுகாப்பு படை போலீசார் உள்பட 7 பேர் பலியானார்கள். தீவிரவாதிகள் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாராளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தின் நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. |
| திருப்பதி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்: ரூ.2 கோடி உண்டியல் வருமானம் Posted: 12 Dec 2014 10:31 PM PST திருப்பதி கோவிலில் இன்று கார்த்திகை மாத கடைசி சனிக்கிழமையொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நேற்று ஒரே நாளில் 56 ஆயிரம் பேர் சாமி தரிசனம் செய்தனர். இன்று கடைசி சனிக்கிழமை என்பதால் அதிகாலை முதலே பக்தர்கள் வருகை அதிகரித்தது. |
| பெங்களூரில் இயங்கிய ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு கண்டுபிடிப்பு: வலைத்தளம் இயக்கியவர் கைது Posted: 12 Dec 2014 10:20 PM PST ஈராக் மற்றும் சிரியாவின் ஒரு பகுதியை கைப்பற்றியுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் அங்கு ''இஸ்லாமிய சாம்ராஜ்ஜியம்'' அமைத்துள்ளனர். மற்ற நாடுகளிலும் தங்கள் செயல்பாடுகளை தொடங்கும் முயற்சிகளில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஈடுபட்டுள்ளனர். அவர்களது இந்த திட்டத்துக்கு டுவிட்டர், பேஸ்புக் போன்ற இணையத்தளங்கள் மிகவும் உதவியாக உள்ளன. |
| காஷ்மீர், ஜார்க்கண்டில் நாளை 4–வது கட்ட தேர்தல் Posted: 12 Dec 2014 10:01 PM PST காஷ்மீர், ஜார்க்கண்ட் மாநில சட்டசபைகளுக்கு 5 கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. இதில் 3 கட்ட தேர்தல்கள் ஏற்கனவே முடிந்து விட்டன. நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரு மாநிலங்களிலும் 4–வது கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. |
| யாரும் உதவிக்கு வராததால் ரெயிலில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த திருநங்கைகள் Posted: 12 Dec 2014 09:34 PM PST உத்தரபிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்தவர் ராஜு. இவரது மனைவி நிர்மலா. ஆந்திராவில் வசித்து வரும் ராஜு நிறைமாத கர்ப்பிணியான தனது மனைவி நிர்மலாவுடன் கோரக்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் நேற்று லக்னோ சென்று கொண்டு இருந்தார். ரெயில் மதியம் தெலுங்கானா மாநிலம் கரீம் நகர் அருகே சென்று கொண்டு இருந்தது. |
| உயிர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் செல்போன் டவர் கதிர்வீச்சு: ஆய்வு நடத்த ம.பி. அரசு முடிவு Posted: 12 Dec 2014 09:28 PM PST மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள அனைத்து செல்போன் டவர்களிலும் வெளியாகும் கதிர்வீச்சு குறித்து ஆய்வு நடத்தப்படும் என்று அம்மாநில நகர்ப்புற நிர்வாகத்துறை மந்திரி கைலாஷ் விஜயவர்கியா கூறியுள்ளார். |
| பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு சொகுசு காரில் எரிசாராயம் கடத்தல் Posted: 12 Dec 2014 09:19 PM PST கேரள மாநிலம் பாலக்காடு மாவட்ட மதுவிலக்குத்துறை உதவி கமிஷனர் சுரேஷ் மற்றும் அதிகாரிகள் சதீஷ், சஞ்சீவ்குமார், முரளீதரன் ஆகியோர் பாலக்காட்டில் உள்ள மணப்புள்ளிகாவு என்ற இடத்தில் வாகன சோதனை மேற்கொண்டனர். |
| யூரியா உரம் விலையை உயர்த்தும் திட்டம் இல்லை: டெல்லி மேல்-சபையில் மந்திரி பதில் Posted: 12 Dec 2014 06:58 PM PST வேளாண்மை உரம் விலை நிர்ணயம் மற்றும் மானியம் தொடர்பாக டெல்லி மேல்-சபையில், உறுப்பினர் விவேக் குப்தா கொண்டு வந்த தனிநபர் மசோதாவுக்கு சம்பந்தப்பட்ட துறை மந்திரி அனந்த்குமார், நேற்று பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- |
