Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


மகிந்தவா? மைத்திரியா: இறுதி முடிவு ரவூப் ஹக்கீம் கையில்!

Posted: 12 Dec 2014 08:22 AM PST

_71105347_71105346

_71105347_71105346எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்த தரப்புக்கு ஆதரவு வழங்குவது என்று இறுதியான தீர்மானத்தை எடுக்கும் பொறுப்பை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதன் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் ஒப்படைத்துள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட மக்கள் பிரதிநிதிகள் கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் நேற்று கூடி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர். இஸ்லாமிய மதத் தலைவர்கள் முன்னிலையில் பிரதிநிதிகள் இது சம்பந்தமான வாக்குறுதிகளையும் வழங்கியுள்ளனர். ஜனாதிபதித் தேர்தல் சம்பந்தமாக முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அதியுயர் பீடம் கடந்த 9 ஆம் திகதி கூடியதுடன் எந்த தரப்புக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து இறுதி முடிவை எடுக்கவில்லை. கட்சியின் பிரதிநிதிகளில் சிலர் ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்க வேண்டாம் எனவும் மேலும் சிலர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்றும் நிலைப்பாடுகளை கொண்டிருந்தனர். இதன் காரணமாகவே இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், இறுதி முடிவை எடுக்கும் பொறுப்பு தற்போது கட்சியின் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

அச்சுறுத்தல் காரணமாக ஹிருணிக்கா வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்

Posted: 12 Dec 2014 08:21 AM PST

HP020214AD

HP020214ADமேல்மாகணசபை உறுப்பிணர் ஹிருனிகா பிரேமசந்திர, தனது தாயுடன் வெளிநாடொன்றுக்குப் பயணமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவலை முல்லேரியா பிரதேச சபைத் தலைவர் சோலங்க ஆராச்சி வெளியிட்டுள்ளார். எனது தங்கை ஹிருனிகா எதிர்க் கட்சியில் இணைந்துகொண்டதால், அவருக்கு அரசாங்க தரப்பிலிருந்து பல இன்னல்களும் கஷ்டங்களும் ஏற்படுத்தப்படுகின்றன. இதனால் அவர் உடன் வெளிநாடு சென்றுள்ளார். ஆனால், அவர் சில நாட்களின் பின் நாடு திரும்பி, மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொள்வார் எனவும் அவர் தெரிவித்தார். ஹிருணிக்கா கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆளுங்கட்சியிலிருந்து விலகி, எதிரணியில் இணைந்து கொண்டார். பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதாக பகிரங்கமாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

உலக அளவில் வேலை செய்ய சிறந்த நிறுவனம் எது? சர்வே முடிவு வெளியானது

Posted: 12 Dec 2014 08:10 AM PST

024_F0_reception

024_F0_receptionஊழியர்களின் வேலை மற்றும் குடும்ப பொறுப்புகள் இடையே ஒரு சமநிலையை ஏற்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்தியதால் கூகுள் முதல் இடத்தில் இருக்கிறது என்று கிளாஸ்டோர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. உலக அளவில் வேலை செய்ய சிறந்த நிறுவனங்கள் எவை என்ற சர்வே ஒன்றை அமெரிக்காவின் பிரபல கிளாஸ்டோர் என்ற இணையதளம் கடந்த சில நாட்களாக எடுத்து வந்தது. இந்த சர்வேயின் முடிவு இன்று காலை வெளிவந்தது. இந்த பட்டியலில் 50 நிறுவனங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இந்த பட்டியலை கிளாஸ்டோர் இணையதள தலைமை செயல் அதிகாரி ராபர்ட் ஹோமேன் இன்று வெளியிட்டார். இந்த பட்டியலில் வழக்கம்போல கூகுள் முதலிடத்தை கைப்பற்றியுள்ளது. கடந்த ஆண்டு இரண்டாவது இடத்தில் கம்பீரமாக வீற்றிருந்த டுவிட்டர் இந்த வருடம் முதல் 50 இடங்களில் இடம்பெறவில்லை என்பதுதான் இந்த சர்வேயின் அதிர்ச்சி தகவல். இந்த சர்வே பட்டியலில் ஃபேஸ்புக் 13வது இடத்திலும், லிங்க்டு இன் 23வது இடத்திலும் உள்ளது. சென்ற வருடம் ஃபேஸ்புக் 13 வது இடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஸ்டீபன் ஹாப்பரிடம் முதல்வர் கத்லின் வின் தம்மைச் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்குமாறு கோரிக்கை !

Posted: 12 Dec 2014 08:08 AM PST

wynne-harper-2

wynne-harper-2தம்மைச் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்குமாறு பிரதம மந்திரி ஸ்டீபன் ஹாப்பரிடம் ஒன்றாரியோவின் முதல்வர் கத்லின் வின் கோரிக்கை விடுத்துள்ளார் கடந்த ஆண்டு டிசம்பர் ஐந்தாம் திகதி தமக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர், வேறு சந்திப்புக்கள் எவையும் இடம்பெறவில்லையென குறிப்பிடும் கடிதம் ஒன்றை அவர் அனுப்பினார். அந்தக் கடிதம் பகிரங்கமாக வெளியிடப்பட்டது. தமக்கு இடையிலான சந்திப்பு, ஒன்றாரியே மக்களிற்கும், அவர்களின் நல்வாழ்வுக்கும் முக்கியமானதென குறிப்பிடும் முதல்வர், இயலுமான விரைவில் தம்மைச் சந்திக்குமாறு கோரியுள்ளார். ஏனைய மாகாணங்களின் முதல்வர்களை அண்மை மாதங்களில் சந்தித்த பிரதம மந்திரி, எதிர்காலத்தில் கத்லின் வின்னுடன் சந்திப்பு இடம்பெறுமென கடந்த வாரம் குறிப்பிட்டார். தம்மைச் சந்திப்பதை விட ஒன்றாரியோவுக்கு இருக்கும் முக்கியமான பிரச்சினைகள் குறித்து வின் கவனம் செலுத்தவேண்டுமென ஹாப்பர் அந்தவேளை கூறினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™