| நிதி மந்திரி பதவி விலக வலியுறுத்தல்: எதிர்க்கட்சிகளின் அமளியால் கேரள சட்டமன்றம் ஒத்திவைப்பு Posted: 12 Dec 2014 06:49 PM PST கேரளத்தில் மீண்டும் மது பார்களை திறக்க லஞ்சம் பெற்றதாக கூறி, நிதி மந்திரி கே.எம்.மாணி மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். இந்த விவகாரம் நேற்று மாநில சட்டமன்றத்தில் பெரும் அமளியை ஏற்படுத்தியது. காலையில் சபை தொடங்கியதும், லஞ்ச விவகாரத்தில் நிதி |
| ஐ.நா. அறிவித்த சர்வதேச யோகா தினத்துக்கு பாராளுமன்றம் வரவேற்பு Posted: 12 Dec 2014 06:38 PM PST ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21-ந்தேதியை சர்வதேச யோகா தினமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்து உள்ளது. இதனை பாராளுமன்ற சபாநாயகர் சுமித்ராமகாஜன் வரவேற்று உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், கடந்த செப்டம்பர் மாதம் நடந்த ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி முதன்முதலாக கலந்து |
| பொது வினியோக திட்டத்திலிருந்து வருமான வரி செலுத்துவோரை நீக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசு Posted: 12 Dec 2014 06:31 PM PST உணவு பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான திட்டங்களை வகுக்கும் வகையில் மாநில உணவு மற்றும் வழங்கல் துறை மந்திரிகளின் மாநாடு கடந்த ஜூலை மாதம் நடந்தது. அந்த மாநாட்டில், அரசு ஊழியர்கள் மற்றும் வருமான வரி செலுத்துவோரை தவிர்த்து பொது வினியோக |
| பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதில் மத்திய அரசு உறுதி: சதானந்த கவுடா தகவல் Posted: 12 Dec 2014 04:25 PM PST பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக இருப்பதாகவும், அதற்கு முன்னதாக அதுபற்றி விரிவாக ஆலோசனை நடத்தப்படும் என்றும் டெல்லி மேல்-சபையில் மத்திய சட்ட மந்திரி சதானந்த கவுடா கூறினார். டெல்லி மேல்-சபையில் நேற்று கேள்வி நேரத்தின் போது காங்கிரஸ் உறுப்பினர் ராஜீவ் சுக்லா, பொதுசிவில் சட்டம் தொடர்பான பிரச்சினையை கிளப்பி, அந்த சட்டத்தை ஏற்றுக் கொள்ள இந்த தேசம் தயாராக இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பினார். |
| Posted: 12 Dec 2014 03:57 PM PST பாகிஸ்தானை தலைமையகமாகக் கொண்டு செயல்படுகிற தீவிரவாதிகள், காஷ்மீரில் தொடர்ந்து தீவிரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வருகிறார்கள். இதனால் ஏதுமறியாத அப்பாவி பொதுமக்களும் களப்பலி ஆகிறார்கள். மூன்றாவது கட்ட சட்டசபை தேர்தலை சந்திக்க இருந்த நிலையில், இந்த மாதத்தின் தொடக்கத்தில் ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் பாதுகாப்பு படையினர் உள்பட 20 பேர் |
| மீனவர்கள் பிரச்சினை குறித்த விவாதத்தின்போது டெல்லி மேல்-சபையில் அதிமுக, திமுக மோதல் Posted: 12 Dec 2014 02:54 PM PST டெல்லி மேல்-சபையில் தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது குறித்தும், அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. அ.தி.மு.க. உறுப்பினர் நவநீதகிருஷ்ணன் பேசும்போது, ''சமீபத்தில் 5 தமிழக மீனவர்களை விடுவித்ததற்கு எங்கள் தலைவிக்கும், பிரதமருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்'' என்றார். அப்போது அவர் ஜெயலலிதாவை மக்கள் முதல்வர் என்று கூறியதற்கு தி.மு.க. உறுப்பினர் ஒருவர் அ.தி.மு.க. தலைமை பற்றி ஏதோ ஒன்றை கூறினார். |
| தேர்தலில் தோற்ற என்னை இந்திரா காந்தி மந்திரி ஆக்கினார்: புத்தகத்தில் பிரணாப் முகர்ஜி தகவல் Posted: 12 Dec 2014 12:54 PM PST ''இந்திரா காந்தியின் விருப்பத்துக்கு மாறாக பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட நான் தேர்தலில் தோல்வி அடைந்த போதிலும் அவர் என்னை மந்திரி ஆக்கினார்'' என்று பிரணாப் முகர்ஜி தனது புத்தகத்தில் எழுதி இருக்கிறார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, 'தி டிரமேட்டிக் டிக்கேட்: தி இந்திராகாந்தி ஈயர்ஸ்; (வியத்தகு சகாப்தம்: இந்திராகாந்தி ஆண்டுகள்) என்ற பெயரில் புத்தகம் ஒன்றை எழுதி உள்ளார். இந்த புத்தகத்தில் தனது நீண்ட கால அரசியல் வாழ்க்கையில் நிகழ்ந்த |
| டெல்லி விமான நிலையத்தில் பெண்ணிடம் சில்மிஷம் செய்ய முயன்ற வாலிபர் கைது Posted: 12 Dec 2014 10:10 AM PST துபாயில் இருந்து டெல்லி வந்த 28 வயது பெண் ஒருவர், இந்திராகாந்தி சர்வதேச விமானநிலையத்தில் நேற்று இரவு, தனது சகோதரர்களுக்காக காத்திருந்தார். அப்போது அங்கு குடிபோதையில் வந்த சரவண்குமார் என்ற வாலிபர், அந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்ய முயன்றார். தொடர்ந்து தகராறு செய்த வாலிபரை அந்தப் பெண் பிடித்துக் கொண்டு அலறினார். |
| உ.பி.: பெண்களை கேலி செய்ததை தட்டிக்கேட்ட போலீஸ்காரரை அடித்துக் கொன்ற சிறார் குற்றவாளிகள் Posted: 12 Dec 2014 08:21 AM PST உத்தரப்பிரதேசம் மாநிலம், மீரட் நகரின் சூரஜ்குண்ட் பகுதியில் சிறு வயது குற்றவாளிகளை அடைத்து வைக்கும் அரசு காப்பகம் ஒன்றுள்ளது. பல்வேறு குற்ற வழக்குகளில் பிடிபட்ட சிறுவர்கள் இங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலரை புலந்த்ஷாகர் மாவட்ட கோர்ட்டில் |
| சட்டசபைக்குள் எம்.எல்.ஏ.க்கள் செல்போன் பயன்படுத்த தடை: கர்நாடக சபாநாயகர் உத்தரவு Posted: 12 Dec 2014 07:58 AM PST கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் மாலை சட்டசபை கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது, அவுராத் தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ பிரபு சவான் செல்போனில் படங்களை பார்த்துக்கொண்டிருந்தார். இந்த காட்சியை தனியார் தொலைக்காட்சி ஒன்று ஒளிபரப்பு செய்தது. அப்போது அவர், பிரியங்கா காந்தி படத்தை பெரிதுப்படுத்தி பார்த்துக்கொண்டிருந்தது தெரியவந்தது. |
| குழந்தையை நரபலியிட்டவனுக்கு தூக்குத் தண்டனை: பீகார் கோர்ட் உத்தரவு Posted: 12 Dec 2014 07:44 AM PST பீகார் மாநிலம், நளந்தா மாவட்டத்தில் உள்ள பிசாய்பிஹா கிராமத்தச் சேர்ந்த 2 வயது ஆண் குழந்தையான இந்திரஜித், வீட்டு வாசலில் விலளையாடிக் கொண்டிருந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 19-ம் தேதி திடீரென்று காணாமல் போனான். |
| வேலை கிடைக்காததால் முதல் மந்திரி வீட்டு வாசலில் தீக்குளித்த பெண்: பஞ்சாபில் பரபரப்பு Posted: 12 Dec 2014 07:25 AM PST கம்ப்யூட்டர் கோர்ஸில் டிப்ளமோ பட்டம் பெற்றும் வேலை கிடைக்காத வேதனையில் பஞ்சாப் மாநில முதல் மந்திரி வீட்டு வாசலில் தீக்குளித்த பெண்ணால் இன்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பஞ்சாப் முதல் மந்திரி பிரகாஷ் சிங் பாதல் வீட்டின் வாசலருகே இன்று காலை நின்றிருந்த குர்ப்ரீத் கவுர்(38) என்பவர் திடீரென்று தனது உடலின் மீது மண்எண்ணெய் ஊற்றி, தீ மூட்டிக் கொண்டார். பதறிப் போன |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |